புதன், 23 ஜனவரி, 2013

நான் ஈயும் நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோமும்.

நான் ஈ:-

நானி பென்சில் காரீயத்தை துருவி சிலை செய்யும் ஒரு பெண் சிலையைக் காதலிக்கிறார். அந்தப் பெண்ணோ நானியை ஒரு பொருட்டாகக் கருதாமல் எல்லா இடங்களிலும் கடந்து செல்கிறார். அதையே தனக்கு வழங்கப்பட்ட ஸ்பெஷல் கவனிப்பாக நானி எடுத்துக் கொள்கிறார்.

ஹீரோயின் பென்சில் லெட்டை துருவி ஒரு டாலர் செய்யும்போது கரண்ட் போய்விட எதிர் மாடியில் இருந்து ரிஃப்ளஷன் மூலம் ஒளி உண்டாக்குகிறார் நானி.


இந்த ஒரு தலைக் காதல் இரு தலையாக மாறுமுன் சுதிப் என்ற வில்லனிடம் கதை சிக்குகிறது. அவரும் வழக்கம் போல எச்சரித்து பின் நானியை கொலை செய்து விடுகிறார். அப்போது காதலி அனுப்பிய லவ் யூ மெசேஜ் வர உடனே அடுத்துப் பிறக்கப்போகும் ஈயாக அவதாரமெடுக்கிறார்.

ஈகா என வந்த தெலுங்குப் படமே நானி = நான் ஈ என்ற படமாக வந்திருக்கிறது. இந்த ஈ செய்யும் சேஷ்டைகளும் கதாநாயகியை வில்லனிடம் இருந்து காப்பாற்ற செய்யும் முயற்சிகளுமே கதை.

நானி நான் ஈ யாக மாறி விட்டார் என்பதையே நாம் உணராமல் ஈயையே ஹீரோவாக நினைக்க வைத்ததே இந்தப் படத்தின் வெற்றி. நாமும் அந்த ஈக்காக வேண்டுகிறோம், உருகுகிறோம். கடைசியில் வில்லனிடம் சிக்கும் ஹீரோயினை குட்டி பீரங்கியால் வெடிக்க வைக்கிறது நான் ஈ.

யம்மாடி இந்தச் சின்னக் கதையை எவ்வளவு சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் சொல்ல முடியுமோ அவ்வளவு சுவையா சொல்லி இருக்காங்க.

க்ரேசி மோகனின் வசனங்கள் எல்லா இடங்களிலும் சூப்பர். ஒரு ஈயை ஈரோவா வைச்சே சிறப்பா கதை சொல்ல முடியும்னு காமிச்ச இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுக்கள்.

              *************************

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்:-

”என்னது சிவாஜி செத்துட்டாரா..”

“ என்ன ஆச்சு, கிரிக்கெட் விளையாடினோம். இவன் பால் போட்டான். நான் காட்ச் பிடிச்சேன், கால் ஸ்லிப்பாகி விழுந்துட்டேன். தலையில அடிபட்டுருச்சு. இங்கே பின்னாடி மெடுல்லா ஆப்லாங்கேட்டா இருக்கும்ல அங்கே. அது ஒண்ணுமில்ல கொஞ்ச நேரம் ஆனா சரி ஆயிரும்.”

”யார்ரா இந்தப் பொண்ணு. பயங்கரமா மேக்கப் போட்டுட்டு பேய் மாதிரி இருக்கா.”

இந்த இரண்டு வசனத்தையும் கேட்டு கேட்டு கேட்டும் சலிக்கவில்லை. சிரித்துக் கொண்டே இருந்தேன். இத்தனைக்கும் விஜய் சேதுபதி ஒரே மாதிரியான முகபாவனையில் இதை அப்படியே ரிப்பீட்டு செய்வார்.

இந்த மாதிரி சிறிய எளிய வசனங்களும்  இந்தப் படத்தின் பலம்.தலையில் அடிபட்டதால் ஷார்ட் டெர்ம் மெமரி லாசுக்கு ஆளாகும் ஹீரோவைச் சுற்றி அவரின் நண்பர்கள் படும் பாடும் அடிக்கும் லூட்டியும்தான் கதை.

விஜய் சேதுபதி தன் தோழர்கள் பக்ஸ், பஜ்ஜி, ராக்ஸ், மூவருடனும் கிரிக்கெட் விளையாடுகிறார். பின் மண்டையில் அடிபடுகிறது. ஒரு வருடத்துக்கு முன் நடந்தது மட்டுமே ஞாபகம் இருக்க சமீபத்தில் நடந்தது எல்லாம் மறந்து விடுகிறது.

அவருக்கோ மறுநாள் நிச்சயதார்த்தம் அதற்கு அடுத்த நாள் திருமணம். இந்த சமயத்தில் அவருக்கு தான் காதலித்த பெண்ணைத்தான் கைப்பிடிக்கப் போகிறோம் என்பது மறந்து விடுகிறது. இதை வைத்து கதையை நகர்த்தி செம கலாட்டாவோடு படத்தை முடிக்கிறார்கள்.

அவ்வப்போது நமக்கும் விஜயின் நண்பர்களைப் போல முழி பிதுங்குகிறது. நர்சுகள் ஒருவரை ஒருவர் விஜயை கவனிக்க அனுப்புவது. உயர் அதிகாரி வந்து மெடுல்லா ஆப்லாங்கேட்டாவை தடவிப் பார்ப்பது, டாக்டரும் விஜய் சொன்ன வசனத்தையே சொல்வது, சலூனில் முடிவெட்டுபவர் என்னது ‘முட்டை ஆம்லெட்டா’ என்பது என வயிறு வலிக்க சிரிக்க வைத்த படம்.

விஜயின் அப்பா சலூனில் விஜயின் உதட்டில் வெள்ளரிக்காய் வைத்திருப்பதைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து க்ளோசப்பில் உதட்டைப் பார்ப்பதும்,  அவர் என்னப்பா ஆச்சு உனக்கு என உசும்புவதும் செம கலாட்டா.

”சதீஷா, சின்னப் பையண்டா அவன். ஏரியாவுல ஒரு பொண்ணை உசார்ப் பண்ணிகினு இருந்தான். அவனுக்கா கல்யாணம்” என தன் கல்யாண மேடை ரிஷப்ஷனில் கேட்பதும், ”நீ சொன்னா இந்த பில்டிங் மாடிலேருந்தும் குதிப்பேன் ஆனா நான் நாம எட்டாங்க்ளாஸ் படிச்சப்ப ஏழாங்கிளாஸ் படிச்ச சாயிரா பானுவை மனசார காதலிக்கிறேன். அதுனால தாலி கட்ட முடியாது” என மறுப்பதும் திருமணம் முடிந்ததும் பக்ஸ் எடுத்த ஃபோட்டோக்களைப் பார்த்து சீதாலெட்சுமியின் மேக்கப் ஃபோட்டோவைப் புகழ்வதும் எண்ட்லெஸ் காமெடி.

படத்தின் காமிராமேன் ப்ரேம்குமாரின் கதையாம் இது. இசையும் காமிராவும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி மிக அருமையாக நகர்கிறது கதை.
எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம் அந்தப் பெண் காயத்ரி கேட்பது “ என்னண்ணா சொல்றாரு அவரு. திரும்ப என்னன்னா சொல்றாரு “ எனக் கேட்டு தலை குனிந்தபடி கலங்கும் கண்களை மறைத்தபடி அம்மா அப்பாவை சமாளிப்பது அழகு.

”தம்பி பூஸ்ட் குடிப்பா” என பக்ஸ் அப்பா மகனை வற்புறுத்துவது, ”நாளைக்குக் கல்யாணம் இன்னும் இந்த ஆஃபிசில என் மகனைப் பிழிஞ்சு வேலை வாங்குறாங்க பாரு”ன்னு அப்பா கடுப்படிப்பது, என் புள்ளய விடாம வச்சிருக்காங்க ,பேதில போக”  என அம்மா திட்டுவது, குட்டிக் குழந்தை போட்டுக் கொடுப்பது. பஜ்ஜியின் காதலி லெக்ஷ்மி கோபித்துக் கொள்வது, ”பாருடா இவன் காதலிச்ச சீதா லெக்ஷ்மியை மறந்துட்டான். என் ஆளு லெக்ஷ்மியை ஞாபகம் வச்சிருக்கான்” என பஜ்ஜி பொருமுவது என சுவாரசியமும் யதார்த்தமுமான இடங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் பக்ஸ் சொல்லும் ஒரு வசனம் முக்கியம். “ கல்யாணம் முடிவான பின்னாடி பைக் ஓட்டினாலும் பார்த்து ஓட்டணும். ஏன்னா வாழ்க்கை ஒண்ணும் விளையாட்டில்லை தம்பி “ நிசம்தான்.சரியான விஷயம் சொல்லி இருக்கீங்க. பாலாஜி தரணீதரன்.

 வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன், ராக்ஸ், பஜ்ஜி.

எப்ப சான்ஸ் கிடைச்சாலும் இந்த இரண்டு படத்தையும் விடாம பார்த்துருங்க.. சிரிப்பீங்க. சிரிப்பீங்க சிரிச்சுகிட்டே இருப்பீங்க.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 


6 கருத்துகள்:

  1. பார்த்தோம் சிரிச்சோம் .....இரண்டு படத்தையும் இவ்வளவு அழகாய் எளிமையாய் சொல்லி இருக்கீங்க நல்லது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல படங்களைப் பற்றி அருமையா சொல்லியிருக்கிங்க அக்கா.....

    பதிலளிநீக்கு
  3. விமர்சனம் அருமை நண்பரே அது சரி இந்த ரெண்டு திரைப்படங்களும் போன வருஷம் வந்ததாச்சே ? இந்த வருஷத்துல விமர்சனம் எழுதுறீங்க .....கிரிக்கெட் விளையாடிட்டு வந்து விமர்சனம் எழுதுறீங்களோ .....!!!

    பதிலளிநீக்கு
  4. நான் ஈ - மலையாள வெர்ஷன் பார்த்தேன். மற்ற படத்தினை இன்னும் பார்க்கல... பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி சீராளன்

    நன்றி குமார்

    நன்றி விமல்

    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)