ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

ஈரோடு சங்கமமும், வெல்விஷர் தேவதைகளும்..


ஈரோடு சங்கமமும் வெல்விஷர் தேவதைகளும்..

2011ஆம் ஆண்டு தை பிறந்த போது சென்னை சங்கமத்தில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொரு வருடமும் தை பிறக்கிறது. ஏதோ ஒரு வழியும் பிறக்கிறது. 2010 வலைச்சரம் ஆசிரியரானதில் இருந்து இரண்டு வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கை அதிகரித்தது. வலைச்சரத்தில் ஆசிரியப் பணி ஆற்ற அழைத்து தன்னம்பிக்கை ஊட்டிய சீனா சாருக்கு நன்றி..


அடுத்து லேடீஸ் ஸ்பெஷல், இவள் புதியவள், சூரியக் கதிர் , நம் தோழி, என விரிந்த உலகில் குமுதம், குங்குமம், விகடன், கல்கி, அவள் விகடன், மல்லிகை மகள், தேவதை, சமுதாய நண்பன், யுகமாயினி என அடுத்த சந்தோஷங்கள். இந்தியா டுடே ரஜனி ஸ்பெஷல் & குமுதம் ஹெல்த் ப்ளஸ். இது போக இன் & அவுட் சென்னை மற்றும் ஆஸ்திரேலியத் தமிழ் நண்பன் மெல்லினம். ( என்னுடைய வளர்ச்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தவை திண்ணை, உயிரோசை, வல்லினம், வார்ப்பு, கீற்று, அதீதம், பூவரசி, முத்துக் கமலம் சுவடு போன்ற இணைய தளங்களும் மற்ற சக வலைப்பதிவர்களின் ஊக்கமூட்டுதல்களையும் விருதுகளையும் சொல்லலாம்.) இதன் மூலம் கலைஞர் தொலைக்காட்சி, விஜய் டிவி நீயா நானா, பொதிகை காரசாரம், 106.4 ஹலோ எஃப் எம், மற்றும் இந்தியா டுடே ரஜனி ஸ்பெஷல் & குமுதம் ஹெல்த் ப்ளஸ். அத்துடன் போர்ட் ட்ரஸ்டில் மற்றும் சாஸ்திரிபவனில் மகளிர் தினத்தில் பேசியது. சிறப்பு விருந்தினராக ஸ்ரீகான குஹா, அரும்பாக்கம் பள்ளி, ஜவஹர் ஸ்கூல், விக்னேஸ்வரா லேடீஸ் க்ளப் மற்றும் குரோம்பேட்டை விவேகானந்தா வித்யாலயாவில் டீச்சர்களுக்கு ஆசிரியர் தினத்தில் சிறப்பு உரையாற்றியது. இதை எல்லாம் ஒப்பு நோக்கி ஈரோடு சங்கமத்தில் 15 வலைப்பதிவர்களுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

எழுதுபவர்கள் அதிகமாக உள்ள உலகத்தில் புரவலர்களின் பங்கு போற்றப்படக் கூடியது. சென்ற வருட சங்கமம் புகைப்படங்கள் பார்த்தே கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இந்த வருடம் விருதும் விருந்தும் சிறக்க ஈடேறியது. அதை அதி சிறப்பாக செய்த ஈரோடு வலைப்பதிவர் குழுமம் பாராட்டப்பட வேண்டியது.

எத்தனையோ பேர் எழுதிக் கொண்டிருக்க என்னை ஒற்றை பெண் வலைப்பதிவராய் தேர்ந்தெடுத்துக் கௌரவித்த ஈரோடு குழுமம் என்னை பொறுத்த வரையில் வெல் விஷர்ஸ் குழுமம். நம் தலை மேல் சில தேவதைகள் நாம் சொல்வதை எல்லாம் ஆமோதித்து ததாஸ்து என சொல்லுமாம். அந்த தேவதைகளோடு நான் அவர்களை ஒப்பு நோக்குகிறேன்.

விருதுக்காக என் பெயரைப் பரிந்துரைத்தவர்களுக்கும், விருதும் விருந்தும் வழங்கும் செலவுகளை எல்லாம் ஏற்ற திரு தாமோதர் சந்துரு அண்ணா அவர்களுக்கும் இந்த விருது வழங்கும் விழாவுக்காக உழைத்த குழுமத்திற்கும், தென்காசி தமிழ்ப் பைங்கிளிக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நம்மைப் பற்றிய விபரங்களை கலெக்ட் செய்து நாம் நடந்து வரும்போது ஸ்க்ரீனில் நம்மைப் பற்றி புகைப்படங்களோடு செய்தியைத் தொகுத்து வழங்கியது புதுமையான நிகழ்வு. அடுத்த வருடம் இன்னும் என்ன ஆச்சர்யங்களை அளிக்கப் போகிறார்களோ அவர்கள்.!

ரெகக்னீஷனுக்காகத்தான் மனித இனம் பல செயல்களைச் செய்கிறது.. அல்லது நான் யார் என்ற தெளிவுபடுத்தலுக்காக. அதை அங்கீகரித்த அந்த வெல் விஷர் தேவதைகளுக்கு என் வந்தனங்கள்.. அன்றும் இன்றும் கூட என்னால் அது பற்றி முழுமையாக நன்றி சொல்ல இயலவில்லை. இத்தனை நாள் கழித்தும் சந்தோஷத்தில் குரல் கம்மி பேச வந்தது மறந்தது போல இன்றும் எழுத நினைப்பதை முழுமையாக எழுத இயலவில்லை.. மொத்தத்தில் வலைப்பதிவர்களுக்கான ஆஸ்காரை வழங்கி கௌரவித்த ஈரோடு குழுமத்துக்கும் , குழுமத்தின் மூலம் எங்களுக்கும் மனம் நிறைய சந்தோஷத்தோடு விழாவை புரந்தளித்த திரு . தாமோதர் சந்துரு அண்ணாவுக்கும் நன்றிகள். நன்றிகள்.. நன்றிகள்..!!!

டிஸ்கி:- இதன் பின் என் முதல் புத்தகம் சாதனை அரசிகளை வெளியிட்ட கையோடு இரண்டாவது புத்தகமான ”ங்கா..”வை தொகுத்த போது அதற்குச் சரியான அழகுள்ள அழகிய கவிதையான ஆராதனாவின் புகைப்படத்தை நண்பர் கதிரின் மூலம் தொலைபேசி எண் வாங்கி தொடர்பு கொண்டபோது வண்ணப்படத்தில் முழுமையாக போடலாம் என தாமோதர் அண்ணனே அதை முழுதும் ஏற்று வெளியிட்டுள்ளார்கள். ஆராதனா.. அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட பிரபஞ்சப் பேரழகி. அவள் கிடைத்தது போல கவிதைத் தொகுதியும் அழகுற வந்துள்ளது மகிழ்ச்சி.. தேவதைகள் நம்மைச் சுற்றி வட்டமிடும் போது வேண்டிய வரங்கள் பலிப்பதில் என்ன ஆச்சர்யம்..!!!


11 கருத்துகள்:

  1. இன்னும் நிறைய நிறைய தேவதைகள் உங்களைச் சுற்றி வட்டமிட இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்க்கா!

    பதிலளிநீக்கு
  2. அனைத்திற்கும் பாராட்டுகள் தேனம்மை. மேலும் சாதிக்க நல்வாழ்த்துகள்! தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. தேவதைகள் நம்மைச் சுற்றி வட்டமிடும் போது வேண்டிய வரங்கள் பலிப்பதில் என்ன ஆச்சர்யம்..!!!


    இனிய வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் அக்கா...சாதனைகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  5. தேனக்கா,

    ‘ங்கா...’ புத்தகத்தின் அட்டைப்படமே மனதை அள்ளுகிறது.

    அனைத்திற்குமான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  6. ”வாழ்த்துகள்” என்பது மட்டுமே எப்போதும் பின்னூட்டமாக இடவேண்டியபடிக்கு சாதனைகள் படைக்கிறீர்கள். மேன்மேலும் வளர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி ரத்னவேல் ஐயா

    நன்றி பழனி கந்தசாமி சார்

    நன்றி கணேஷ்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி ராஜி

    நன்றி ஜிஜி

    நன்றி கோபால்

    நன்றி வெற்றிமகள்

    நன்றி ஹுசைனம்மா

    நன்றி சாந்தி

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)