வியாழன், 19 ஆகஸ்ட், 2010

பெயர்ச் சங்கீதம்..

தினமொருமுறை என் பெயரை
உரைத்துச் செல்கிறாய்..
உள் உவப்ப...

இசைக் கெடிகாரமாயும்.,
சீன வாஸ்துவின்
காற்றிசைச் சிணுங்கியுமாய்
ஒலித்துக் கிடக்கிறது அது..

எடுத்து ஒளிக்கும் ப்ரயத்தனத்தில்
உன் வார்த்தைகளைத்
திரும்பத் தவறவிட்டு.,


திகைத்துப் பிடிக்கையில்
பேரோசையாய் வெடித்துச்
சிதறுகிறது அது..

காற்று பற்றி இழுத்துக்கொண்டு
பரிதவித்துத் திரிகிறது..
உன்னிடமும் என்னிடமும்
முகமாத்துச் செய்ததுபோல்..

பாலருந்தும் குழந்தையின் சேட்டையாய்..
பால் சிதறி வடியும் துளிகளும்
அதன் வாயுமாய்
மணத்துக் கிடக்கிறது எல்லாமும்..

18 கருத்துகள்:

  1. மணத்துக் கிடக்கிறது கவிதையும் அழகு வாழ்த்துகள் தேனக்கா...

    பதிலளிநீக்கு
  2. அருமை அக்கா!
    தலைப்பும் மிக அழகு!

    பதிலளிநீக்கு
  3. ///பாலருந்தும் குழந்தையின் சேட்டையாய்..
    பால் சிதறி வடியும் துளிகளும்
    அதன் வாயுமாய்
    மணத்துக் கிடக்கிறது எல்லாமும்..
    ///

    கடைசி வரி கொள்ளை அழகு..

    ரொம்ப நல்லா இருக்கு..

    பதிலளிநீக்கு
  4. காற்று பற்றி இழுத்துக்கொண்டு
    பரிதவித்துத் திரிகிறது..
    உன்னிடமும் என்னிடமும்
    முகமாத்துச் செய்ததுபோல்..

    முகமாத்து வித்தியாசமான சொல்லாடல் மா ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  5. உன்னிடமும் என்னிடமும்
    முகமாத்துச் செய்ததுபோல்..
    ]]

    நல்லாயிருக்கே!

    பதிலளிநீக்கு
  6. காற்று பற்றி இழுத்துக்கொண்டு
    பரிதவித்துத் திரிகிறது..
    உன்னிடமும் என்னிடமும்
    முகமாத்துச் செய்ததுபோல்..

    வார்த்தைகள் ம்ம்ம் அருமை அக்கா

    பதிலளிநீக்கு
  7. கவிதை நன்றாக இருந்தது! கடைசி வரிகள் அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. அருமையான கவிதை...
    வார்த்தைகள் இங்கே வாசம் வீசுகின்றன.

    பதிலளிநீக்கு
  9. பாலருந்தும் குழந்தையின் சேட்டையாய்..
    பால் சிதறி வடியும் துளிகளும்
    அதன் வாயுமாய்
    மணத்துக் கிடக்கிறது எல்லாமும்..

    ...so sweet!

    பதிலளிநீக்கு
  10. நன்றி முனியப்பன் சார்., கனி., பாலாஜி., சிவசங்கர்., சக்தி., கமலேஷ்., ஸ்ரீஜித்., ஜமால்.,
    செந்தில்., எஸ்.கே., குமார்., ரிஷபன்., சித்து., சசி..

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)