திங்கள், 11 பிப்ரவரி, 2013

குங்குமத்தில் பிரபல பதிவர்களின் கருத்துக்கள்.

குங்குமத்தில் இருந்து முகநூல் மற்றும் வலைத்தளம் குறித்தான கருத்துக்கள் கேட்டார்கள். நிறைய சந்தோஷ நட்புக்களைக் கொடுக்கும் இடமாக இருந்தாலும் சில பல சர்ச்சைகளிலும் சிக்க வைத்து அவதிப்படுத்தும் இடமாக அது மாறிவிடும் சில நேரம். எனவே என்னுடைய கருத்தாகப் பலதும் பகிர்ந்தாலும் அது எடிட் ஆகிக் கொஞ்சம்தான் வந்திருக்கிறது.

 ( சின்மயி மற்றும் ராஜன் பற்றிக் கூறவில்லை. எது சரி என்றும் எது தவறு என்றும் அவர்கள் இருவருக்குமே தெரிந்திருக்கும். ட்விட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்துவிட்டு செல்லாமலே இருக்கிறேன். நடந்தது எதுவும் அங்கங்கே லிங்கில் கிடைக்கின்றன. எல்லாமே சரியா இல்லை இணைப்பா என்றும் தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் வாய்மொழியாக வந்தால்தான் உண்டு.  எனவே நான் என்னுடைய கருத்தை மட்டும் சொன்னேன்.  )



அதில் விக்னேஷ்வரியின் கருத்துக்களும்  வந்துள்ளன. மிக அருமையாக சாடி இருக்கிறார் அவர்..

அது முகநூல் மற்றும் ட்விட்டர் ( சமூக இணைய தளங்கள் ) அரட்டைக் களமா, ஆபாச தளமா என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நன்றி குங்குமம். நீங்க கருத்துக் கேக்குற அளவுக்குப் பிரபல பதிவர்களாயிட்டோம்னு சந்தோஷப்படுறதா. அல்லது சில பல நல்ல இதயங்கள் கோபமாயிடுச்சேன்னு ( இதுக்கே..) வருத்தப்படுறதான்னு புரியலை. ஆக மொத்தத்துல விரும்பியோ விரும்பாமலோ  ஒரு கருத்து கந்தசாமியாயிட்டு வர்றேன்னு மட்டும் தெரியுது.:)

 டிஸ்கி :- நன்றி குங்குமம். 5.11.2012.


3 கருத்துகள்:

  1. //சில பல நல்ல இதயங்கள் கோபமாயிடுச்சேன்னு ( இதுக்கே..) வருத்தப்படுறதான்னு புரியலை.//

    இதுக்கேன் கோவப்படணும்!! சரியான கருத்துகள் சொல்லிருக்கீங்க.

    எது சொன்னாலும், சொல்றது யாரு, என்னன்னு பார்த்துத்தான், அதுக்கான ரியாக்‌ஷன் இருக்குது இன்று!!

    பதிலளிநீக்கு
  2. நன்றி திண்டுக்கல் தனபாலன்

    நன்றி ஹுசைனம்மா.. ஹ்ம்ம் சில சமயம் நம்மையும் பிடிச்சு காச்சுறாங்களே..:(

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)