சனி, 21 ஆகஸ்ட், 2010

மாயாவி..

நீ கொடுத்த கோப்பை அப்படி
நீ இல்லாத போதும்
எனக்கானதை சுரந்து கொண்டே..

எல்லா மனத்திலும்
வாணவேடிக்கை உன் வருகையால்
என் பெர்சியாய்டே..வா..

நிலவாய் மேகத்துள் மறைந்து..
அதுதானே உன் கவர்ச்சி..
எண்ணத்தீயே..


குழந்தையாய் மாற்றிவிடும்
அற்புத செங்கோலோடு
உன் ஆதிக்கம்..ஆவரணம்..

உண்ணலில்லை உறங்கலில்லை
உன் எண்ணம் மகிர்ந்து..
அணையைக் கட்டு ..என்னைத் தடுத்து..

வளையங்களோ சீட்டுக்கட்டோ
இல்லாமல்.. வண்ணம் சொரிய..
வானவில்லாய் வளைத்து
எனைச் சூடிய மாயாவி..

17 கருத்துகள்:

  1. நீண்ட நாட்களுக்கு பின் இரண்டு முறை படிக்க வைத்த கவிதை

    பிற்பாதி புரிந்தது போல் இருந்தாலும் முதல் பாதி என்னை ங ஆக்கிவிட்டது

    பதிலளிநீக்கு
  2. எப்படி படிச்சாலும் சரியா வருது..சூப்பர்..!!

    பதிலளிநீக்கு
  3. அருமையான வரிகள்......வாழ்த்துகள் தொடர்ந்து எழுத

    பதிலளிநீக்கு
  4. //உன் எண்ணம் மகிர்ந்து...// அப்படின்னா என்னங்க?

    பதிலளிநீக்கு
  5. //குழந்தையாய் மாற்றிவிடும்
    அற்புத செங்கோலோடு
    உன் ஆதிக்கம்..ஆவரணம்..//
    அற்புதம்!

    பதிலளிநீக்கு
  6. அருமையான வரிகள்......

    நல்லாயிருக்கு அக்கா

    பதிலளிநீக்கு
  7. நன்றி., ஜமால்., ஜெய்., அக்பர்., குரு., கலாநேசன்., ரிஷபன்.,வெறும் பய., தியாவின் பேனா.,இளம்தூயவன்..

    பதிலளிநீக்கு
  8. கலாநேசன் மகிர்ந்துனா .. நிரம்பி வழிவது..

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் .! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  10. மாயாவியின் ஜாலம் உங்கள் வரிகளில் அழகு தேனக்கா.

    பதிலளிநீக்கு
  11. நல்லாஇருக்கு தேனக்கா

    அணையைக்கட்டு என்று வருமென நினைக்கிறேன்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  12. நன்றி ஹேமா., பத்மா., விஜய்., ( திருத்திட்டேன்).., முனியப்பன் சார்., சரவணன்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)