திங்கள், 3 மே, 2010

நான் என்ற எல்லாம்

பருவம் தப்பிப் பெய்த மழை போல
என் மேல் நீ விழுந்தாய் ..

உன்னை தேக்கி வைத்திருக்கிறேன்...
அணையை மீறும் வெள்ளம் போல்
அலையடிக்கிறது மனசு ...

தளும்புவதெல்லாம் கவிதையாய்
உன்மேல் மனச்சூல் கழட்டித்
தேன் போல் வழிந்து..


என்ன செய்யப்போகிறாய்...
இன்னும் என்னவாகப் போகிறேன் ..

என்பது ஏதும் அறியாமல்...
உன் பின்னே...

பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
நான் என்ற எல்லாமும்...

65 கருத்துகள்:

  1. //பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
    நான் என்ற எல்லாமும்...///

    ஆனந்தத்தின் அடையாளம்.

    பதிலளிநீக்கு
  2. கவிதை அருமையாக இருக்கிறது அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. //என்ன செய்யப்போகிறாய்...
    இன்னும் என்னவாகப் போகிறேன் ..
    என்பது ஏதும் அறியாமல்...
    உன் பின்னே...
    பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
    நான் என்ற எல்லாமும்...//

    தேனக்கா,

    என்னச் சொல்லி பாராட்டுவதுன்னு தெரியில போங்க.

    ரொம்பவும் ரசிச்சேன் நான்...1

    பதிலளிநீக்கு
  4. இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே

    இதுதானே தேனம்மை?
    :))
    நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  5. // என்ன செய்யப்போகிறாய்...
    இன்னும் என்னவாகப் போகிறேன் ..

    என்பது ஏதும் அறியாமல்...
    உன் பின்னே...

    பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
    நான் என்ற எல்லாமும்...//

    சிறகடித்து பறக்கின்றது நினவலைகள்.

    பதிலளிநீக்கு
  6. //பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
    நான் என்ற எல்லாமும்...//

    அருமை...

    பதிலளிநீக்கு
  7. தேனு அக்கா காலேலயே நல்லதொரு காதல் கவிதை.சந்தோஷமாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  8. பருவம் தப்பிப் பெய்த மழை போல
    என் மேல் நீ விழுந்தாய் ..



    நிறைய விஷயங்கள் இப்படி தான் அமைகிறது.

    பதிலளிநீக்கு
  9. தளும்புவதெல்லாம் கவிதையாய்...

    அழகான அனுபவம் இது....

    பதிலளிநீக்கு
  10. :)

    இங்க தேனம்மைன்னு ஒரு பூக்களின் வாசகி நல்லா எழுதுவாங்க

    இப்பல்லாம் பார்க்கவே முடியல

    கவிதை எழுதுறதை விட்டுட்டாங்களா ?
    யாராவது பார்த்தா சொல்லுங்களேன்

    //உன் ஒரு ரூபம் மட்டுமே
    காண ஏங்கி கனலுடன் நீ....
    சூரியன் மகளாய் நான்
    இங்கேயே இருக்கிறேன் ...
    எனக்கான மரணம் வரை
    எந்த விஷேஷமும் அவசியமும்
    இல்லாமல் ஒரு ஒப்பனை ஆர்வத்தில்
    விழித்துப் பார்த்தேன் கிண்ணங்களில்
    இரவுத் தூக்கமற்று
    சோர்வுற்றுக் களைத்துக்கிடந்த

    அவன் கண்களை
    வெள்ளைக் கருவிற்குள்
    சுருண்ட இறால்களாய்...

    சரக்கம்பி அறுந்த மழையாய்
    அவர்கள் அறிந்திருக்கவில்லை...
    படைத்த ஒருவனை
    சிலுவையிடுகிறோமென
    ஒன்றான அலைவரிசையில்
    யுகங்கள் கடந்த
    நினைவுகள் அசரீரியாய்....

    ஒரு புன்னகையும் சில அன்பான
    வார்த்தைகளும் போதுமாயிருந்தது
    அவருடனான தோழமைக்கு

    உன் நன்னீர்ப்பார்வையால்
    நீஞ்சவைக்கிறாய்
    என்னை ..

    மாலைச் சூரியனும்
    பாய் மரப்படகுகளும்
    முத்தமிட்டதுபோல
    இலகுவாக அணைத்திருந்தாய்

    நீ விளையாடி முடிந்தபின்னும்
    கை நிறைய ஏப்ரல் பூக்களுடனும்
    இதயத்துடிப்புடனும்
    உனக்காக நான்

    காண்போரே இல்லாமல்
    பூப்பள்ளத்தாக்கு....
    தனிமைக்குப் பயந்து
    கூட்டமாய்ப் பூத்து....

    வலிகளைப்
    பற்களுக்குள் ஒளிப்பதை
    புன்னகைப்பதாக எண்ணி
    மகிழ்கிறேன்....

    இன்னும் இன்னும் சொல்லித் தீராத
    வரிகள் எழுதிய பேனாவை தொலைத்து விட்டீர்களா ?

    ஒரு நல்ல வாசகனாக கேட்கத் தோன்றியது . பிழை இருப்பின் மன்னிக்க

    :)

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. ஆரம்பமே அசத்தலா இருக்கு!!

    பதிலளிநீக்கு
  13. பருவம் தப்பிப் பெய்த மழை போல
    என் மேல் நீ விழுந்தாய் ..

    நல்லாயிருக்கு தேனக்கா.........

    பதிலளிநீக்கு
  14. நான் என்ற எல்லாமும்...சிறகடிக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. அடடா...கவிதை கவிதை....:)

    ///பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
    நான் என்ற எல்லாமும்...///

    என் மனமும் சுற்றித்திரிகிறது இன்று
    இக்கவிதையை...அருமை அக்கா...:)

    பதிலளிநீக்கு
  16. மணசு பட்டாம்பூச்சியாய் பறக்குது கவிதையை சுற்றி...சூப்பர்...தேனக்கா..

    பதிலளிநீக்கு
  17. நேசமித்திரன் சொல்கிறார் என்பதற்காக பூக்களின் பக்கம் செல்ல வேண்டாம்..மனதோடு தொடர்புடையது கவிதை..அதை அறிவோடு பார்க்கத்தேவையில்லை.. தொடரட்டும் தங்கள் கவிதைப் பணி.. பூக்களை விட்டு வந்தபின்புதான், உண்மையான கவிதையுலகில் நீங்கள் உலவுகிறீர்கள்..வார்த்தைகளை முறுக்கு சுற்றுவது போல் சுற்றி, படிப்பவர்களை போட்டுக் குழப்பித் தாக்காமல்,எளிமையான வரிகளில் ஏராளமான அர்த்தங்கள் சொல்லும் தங்கள் பாணி, கண்ணதாசனுக்கு அப்புறம் தங்களிடம் காண்கிறேன்..தொடரட்டும் தங்களுக்கே என்ற தங்களது எளிமையான சொல்லாடல்..

    பதிலளிநீக்கு
  18. பட்டாம் பூச்சியாய்.... அருமை.

    என்ன சொல்லி பாராட்டுவது.

    முன்பெல்லாம் பின்னூட்டத்திற்கான பதிலும் இடுகைகளும் விரைவாக வரும். தற்போது அதில் ஒரு சுணக்கம் தெரிவது ஏனோ?

    பதிலளிநீக்கு
  19. //பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
    நான் என்ற எல்லாமும்...//

    சபாஷ்...

    பதிலளிநீக்கு
  20. ///பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
    நான் என்ற எல்லாமும்...///

    பூரணம்...பரி பூரணம்...

    பதிலளிநீக்கு
  21. //பருவம் தப்பிப் பெய்த மழை போல
    என் மேல் நீ விழுந்தாய் ..
    //
    அமர்க்கள ஆரம்பம்!!

    //பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
    நான் என்ற எல்லாமும்...//

    நாங்களும் பாடம் பூச்சிகளாய்!!

    :-)

    பதிலளிநீக்கு
  22. மழலையின்பின் சுற்றும் தாய்க்கும் பொருந்தும் இல்லியாக்கா?

    பதிலளிநீக்கு
  23. உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
    http://omcycle.blogspot.com/2010/05/blog-post.html

    பதிலளிநீக்கு
  24. அன்பின் வெற்றி வேல்

    உங்கள் விருப்பத்தை சொல்ல என்னை ஏன் இழுக்கிறீர்கள் ?

    என் கவிதை மீது விமர்சனம் இருந்தால் என் தளத்தில் வைக்கலாமே ?!

    விமர்சனம் செய்யக் கோருபவர்களின் தளத்தில் மட்டுமே என் விமர்சனம் இருக்கும் அல்லது விருப்பக் கோரிக்கைகளும்

    நான் எடுத்து காட்டிய கவிதைகளை விட இந்தக் கவிதைகள் உங்களுக்கு சிறப்பாக இருக்கலாம் எனக்கு இல்லை என்பதை சொன்னேன்

    முறுக்கி திருகி தேவையா இது போன்ற வார்த்தைகள் ?

    தங்கம் நிறுத்துப் பார்க்க ஒரு தராசு
    கரி நிறுக்க ஒன்று
    தசை நிறுக்க வேறு
    ஓனிக்ஸ் குப்பை நிறுவனமும் குப்பைகளுக்கு டன் கணக்கில்தான் விலை கொடுத்தது

    ஆனால் எல்லாத் தராசும் ஒன்றுதான்
    தராசுதான் என்பது போல் இருக்கிறது

    கண்ணதாசன் ...! தேனம்மை ?

    ஆமாவா தேனம்மை ?

    வாசிப்பனுபவம் உள்ள உங்களைப் போன்றவர்களிடம் இருந்து இப்படியான அளவீடுகள் ஒப்பீடுகள் வருவதால்தான் இந்த மறு பின்னூட்டமே

    பதிலளிநீக்கு
  25. இப்படியே.. சுத்திகிட்டிருங்க..அவ பின்னால. என்ன சொல்லி நான் எழுத??

    பதிலளிநீக்கு
  26. நன்றி சசி.,

    நன்றி சத்ரியன்

    பதிலளிநீக்கு
  27. நன்றீ ஜமால்.,

    நன்றி பத்மா

    பதிலளிநீக்கு
  28. நன்றி ராகவன்

    நன்றீ அகல்விளக்கு

    பதிலளிநீக்கு
  29. நன்றி டி வி ஆர்

    நன்றி ரமேஷ்

    மழைதான் பருவம் தப்பிப் பெய்தது... நான் இல்லை...

    அதாவது மழைக்குத்தான் பருவம் தப்பியது எனக்கு இல்லை

    பதிலளிநீக்கு
  30. நன்றி பாசமலர்

    நன்றி குணசீலன்

    பதிலளிநீக்கு
  31. நன்றி மேனகா.,

    நன்றி நேசன் உங்க அன்புக்கும் அக்கறைக்கும்

    பதிலளிநீக்கு
  32. நன்றி வால் பையன்

    நன்றி ஷஃபி

    பதிலளிநீக்கு
  33. நன்றி சை கொ ப

    நன்றி அருணா

    பதிலளிநீக்கு
  34. நன்றி சித்ரா.,

    நன்றி செந்தில்குமார்

    பதிலளிநீக்கு
  35. நன்றி கனி

    நன்றி வெற்றி உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும்

    பதிலளிநீக்கு
  36. நன்றி மக்கா.,

    நன்றி குமார்

    வேறொன்றுமில்லை குமார் விடுமுறை நாட்கள்., குழந்தைகள் உறவினர்கள்., வெளிநாட்டுப் பயணம்...எனவே நேரம் பத்தவில்லை எதையும் படிக்க..பின்னூட்டமிட

    பதிலளிநீக்கு
  37. நன்றி புலவரே.,

    நன்றி கமலேஷ்

    பதிலளிநீக்கு
  38. நன்றி செந்தில்நாதன்

    நன்றி கனிமொழியாள்

    பதிலளிநீக்கு
  39. நன்றி ஹென்றி

    ஆமாம் ஹுசைனம்மா

    பதிலளிநீக்கு
  40. நன்றி ஓம் சைக்கிள் ஆனந்தா.. எனக்கு நாலாவது இடம் கொடுத்த உங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  41. ரொம்ப நன்றி நேசன்... நான் கண்ணதாசன் அல்ல.. ஆனால் நன்கு எழுத முயற்சிக்கிறேன் எனக் கூறியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  42. ஆமாண்டா மயிலு .. அம்மு எப்ப வருவா...???

    பதிலளிநீக்கு
  43. வலைப் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  44. அன்பின் நேசமித்ரன்..

    வாசிப்பனுவம் அதிகமாக இருப்பதால் தான் இக்கவிதை ஒரு அழகான கவிதையாக எனக்குப் பட்டது..

    இந்தக் கவிதையைப் படித்துவிட்டு, தேனம்மை கவிதை எழுதுவதைவிட்டுவிடார்களா? என்ற கேள்விதான் அப்படி எழுதத் தோன்றியது..மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

    கண்ணதாச்னுக்கு தேனம்மை இணை என்று சொல்லவில்லை. கண்ணதாசன் பாணியில் எளிய வார்ததைகளில் கவி சொல்லும் திறமை கவிஞர்.தேனம்மைக்கு இயல்பாகவே உள்ளது..அந்தப் பாணியில் இருந்து மாற வேண்டிய தேவை இல்லை என்று தான் குறிப்பிட்டு இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  45. நன்றி நேசன்

    நன்றி வெற்றி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)