திங்கள், 22 மார்ச், 2010

தண்ணீர்,,! தண்ணீர்..!!

நா வரண்டு விட்டது
நான் பாலையாகிக் கொண்டு..
உப்புறைந்த மண் அள்ளிக் குடியுங்கள்
மேகங்கள் கூட இல்லா வாழ்வில்...

கிணற்றையும்., குளத்தையும் .,
நதியையும்., ஏரியையும் முடித்து...
இப்போது கடலையும் தூர்த்து...

சோதனைச் சாலையில்
உருவாக்க முடியுமா ..,
நதிக்கரையோர நாகரீகம்...?


அரை துடைக்க
மரங்களை அழித்து
காகித டிஸ்யூக்கள்...

வானம் பொய்ப்பதும்.,
வனம் கருகுவதும்
வாடிக்கையான வாழ்வு..

உங்கள் சந்ததியினருக்கு
தண்ணீரும் குளுக்கோஸ்
மாத்திரை வடிவில்....

செவ்வாயிலும் சனியிலும்
இடப் பெயர்ச்சியடையலாம்
தண்ணீர் தேடி .....
அமிலமாவது கிடைக்கும்...

சிரபுஞ்சியிலும்
அண்டார்டிக்காவிலும்
எச்சரிக்கை மணி ..

பனிப்பாறைகளாய்
வாழ்வும் இருப்பும் உருகிக்
காப்பாற்றுவார் இல்லாமல்...

மலைகளைச் சிதைப்பதும்
மரங்களை அழிப்பதும் ஆத்மஹத்தி...
பச்சையங்கள் இல்லாமல்
பாளமாகிவிடும் வாழ்வு...

அபாயச்சங்கு அலறுவதற்குள்
ஆயத்தமாகுங்கள்...
புதியன சுருக்கி
பழையன பெருக்கி...

வாகன மாசு .,குளிர்பதனங்கள் .,
நீர்நிலை ஆக்கிரமிப்பு தவிர்த்து .,
இயற்கையோடு இயைந்து நடந்து.,
தூர்த்ததெல்லாம் தூரெடுத்து.,

சேமியுங்கள் மழைநீரை ..!
வீணாக்காதீர் குடிநீரை ..!!
சந்ததியருக்காய் சொட்டுச் சொட்டாய் ..!!
செல்வம் போல நிரந்தர வைப்பாய் ...!!

http://www.vikatan.com/vc/2010/jan/vc.asp
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem200310.asp

மார்ச் - 22 உலக தண்ணீர் தினத்துக்காக எழுதப்
பட்ட கவிதை யூத்ஃபுல் விகடனில் வந்து இருக்கு ..

75 கருத்துகள்:

  1. உங்கள் சந்ததியினருக்கு
    தண்ணீரும் குளுக்கோஸ்
    மாத்திரை வடிவில்....


    ....... warning!

    யூத்புல் விகடனில் கவிதை வெளியானதுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அக்கா நானும் தினமும் அலுவலகத்திற்கு பைக்கில் தான் வந்து கொண்டு இருக்கிறேன். அக்கா வருங்கால சந்ததிஅழிவதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது என் மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்வு என்னை பாடாய் படுத்துகிறது. தற்போதைய உலகதிருக்கு தேவையான பதிவு.

    பதிலளிநீக்கு
  3. சோதனைச் சாலையில்
    உருவாக்க முடியுமா ..,
    நதிக்கரையோர நாகரீகம்...?]]


    செம செம செம

    பதிலளிநீக்கு
  4. செவ்வாயிலும் சனியிலும்
    இடப் பெயர்ச்சியடையலாம்
    தண்ணீர் தேடி .....
    அமிலமாவது கிடைக்கும்...]]

    ஆஹா!

    --------------------

    விகடனுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. /புதியன சுருக்கி
    பழயன பெருக்கி...//

    அவசியம்.

    அருமையான கவிதை தேனம்மை.

    பதிலளிநீக்கு
  6. கவிதை தண்ணீராய் கொட்டி விட்டீர்கள், வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  7. அருமை தேனம்மை.

    வார்த்தை பிரயோகம் .. அருவியாய் கொட்டி விட்டது.

    உண்மையையும் யதார்த்தையும் மிக அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். அழகானதும் அவசியமான கவிதை.

    சூப்பர்.

    விகடனுக்கு வாழ்த்துகள்.

    பல சிகரங்களை தொட வாழ்த்துகிறேன் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  8. சரியான நேரத்தில் சரியான கவிதை.. :)

    பதிலளிநீக்கு
  9. பயனுள்ள சிந்திக்க வேண்டிய கவிதை தேனம்மை....வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் தேனக்கா

    தண்ணீரில் வறுமையும் பிரதிபலிக்கிறதே! மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்.

    தண்ணீர் தின கவிதை மிக அருமை அருமை.

    பதிலளிநீக்கு
  11. சொல்ல வேண்டிய விஷயத்தை சரியாக சொல்லி விட்டீர்கள். ஏற்றுக் கொள்ள வேண்டியது நம் எல்லோர் கடமை,

    பதிலளிநீக்கு
  12. //சோதனைச் சாலையில்
    உருவாக்க முடியுமா ..,
    நதிக்கரையோர நாகரீகம்...? //

    தேனம்மை,

    நியாயமான வினா.

    வரள்கிறது என் ”நா”வும்.

    பதிலளிநீக்கு
  13. மிக நல்ல பதிவு தேனக்கா..

    தண்ணிரீன் அருமை தாகத்தில் தெரியும்.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. நல்லா இருக்குங்க, ஆதமஹத்தி - இது தமிழா? எனக்கு இப்பொழுது தான் தெரியும், இங்கே கேரள சகபணியாளர்கள் இவ்வார்த்தையை உபயோகப்படுத்துவதை கேட்பதுண்டு.

    பதிலளிநீக்கு
  15. ////////////செவ்வாயிலும் சனியிலும்
    இடப் பெயர்ச்சியடையலாம்
    தண்ணீர் தேடி .....
    அமிலமாவது கிடைக்கும்...///////////



    சரியாக சொன்னீங்க . வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  16. "சோதனைச் சாலையில்
    உருவாக்க முடியுமா ..,
    நதிக்கரையோர நாகரீகம்...?"

    நன்றாக உறைக்கச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. அலருவதற்குள்?
    பழயன?


    கவிதை நல்லா இருக்குங்க தேனம்மை !

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்கள்
    படிக்கும் போது பயமாய் இருக்கிறது எதிர்காலம் நினைத்து ...

    பதிலளிநீக்கு
  19. தண்ணீர் !! தண்ணீர் !! இந்த தலைப்பில் எழுதலாம்னு இருந்தேன். "வடை போச்சே"
    அரை (அறை) துடைக்க
    மரங்களை அழித்து
    காகித டிஸ்யூக்கள்...//
    நெத்தியடி தேனம்மை

    பதிலளிநீக்கு
  20. விகடனில் வெளிவந்தற்க்கு வாழ்த்துக்கள்!!


    மலிக்கா சொன்னது போல் தண்ணீரின் அருமை தாகத்தின் போதுதான் தெரியும்.நல்ல பதிவு அக்கா!!

    பதிலளிநீக்கு
  21. தண்ணீர் கவிதை மிக அருமை !
    யூத்புல் விகடனில் கவிதை வெளியானதுக்கு வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  22. //அரை துடைக்க
    மரங்களை அழித்து
    காகித டிஸ்யூக்கள்...//

    அருமை தோழி.
    வாழ்த்துக்கள் உங்களுக்கும்... பிரசுரித்த விகடனுக்கும்..!

    பதிலளிநீக்கு
  23. வழக்கம் போல கலக்குங்க தேனம்மை.

    பதிலளிநீக்கு
  24. அருமையான கவிதை தோழி.

    // மலைகளைச் சிதைப்பதும்
    மரங்களை அழிப்பதும் ஆத்மஹத்தி...
    பச்சையங்கள் இல்லாமல்
    பாளமாகிவிடும் வாழ்வு...//

    சரியான வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
  25. பளார் என அறைந்து சொல்லியிருக்கிறீர்கள்...சபாஷ்

    பதிலளிநீக்கு
  26. காலத்துக்கு ஏற்ற பதிவு.. முதல் வரிகளிலிருந்து உங்கள் கோபம் தெரிகிறது.. நியாயமான கேள்வி.. அக்கா அசத்துங்க.. :)

    பதிலளிநீக்கு
  27. உண்மை சித்ரா இனி எல்லாம் காப்ஸ்யூல்தான் நன்றி பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு
  28. நன்றி சசி ...வசதிகளுக்குப் பழகி விட்டோம் ....முடிந்த வரை குறைத்துக் கொள்வோம்

    பதிலளிநீக்கு
  29. நன்றி ஜமால் வாழ்த்துக்கு உண்மை ஜமால் அப்படியும் நடக்கலாம்

    பதிலளிநீக்கு
  30. நன்றி ராமலெக்ஷ்மி வாழ்த்துக்கு உங்கள் நோட்டு மாலைகளுக்குள் கவிதையும் அருமை உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  31. நன்றி கேபிள் சங்கர் ஜி உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  32. நன்றி தேவா உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  33. உண்மை ஸ்டார்ஜன் அடுத்த யுத்தம் தண்ணீருக்குத்தான் இருக்கும் இப்போ பெட்ரோல் போல

    பதிலளிநீக்கு
  34. நன்றி ரமேஷ் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  35. உண்மை சத்ரியன் நாம் முதலில் சரித்திரத்தில் நதிக்கரையோர நாகரீகம் பற்றித்தானே படித்தோம் நீரின்றி அமையாது உலகு

    பதிலளிநீக்கு
  36. நன்றி ஸ்ரீராம் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  37. உண்மை மலிக்கா தண்ணிரின் அருமை தாகத்தில் தெரியும்

    பதிலளிநீக்கு
  38. ஆத்மஹத்தி என்றால் தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளல் இது சமஸ்க்ருதம் சார்ந்ததா என முனைவர் குணசீலன் தான் சொல்லணும்

    பதிலளிநீக்கு
  39. முதல் வருகைகும் வாழ்த்துக்கும் நன்றி டாக்டர் எம்.கே.முருகானந்தன்

    பதிலளிநீக்கு
  40. நன்றி நேசன்... பிழைகளைத் திருத்தி வெளியிட்டுவிட்டேன் :))

    பதிலளிநீக்கு
  41. நன்றி பனித்துளி சங்கர் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  42. உண்மை பத்மா ஒன்று தெரியுமா நேற்று உங்கள் கவிதையை பார்த்து நான் அசந்து விட்டேன் அருமையா எழுதுறீங்க வாழ்த்குக்கள் மா

    பதிலளிநீக்கு
  43. நன்றி செல்ல நாய்க்குட்டி மனசு உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  44. நன்றி மேனகா உங்க வாழ்த்துக்கு ஆம் மேனகா மலிக்கா சொன்னது சரி

    பதிலளிநீக்கு
  45. நன்றி பிரியா உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  46. நன்றி பட்டியன் உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  47. நன்றி குமார் உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  48. நன்றி கோபி உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  49. நன்றி ராகவன் உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  50. நன்றி புலிகேசி உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  51. நன்றி முத்துலெட்சுமி உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  52. நன்றி முத்துலெட்சுமி உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  53. நன்றி முத்துலெட்சுமி உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  54. நன்றி முத்துலெட்சுமி உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  55. நன்றி முத்துலெட்சுமி உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  56. நன்றி சிவாஜி உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  57. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு
  58. //அபாயச்சங்கு அலறுவதற்குள்
    ஆயத்தமாகுங்கள்...
    புதியன சுருக்கி
    பழையன பெருக்கி...//


    ஆஹா வரிகள்...கவிதை மொத்தமும் அருமை...வாழ்த்துகள் அக்கா...

    பதிலளிநீக்கு
  59. அபாயச்சங்கு அலறுவதற்குள்
    ஆயத்தமாகுங்கள்...
    புதியன சுருக்கி
    பழையன பெருக்கி

    அருமை அருமை
    அழகிய கவிதை
    அத்தனையும் அழகு...
    ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு....

    பதிலளிநீக்கு
  60. எல்லோரும் யோசித்து செயல்பட வேண்டிய விஷயம்.
    நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  61. வரலாறும் அறிவியலும் இறையியலும் தண்ணீரின் பெருமையை சொன்னாலும் யார் அதன் மதிப்பை உணர்கிறார்கள்.

    வெளிநாட்டில் virtual water என்று வரப்போகிறது.

    ஒரு கிலோ நெல் விளைவிக்க எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறதோ அதற்கும் சேர்த்து விலை நிர்ணயம் செய்ய போகிறார்கள்

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  62. //செவ்வாயிலும் சனியிலும்
    இடப் பெயர்ச்சியடையலாம்
    தண்ணீர் தேடி .....
    அமிலமாவது கிடைக்கும்...//
    எனக்கு பிடித்த் வரிகள்..
    சரியா சொல்லி இருக்கீஙக..

    பதிலளிநீக்கு
  63. நன்றி சீமாங்கனி உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  64. நன்றி விடிவெள்ளி உங்க பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு
  65. நன்றி அன்பரசன் உங்க முதல் வருகைக்குக் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  66. நன்றீ விஜய் உங்க அகசூல்ல இதுக்கு ஒரு வழி சொல்லுங்க

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)