ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மீனோடு மீனாக..

நாளோ ., வாரமோ
மீன் தேடி தனியாய்
தூண்டில் வலையும்
சுக்கானும் பிடித்து..

மோட்டாரில் சென்றாலும்
மீன்தான்.. பிடிக்கிறோம்

சனி, 29 ஜனவரி, 2011

கண்ணைக் காப்பாற்றுங்கள்.. ஒரு விழிப்புணர்வு.. டாக்டர் காயத்ரிஸ்ரீகாந்த்..



எண் சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம் என்பதறிவோம். அதிலும் கண்களே ஒருவர் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் முக்கிய கருவியாய் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் கண்ணைக் கண்போல பார்த்துக்கிட்டாதான் யாரையும் டிபெண்ட் பண்ணாம இருக்கலாம்.

வியாழன், 27 ஜனவரி, 2011

மீண்டும் ஆடிய கால்கள்.. போராடி ஜெயித்த பெண்கள் ( 4 ) ..




பார் மகளே பார்.. திருடாதே பாப்பா திருடாதே.. இந்தப் பாடல்களில் நடித்த குழந்தை நட்சத்திரத்தை ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு.. உங்கள் நினைவுகளை ட்யூன் செய்து பாருங்கள்.. சோதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை என்பதற்கு எடுத்துக் காட்டு அவர்தான்.. லக்ஷ்மிராவ்..

செவ்வாய், 25 ஜனவரி, 2011

விவ.. சாயம்.. அதீதம்.. வெறுங்குடுவை.. சிலந்தி..

1. விவ .. சாயம்..************************
சாணி., சருகு.,
வேப்பம் பிண்ணாக்கு.,
மக்கிப் போன தோல்தழை..
மழைபெஞ்சா
மண்ணுழப்பி..

இத்தனையும் விட்டுப்புட்டு
கைநிறைய அள்ள
கலப்புரம் போட்டு.,
மேலே அள்ள
மேலுரம் போட்டு..

திங்கள், 24 ஜனவரி, 2011

ஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வேண்டுகோளுக்கிணங்கி அனுப்பி வைத்த இந்தக் கவிதைகளின் நாயகி ஃப்ளோரா ராசமணி அவர்களுக்கு நன்றி.


டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2. 1. 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

4 கவிதைகள்.. திண்ணை.. கீற்றுவில்..

1. வற்றின கேள்விகள்..
**********************************

மீன் சுவாசக்குமிழ் வெடிக்கும்
குளத்தைப் பார்க்கும்போதெல்லாம்
குதிக்கட்டுமா என்பான்..

மாடியில் அறுந்த கொடிக்கயிறு பற்றி
கட்டைச்சுவர் எட்டிப்பார்க்கும் போதும்
கால் நீட்டி இதே கேள்வி..

வெள்ளி, 21 ஜனவரி, 2011

சங்கமம் பற்றிய எனது கருத்து கலைஞர் தொலைக்காட்சி செய்தியில்..




கலைஞர் தொலைக்காட்சியில் சங்கமம் பற்றிய எனது கருத்து செய்திகளில் வந்த போது டிஷ்ஷில் எங்கள் தொடர்பில் அதை பார்க்க இயலவில்லை.. எனவே என் சகோதரன் செல்லில் செய்தியை சேகரித்து கணினிக்கு அனுப்பினார்.. அதை என் பையன் யூட்யூபில் பதிந்து இருக்கி்றான்..

ஸ்பீச் என்று பயந்துவிட வேண்டாம் மக்காஸ்.. என்னோட கருத்துக்கள் சும்மா 20 செகண்ட் வருது ..ஸ்பீச் என்று சும்மா அவசரத் தலைப்பிட்டிருக்கிறது.. :))

முன்னேற்பாடு இல்லாமல், தயாரிப்பு இல்லாமல் ., பதட்டத்தோடு பல்லை இறுக்கியபடி ..ஒரு கருத்து..:)) பிண்ணணியில் தொலைக்காட்சி பார்த்த தம்பி மனைவி தம்பியின் கமெண்ட்ஸ்களோடு.. நீங்களும் என்சாய் மக்காஸ்.. :))

வியாழன், 20 ஜனவரி, 2011

ஒளிதல்., பழசு., மாமிசக் கடை..

1. ஒளிதல்..
***************

எதிர் வீட்டு புஜ்ஜு
முந்தானை மூடி முட்டாச்சு..

பக்கத்து வீட்டு பாப்பு
திரைச்சீலையில் ஒளிந்து பிடித்து..

செவ்வாய், 18 ஜனவரி, 2011

என் பெயர் பெண்.. சென்னை சங்கமம் கவிதை..



தமிழ் அன்பருக்கும்.,
தமிழ் அன்பர்களுக்கும்
நண்பர்களுக்கும் வணக்கங்கள்..

* ஆதி மூர்க்கம் விலா
கொய்து செய்த
பாதி மூர்க்கம் நான்..

* இன்றும் இருக்கும்
சாதிச் சண்டையில்
சமரசப் பெண்சாதி நான்..

திங்கள், 17 ஜனவரி, 2011

செவ்வாய், 11 ஜனவரி, 2011

ரசாய(வ)னம்..2011..

சபீனா சாம்பலில் பலா..
குளியல் சோப்பு நீரில் கொய்யா..
ப்ரிஸ்க் கரைசலில் முருங்கை..
ஆலாவில் சந்தனமுல்லை..
எம் எல் எம்மில் செம்பருத்தி..
சொட்டு நீலத்தில் ஜாதிமல்லி..

சனி, 8 ஜனவரி, 2011

நீர்க்குமிழ்கள்.. இதய பலூன்..

1. நீர்க்குமிழ்கள்..:-*************************

அப்பாவுக்கு நான்கு
அம்மாவுக்கு மூன்று
அரசில் முப்பத்து மூன்று...

எல்லாம் சமரசம்..
உரத்துப் பேசவும்..
உள்ள(த்)தை எழுதவும்..

காகித ஓடத்தில் சங்கமத்துக்கு..

”புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்ற குரலில் எனக்கு நெருக்கமான ஒரு வாஞ்சை.. நல்ல விஷயம் சொன்னார் என் அன்பிற்குரிய., நம் அனைவரின் அன்பிற்கும் உரிய பத்மா.. ( padma reaches மற்றும் காகித ஓடம் என இரண்டு வலைத்தளங்களின்வாசி ...!! )..

மிகச் சமீபமாக இவரது இடுகைகள் சில என்னை உலுக்கும் அளவு வலிமையான படைப்புகளாய் இருக்கின்றன.. ஆடியின் முன்னும் பின்னுமாய் தானாய் தன்னோடு போராட்டம்.. முடிவுறாமல்.. மிக அருமையான வித்யாசமான படைப்புக்கள்.. ( கிறிஸ்துமஸ் தாத்தா கவிதையும் ) ..

முதலாளி வேலை செய்வோருக்கு விசேஷ நாட்களில் துணிகள் வாங்கித் தரலாம். நான் கேள்வியே படாத செயலாக இவரின் உதவியாளர் இவருக்கு பதில் அன்பாக புடவை வாங்கித் தந்துள்ளார்.. அந்த அளவு அன்புச் சுரங்கம் பத்மா..

வியாழன், 6 ஜனவரி, 2011

கானாமிர்தம்..

கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு.. எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு.. ” ., ”நூறாண்டு காலம் வாழ்க.. நோய் நொடியில்லாமல் வளர்க.. ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட தமிழர் போலே.”, என்று புகழ் பாடும் தமிழ்ப் பாடல்கள் எனக்குப் பிடித்தம்..

கர்ணனில் ”மஞ்சள் பூசி., மலர்கள் சூடி .,” என வரும் தாய்மை பொலிந்த பாடல் எப்போது பார்த்தாலும் இனிக்கும்.. ”முத்தான முத்தல்லவோ..”, மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே.. ” ., ”ராஜா சின்ன ராஜா., பூந்தளிரே சின்ன நிலவே உன்னை நெஞ்சில் ஏந்திக் கொள்ள ஏங்கும் தாயின் உள்ளம்.. காக்கும் தெய்வம் உன்னை..” ., " அழகிய கண்ணே .. உறவுகள் நீயே.. நீ எங்கே., இனி நான் அங்கே.. என் சேயல்ல தாய் நீ.....,” ” அத்தை மடி மெத்தையடி.. ஆடி விளையாடம்மா.. “ என்ற பாடல்கள் நெஞ்சில் நிறைந்தவை.. அதன் சிகரமான பாட்டு இது..

புதன், 5 ஜனவரி, 2011

பிழைத்த சிலிர்ப்பு..வெளியுலக உயிர்மூச்சு., ஓவியங்கள்..

1. பிழைத்த சிலிர்ப்பு:-
*****************************

வெனிஷியன் ப்ளைண்டுகளின் பின்
நீர்த்தாவரங்கள்.. பனிச் சிகரங்கள்..

ட்ராலி சுமந்த தெர்மாஸ்களோடு
படுக்கை விரிப்புக்கள் தினம்..

அறை மணத்திகள் தொடர்ந்து
ஜெர்ம்களற்ற சாவ்லான் தரைகள்..

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

எலுமிச்சை விளக்கு..

துர்க்கை சன்னதி
செவ்வாய் ராகுகாலம்
திருமணம் கைகூடிவர
தாமரைத் திரியிட்டு
எலுமிச்சை விளக்கு..

சனி, 1 ஜனவரி, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஸ்பெஷல் லேடீஸ் அண்ட் ஜெண்ட்ஸ்..

அன்புத் தோழமைகளுக்கு.,

சென்ற 2010 ஆம் வருடம் மிக இனிமையாக இருந்தது.. அந்த இனிப்பின் குவளையிலேயே 2011 ம் அருந்த ஆசை.. பேராசையா தெரியவில்லை.. முடிந்தவரை முயற்சிப்போம்..

முகப்புத்தகத்தின் வழி கிட்டத்தட்ட 2000 நட்புக்கள்.. சில மாதங்களாக புதிதாக யாரையும் சேர்க்கவுமில்லை., விலக்கவுமில்லை.. தொடர்கிறது நட்பின் இழை.. தொடரட்டும்.. 2010 வருடம் என் பிறந்த நாளை எல்லோரின் வாழ்த்தோடும் ஆசியோடும் சிறப்பாக ஒரு வாரம் கொண்டாடினேன்.. அம்மு.,கயல், வாணி., மஞ்சு .,சித்ரா., ஆனந்தி., மயிலு., லல்லி., வெற்றி., செல்வா., அன்பு., பாபு., ஸ்ரீஜி., மற்றும் நண்பர்களுக்கு நன்றி..