திங்கள், 31 மே, 2010

வலைச்சரத்தில் நானும் நீங்களும்

வலைச்சரத்தில் இரண்டு வாரமாக எழுதி வந்தேன்..
அதை எல்லாம் தொகுத்து இங்கு என்னுடய ப்லாக்கில் வெளியிடுகிறேன் மக்களே.. அனேகமா நீங்க எல்லாரும் இருக்கீங்க. எந்த இடுகையில் யார்னும் எழுதி இருக்கேன் ... கிளிக் பண்ணி படிச்சு என்ஜாய் பண்ணுங்க..



அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.. இது அறிமுகம்..



எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் ... இதில் என் அன்பு ஆசிரியை திரு .எம். ஏ. சுசீலா அவர்கள்., வலைத்தள ஆசிரியர் சீனா சார்.,ராகவன் நைஜீரியா., முனியப்பன் சார்., கபீரன்பன்.,அபுல் கலாம் ஆசாத்.,
முனைவர் குணசீலன்.,வெற்றி வேல் சார்., டாக்டர் ருத்ரன்., பாலா சார்.,
ஜோதிஜி இவர்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கேன்..

சனி, 29 மே, 2010

என்னைக் குழந்தையாக்கியவள்

நேற்று அவள் இல்லாமல்
என் உலகம் ஸ்தம்பித்திருந்தது..
அவள் சூலுறாத கர்ப்பம் நான்..
ஆனால் என்னைப் புதிதாய்ப் பிரசவித்தவள்,,

இருக்கிறேனா எனக்கூடத்
தெரியவில்லை..
சுவாசம் போல அவளையும்
அடிக்கொருதரம் எதிர்பார்த்து..

வியாழன், 27 மே, 2010

கதவுகளும் ஜன்னல்களும்

வீட்டின் உள்செல்லவும்.,
வெளியேறவும்.,
இரண்டு கதவுகளும்,
ஏழெட்டு ஜன்னல்களும்....

எனக்கான சமையலறையில்
குருவியும்., காக்கையும்.,
கிளியும்., பட்டாம்பூச்சியும்.,
முருங்கை மரமும்.,
தென்னை கீறிய நிலாவும்..

செவ்வாய், 25 மே, 2010

நீரெழுத்து

புன்னகை புரிந்த
கண்களுக்கு புதைந்திருக்கும்
கத்திகள் புரிவதில்லை
கண்ணி வெடிகளாய்..

வாழ்த்த வருவதாய்
நினைக்க வீழ்த்தவா..?
கேடயம் சுமந்ததில்லை
எப்போதும்..எதற்கும்..

திங்கள், 24 மே, 2010

சவலைப் பலா..

அரும்பிக் கொண்டே
இருக்கிறது ஆசை..
பூத்துக் கொண்டே
இருக்கிறது மனசு...

துளிர்விட்டுக் கொண்டே
இருக்கிறது ஏக்கம்..
விருட்சமாகிக் கொண்டே
இருக்கிறது எல்லாம்...
அடைய முடியாமல்..

சனி, 22 மே, 2010

விபத்தும்.,விழித்தும்., தனித்தும்,,,,,,

விழித்திருக்கிறேன்.. தவித்திருக்கிறேன்.
தனித்திருக்கிறேன்.. பசித்திருக்கிறேன்..
அன்பிற்குரியவர்களின் நேரத்துக்காய்..
ரிச்சி ரிச்சைப் போல என்னைப்
பல்லக்கில் சுமக்கிறது பணம்...
ஒற்றையனாய்..
மிக மூத்த அக்கா கடல் கடந்து..
சடை பிடித்து விளையாட ஒரு தங்கை..
காக்காய்க்கடி கடித்துண்ண ஒரு தம்பி..
பள்ளிப் பாதுகாவலனாய் ஒரு அண்ணன்...
எதுவுமில்லை..

வியாழன், 20 மே, 2010

பற்று வரவு (பத்துவரவு)

பட்டுப்பூச்சி இறக்கையாய்
படபடக்கும் இமையில்
ஒரு நூறு முத்தம்..
நான் நூறு கொடுத்தால்
அது ஒன்று....!!!

ஈரமும் கருணையும்
விகசித்துக் கிடக்கும்
உன் இள இமைகளில்
இதுபோல் ஒரு நூறு..

செவ்வாய், 18 மே, 2010

புனர் ஜென்மம்

உன் அழகான புன்னகையுடன்
ஆரம்பமாகின்றன என் காலைகள்..
புன்னகையா மனதின் மென்னகையா..?
மனம் மயங்கும் போதோ.,
கண்கள் சோர்வுறும் போதோ.,
கைகள் களைப்புறும் போதோ.,
தள்ள்ள்ள்ளி அமர்ந்து.,
உன் மென்னகையும் தேனீரையும்
துளித்துளியாய்ப் பருகுகிறேன்..

ஞாயிறு, 16 மே, 2010

ஸ்க்ரீன் ஸேவர்

ரீசார்ஜ் செய்தாயிற்று.,
அடுத்த ஜெனரேஷன் வரை பேச..
சிக்னல் கிடைக்கிறது..
டவர் கூட அருகில்..,
வேவ்லெந்தும் ஃப்ரிக்வென்ஸியும் கூட..

குரல்தான் கேட்கவில்லை...
வரும் வரும் என ஸ்க்ரீனைத்
தட்டித் தட்டிப்பார்த்து...
இன்பாக்ஸையும்., மெசேஜையும்.,
மிஸ்டு கால்ஸையும்...
அடிக்கடித் தடவி..

சனி, 15 மே, 2010

கைப்பிடிக்குள் பசு

ஜென்ம ஜென்மமாய் என்னுடன் நீ வருகிறாய்
ராதையும் குழலூதும் கிருஷ்ணனுமாய்..

உன் வீணாகானத்தில் வேறு ஒலிகள்
கேட்பதில்லை இந்தக் காதுகளில்..

காதல் தோய்ந்த கோபிகையாய்
நீயின்றி வேறில்லை கண்களில்

உன் மெய்பட்ட என் மெய் உருகி
உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..

வியாழன், 13 மே, 2010

சித்ராயணம்

டாப் ...--20 டிக்‌ஷ்...

பெயர் -- சித்ரா சாலமன்..

பிறந்தது -- மதுரையா., சிதம்பரமா., என்றால்
பாளையங்கோட்டை எனலாம்.. கணவரின்
சப்போர்ட் அதிகம்.

வாழிடம் -- டல்லாஸ் கொண்ட தமிழச்சி

குழந்தைகள் -- செல்வமும், செல்லமும்..இந்த
செல்லத்துக்கு ரெண்டே ரெண்டு கண்கள்..
(கவருமெண்டு சொன்னபடிப்பா)

அப்பா கொடுத்தது -- பேச்சு

தானாய்ப் பேசுவது -- கொஞ்சம் வெட்டிப்பேச்சு

நண்பர்கள் -- சமையல் தெரியாமல் சொதப்புபவர்கள்.,
ஃபேஸ் புக்கில் வெட்டி அரட்டை அடிப்பவர் சங்கம்.,
பின்னூட்டக் கும்மி அடிப்பவர்கள்.கவுஜ எழுதுறேன்னு
ஹோம் பேஜை நிரப்பும் ஒரு அக்கா..ஹிஹி நாந்தான்

பயந்து கொண்டு இருப்பவர்கள் -- பணத்தை
மாலையாக அணிந்து கொள்பவர்கள்., பட்டுப்
புடவை டிஸைன் செய்பவர்கள்.,சுண்ணாம்பு
தயாரிப்பாளர்கள்..

பயம் வர செய்வது -- தூணிலும் இருப்பாள்..
துரும்பிலும் இருப்பாள்.. எல்லா ப்ளாக்கிலும்
பின்னூட்டமாயும்.. தூங்குகிறாளா தெரியாது..

நீண்ட நாள் சாதனை -- பிறந்த நாள் கேக்காக இருந்தது

இடைப்பட்ட சாதனை -- ஏப்ரல் ஒன்னில் செமையா
ஏமாத்தியது

இன்றைய சாதனை -- கெண்டகியும் டல்லாசும் பட்டாசு
வெடிக்க பிறந்த நாள் கொண்டாடுவது..

முன்பு பிடித்த இடம்.-- பள்ளிக்கூட பெஞ்சுகளில்
மேலேறி நிற்பது..

புதன், 12 மே, 2010

கோபிநாத்தின் புத்தகம் ..ஒரு விமர்சனம்


இந்த விமர்சனம் அமேஸானில் 25 நூல்கள் - ஒரு பார்வை என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:- இந்த புத்தக விமர்சனத்தை என் அன்புத்தங்கை சித்ராவின் பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன்.. மிக குறுகிய காலத்தில் வளர்ந்து அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட அவளைப் போல் பாசிடிவ் திங்கர் யாரும் இருக்க முடியாது.. கிறிஸ்துவின் அன்பிலும் விசுவாசத்திலும் நீடூழி வாழ்க கண்மணி.. !!!

ஞாயிறு, 9 மே, 2010

என் அம்மா

ஒவ்வொரு முறையும்
அகண்ட பிரபஞ்சத்தை
அவள் கண்களில் பார்க்கிறேன்...

விடுதியிலோ.,
மணமுடித்தோ,
வெளிநாட்டில் வேலையிலோ..

எங்கிருந்தாலும்
வருகிறாள் முடிந்துகொண்டு
குசேலனின் அவலாய் அன்பை...

வெள்ளி, 7 மே, 2010

முகச்சிடுக்கு

ஒரு புகைப்படமோ பேரோ
தெரிந்தது போல் இருக்கிறது
நூல் பிடித்து வர...

கொட்டிக்கிடக்கும்
அடையாள அட்டைகளில்
புன்னகை புதிதாய்...

தனிப்பட்ட தகவல்களும்
நெருக்கம் தருவதாய்...

புதன், 5 மே, 2010

அன்பின் வண்ணமே

பூதம் புதயலைக் காப்பதுபோல்
உன்னை உள்ளே பூட்டி வைத்து
ஏக்கமாய் தூக்கமில்லாமல்
ஏங்கி ஏங்கிச் சாகிறது மனசு..

கிடைத்தது விட்டாய்
கிட்டிவிட்டது எல்லாம்
முன்னைவிட அதிகம் துடிக்கிறது
இதயம்..

திங்கள், 3 மே, 2010

நான் என்ற எல்லாம்

பருவம் தப்பிப் பெய்த மழை போல
என் மேல் நீ விழுந்தாய் ..

உன்னை தேக்கி வைத்திருக்கிறேன்...
அணையை மீறும் வெள்ளம் போல்
அலையடிக்கிறது மனசு ...

தளும்புவதெல்லாம் கவிதையாய்
உன்மேல் மனச்சூல் கழட்டித்
தேன் போல் வழிந்து..

சனி, 1 மே, 2010

கம்பன் விழாவில் கவிக்கோ

காரைக்குடியில் சென்ற மாதம் கம்பர் விழா
நடந்தது..அதில் திருநாள் மங்கலத்தை கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் தொடங்கி வைத்துப் பேசினார்..
இந்த முறை 72 ஆண்டுகால கம்பன் விழாவில் புதுமையாக”யாதும் ஊரே “ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகள் தலைப்பும் பொருளுமாக வைக்கப்பட்டுத் தலைவர் உரை அதன்பாற் பொருட்டு அமைந்தது மிக அருமையாய்..
விகடனில் கவிக்கோ அவர்களின் கவிதைகளை படித்து மகிழ்ந்திருக்கிறேன் ..அன்று கவிதையே கவிதை படிக்கக் கேட்டு இன்புற்றேன்..
தலைவர் உரையில் அனவரையும் வாழ்த்தி கம்பனடிப் பொடியினை வணங்கித் தனதுரையை ஆரம்பித்தார் ..ரஷ்யாவின் ” லுகும்பா பல்கலைக்கழக வரவேற்பு வளைவில் பொறிக்கப்பட்ட வாசகம் ..எல்லா மொழியிலும் அலசி ஆராய்ந்து ..தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த வாசகம் ...--ஒப்பற்ற வாசகம்..”யாதும் ஊரே” என்ற கணீயன் பூங்குன்றனாரின் வாசகமாம் ... அவர் ஒரு வானியல் அறிஞரென்று புறநானூறு சொல்கிறது.. என்றார்..