செவ்வாய், 8 ஜனவரி, 2013

கல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி.

 முகநூலில் இந்தப் போட்டி பற்றிய பகிர்வைக் கண்டேன். முன்பு பண்புடன் போட்டிகளைப் பகிர்ந்திருந்தேன். அதில் என் அன்புத் தோழி ஜெயந்தி ரமணி கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றிருந்தார். ஈமெயில் மூலமாக நன்றியறிதலையும் அனுப்பி இருந்தார். மிக அருமையான சமூக சிந்தனையுள்ள இன்றைய சூழலுக்குத் தேவையான விழிப்புணர்வுக் கதையை எழுதிய அவருக்கும் சிறப்பானதைத் தேர்ந்து பரிசளித்த பண்புடன் குழுமத்துக்கும் நன்றி.  ( என்னுடைய அன்பின் ஹுசைனம்மாவும் பரிசு பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி ).

இந்தப் போட்டிகளிலும் பங்குபெற்று என் சக வலைப்பதிவர்களும் தோழியரும் வெல்ல வாழ்த்துக்கள். பின் வரும் குறிப்புக்களை சரிவரப் படியுங்கள். ஜனவரி 31 ஆம் தேதி கடைசித் தேதி. அதற்குமுன் அனுப்புங்கள். வாழ்த்துக்கள் ..


*************************************************************


ரியாத் தமிழ்ச்சங்கம் - எழுத்துக்கூடம்   சார்பில்

                              கல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி

                                                       முதல் பரிசு

                                         5000 இந்திய ரூபாய்கள்

                                                   இரண்டாம் பரிசு

                                          3000 இந்திய ரூபாய்கள்

                                                     மூன்றாம் பரிசு

                                              2000 இந்திய ரூபாய்கள்

உலகின்  எந்த மூலையிலிருந்தும் தமிழர்கள் பங்கேற்கும் அரிய சந்தர்ப்பம்

சிந்தனை சிறகை விரியுங்கள் - சிறந்த கவிதையை வடியுங்கள் - சிறப்பான பரிசுகளை வெல்லுங்கள்  - கலந்து கொள்வதற்கான ஒரே தகுதி : தமிழராய் இருப்பது மட்டுமே...

விதிமுறைகள் :

1. தமிழ் மொழி அறிந்த, உலகின் எப்பகுதியில் வசிப்பவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.வயது வரம்பு இல்லை.

2. கவிஞர்கள் தங்களுக்குப் பிடித்தமான எந்தத் தலைப்பிலும் தங்களை கவர்ந்த எந்தச் சிந்தனையிலும் கவிதை எழுதலாம் என்றாலும் மதநெறி, அரசியலில் தனி நபர் தாக்குதல் மற்றும் பாலியல் போன்ற விதயங்களை விலக்கியதாக பாடுபொருள் அமைந்திருக்க வேண்டும்.

3. குறைந்த அளவில் 15 வரிகளும் அதிகமாய் 40 வரிகளுக்கு மிகாமலும் இருத்தல் நலம்.

4. தமிழ்க்குழுமங்கள் மற்றும் நாளேடுகளில் கவிதைப் போட்டியும் அதன் முடிவும் அறிவிக்கப்படும்

5. சிறந்த முதல் மூன்று கவிதைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்

எப்படி கலந்துகொள்வது?

1. கவிதைகளை ஒருங்குறி (Unicode) அமைப்பில் நேரடி மின்னஞ்சலாகவோ அல்லது இணைப்புக் கோப்பாகவோ (Using MS Word) rtskavithaipotti2013@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

2.தட்டச்சு  வடிவம் இயலாவிடில் நல்ல தெளிவான உயர்தர தெளிவுறு (High-resolution) அமைப்பில் ஒளிவருடி (Scan செய்து) இணைப்புக் கோப்பாக அனுப்பலாம்.

3. கவிதை அனுப்புவோர் தங்களின் முழு அஞ்சல் முகவரி , தொடர்பு தொலைபேசி/அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

4.இந்தக் கவிதை இதுவரை எந்த அச்சு ஊடகத்திலும் - இணையத்திலும் - இணைய மடலாற் குழுமத்திலும் - செய்திக் குழுமங்களிலும் இன்னபிற ஊடகங்களிலும் வெளிவரவில்லை என்ற உறுதிமொழி மற்றும் கையொப்பமிட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

5.கவிதைகளை அனுப்புகையில் "கல்யாண் - நினைவு கவிதைப் போட்டி" என அஞ்சலிலும், மின்னஞ்சலிலும் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

விதிமுறைகள்

1. நடுவர்களின் முடிவே இறுதியானது; உறுதியானது; அதன் மீதான மேலதிக கருத்து விவாதங்கள் அங்கீகரிக்கப்பட மாட்டாது.

2. ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர்கள் - ஆட்சி மன்ற குழுவினர் - அதன் உள்ளமைப்பு உறுப்பினர்கள் யாரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

3.இந்தப் போட்டியை எந்த நேரத்திலும் எந்த நோக்கத்திற்காகவும் நிறுத்தவோ விதிமுறைகளை மாற்றி கட்டமைக்கவோ ரியாத் தமிழ்ச்சங்க அமைப்புக்கு முழு உரிமை உண்டு.

4. போட்டியில் பங்கு பெறுவோரிடமிருந்து படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 2013 ஜனவர் மாதம் 31 ஆம் தேதி நள்ளிரவு 00:00 மணி வரை.

5.தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைகள் ரியாத் தமிழ்ச்சங்க ஆண்டு விழா மலரில், வலைத்தளத்தில், மடலாற்குழுமத்தில் உரியவர் பெயரோடு வெளியிடப்படும்.

கவியரங்கம்.

1. சவுதி அரேபியா வாழ் தமிழர்களுக்கான கவியரங்கம் இது.. ரியாத் , தமாம், ஜித்தா மற்றும் சவுதி ஏனைய பகுதியிலுள்ள தமிழ்க் கவிஞர்கள் கலந்து கொள்ளலாம். வர இயலாதவர்கள் தங்கள் கவிதைகளை அனுப்பி வைக்க அவர்கள் சார்பாக இங்குள்ளவர்கள் வாசிப்பார்கள்.

2.பாடுபொருள் மேற்சொன்ன இரண்டும் தவிர்த்து எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

3.கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள், நினைவுக் கேடயங்கள் வழங்கப்படும்.

4.முதலில் தங்களைப்பற்றிய விவரண குறிப்பும் மாதிரி ஒரு கவிதையும் அனுப்பி வைக்கவும். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவோர் கவியரங்கத்துக்கு தகுதி பெறுவார்.

5.கலந்து கொள்ள விரும்புவோர் மேற்சொன்ன நான்கு விதிமுறைகளுக்கும் உட்பட்டு (4)-ல் சொல்லப்பட்ட விவரங்களை rtskaviyarangam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.             



8 கருத்துகள்:

  1. நல்லவை எங்கு இருந்தாலும் தேடி சென்று சேகரிக்கும் தேனியை போல தேனம்ம்மையின் எழுத்துகள் மூலம் பல அறிய தகவல்கள் அறிய முடிகிறது நன்றி அறிவித்தமைக்கு

    பதிலளிநீக்கு
  2. // பண்புடன் போட்டிகளைப் பகிர்ந்திருந்தேன்//
    ஆமாக்கா, உங்க பதிவில் தகவல் பார்த்துதான், கலந்துகொண்டேன். மிக்க நன்றி. இப்பவும் மறக்காமக் குறிப்பிட்டுருக்கீங்க... மகிழ்ச்சி.

    நம்ம ராமலக்ஷ்மிக்காவும் புகைப்படப் பிரிவில் பரிசு வாங்கினாங்க.

    ரியாத் தமிழ்ச்சங்கம் கவிதைப் போட்டி மட்டுந்தான் நடத்துறாங்களா? கவிதை நம்ம ஏரியா இல்லையே... :-(((

    பதிலளிநீக்கு
  3. குழுமத்திலும் பார்த்தேன். இங்கேயும் பகிர்ந்தமைக்கு நன்றி தேனக்கா..

    பதிலளிநீக்கு
  4. பகிர்விற்கு மிக்க நன்றி தேனம்மை.

    எனக்கு பரிசு கிடைத்தது பற்றி குறிப்பிட்டதற்கும் மிக்க நன்றி.

    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  5. பகிர்வுக்கு நன்றி.
    கலந்து கொள்ள முயற்சி செய்வோம்...

    பதிலளிநீக்கு
  6. பகிர்வுக்கு நன்றி தேனக்கா.. கலந்துகொண்டு வெற்றிபெறும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. //இந்தக் கவிதை இதுவரை எந்த அச்சு ஊடகத்திலும் - இணையத்திலும் - இணைய மடலாற் குழுமத்திலும் - செய்திக் குழுமங்களிலும் இன்னபிற ஊடகங்களிலும் வெளிவரவில்லை என்ற உறுதிமொழி மற்றும் கையொப்பமிட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.//

    மின்னஞ்சலில் கவிதை அனுப்புகையில் கையொப்பம் எப்படி இடுவது?

    பதிலளிநீக்கு
  8. நன்றி மலர்

    நன்றி சரளா

    நன்றி ஹுசைனம்மா. ட்ரை செய்யுங்க. உங்களுக்கு வராதுன்னு ஏதும் உண்டா என்ன..

    நன்றி சாந்தி

    நன்றி ஜெயந்தி

    நன்றி குமார்

    நன்றி ஸ்டார்ஜன்

    நன்றி பார்த்திபன். ஈ மெயிலில் அனுப்பினால் உறுதிமொழியை எழுதி அனுப்பினால் மட்டுமே போதுமானது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)