சனி, 11 பிப்ரவரி, 2012

மதிப்பீடு...

மதிப்பீடு..:-
*************************

தோட்டத்தில்
குயில் கூவியது.
மயில் அகவியது.
வழிப்போக்கர்கள்
அடித்துக் கொண்டார்கள்

இது அழகென்றும்
அது கறுப்பென்றும்.
காக்கைக் கூட்டில்
முட்டையிடும்
கான(க)க்குயிலென்றும்.


கான மயிலாடக்
கண்டிருந்த வான்கோழியென்று
தன் சிறகை விரித்தாடிய
வான்கோழியை நகைத்தார்கள்.

தான் அழகுகளின்
அளவுகோலாய்
வைக்கப்பட்டிருப்பது
தெரியாமல் தன்போக்கில்
அகவிக்கொண்டும்
ஆடிக்கொண்டும்
இருந்தது மயில்.

டிஸ்கி:- இந்தக் கவிதை ஜனவரி 6, 2012 அதீதம் பொங்கல் சிறப்பிதழில் வெளிவந்தது.


7 கருத்துகள்:

  1. //தான் அழகுகளின்
    அளவுகோலாய்
    வைக்கப்பட்டிருப்பது
    தெரியாமல் தன்போக்கில்
    அகவிக்கொண்டும்
    ஆடிக்கொண்டும்
    இருந்தது மயில்.//

    super...vaalththukkal

    பதிலளிநீக்கு
  2. //தான் அழகுகளின்
    அளவுகோலாய்
    வைக்கப்பட்டிருப்பது
    தெரியாமல் தன்போக்கில்
    அகவிக்கொண்டும்
    ஆடிக்கொண்டும்
    இருந்தது மயில்.//

    super...vaalththukkal

    பதிலளிநீக்கு
  3. //தான் அழகுகளின்
    அளவுகோலாய்
    வைக்கப்பட்டிருப்பது
    தெரியாமல் தன்போக்கில்
    அகவிக்கொண்டும்
    ஆடிக்கொண்டும்
    இருந்தது மயில்.//

    super...vaalththukkal

    பதிலளிநீக்கு
  4. அன்பின் தேனம்மை - அதீதம் இதழில் வெளிவந்தமைக்கு நல்வாழ்த்துகள் - மயிலின் நடனம் ஒரு அளவுகோல்தான்.

    பதிலளிநீக்கு
  5. தான் அழகு என்ற பிரக்‌ஞையே இல்லாமல் இருக்கிற எதுவும் இன்னும் ஒரு படி அழகாகத்தான் காட்சியளிக்கும்... இல்லை? வசந்த வார்த்தைகளால் மனதையள்ளியதுக்கா கவிதை!

    பதிலளிநீக்கு
  6. நன்றி சரவணன்

    நன்றி சமுத்ரபாண்டியன்

    நன்றி சீனா சார்

    நன்றி கணேஷ்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)