ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

வரம்

ஒளிவட்டம் சுழல
இறகை உதிர்த்து
தேவதை பிறந்தாள்
பூங்கொத்துச் சிரிப்புடன்...

ரோஜாப் பாதம்
பஞ்சு இளம் மேனி
நஞ்சில் உதித்த
பாற்குட தேவதை....

பளிங்குக் கண்கள் மிளிர
ஒளிரும் கறுப்பு நிலவுகள்
மினுமினுப்பாய்...
மாதுளம் பூக்கள் கன்னத்தில்...

நட்க்ஷத்திரங்கள் குவியலாய்
என் வாசல் சுட்டியபடி...
தரிசன வரிசையில்
பரிசுகளுடன்....

வளரும் போதே
என்னை வளர்த்தாள்...
ஆணிவேராய்
நானும் கிளைத்தேன். ..

பதின்பருவங்களில் புஷ்பித்தபோது
உபாதை நினைத்து
உளைந்த என்னை
உரமூட்டினாள்...

பருவத்தின் சூரியன்
அவளைச் சுற்றி
கோள்கள் தங்கள்
பாதை மாற்றி...

அறுபத்து நான்கைவிட
அதிகம் கற்று
அதிகம் ஈட்டி
அகிலம் சுற்றி...

திருமணம் எய்தித்
தாயாய் ஆனாள்..
ஜனனத்தின் விளிம்பில்
என் உயிர் அலைய...

எல்லையிலாத்துயர் முடிய
வெடித்துக்கிளம்பிய
விதை மொட்டுப்போல்

இன்னொரு தேவதை
பரிசாய்க்கிடைத்தாள்..!!
புதியதோர் பூங்கொத்து...!!

உய்விக்க வந்த
ஒப்பில்லா சீமாட்டி...!!!

பால் வீதியே
என் வீட்டு வாசலில்
பிரபஞ்சத்தையே பரிசாக்கி...!!!

பேத்தியாய் மகளாய்
தாயாய் ஆகி
பாட்டியாய் நானும்
திரும்ப ஜனித்தேன்...

நிலமாய் இருப்பதும்
வேராய் இருப்பதும்
கிளைகள் ஊன்றி
ஆலமாய் விரிவதும்
தேவதைகளுக்கே கிடைத்த வரம்...!!!

22 கருத்துகள்:

  1. super mami, romba arumaya erukku. romba techincala erkruthunaala ella words um puriyala, but overall meaning purinchathu, super! unga range ae vera!

    enoda poems anupuraen, unga alavulae ellanallum ore alavu erukum nu expect panraen, padichittu sollunga.

    பதிலளிநீக்கு
  2. dear menumma
    welcome and thanx for ur comments.
    send ur poems .
    awaiting to see it

    பதிலளிநீக்கு
  3. here mami, my poetry...

    i also sent this in email. pl. correct for any spelling mistakes :)

    மகள்
    மெல்லியப் பூவாய் மலர்ந்தாய்
    மெத்தென மடியில் கிடந்தாய்
    மௌனத்தினால் வார்த்தைகள் அளந்தாய்
    மெல்ல என் உயிரில் கலந்தாய்

    தொப்பில் கொடி சொந்தமது - கொடி
    துண்டித்தப்பின்னே தொடரும் பந்தம் அது
    நீ படப்படத்த ஒரு சிறு நொடியும்
    இந்த மனம் துடிதுடித்து பதறியது

    மெத்தப் படித்த மேதையரெ வழங்குவர் பட்டம்
    புதிதாய் பிறன்ட் க குட்டிப்பிள்ளை வழங்கியது
    'அம்மா' என்கிறப் பட்டம்
    சுட்டிப்பிள்ளை நீ வளரப் பார்த்திருப்பேன்
    கட்டிக் கரும்பே
    அமுத மொழி நீ வடிக்கக் கேட்டிருப்பேன்

    சக்தியோடு முனைந்து உன்னை வளர்த்திடவே
    சத்தியமாய் தேவையொரு வழித்துனையே
    சர்ச்சையின்றி அமைதிக்கொள் பூமனமே
    சாமியுண்டு நம்மை காக்க பூமியிலே

    நன்றி
    மீனாள் பழனி

    பதிலளிநீக்கு
  4. தினேஷ் பாபு.ஜெ13 நவம்பர், 2009 அன்று 8:31 PM

    பால் வீதியே
    என் வீட்டு வாசலில்
    பிரபஞ்சத்தையே பரிசாக்கி...!!!


    நிலமாய் இருப்பதும்
    வேராய் இருப்பதும்
    கிளைகள் ஊன்றி
    ஆலமாய் விரிவதும்
    தேவதைகளுக்கே கிடைத்த வரம்...!!!



    அருமையான வரிகள்!!!....

    பதிலளிநீக்கு
  5. நன்றி தினேஷ் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  6. ஒஹோ.. ஒஹோஹொ... தூள் கிளப்புறீங்க.. எப்படி இவ்வளவு நேரம் கிடைக்குது..?

    பதிலளிநீக்கு
  7. //பேத்தியாய் மகளாய்
    தாயாய் ஆகி
    பாட்டியாய் நானும்
    திரும்ப ஜனித்தேன்...//

    காரைக்குடின்னு நிருபிக்கிறிங்களே அப்பன்னா தேனம்மை உங்க அப்பத்தா பெயரா?

    கவிதை ஊற்று தொடரட்டும்.........

    பதிலளிநீக்கு
  8. நன்றி அண்ணாமலையான் உங்க வாழ்த்துக்கு

    பதிலளிநீக்கு
  9. நன்றி சரவணன் எப்படிக் கண்டு பிடிச்சீங்க

    பதிலளிநீக்கு
  10. //
    நிலமாய் இருப்பதும்
    வேராய் இருப்பதும்
    கிளைகள் ஊன்றி
    ஆலமாய் விரிவதும்
    தேவதைகளுக்கே கிடைத்த வரம்...!!! //

    ஆம்,.
    மரங்கள் வெட்டப்படுகின்றன பரந்து விரிந்த பின்
    தேவதைகள் கொல்லப்படுகின்றனர், சிறகினை விரிக்கும் முன்னரே,..

    நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  11. நன்றி ஜோதி உங்க கருத்துக்கு
    அதில் உண்மை இருக்கிறது

    பதிலளிநீக்கு
  12. // பேத்தியாய் மகளாய்
    தாயாய் ஆகி
    பாட்டியாய் நானும்
    திரும்ப ஜனித்தேன்...//

    சிம்பிளி சூப்பர்.

    கவிதை மழைப் பொழிகிறது... காட்டாற்று வெள்ளம் போல் அடித்துக் கொண்டு போகின்றது.

    பதிலளிநீக்கு
  13. ிலமாய் இருப்பதும்
    வேராய் இருப்பதும்
    கிளைகள் ஊன்றி
    ஆலமாய் விரிவதும்
    தேவதைகளுக்கே கிடைத்த வரம்...!!! ............ super!

    பதிலளிநீக்கு
  14. தேவதைகளுக்கு மட்டுமே எனக் கிடைத்திருக்கும் வரத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அற்புதம்.

    பதிலளிநீக்கு
  15. அட...அ...அட எந்த வரிகளை பத்தி பேசுறதுனே தெரியல...
    நிச்சயமாய் இது யோசித்து கிடைத்த வரிகள் இல்லை..
    உயிரில் ஊன்றிபோனவைகள என்றே தோன்றுகிறது...
    மிக உணர்வுகள் சொல்லும் கவிதை...
    மறக்கவே முடியாது...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  16. கவி முத்திய எழுத்துக்கள்,,,
    அழகான வரிகள்,,,
    பொறுக்கியெடுத்த வார்த்தைகள்,,,
    வாழ்வை அனுபவித்த தருணங்கள்,,,
    மீண்டும் படிக்க சொல்லும் எண்ணங்கள்,,,

    ஒவ்வொரு வரிகளும் அருமை கலக்கரேல் போங்கோ....... ஸ்ரீதர்

    பதிலளிநீக்கு
  17. நன்றி ராகவன்

    நைஜிரியா வலைப் பதிவர் மாநாடு அருமை

    பதிலளிநீக்கு
  18. நன்றி சித்ரா குழந்தைப் பருவ நட்பு அருமை

    பதிலளிநீக்கு
  19. ராமலக்ஷ்மி அசத்துறீங்க

    வாங்க
    முதல் முதலா என் வலைத்தளத்துக்கு வந்ததுக்கு நன்றி
    ஏக்கம் பற்றிய போட்டிக்கவிதை அருமை
    வெற்றி பெறவாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. நன்றி கமலேஷ் உங்க முதல் வருகைக்கு

    சரண்யாவும் கவிதைகளும் அருமை கமலேஷ்

    வார்த்தைகள் வந்து விழுகுது கமலேஷ் அற்புதம்

    பதிலளிநீக்கு
  21. நன்றி சிரிதர்

    உங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  22. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)