சனி, 23 டிசம்பர், 2023

அமர்க்களம் அஜித்குமார்

 அமர்க்களம் அஜித்குமார்


“பிள்ளையார் பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா நீ கருணை வைச்சா நானும் ஹீரோப்பா” என்று பாடிய அஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்சபட்ச இரட்டையர்களில் ஒருவர்!. எந்தப் பின்புலமும் இல்லாமல் தன் நடிப்பால் மட்டுமே உயர்ந்தவர். தல தளபதி என ரசிகர்களுக்குள் போட்டி இருந்தாலும் முன் போல அது நடிகர் திலகம்மக்கள் திலகம் போட்டி அல்லஇருவருமே பக்கா கமர்ஷியல் ஹீரோக்கள்.

கச்சிதமான வடிவம்திருத்தமான முகம்சமயங்களில் சீரியஸ் லுக்பெரும்பாலும் சாக்லேட் பாய் புன்னகைசில சமயம் கோப முகம் எப்போதும் லூஸ் ஃபிட்டிங்காக ஒரு உடைமாதவன்அரவிந்தசாமி போன்ற ஹேண்ட்சம் தோற்றம்ஆனால் அவர்கள் பெறாத வீச்சை இவர் பெற்றார்சினிமாவுக்கு வரும்முகமாக  இரு விளம்பரங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் பிரபலமான பின் விளம்பரப் படங்களைத் தவிர்த்தவர் இவர்.

ஜனா படத்தில் வந்த தீபாவளிதல தீபாவளி என்ற பாடலா அல்லது ஆசையில் வந்த கொஞ்சநாள் பொறு தலைவா பாடலா எனத் தெரியவில்லை இவரைத் தல ரேஞ்சுக்கு உயர்த்தியதுஇவரைத் தலஎன்றும்,அல்டிமேட் ஸ்டார் என்றும் ஏகே என்றும்அதிரடி நாயகன் என்றும்  ரசிகர்கள் அழைக்கிறார்கள்தமிழில் 62 படங்களில் நடித்திருக்கிறார். புன்னகை இவருக்கு ப்ளஸ் பாயிண்ட்.

அஜீத்குமாரின் தந்தையின் பெயர் சுப்ரமணியன்தாயின் பெயர் மோகினி. 1971 மே ஒன்றாம் தேதி ஹைதையில் பிறந்தார்கார் ரேஸ்பைக் ரேஸ் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்கூகுளில் தேடப்பட்ட நடிகர்களில் முக்கியமானவர்இப் பந்தயங்களால் நிறைய விபத்துக்கள் ஏற்பட்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டவர்.1991 இல் அமராவதி என்ற படத்தில் அறிமுகம்குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த பேபி ஷாலினி அமர்க்களம் என்ற படத்தில் இவருடைய ஹீரோயினாக நடித்தார்.

நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லேஇதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோசொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்அக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்பூக்காரா பூக்காராகாதல் வெப்சைட் ஒன்றுசேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க.., நலம் நலமறிய ஆவல்சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா.. என்ற எவர்க்ரீன் மெலோடீஸ் இவர் படங்களெங்கும். ஒரு கட்டத்தில் ”சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” என ஆக்ரோஷமாகப் பாடி அடுத்ததே ”உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்று உள்நெஞ்சு கேட்கின்றது” என்று பாடிய ஷாலினியின் அன்பு அழைப்பில் காதலாகி மணம் புரிந்து கொண்டார்.  இத்தம்பதியினருக்கு அனோஷ்காஆத்விக் என இரு குழந்தைகள் உண்டு.

அகத்தியனின் காதல் கோட்டையில் இவரும் தேவயானியும் அற்புதமாக நடித்திருப்பார்கள்ஆனால் ஒரு  நிறுவனத்தில் வேலை செய்யும் சூர்யா திடீரென ( பெண் முதலாளி கொடுத்த நெருக்கடியால்வேலையை விட்டு விட்டுச் சென்னையில் ஆட்டோ ஓட்டுவார்.  இதெப்படிச் சாத்தியம் எனக் கேட்கக் கூடாது. ஏனெனில் அப்போதுதானே ரயில்வே ஸ்டேஷனில் க்ளைமாக்ஸில் தேவயானியைச் சந்திக்க முடியும். கவலைப்படதே சகோதரா என்று ஆட்டோ ரிக்‌ஷா சகோதரர்களின் நெகிழ்வையும் சம்பாதித்த படம். முடிவில் தேவயானி பின்னிய ஸ்வெட்டருக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமோ என நாம் பதட்டப்பட ஒரு வழியாய் மழை வந்து அஜீத்தை நனைத்து அவர் சட்டையைக் கழட்டிப் பிழிய தேவயானி தன்னுடைய தாமரை எம்பிராய்டரி செய்து அனுப்பப்பட்ட ஸ்வெட்டரைப் பார்த்து அஜித்துடன் ஒன்றுசேர நமக்கும் நிம்மதி.


1995 இல் வெளியான ஆசையில் சுவலெக்ஷ்மியுடன் ஜோடிகாதல் மன்னன் படத்தில் திருமண நிச்சயத்தைப் புகைப்படம் எடுக்க வரும் அஜித் அந்த மணமகளோடு காதல் வயப்படுவதான கதைஇதில் ”உன்னைப் பார்த்தபின்புதான் நான் நானாக இல்லையே” எனப் பாடுவார்ஆனந்தப் பூங்காற்றேநீ வருவாய் என  என்ற இரு படங்களிலும் கார்த்திக் மற்றும் பார்த்திபனுடன் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார்ஆனந்தப்பூங்காற்றேயில் மீனாவுடனும்நீ வருவாய் என படத்தில் தேவயானியுடனும் ஜோடி.

விஜயுடன் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்திருக்கிறார்வில்லன்வாலிஎனச் சில படங்களில் நாயகன்எதிர்நாயகன் என இரு வேடங்களும் செய்துள்ளார்என்னைத் தாலாட்ட வருவாளா மற்றும் அவள் வருவாளா என இரு படங்களும் வித்யாசமானவை.  , தீனாஅட்டகாசம், , வரலாறுகிரீடம்சிட்டிசன், ரெட், ஆஞ்சநேயா, விசுவாசம், ஜி,  பில்லாஅசல்மங்காத்தாபில்லாஎன இவரை ஆக்‌ஷன் ஹீரோவாக்கி நீள்கின்றன படங்கள்.

தன் சுய அடையாளம் தேடும் “முகவரி” இவரது சிறந்த படங்களுள் ஒன்றுவரலாறு அதிரடியான படம்இதில் பரத நாட்டியக் கலைஞராக வித்யாச முகபாவங்கள். பூவெல்லாம் உன் வாசத்தில் ”தாலாட்டும் காற்றே வா” இரயில் ப்ரயாணத்தில் அதன் சந்த லயத்தோடு எடுக்கப்பட்ட பாடல் அழகு ( சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் என்ற சிவாஜி,கே ஆர் விஜயாவின் பாடல் ரயிலின் சந்த நயத்தில் அமைக்கப்பட்ட முதல் பாடல். இது வெகு அழகு. )

ஜி படத்தில் டிங் டாங் கோயில் மணி பாடலில் நம்ம ஊர் வீதிகளும் கோட்டை வீடுகளும் அழகாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும்சிங்கம் பதித்த முகப்புகளும், கலர்க்கண்ணாடி பதித்த ஜன்னல்களும், அக்கம் பக்கம் வீடுகளின் ஓடு பாவிய மேங்கோப்புகளும்தான் எவ்வளவு அழகு !ஆத்தங்குடிக் கல்பதித்த ஆல்வீட்டிலும், ரெண்டாங்கட்டிலும் திரிஷா சுழன்று ஆட, வளவுக்குள் யானைக்கால் தூண்களின் மேலே, கீழ் வாசல் கம்பிகளின் வழியாக நெசவு செய்யும் வெய்யிலில் த்ரிஷவின் மேலான காதல் பார்வையோடு அஜீத் சாய்ந்து நிற்க “சொல் ஏதுஇனிநாம்பேச..”அது ஏனோ தெரியவில்லை நம்மூரு வீடுகளின் மேலுள்ள ப்ரேமையால் இங்கே எடுக்கப்பட்ட விக்ரம்சுந்தர் சி படங்கள் கூடப் பிடித்து விடுகின்றனஆனால் இப்பாடலின் முடிவில் சிதைந்த வீடுகளை பேக்ரவுண்டில் பார்த்தபோது மனம் வலிக்கத்தான் செய்தது.

வாலி படத்திற்கு ஃபிலிம்ஃபேர்சினிமா எக்ஸ்ப்ரஸ் மற்றும் தினகரன் திரைப்பட விருதுகளையும்முகவரி படத்துக்காக சினிமா எக்ஸ்ப்ரஸ் விருதுபூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக மாநில அரசின் விருதுவில்லன் படத்திற்காக ஃபிலிம்ஃபேர் மற்றும் தினகரன் விருதுகளையும்கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணைநடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும்மங்காத்தா படத்திற்காக சிறந்த நாயகன் மற்றும் சிறந்த எதிர்நாயகன் ஆகிய விருதுகளையும்வரலாறு படத்துக்காக தமிழக அரசு எம் ஜி ஆர் திரைப்பட விருதையும்மற்றும் வரலாறு , மங்காத்தாவிற்காக விஜய் விருதுகளையும் , சிட்டிசன் படத்திற்கு சினிமா எக்ஸ்ப்ரஸ் விருதும் பெற்றவர்.

மீடியாவுக்குப் பேட்டி கொடுத்ததில்லை. தீபாவளி, பொங்கல் போன்ற நிகழ்வுகளிலும் எந்த சானலிலும் சிறப்புத்தோற்றம் இல்லை. பொதுவாகப் பொதுவிழாக்கள், கூட்டங்கள், ஏன் தன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கும், தனது படத்தின் ப்ரமோவுக்கும்  கூட இவர் கலந்து கொள்ள விரும்புவதில்லை.  சொல்லப் போனால் ஒரு கட்டத்தில் இவர் பத்ரிக்கையாளர்களின் கண்டனத்துக்கும் ஆளானவர்.  ஆனாலும் ஜெயித்து வருகிறார். இவர் படங்கள் சக்கைப்போடு போடுகின்றன என்பதே ஆச்சர்யம்.திரைப்படத்தில் நடிப்பதோடு தன் பணி முடிந்து விடுகிறது என்பதில் தெளிவாய் உள்ள நடிகர் இவர் என்பது கமலா சினிமாஸ் அதிபர் திரு வி என் சி டி  வள்ளியப்பன் சார் அவர்களின் சமீபத்திய பேட்டி ஒன்றில்  தெளிவாகியது.

தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்ததோடு தன்னைத் தலை என்று அழைக்க வேண்டாம் என்பதிலும் தான்அரசியலுக்கு வரக்கூடாது என்பதிலும் தீர்மானமாய் இருக்கிறார்சொல்லப் போனால் இவர் படங்களில் முஷ்டியை முறுக்கும், விரலைச் சொடுக்கும், கண்ணிலிருந்து கால் வரை சிவப்பு நரம்பு வெடிக்கும் பஞ்ச் டயலாக்குகளே இருக்காதுதன் ரசிகர்கள் தன் படத்தை ரசிக்கலாம் ஆனால் அதற்காகத் தன் இளமை மற்றும் வாழ்வைத் தொலைத்துவிடக் கூடாது என்பதில் இவருக்கும் இருக்கும் அக்கறையே இவரை ஒரு சிறந்த மனிதராக  அடையாளம் காண்பிக்கிறது.  தனது வீட்டில் பணிபுரியும் 12 பேருக்கும் இவர் வீடு கட்டிக் கொடுத்துள்ளது சிறப்புத் தகவல்.  நடிப்பு என்பது ஒரு பணி, .அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும், அவ்வளவே! என்ற கொள்கை கொண்டவர். எந்தப் பணியில் ஈடுபடுவோரும் புகழுக்கு முன்பாகத் தன் தொழிலின் நேர்த்தியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துவரும் நடிகர் அஜீத்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)