சனி, 20 பிப்ரவரி, 2010

ஒற்றைப்பூ

கூடி வாழ்கிறோம் ..
கூடத்தான் வாழ்கிறோமா ..?
கேட்டுகொண்டிருக்கிறாய் என் பேச்சை..
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாயா..?
கையைப்பிடித்துக் கொண்டே திரிகிறேன் கனவில்,
நிஜத்தில் கோர்த்து இருக்கிறோமா..?

கண் மட்டும் பார்த்தே கூட வாழ ஆசை..
கண்டிருக்கிறாயா என் கண்களை மட்டும்..?
அந்தியும் நிலவும் இருளும் குளிரும் சூழ
காத்துக் கொண்டே இருக்கிறேன் உனக்காய்..?
தலையில் சூடிய மல்லிகை போல
காய்ந்து கிடக்கிறது மனசு....
எல் மகினோட்ரோமோவில்
நான் மட்டும் எங்கேயெனத்
தெரியாமல் தனிமையில் ..................................

66 கருத்துகள்:

  1. //கூடத்தான் வாழ்கிறோமா ..?//

    தமிழக அரசியல் கட்சிகள் பத்தி எழுதியிருக்கிறீர் போல இருக்கே..,

    பதிலளிநீக்கு
  2. கண் மட்டும் பார்த்தே கூட வாழ ஆசை..
    கண்டிருக்கிறாயா என் கண்களை மட்டும்..?//

    கற்பனை நிஜத்தை விட சுகமானது.
    கவிதை அழகா இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. pls read this - http://vellinila.blogspot.com/2009/12/blog-post.html if u like it, pls send your postal address

    பதிலளிநீக்கு
  4. ஒற்றைப்பூவின் ஒவ்வொரு கேள்வியும் வாடிய இதழாக..

    கவிதை அருமை தேனம்மை.

    பதிலளிநீக்கு
  5. படித்தேன்
    படித்து கொண்டுதான் இருக்கிறேன்.... :))

    பதிலளிநீக்கு
  6. ஒற்றைப்பூ ஒவ்வொருவரும் அனுபவிக்கும் தனிமையின் வலியை உணர்த்தும் கவிதை.நன்றி
    தேனம்மை

    பதிலளிநீக்கு
  7. தனிமையின் வலியை அழகா சொல்லிருக்கிங்க.நல்லாயிருக்கு தேனக்கா!!

    பதிலளிநீக்கு
  8. //கண் மட்டும் பார்த்தே கூட வாழ ஆசை..
    கண்டிருக்கிறாயா என் கண்களை மட்டும்..?//

    அழகு அழகு அழகு!! :)

    பதிலளிநீக்கு
  9. ரெம்ப ரெம்ப நல்லாருக்குங்க கவிதை.

    பதிலளிநீக்கு
  10. கண்டிருக்கிறாயா என் கண்களை மட்டும்..?

    கவிதைக் கண் திறந்திருக்கிறது..

    பதிலளிநீக்கு
  11. இப்படிதான் மிக்க கணவன் மனைவிகள் வாழ்கிறார்கள். நல்ல கேள்வி.

    பதிலளிநீக்கு
  12. கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது தோழி...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  13. என் தளத்தில் என்னை (பின்னூட்டத்தில்) congrats பண்ணி இருக்கீங்க. ஆனால் எனக்கு என்னனுதான் சரியாய் புரிஞ்சிக்க முடியல.கொஞ்சம் புரியும் படி சொல்லுங்களேன் அக்கா.

    பதிலளிநீக்கு
  14. எல் மகினோட்ரோமோ அப்பிடின்னா என்னது?

    பதிலளிநீக்கு
  15. thalaiyil soodiya mallikai pol manathu vaadi kidak kirathu/

    kavithai arumai. ungal kavithai eppothu varum ena kaththirukkirathu manasu.

    பதிலளிநீக்கு
  16. சிம்பிள் ஆனால் பியூட்டிஃபுல்..
    எல் மகினோட்ரோமோ????

    பதிலளிநீக்கு
  17. என்னமோ மாதிரியிருக்கு வாசிச்சதும்.

    பதிலளிநீக்கு
  18. மிக எளிமையாக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் அக்கா.

    உறவுகளில் சந்தோசங்களும் சந்தேகங்களும் இயல்பே.

    பதிலளிநீக்கு
  19. படிக்கிறோம் கவிதைகளை...
    படித்துக் கொண்டுதான் இருக்கிறோமா வாழ்வில்...?

    வசந்த்தின் கேள்வி நானும் கேட்கிறேன்..என்ன அது?

    பதிலளிநீக்கு
  20. நன்றி டாக்டர் சுரேஷ்

    கண்டு பிடித்ததற்கு

    பதிலளிநீக்கு
  21. நன்றி நாய்க்குட்டி மனசு


    ஆம் கற்பனை சுகமானதுதான்

    பதிலளிநீக்கு
  22. எல் மகினோட்ரோமோவில்?...
    தனிமையின் வலி உணர்த்தும் வரிகள் அக்கா..

    பதிலளிநீக்கு
  23. நன்றி ஷர்புதீன் நன்றாக இருக்கிறது வெள்ளி நிலா... விரைவில் அனுப்புகிறேன்

    பதிலளிநீக்கு
  24. நன்றி ராமலெக்ஷ்மி இலை போலத்தான் உதிருகிறது வாழ்வும்

    பதிலளிநீக்கு
  25. நன்றி சைவக்கொத்துப்பரோட்டா

    பதிலளிநீக்கு
  26. கமலேஷ் வலைச்சரத்தில் ஜெரி ஈசானந்தா அஷோக் பாலகுமார் ஸ்டார்ஜன் கமலேஷ் மற்றும் கருணகரசு வை சிறந்த வலைப்பதிவர்கள் என்றும் சிங்கங்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார் அதற்காக வாழ்த்தினேன் இன்றைய இடுகையை பாருங்கள் சீனா சாருக்கும் ஜெரிக்கும் எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  27. வசந்த வித்யாவோட இந்தப்பதிவைப்பாருங்க புரியும்

    http://vidhoosh.blogspot.com/2010/02/blog-post_02.html

    பதிலளிநீக்கு
  28. நன்றி மணிகண்டன் வசந்துக்கு சொன்ன லிங்கை பாருங்க

    பதிலளிநீக்கு
  29. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்...!!
    நம்முள் வலிமை பெருகட்டும் ...!!!

    பதிலளிநீக்கு
  30. காய்ந்த மல்லிப்பூவும் ஒரு தனி வாசம்தான் தேனு !

    பதிலளிநீக்கு
  31. நன்றி ஹேமா ஆமாம் வாழ்வின் வாசம் சிலசமயம்

    பதிலளிநீக்கு
  32. துணையிருந்தும் தனிமையாய் உணரும் உள்ளத்தின் கவிதை வெளிப்பாடு. அருமை...!

    பதிலளிநீக்கு
  33. நன்றி அறிவு ஜீவி ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க வாழ்த்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  34. living without living
    loving without loving
    or
    living without loving
    loving without living

    it is. but it is not.

    right?

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)