ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மீனோடு மீனாக..

நாளோ ., வாரமோ
மீன் தேடி தனியாய்
தூண்டில் வலையும்
சுக்கானும் பிடித்து..

மோட்டாரில் சென்றாலும்
மீன்தான்.. பிடிக்கிறோம்

வரைந்து வைக்கா
எல்லைகோட்டை
தாண்டினோமா
வழி தப்பினோமா

கடலும் குடிசையும்
கரைகாணா சொத்து

அலைகளாய்..
திரும்ப திரும்ப..
கரையேறத் தவித்து
முடியாமல் மூழ்கி..

மனிதர்தானா நாங்களும்
மதிப்பிருக்கா எங்கள் உயிர்க்கும்..

மீன் சுட்டோம்
உங்கள் உணவுக்காய்..
மீனோடு மீனாய் சுடப்படவா
மீண்டும் பிறந்தோம்

தமிழன்தான் நாங்களும்
தமிழர்களே கரம்கோர்ப்பீர்.

குறிப்பு..:-இந்த மனுக்கடிதம் நாட்டின் பிரதமருக்கு..

23 கருத்துகள்:

  1. பதிவுக்கு நன்றிகள் பல தேனம்மை. பரவட்டும் ‘மனு’ப் பக்கத்தின் உரல். ஒலிக்கட்டும் ஓங்கி நம் குரல்.

    பதிலளிநீக்கு
  2. ஒன்றுபட்டுக் குரல்கொடுப்போம்

    பதிலளிநீக்கு
  3. மீனோடு மீனாய் சுடப்படவா
    மீண்டும் பிறந்தோம்..////

    1393ஆக நான். நம் கண்ணீருக்கும், கோபத்திற்கும் என்ன தீர்வு என்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  4. //மீன் சுட்டோம்
    உங்கள் உணவுக்காய்..
    மீனோடு மீனாய் சுடப்படவா
    மீண்டும் பிறந்தோம்//

    நெஞ்சை சுட்ட வார்த்தை.....

    பதிலளிநீக்கு
  5. //மீன் சுட்டோம்
    உங்கள் உணவுக்காய்..
    மீனோடு மீனாய் சுடப்படவா
    மீண்டும் பிறந்தோம்

    தமிழன்தான் நாங்களும்
    தமிழர்களே கரம்கோர்ப்பீர்.///

    அனைவரும் ஒன்றுசேர்ந்து குரல்கொடுப்போம் தீர்வு கிடைக்குவரை தொடர்ந்து போராடுவோம்.....

    உங்களின் பங்களிப்புக்கு நன்றிங்கம்மா.....

    பதிலளிநீக்கு
  6. //மீன் சுட்டோம்
    உங்கள் உணவுக்காய்..
    மீனோடு மீனாய் சுடப்படவா
    மீண்டும் பிறந்தோம்

    தமிழன்தான் நாங்களும்
    தமிழர்களே கரம்கோர்ப்பீர்.///

    அனைவரும் ஒன்றுசேர்ந்து குரல்கொடுப்போம் தீர்வு கிடைக்குவரை தொடர்ந்து போராடுவோம்.....

    உங்களின் பங்களிப்புக்கு நன்றிங்கம்மா.....

    பதிலளிநீக்கு
  7. ஒன்று படுவோம்...
    வென்று காட்டுவோம்..!

    பதிலளிநீக்கு
  8. >>>>மீன் சுட்டோம்
    உங்கள் உணவுக்காய்..
    மீனோடு மீனாய் சுடப்படவா
    மீண்டும் பிறந்தோம்

    kalakkal meedam கலக்கல் வரிகள் மேடம்

    பதிலளிநீக்கு
  9. 690 வது கையெழுத்தை போட்டுவிட்டேன் அக்கா.

    பதிலளிநீக்கு
  10. கையொப்பமிட்டு விட்டேன். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

    பதிலளிநீக்கு
  11. pls come today met at Marina beach Gandhi statue at 5.30 pm (sunday 30 Jan11) Bloggers twitters #tnfisherman

    பதிலளிநீக்கு
  12. எல்லாத் தளங்களிலும் ஒற்றுமை உணர்வைக் காண்கிறேன்.இதுவே வெற்றிதான் !

    பதிலளிநீக்கு
  13. நாட்டிகல் மைல்களில் மைல்களில் நாடிநரம்புகள் அறுக்கப் படுவதை அவதானித்தே அனுதினமும் கடக்கப் படும் வாழ்வு விதிக்கப் பட்ட ஆத்மாக்கள் ,கடலில் கரைக்கப் படும் கண்ணீர்த்துளிகள் உப்பளங்களாகும் .

    கவிதை நன்று தேனம்மை

    பதிலளிநீக்கு
  14. உங்கள் ஆதரவை தெரிவித்ததற்கு நன்றி மேடம்...

    பதிலளிநீக்கு
  15. மீனோடு மீனாய் சுடப்படவா
    மீண்டும் பிறந்தோம்

    தமிழன்தான் நாங்களும்
    தமிழர்களே கரம்கோர்ப்பீர்.//

    நிச்சியம் நல்ல தீர்வு கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி ராமலெக்ஷ்மி., கலாநேசன்., ரமேஷ்., மனோ., மாணவன்., குமார்., செந்தில் குமார்., அக்பர்., சேட்டைக்காரன்., ராம்ஜி., ஹேமா., டி வி ஆர்., அஹமத்., கார்த்திகா., பிரபா., ஸ்ரீராம்., கோமதி.

    பதிலளிநீக்கு
  17. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  18. மீன் கவிதையோடு மீனவர்களுக்கு பதிவு
    நானும் போட்டு இருக்கேன் தேனக்கா/.

    மீன்சமையலுடன்..

    பதிலளிநீக்கு
  19. I have added this poem link into my twitter
    ( http://twitter.com/mullai2k8 )

    as

    தமிழன்தான் நாங்களும் தமிழர்களே கரம்கோர்ப்பீர்! http://honeylaksh.blogspot.com/2011/01/blog-post_30.html

    http://twitter.com/#!/messages

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)