செவ்வாய், 23 மார்ச், 2010

ஈசல்களும் இறகுகளும்

மழை பொழிந்த மாலை
மனம் குழம்பும் வேளை
மொழி விளங்காத பாட்டு
இனம் புரியாது சுற்றுவதாய் ..

பாய்விரித்து அமர்ந்து ரசித்த
கூத்தும் கோமாளிகளும்
ஊர்த்திருவிழாவில் ..

வெப்பமும் புழுதியும்
புழுக்கமும் நிறைந்த
கருவேல நிழல்..


ஆடு மாடு அண்ட இயலா
வரண்ட கம்மாய்
முள் சாற்றிய படல் வேலி..

துருவேறிய ஐயனாரின்
கருக்கருவாள் ..
கருவாடுகள் வீசும் வீடுகள் ..

அடித்துப் பெய்த மழை
எப்போதோ நின்றுவிட ..
அரிதாரம் கலைந்த கோமாளிகளும்..
அறுந்து தொங்கும் படுதாக்களும் ..
நின்று விட்ட கைதட்டல்களும்..

இறக்கை இழந்த ஈசல்
கண்களில் கண்ணீர்
கன்னங்களில் உப்பளம்
பின்னோக்கி செல்ல இயலாத ஏக்கம்...

நெடுந்தூரப் பயணத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய் ..
இளமை தொலைந்து..
முதுமை சுமந்து..

படுதாக்கள் மாற
நடைவண்டி , தடை ஒட்டம்
பின் நகரும் நாற்காலி ....
இறக்கைகளும் ஈசல்களும்
தனித்தனியாய்....

66 கருத்துகள்:

  1. இதற்கு பின் ஒரு கதை இருக்கு .சரியா தேனமைக்கா ?

    பதிலளிநீக்கு
  2. எப்படி எல்லாம் கவிதை ஊற்று உங்களிடம் !!!!! கிரேட்

    பதிலளிநீக்கு
  3. எப்படி எல்லாம் கவிதை ஊற்று உங்களிடம் !!!!! கிரேட்

    பதிலளிநீக்கு
  4. மிகவும் பிடித்திருக்கிறது அக்கா..

    பதிலளிநீக்கு
  5. நல்ல கவிதை. நல்ல வரிகள். ஈசல் பார்த்து பல வருஷம் ஆச்சு. நன்றி ஞாபகப் படுத்தியதற்கு.

    பதிலளிநீக்கு
  6. ஏதேதோ... நினைவுகளைக் கிளறுகிறது

    நன்றி

    பதிலளிநீக்கு
  7. "பின்னோக்கி செல்ல இயலாத ஏக்கம்...

    நெடுந்தூரப் பயணத்தில்
    கொஞ்சம் கொஞ்சமாய் ..
    இளமை தொலைந்து..
    முதுமை சுமந்து.."
    superb

    பதிலளிநீக்கு
  8. //இறக்கை இழந்த ஈசல்
    கண்களில் கண்ணீர்
    கன்னங்களில் உப்பளம்
    பின்னோக்கி செல்ல இயலாத ஏக்கம்...

    நெடுந்தூரப் பயணத்தில்
    கொஞ்சம் கொஞ்சமாய் ..
    இளமை தொலைந்து..
    முதுமை சுமந்து..// இந்த வரிகள் நல்லாயிருக்கு தேனக்கா...

    ஈசலை பார்த்து ரொம்ப வருஷமாச்சு.....

    பதிலளிநீக்கு
  9. அருமை தேனக்கா.. ஈசலை பார்க்கும் போது உண்டாகும் உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தியிருக்கீங்க அக்கா.

    உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  10. // படுதாக்கள் மாற
    நடைவண்டி , தடை ஒட்டம்
    பின் நகரும் நாற்காலி ....
    இறக்கைகளும் ஈசல்களும்
    தனித்தனியாய்....//

    நினைவுகளை பின்னோக்கி அழைத்துச் சொல்லுகின்றீர்கள் தோழி.

    பதிலளிநீக்கு
  11. மிக ஆழமான ஒரு காயத்திலிருந்து துடைக்க துடைக்கப் பெருகும் குருதியென மழைக்கு மறுநாள்
    ஈசல் இறகு பெருக்கும் பாவனை
    நினைவுகளின் நிரவித்தீராத வார்த்தைகள்

    பதிலளிநீக்கு
  12. ம்ம் சுகமான நினைவுகள்

    நல்லா வந்திருக்கு தேனம்ம்மா...

    பதிலளிநீக்கு
  13. கவி வரிகளில் நிறைய ப்லாக் பெயர்கள்

    :)

    பதிலளிநீக்கு
  14. மிக நேர்த்திங்க...

    //இறக்கை இழந்த ஈசல்
    கண்களில் கண்ணீர்
    கன்னங்களில் உப்பளம்
    பின்னோக்கி செல்ல இயலாத ஏக்கம்...

    நெடுந்தூரப் பயணத்தில்
    கொஞ்சம் கொஞ்சமாய் ..
    இளமை தொலைந்து..
    முதுமை சுமந்து..//

    இங்கு மனிதனை வைத்துப் பார்க்கிறென்..பொருந்துகிறது...

    பதிலளிநீக்கு
  15. கண் முன்னே அவரவர் சொந்த ஊரை கொண்டு வந்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. இறக்கைகளும் ஈசல்களும்
    தனித்தனியாய்....

    .........அருமையான கவிதை, அக்கா. மனதில் உள் வாங்கி எழுதி இருக்கிறீர்கள்.

    //////கவி வரிகளில் நிறைய ப்லாக் பெயர்கள்/////

    ......Jamal, எப்பொழுதும் ப்லாக் நினைப்புதானா? ஹா,ஹா,ஹா,ஹா....

    பதிலளிநீக்கு
  17. மிகவும் நன்றாக இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  18. மிகவும் நன்றாக இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  19. மிகவும் நன்றாக இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  20. நெடுந்தூரப் பயணத்தில்
    கொஞ்சம் கொஞ்சமாய் ..
    இளமை தொலைந்து..
    முதுமை சுமந்து..
    எல்லாருக்குமான அனுபவம்.......

    பதிலளிநீக்கு
  21. கவிதை மிகவும் அருமை...!

    -
    DREAMER

    பதிலளிநீக்கு
  22. சில நேரம் உங்கள் கவிதைகள்- சொல்ல முடியாத சோகத்தை அள்ளி வீசுகின்றன. ஆனாலும் அந்த சோகம் தேவையாகவே உள்ளன. நல்ல கவிதை தந்தற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  23. கிராமத்து வார்த்தை நடைகளை அருமையாக கையாண்டு இருக்கிறீர்கள். குறும்படம் பார்த்த திருப்தி.

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  24. Yet another excellent piece.

    It is always wonderful to think of the past memories. We all miss them a lot. Is there there a tinge of sadness in becoming older? Are we taking aging as unpreferable?

    Loving Brother

    பதிலளிநீக்கு
  25. புதியன சுருக்கி
    பழையன பெருக்கி...
    நியாபகங்களை நிஜத்திற்குள்
    கடத்தி கொண்டு போன ஈசல் சிறகுகளுக்கு...நன்றி...
    அருமையோ அருமை அக்கா..
    முழுதாய் ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
  26. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  27. இறக்கை இழந்த ஈசல்
    கண்களில் கண்ணீர்
    கன்னங்களில் உப்பளம்
    பின்னோக்கி செல்ல இயலாத ஏக்கம்...

    நெடுந்தூரப் பயணத்தில்
    கொஞ்சம் கொஞ்சமாய் ..
    இளமை தொலைந்து..
    முதுமை சுமந்து..

    படுதாக்கள் மாற
    நடைவண்டி , தடை ஒட்டம்
    பின் நகரும் நாற்காலி ....
    இறக்கைகளும் ஈசல்களும்
    தனித்தனியாய்....

    நல்ல கவிதை
    பிடிச்சிருக்குங்க

    பதிலளிநீக்கு
  28. தலைப்பு அருமயா இருக்கு அக்கா.. தலைப்பும் சொல்லப்பட்டிருக்கும் எல்லா நிகழ்வுகளும் ஒத்து போகின்றன.

    பதிலளிநீக்கு
  29. {{{{{{{{{இறக்கை இழந்த ஈசல்
    கண்களில் கண்ணீர்
    கன்னங்களில் உப்பளம்
    பின்னோக்கி செல்ல இயலாத ஏக்கம்...
    }}}}}}}

    அருமையான சிந்தனை !

    பதிலளிநீக்கு
  30. ஊருக்கு எப்ப வர்றீங்க சாந்தி

    பதிலளிநீக்கு
  31. நம்ம எல்லோரோட கதையும்தான் பத்மா

    பதிலளிநீக்கு
  32. நன்றி ரவீந்திரன் உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  33. நன்றீ வசந்தமுல்லை உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  34. நன்றி மாயோ

    நன்றி பட்டியன் ஆமாம் பட்டியன் வாழ்க்கை

    பதிலளிநீக்கு
  35. நன்றி ரோஹிணிசிவா உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  36. நன்றி மேனகா

    ஊரில் இப்போதும் மழைசமயங்களில் பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
  37. நன்றி ராகவன் தொடந்து வாசித்து பின்னூட்டமிட்டு ஊக்கமளிப்பதற்கு

    பதிலளிநீக்கு
  38. உண்மை நேசன் ஈசலின் இறக்கைகள் பரவிப் பறந்து திரியும் துயரம் கொடுமை

    பதிலளிநீக்கு
  39. நன்றி வசந்த் ரொம்ப நாள் கழிச்சு வந்து பின்னூட்டம் போடுறீங்க நேரமின்மையா..

    பதிலளிநீக்கு
  40. உண்மை ஜமால் நீங்க சொன்னபின்னாடிதான் கவனிச்சேன் :))

    பதிலளிநீக்கு
  41. உண்மை புலிகேசி மனிதர்களும் முதுமையில் இறக்கை இழந்த ஈசல்கள்தான்

    பதிலளிநீக்கு
  42. நன்றி சை கொ ப உங்க கருத்துக்கு

    பதிலளிநீக்கு
  43. நன்றி சித்ரா உன் குறும்புத்தனமான சிரிப்பு அருமை

    பதிலளிநீக்கு
  44. நன்றி உமா உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் ..
    எதிர்பார்க்கவில்லை ..
    இன்ப அதிர்ச்சி..

    பதிலளிநீக்கு
  45. நன்றி ட்ரீமர் உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  46. நன்றி ரமேஷ் உங்க கருத்துக்கு

    பதிலளிநீக்கு
  47. நன்றி அக்பர் உங்க கருத்துக்கு

    பதிலளிநீக்கு
  48. நன்றி விஜய் உங்கள் உள்ளப்பூர்வமான விமர்சனம் என்னுடைய கிரியா ஊக்கி ..நன்றி

    பதிலளிநீக்கு
  49. உண்மை மெய் முதுமை சிறிது சோகம்தான்

    பதிலளிநீக்கு
  50. நன்றி சீமான் கனி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  51. நன்றி குமார் உங்க வருகைக்கும் கருத்துக்கும்

    பதிலளிநீக்கு
  52. நன்றி விடிவெள்ளி உங்க வருகைக்கும் கருத்துக்கும்

    பதிலளிநீக்கு
  53. நன்றி மயிலு ..எல்லாத்தையும் படித்து கமெண்ட் போட்டதற்கு

    பதிலளிநீக்கு
  54. நன்றி பனித்துளி சங்கர் என்ற RDX அந்நியன்

    பதிலளிநீக்கு
  55. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)