ஞாயிறு, 23 ஜனவரி, 2011

4 கவிதைகள்.. திண்ணை.. கீற்றுவில்..

1. வற்றின கேள்விகள்..
**********************************

மீன் சுவாசக்குமிழ் வெடிக்கும்
குளத்தைப் பார்க்கும்போதெல்லாம்
குதிக்கட்டுமா என்பான்..

மாடியில் அறுந்த கொடிக்கயிறு பற்றி
கட்டைச்சுவர் எட்டிப்பார்க்கும் போதும்
கால் நீட்டி இதே கேள்வி..


உயிரணுக்கள் வற்றின பருவத்தில்
ஒரு அமாவாசை இரவில்
ஓடுகள் நெகிழ்ந்த உத்தரத்தில்

ஓய்ந்த கேள்வியோடும் சுவாசத்தோடும்
ஒற்றைக் கயிற்றில் ஆடிக்கொண்டு
அவன் மனநோயின் வெளிப்பாடாய்..

அறியாமலோ இயலாமலோ
போய்விட்டான் அவன் மனைவிக்கு
மறுமணம் ஆகுமென..

===================================

2. சின்னப் பயல்..:-
***************************

கோடி பெறும் வீட்டில்
லட்சம் பெறும் மாடர்ன் ஆர்ட்..

சுவர் முழுக்க
செலவில்லாமல்
சின்னப்பயலின் கிறுக்கல்கள்..
வாங்கிய சேட்டை அடி சுமந்து..

அணைப்புக்கு ஏங்கி
விரிந்த கைகளுடன்
மிக்கி மவுசோ.,
டொனால்ட் டக்கோ..
க்ரேயானில்..

அணைக்க விரும்பி
சுவற்று பொம்மைகளை
கைகோர்த்துப் பிடித்தேன்..
வளர்ந்துவிட்ட சின்னப்பயலை நினைத்து..

=======================================

3. நன்றி நைதல்..
 ***********************

புகை படிந்த கண்களுக்கு
நடனக்காரியின் அசைவை
ஒத்திருந்தது அவளின்
நன்றி நவிலல்..

புரணிக்காரர்களின்
வெறுப்புக்குரியதாயிருந்தது
அந்த ஏற்றமும் நன்றியும்..

அவலற்ற பொழுதுகளில்
பொறாமை நாவுகள்
அவளையும் அதையும்
இடித்துப் பிழிந்து
விரசம் ருசித்தன..

எவ்வளவு நைத்தும்
திரும்ப வந்தது
அவளது நன்றி.. எதாலும்
நையாத புன்னகையோடு..

=============================

4. புலிகளோடு......
*************************

வீட்டுப் பிராணி..
புகுந்தது வனம் என்பதறியாமல்..
புகுந்த கணம் இருட்டுக்குள்..

மினுமினுங்கும் கூர்கண்களோடு
வரிகளும்., வட்டங்களும்
சிலிர்க்கும் புலிகள்..

வனம் வந்த நாள் தொட்டு
அவை அங்கேயே வளர்ந்து வாழ்ந்து..
கம்பீரப் பாய்ச்சலோடு..

புதுவனம் புகுந்த அது
புலியைப் போல இருந்தாலும்..
சீறவோ பாயவோ தெரியாமல்..

கற்றுக் கொள்ளக் கூடும்..
புலிகளோடு புழங்குவதும்.,
வேட்டையாடுவதும்..
வனம் அதிரடிப்பதும்..

டிஸ்கி . 1 ..:- வற்றின கேள்விகள்., சின்னப் பயல்., நன்றி நைதல்.. இந்த மூன்று கவிதைகளும் 4. 1 . 2011 கீற்றுவில் வெளிவந்திருக்கின்றன.. நன்றி கீற்று..:))

டிஸ்கி ..2..:- வற்றின கேள்விகள்., சின்னப் பயல்., நன்றி நைதல்., புலிகளோடு., இந்த நான்கு கவிதைகளும் 9. 1 . 2011 திண்ணையில் வெளிவந்திருக்கின்றன.. நன்றி திண்ணை..

19 கருத்துகள்:

  1. எல்லா கவிதைக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கருத்துக்களோடு நாலும் நாலு விதம்.முன்னமே வாசித்துவிட்டேன் தேனக்கா !

    பதிலளிநீக்கு
  3. கவிதைகள் அனைத்தும் நல்லாருக்கு தேனம்மை..

    பதிலளிநீக்கு
  4. தேனு மக்கா, நல்லாருக்கீங்களா?

    எல்லாம் நல்லாருக்கு. முதல் கவிதை ரொம்ப.

    பதிலளிநீக்கு
  5. சின்னப்பயல் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது மேடம்...

    பதிலளிநீக்கு
  6. நன்றாக இருக்கிறது கவிதைகள்.

    பதிலளிநீக்கு
  7. தரம்மான கவிதைகள்


    அதுவும் சுவற்றில் கிறுக்கல் சக மக்டொனா டக்

    பதிலளிநீக்கு
  8. எல்லா கவிதைக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அனைத்தும் அருமை. ‘சின்னப் பயல்’ அதிகம் மனம் கவர்ந்தான்:)!

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள்,தேனக்கா கவிதையில் தான் உங்கள் முழு மூச்சு போல,அருமை.

    பதிலளிநீக்கு
  11. அக்கா, நானும் பாக்கீறேன், இப்பல்லாம் இந்த இதழ்ல வந்துது, அந்தப் பத்திரிகையில் வருதுன்னு மறுபதிப்பாகவே உங்க பதிவுகள் வந்துகிட்டிருக்கு. ரொம்ப சந்தோஷம்க்கா!!

    பதிலளிநீக்கு
  12. அருமையான கவிதைகள்...முதல் கவிதையின் கடைசி பத்தி மிகவும் பாதித்தது...தங்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  13. நன்றி கருணா., ஆயிஷா., கலாநேசன்., ஹேமா., சாரல்.,சித்ரா., பாரா ( நலம் மக்கா) ., பிரபா., மாதேவி., சிவசங்கர்., குமார்., செந்தில் குமார்., ராமலெக்ஷ்மி., ஆசியா.,ஹுஸைனம்மா., ராஜா

    பதிலளிநீக்கு
  14. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  15. வளர்ந்துவிட்ட சின்னப்பயல் மனம் கவருகிறான்.

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_22.html

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)