ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

எப்ப வருவ....?

கர்ப்பந்தான் பத்து மாசம்..
உன்னைக் காணவுமே பத்து மாசம்..
வருடத்தில் இரண்டு மாசம்..
வந்து செல்லும் என் வசந்தம்..
நீ இட்ட முத்தம்., பட்ட எச்சில்
எதுவுமே காயலயே..
டிக்கெட்டுப் போட்டாச்சு என்றதுமே
இருண்டதய்யா என் கண்ணு ...
குழம்புதான் வைக்கிறேன்
பொடியும் புளியுமில்லாம..

குழம்புதய்யா என் மனசு..
சிறப்பாய்த்தான் வாழுகிறேன்...
நீ சென்ற பின்னே சிரிப்பில்லாம..
வயிற்றில் தங்கிய கரு கூட
வருத்தத்தில் வலுவிழந்து
விடை பெற்று போச்சுதய்யா...
வந்து செல்லும் வாழ்க்கையே
என்னை வாரிச்செல்ல எப்ப வாரே..?
வெளி வேலை., வங்கி வேலை .,
பள்ளிவேலை., பாட வேலை
எந்த வேலை செய்தாலும்
எந்துணையே நீ இல்லை........
கை கொடுத்த தெய்வமே...
என்னை கையோட அழைச்சுப்போ...
கஷ்டப்பட்டு நீ உழைக்க
உன் கால் மிதியாய்க் கிடப்பேனே ...
சொந்த வீடு., காரினிலே
என்னை சுகமாக இருக்க வச்சே..
உலகத்து வசதியெல்லாம்
பிள்ளைகளுக்கு செஞ்சு வச்சே...
அம்மா., அப்பா .,அண்ணன் .,தம்பி .,
மாமா., மாமி எல்லோரும் என்னோட...
என்னைக் கைப்பிடித்த கருணையே
என் கைபிடிக்குள் எப்ப வருவ........???

டிஸ்கி :- இந்தக் கவிதை என் சகோதரர்
எழுத்தாளர் கவிமதியின் மனைவி என்
அன்புத்தோழி அத்லிமாவுக்கு சமர்ப்பணம்...!!!

70 கருத்துகள்:

  1. முதல் ஆளாக வந்து விட்டேன் தாயே

    பதிலளிநீக்கு
  2. Virutcham

    it exactly portrays the feeling of every women staying away from her husband who is living abroad or far away to earn for the living.

    good

    http://www.virutcham.com/

    பதிலளிநீக்கு
  3. அருமை தேனக்கா என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும் உங்கள் எழுத்துக்களுக்கு.

    //சிறப்பாய்த்தான் வாழுகிறேன்...
    நீ சென்ற பின்னே சிரிப்பில்லாம..
    வயிற்றில் தங்கிய கரு கூட
    வருத்தத்தில் வலுவிழந்து
    விடை பெற்று போச்சுதய்யா...//

    மனதில் பாறாங்கல்லை ஏற்றி வைக்கும் வரிகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  4. தேனம்மை கவிதை அருமை, வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. வந்து செல்லும் வாழ்க்கையே

    முன்பு கண்ணதாசன் பற்றி சொல்லும்போது, படத்தின் தீம் சொன்னால் போதும்.. அவர் பாடலில் அது அப்படியே வந்து விடும் என்று.. இங்கு இந்த ஒற்றை வரி அப்படித்தான்.. முழுக் கதையும் நெற்றிப் பொட்டில் அடிக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. நாட்டுப் பாடல் ஸ்டைலில் நன்றாக இருக்கிறது. மனதில் தைத்தது..

    பதிலளிநீக்கு
  7. தேனம்மை நேற்றிலிருந்து [ஒற்றைப்பூ வுக்கு]கமெண்ட முடியலௌங்க பிலாக்குல.இப்பதேன் முடியுது.

    இது யார் வாழ்க்கையாயினும் கஷ்டந்தேன்.சம்பாதிக்க வேண்டி வசந்தங்களை இழக்கும் யாருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. வாசிப்பவர் மனதும் வருந்துகிறது தேனம்மை. அடுத்தடுத்து அருமையான படைப்புகள் தந்தபடி இருப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அருமை தேனக்கா!!படித்ததும் ஏனோ மனம் வலிக்கிறது இன்னமும்...

    பதிலளிநீக்கு
  10. பிரிவுத் துயரை மிக இயல்பாக அழகாக பதிந்துள்ளீர்கள் தேனம்மை.தன் இணையைப் பிரிந்து வாழு(டு)ம் பல ஆயிரம் சகோதரிகளின் வலியை உணரமுடிகிறது.அதையும் நம் உள்ளம் கவர்ந்த கவிமதியின் துணைவியார்க்கு அற்பணித்தமை படித்தபோது கண்களில் நீர் கசிந்தது.நாடுவிட்டு நாடு சென்று வேலைப் பார்க்கும் அனைத்து சகோதரர்களும் தங்கள் குடும்பத்தோடு வாழும் நாளே
    திருநாள்.
    நன்றி தேனம்மை

    பதிலளிநீக்கு
  11. ராமலக்‌ஷ்மி மேடம் சொன்னதேதான்..! எனக்கும் உங்கள் எழுத்துக்கள் மலைப்புதான்.

    பதிலளிநீக்கு
  12. இந்த கவிதையிலும்,முந்திய கவிதையிலும் புதுசான மொழியாக இருக்கு.பிடிச்சிருக்கு தேனு மக்கா.

    பதிலளிநீக்கு
  13. ஒரு பெண்ணின் கோணத்தில் நெகிழவைத்த வரிகள்...

    கிட்டத்தட்ட இதே கான்செப்ட்டில் ஒரு சிறுகதை எழுத ஆரம்பிச்சு என் வலைப்பூவில் பாதியுடன் ஒரு கதை தொங்கிக்கொண்டிருக்கிறது.... தங்கள் கவிதையைப் படித்தபின் அந்தக் கதையை முடிக்கவேண்டும் என்று ஞாபகம் வந்தது :)))

    ஃப்ரீயா இருக்கும்போது ஒரு பார்வை பாருங்க.....
    http://vasagarthevai.blogspot.com/2010/01/blog-post.html

    பதிலளிநீக்கு
  14. தேனம்மை அக்கா , இந்த கவிதையை படித்ததும் கண்களில் கண்ணீர் ததும்புகிறது .

    பதிலளிநீக்கு
  15. இந்த கவிதையில் வர்ற கதாநாயகனாவது வருடத்துக்கு வருடம் லீவுல வாராரு . ஆனா சில பேர் 2 வருஷத்துக்கு ஒரு தடவை , 5 வருஷமாகியும் ஊருக்கு போகாத ஆட்களும் உண்டு .

    பதிலளிநீக்கு
  16. வலி தரும் வரிகள். வருமானத்துக்காக வசந்தங்களை தொலைக்கும் அனைவருக்குமே இது நிகழ்கிறது. அருமையான படைப்பு தேனம்மை.

    பதிலளிநீக்கு
  17. அன்னிய நாடுகளில் வாழும் சகோதரர்களை விட அவர்களின் குடும்பத்தார் நிலை தான் பாவம்.அந்தத் தியாகச்சுடர்கள் வாழ்க! வளர்க! அவர்களின் உணர்வுகளைப்பிரதிபலிக்கும் உங்கள் கவிதை அருமை.சிறப்பு.

    பதிலளிநீக்கு
  18. வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்ந்தாலும் சொந்தங்கள், பந்தங்கள் இல்லாமல்.. பக்கத்து வீட்டுக்காரன் யார் என்று கூட தெரியாமல்.. வாழும் என் போன்றோருக்குத் தான் தெரியும் பிரிவின் ரணம். கவிதை ஆறுதலாக இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  19. //சிறப்பாய்த்தான் வாழுகிறேன்...
    நீ சென்ற பின்னே சிரிப்பில்லாம..
    வயிற்றில் தங்கிய கரு கூட
    வருத்தத்தில் வலுவிழந்து
    விடை பெற்று போச்சுதய்யா...//

    :( வலிக்கும் வரிகள் அக்கா.. மனசு கனத்து விட்டது..

    பதிலளிநீக்கு
  20. வந்து செல்லும் வாழ்க்கையே
    என்னை வாரிச்செல்ல எப்ப வாரே..?///

    அருமை தேனக்கா...
    நெஞ்சை வருடும் வரிகள் வலியை சுமந்தபடியே...

    பதிலளிநீக்கு
  21. நன்றி ரிஷபன் நான் மிகவும் யதார்த்தமாக எழுதி விட்டு பார்த்தால் நன்கு பொருத்தமாக இருப்பது போல் தெரிந்தது ,,"வந்து செல்லும் வாழ்க்கைதான் ...கணவன் வந்த போது வந்து செல்லும் போது சென்று விடும்...."

    பதிலளிநீக்கு
  22. நன்றி சைவக்கொத்துப்பரோட்டா

    பதிலளிநீக்கு
  23. நன்றி பாலா உண்மை நம் உள்ளம் கவர்ந்த கவிமதியின் உள்ளம் கவர்ந்த அக்கலிமா எனக்கும் மிகப் பிடித்தவர் அவர்கள் கூடிய சீக்கிரம் கவிமதியுடன் சில மாதங்களாவது சென்று தங்கப் போகிறார்கள்

    பதிலளிநீக்கு
  24. எழுதும் போதே என் மனதும் கனத்தது ஸ்டார்ஜன்

    பதிலளிநீக்கு
  25. காரைக்குடியில் எங்கள் வீட்டருகில் ஒரு 25 பேராவது வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் இருப்பார்கள்.. அவர்கள் வரும் போதும் போகும் போதும் மனைவியர்கள் படும் துயரம் சொல்லில் சொல்லி மாளாது ...அதையும் நினைத்துக்கொண்டேன் ஸ்டார்ஜன் எழுதும் போது

    பதிலளிநீக்கு
  26. ஆமாம் அக்பர் உங்களையும் ஸ்டார்ஜனையும் நவாஸையும் மக்காவையும் சரவணனையும் கூட நினைத்துக் கொண்டேன் உங்கள் மனைவியரையும்

    பதிலளிநீக்கு
  27. super. kavithai thamilin aalam theriyathavarum padikkum vannam elimai kondullathu. vaalththukkal.ungka style maarivarukirathu.

    பதிலளிநீக்கு
  28. என்ன இருந்து என்ன.பக்கத்தில அன்புத் துணை இல்லாம.அதுவும் கர்ப்பமா இருக்கிறப்போ !

    பதிலளிநீக்கு
  29. //வயிற்றில் தங்கிய கரு கூட
    வருத்தத்தில் வலுவிழந்து
    விடை பெற்று போச்சுதய்யா...//
    //குழம்புதான் வைக்கிறேன்
    பொடியும் புளியுமில்லாம..
    குழம்புதய்யா என் மனசு..//
    //என்னைக் கைப்பிடித்த கருணையே
    என் கைபிடிக்குள் எப்ப வருவ........???//

    அருமையான வரிகள்...

    பதிலளிநீக்கு
  30. நீ சென்ற பின்னே சிரிப்பில்லாம..
    வயிற்றில் தங்கிய கரு கூட
    வருத்தத்தில் வலுவிழந்து
    விடை பெற்று போச்சுதய்யா...


    ..அக்கா, நெகிழ வச்சிட்டீங்க.

    பதிலளிநீக்கு
  31. ஏக்கக் கவிதை என்றாலும்

    //என்னை கையோட அழைச்சுப்போ...
    கஷ்டப்பட்டு நீ உழைக்க
    உன் கால் மிதியாய்க் கிடப்பேனே ...//

    இந்த வரிகள் பெண்ணடிமைத்தனமாய் தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
  32. அடி பின்றீங்க, யாராவது சினிமாகாரங்க உங்க தளத்தை பார்த்தால் அவ்வளவு தான். அடுத்த படத்தில் நீங்கள் தான் பாடலாசிரியர். தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  33. உங்கள் வழமையான நடையிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு, ஒரு நடுத்தர வர்க்கத்து மனைவியின் குரலாய்.. அழகான கவிதை

    பதிலளிநீக்கு
  34. eniku tamil type thariyavilai , manikavum , nanum karaikudi than velinattil plaikiran thangal varikal, kannier vadikiran en manaivi,kulanthikalai ninaithu
    pepusekar@gmail.com

    பதிலளிநீக்கு
  35. ஆமாம் ஹேமா அதுவும் எவ்வளவு அருமையான தருணம் வாழ்வில்

    பதிலளிநீக்கு
  36. அன்பு அதிகமானால் யார் கால் மிதியாகவும் யாரும் கிடக்கலாம் புலிகேசி.. அது ஒரு குறியீடுதான்... காலாகக் கையாகக் கிடப்பேனே என எழுத நினைத்தேன் ..பாலை வனத்தின் கடும் வெய்யிலில் கணவன் கருக.... கறுக... உழைக்கும் போது அவன் மனைவி அவனுக்காக என்னவானால்தான் என்ன ..? திருமணம் ஆனால் உங்களுக்கும் புரியும்... உண்மையான அன்பின் முன் எதுவும் அடிமைத்தனமில்லை என்று...

    பதிலளிநீக்கு
  37. மிக்க நன்றி சசி என் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்து இருப்பதற்கு உங்களைப்போன்றவர்களின் அன்பு வார்த்தைகளும் பாராட்டுகளும்தான் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
  38. வருந்தாதீர்கள் சேகர் சீக்கிரம் குடும்பத்தோடு சேர்வீர்கள்

    பதிலளிநீக்கு
  39. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் ..!!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்...!!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)