திங்கள், 7 ஜனவரி, 2013

காரைக்குடி புத்தகத் திருவிழாவும் ( 2013) தினமணி சிறுகதைப் போட்டியும். :-

காரைக்குடியில் பதினொன்றாவது புத்தகத் திருவிழா கம்பன் மணி மண்டபத்தில் ஃபிப்ரவரி 15 வெள்ளிக் கிழமையில் இருந்து ஃபிப்ரவரி 24 ஞாயிற்றுக் கிழமை வரை நடக்கிறது.

 இதில் வருடந்தோறும் 40,000 - 50,000 பேர் கலந்து கொண்டு புத்தகம் வாங்குகிறார்கள். கிட்டத்தட்ட 60,000 /- ரூபாய்க்கான புத்தகங்கள் இலக்கியப் போட்டிகள்  நடத்தப்பட்டு வழங்கப்படுகின்றன.
( பல்வேறு தலைப்புக்களில் கதை, கவிதை, கட்டுரை போன்றவை பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்காக  நடத்தப்படுகிறது.) தினமும் மாலையில் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணாக்கரின் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதன் ஒரு அங்கமாக வருடந்தோறும் தினமணியும் காரைக்குடி புத்தகத் திருவிழாக் கமிட்டியினரும் இணைந்து சிறுகதைப் போட்டி நடத்துகிறார்கள். ( அதில் போன வருடம் எனக்கு ஊக்கப் பரிசு ரூபாய் 1000/- கிடைத்தது. ) சொந்த ஊரில்  நான் மிகவும் மதிக்கும் அய்க்கண் ஐயா அவர்கள், நாஞ்சில் நாடன் அவர்கள், படிக்காசு அவர்களுடன் மேடையில் அமர வைத்து பரிசும் பாராட்டும் அங்கீகாரமும் வழங்கிய தினமணிக்கும் காரைக்குடி புத்தகத் திருவிழாக் கமிட்டியினருக்கும் நன்றி.

ஒவ்வொரு திருவிழாவும் சிறப்பாக நடைபெற மக்களின் பங்களிப்பு அவசியம். புரவலர்களின்  கைங்கர்யமும் தேவை. எனவே பொற்குவையோ, காசுகளோ தந்து தங்கள் பங்களிப்பையும் செய்தால் திருவிழா இன்னும் சிறப்பாக நடைபெறும்.

மறந்துடாதீங்க உங்க சிறுகதைகள் தினமணியில் 3 பக்கத்துக்கு  மிகாம இருக்கணும். நம் மண்ணின் மணம் கமழணும். கடைசித் தேதி ஜனவரி 20, 2013.  ரெடி ஜூட் எழுதி அனுப்புங்க.. வெல்லுங்க.  வாழ்த்துக்கள்.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)