திங்கள், 1 மே, 2023

மகளிர் மட்டும் ஊர்வசி

 மகளிர் மட்டும் ஊர்வசி


மேடம் ஒரு பேட்டி வேணுமே” இது நான்.

இப்போ செங்கல்பட்டில் ஒரு ஷூட்டிங்கில் இருக்கேன்சென்னை வந்ததும் சொல்றேன் வாங்க.” இது ஊர்வசி.

மேடம்போன்லயே நீங்க நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொன்னாப் போதும்அப்படியே எழுதி ஆர்டிகிளா அனுப்புறேன் மெயில்லஉங்க அனுமதிக்குப் பிறகு பத்திரிக்கை அலுவலகத்துக்கு ஃபார்வேர்ட் பண்ணுறேன்.”

என்னது போன்ல பேட்டியாநீங்க யாரு எவருன்னே தெரியாதுநேர்ல வந்து பார்த்தாத்தான் பேட்டியே” என்று கறாராகப் போனை வைத்து விட்டார்ஊர்வசி.

2010 களில் சென்னையின் கே கே நகரில் இருந்தபோது லேடீஸ் ஸ்பெஷல்இவள் புதியவள்சூரியக்கதிர்நம் தோழி போன்ற பத்திரிக்கைகளுக்கு ஃப்ரீலான்சர் ஜர்னலிஸ்டாகப் பேட்டிகள் எடுத்து அனுப்பிக் கொண்டிருந்தேன்புயல்வேகத்தில் ஸ்டெனோகிராஃபர்போல போனை ஒரு கையில் பிடித்து நோட்டில் குறிப்புகள் எடுத்து பல்வேறு சினிமா பிரபலங்களையும்மருத்துவர்களையும் பேட்டி எடுத்து அதை லாப்டாப்பில் டைப் செய்து மெயிலில் அனுப்பி உள்ளேன்ஆனால் ஊர்வசிதான் நோ சொல்லி விட்டார்.

விக்கிரமாதித்தன் போல் மனதைத் தளர விடாமல் என் கேள்வி வேதாளங்களைச் சுமந்துகொண்டு வேளச்சேரியில் இருக்கும் அவர் வீட்டுக்கு ஒரு பொன்மாலைப் பொழுதில் சென்றேன்அப்போதுதான் ஃப்ளைட்டில் இருந்து இறங்கி வீட்டுக்குள் அடி எடுத்து வைத்திருந்தார்தொடர் பேட்டியில்  என்னுடன் கனிவான மொழியில் உரையாடினாலும் அவரை ஃபோட்டோ எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார்.

பேட்டியின்போது ”தமிழுக்கே உரித்தான  வை மெட்ராஸ் தமிழர்களை விட மற்ற மொழிக்காரர்கள் அற்புதமாக உச்சரிக்கிறார்கள்” என்றார் அதிரடியாகதொலைக்காட்சி மூலம் தமிழ் கற்பித்த நன்னனைச் சிறப்பானவராகக் குறிப்பிட்டார்கல்கியில் சின்னச் சின்ன வாழ்க்கைக் குறிப்புக்கள் என்ற காலம் எழுதி இருக்கிறார் ஊர்வசி.

இவர் ஹ்யூமர் ஹீரோயின் ரோலில்தான் அதிகம் வெளுத்து வாங்கி இருக்கிறார்சினிமா ஹீரோயினான இவர் டிவியில் நடிப்பது குறித்துக் கேட்டபோது விஷுவல் மீடியாவின் மாற்றத்தினால் அதை ஏற்றுக் கொண்டதாகக் கூறினார்நந்தனாமீரா ஜாஸ்மின்நயன் தாரா ஆகியோர் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இவரிடமும் ஒப்பீனியன் கேட்டிருக்கிறார்கள். ”அறிமுகம் மட்டுமே நான்மற்றபடி அவர்களின் திறமைதான் ஜெயிக்க வைத்தது” என்றார்வாழ்வின் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன் நடிப்பு டிப்ளமசியை விடாதவர்நடிப்பு ராட்சசி என்று கமலாலேயே புகழப்பட்டவர்.

கமலைப் பற்றிக் கூறும்போது “அவரைப் போல ஒரு கலைஞனைப் பார்ப்பது அரிதுடெடிகேஷன்னு சொல்வோமில்லையா அதுதான்மன்மதன் அம்பு போல மைக்கேல் மதனகாமராஜனிலும் ஒரு டெஸ்ட் முயற்சியாக ஸ்லோமோஷன் சாங் பின்னோக்கி உச்சரிப்போடும் சீன்ஸோடும் இருக்கும்அதை அவர்தான் செய்ய முடியும்மன்மதன் அம்புவில் அந்தப் பாட்டில் திருமணம் முடியும்போது பல்லாண்டு பல்லாண்டு என்று வரும் உச்சரிப்பு கூட திருப்பிப் போட்டு எழுதி ஐயர்களுக்கு ப்ராக்டீஸ் கொடுத்து செய்ததுஇந்தியாவிலேயே இது கமலால் மட்டுமே முடியும்அந்த அளவு டெடிகேஷன் உள்ளவர் அவர்.” எனப் புகழ்ந்தார்.

உங்களுக்கு மிகப் பிடித்தவர் யார் எனக் கேட்டபோது “என் மகள் தேஜாலெக்ஷ்மி., ( குஞ்ஞாத்தா) .12 வயதாகிறது. 7 வது படிக்கிறாள். ” என்றார். (மகளைப் பற்றிச் சொல்லும்போது முகம் மலர்ந்தார்).

எல்லாரும் அரசியலுக்கு வர்றாங்கநீங்க எப்ப வரப்போறீங்க எனக் கேட்டபோது ”அரசியல் செய்ய மிகப் பெரிய சமாச்சாரம்மிகுந்த அர்ப்பணிப்பு தேவைநாட்டில் நடப்பது தெரியணும்அதுக்கு நேரம் ஒதுக்கணும்எல்லாரும் வந்துட்டாங்கன்னா அவங்களுக்கு இண்டரஸ்ட் இருக்குஎனக்கு அதில் இண்டரஸ்ட் இல்லைநான் பயப்படும் ஏரியா அதுஒரு நாள் ஒரு தேசியக் கட்சி அலுவலகம் முன்பு உள்ள பல்டாக்டர் வீட்டுக்கு உறவினரை கொண்டு விட சென்றிருந்தேன்காரை விட்டு இறங்கக்கூட இல்லைஅந்தக் கட்சியின் தலைவர் எனக்கு வணக்கம் தெரிவித்தார்நானும் காரில் அமர்ந்தபடியே பதில் வணக்கம் தெரிவித்தேன்மறுநாள் பத்ரிக்கையில் நான் அந்தக் கட்சியில் சேர்ந்ததாக ந்யூஸ் வந்துவிட்டதுஅப்படி ஏதும் நடக்காமலே ஒரு ஸ்கூப் ந்யூஸ் வந்தது” என்றார்!.

ஊர்வசி கேரளா கொல்லம் மாவட்டம் சூரநாட்டில் சாவர வி.பிநாயர் மற்றும் விஜயலெக்ஷ்மிக்கு மூன்றாவது மகளாகப் பிறந்தார்இவரது சகோதரிகள் கலாரஞ்சனிகல்பனாசகோதரர்கள் கமல்ராய் மற்றும் இளவரசன்இவர்கள் ஐவருமே நடிகர்கள்பெற்றோருமே நாடக நடிகர்கள்தான்எனவே நடிப்பு என்பது இவர் ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.

ஒன்பதாவது வயதிலேயே குடும்பம் சென்னைக்கு மாறியதால் தமிழ் அருமையாகப் பேசுவார்மனோஜ் கேஜெயினுடன் 2000 ஆண்டு திருமணம்தேஜாலட்சுமி என்றொரு மகள்மனோஜுடனான பிரிவுக்குப் பின் சிவபிரசாத் என்பவரை 2013 இல் மணந்தார்இவர்களுக்கு இஷான்பிரஜாபதி என்றொரு ஆண்குழந்தை உள்ளது.


1979இல் கதிர்மண்டபம் என்ற மலையாளப் படத்தில் 10 வயதுக் குழந்தையாக அறிமுகம். 83 இல் தனது பதினாலாவது வயதிலேயே முந்தானை முடிச்சில் ஹீரோயினாகத் தமிழில் அறிமுகம்தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இவர்இதில் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்ததுசிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை ஐந்து முறை வென்றுள்ளார்இதில் 1989 முதல் 1991 வரை கிடைத்த மூன்று தொடர் விருதுகளும் அடங்கும்.இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.

எப்போதும் சீரியஸாய்ச் சுருங்கிய கண்கள்அதில் அவ்வபோது மின்மினியாய் ஒளிரும் கிண்டல்,  உப்பிய கன்னங்கள்உள்மடிந்த வாய்ரோஜா இதழ்களை ஒட்டியது போன்ற உதடுகள்வெகுளித்தனம்கிராமப்புறப் பெண்போன்ற உடலமைப்பு முந்தானை முடிச்சில்பின்னாளில் ஏகத்துக்கும் எடை கூடிவிட்டார் தன் சகோதரி கல்பனா போல்.

முந்தானை முடிச்சுஅபூர்வ சகோதரிகள்தாவணிக் கனவுகள்கொம்பேரி மூக்கன்நெருப்புக்குள் ஈரம் மானே மானேஅம்பிகை நேரில் வந்தாள்அன்பே ஓடிவாஎழுதாத சட்டங்கள்வாய்ப்பந்தல்வேங்கையின் மைந்தன்ஊருக்கு உபதேசம்சாந்தி முகூர்த்தம்நேரம் நல்ல நேரம்வெள்ளைப்புறா ஒன்றுஅந்த ஒரு நிமிடம்அடுத்தாத்து ஆல்பர்ட்நாம் இருவர்ஒரு மலரின் பயணம்தெய்வப்பிறவிபருவ ராகம்பாட்டி சொல்லைத் தட்டாதேபெண்கள் வீட்டின் கண்கள்மைக்கேல் மதனகாமராஜன்,மகளிர் மட்டும்வனஜா கிரிஜா மாயா பஜார்ஆயுத பூஜைசுயம்வரம்பஞ்சதந்திரம்விரலுக்கேத்த வீக்கம்திருப்பதி ஏழுமலை வெங்கடேசாசிவா மனசுல சக்திமன்மதன் அம்புஉத்தம வில்லன்சவாலே சமாளிமகளிர் மட்டும்தில்லுக்குத் துட்டு 2, இந்தியா பாகிஸ்தான்இஞ்சி இடுப்பழகி,இடியட்வீட்ல விசேஷம்..

அப்பாடா மூச்சு வாங்குது.315 படம் அதில் 125 படம் தமிழில்.!83 இல் முந்தானை முடிச்சில் துவங்கி 2022 இல் வீட்ல விசேஷம் வரைஇவற்றுடன் டப்பிங்திரைக் கதாசிரியர்தயாரிப்பாளர்இது போக 50 க்கும் மேற்பட்ட சானல்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்நிகழ்ச்சி நடுவர்சின்னத்திரை நடிகைவிருந்தினர் ( பிக் பாஸ்எனப் பல பங்களிப்புகள்அமேசான் ப்ரைம்டிஸ்னி ஹாட் ஸ்டாரிலும் இவர் படங்கள் வெளியாகி உள்ளன.

இவர் நடித்ததில் எனக்குப் பிடித்த பாத்திரங்கள் விரலுக்கேத்த வீக்கம் காயத்ரிபாட்டி சொல்லைத் தட்டாதே சீதாதிருப்பதி ஏழுமலை வெங்கடேசா பத்மினிபுள்ளைகுட்டிக்காரன் அழகுசுயம்வரத்தில் அறிவொளி மங்கைமாயாபஜாரில் மாயம்மாகவும் சுஜியாகவும் டபுள் ஆக்டிங்மேலும் குணச்சித்திரப் பாத்திரங்களில் முந்தானை முடிச்சுப் பரிமளமாகவும்மன்மதன் அம்புவில் மல்லிகாவாகவும் கலக்கி இருப்பார்முந்தானை முடிச்சில் அந்தி வரும் நேரம்சின்னஞ்சிறு கிளியேகண்ணத் தொறக்கணும் சாமிநான் புடிச்ச மாப்பிள்ளைதான்வா வா வாத்தியாரேவெளக்கு வச்ச நேரத்துல.. என அனைத்துமே ஹிட் பாடல்கள்படமும் 25 வாரம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்சில்வர் ஜூபிலி படம்சினிமா எக்ஸ்பிரஸ் அவார்டு கிடைத்தது

இன்றும் நினைத்தல் கூட என்னை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் படங்கள் இரட்டை ரோஜாபஞ்சதந்திரம்மைக்கேல் மதன காமராஜன்இரட்டை ரோஜாவில் புருஷனான ராம்கியை முதலாளியான குஷ்பூவுக்கு விற்றுவிட்டுக் கோடீஸ்வரியாக அலப்புவதும் தன் தோழி சுகாசினி கணவரின் படத்தைப் பொக்கிஷமாக எடுத்துக் கொண்டு தன் மாளிகையை விட்டு வெளியேறுவதைப் பார்த்ததும் தன் நிலை குறித்துப் புலம்புவதும் எனக் கலக்கி இருப்பார்.

பஞ்சதந்திரத்தில் அம்மிணி ஐயப்பன் நாயர்ஜெயராம் தன் நண்பர்களுடன் ரகசியமாக பெங்களூர் செல்லத் தன் நண்பனையே மருத்துவர் போல போனில் பேசச் சொல்வார்அப்போது அவர் ( மகனின் இருதயத்தில் உள்ள ) ஓட்டை எல்லாம் அடைச்சிடலாம்எனச் சொல்ல “இவர் என்ன டாக்டரா இல்ல ப்ளம்பரா” எனக் கேட்டு அதிரடிப்பார் ஊர்வசி!. மைக்கேல் மதன காமராஜனில் திரிபுரசுந்தரியாக அதகளம். ”நீங்களும் குக்குகிராமமும் குக்கா”, “ போயிடுத்தா.. எல்லாம் பாழாப் போயிடுத்தா” என்று அழுவார்.  கனவு பாடலில் கமல் பஞ்சகஞ்சத்தில் துரத்தஅசல் பிராமணப் பெண்போலத் தலைநிறைய மல்லிகைப்பூமடிசார் அணிந்து ஊர்வசி ஓடஅவரின் பின்புறம் பட்டுக் குடம் கிணற்றில் துள்ளி விழுவது காட்சி அழகு.

மகளிர் மட்டும் என்ற தலைப்பிலேயே இரு படங்கள் நடித்திருக்கிறார்!1994 இல் மகளிர் மட்டும்சிங்கீதம் சீனிவாசராவ் டைரக்ஷன்கிரேஸிமோகனின் வசனங்கள்.ரேவதிஊர்வசிரோகிணி ஆகிய மூன்று பெண்கள் மேனேஜர் நாசரால் ஏற்படுத்தப்படும் பணியிடப் பாலியல் தொந்தரவுகளைத் துணிச்சலோடு எதிர்கொள்வதை நையாண்டியோடு காட்சிப் படுத்திய முதல் மீ டூ படம். 175 நாட்கள் ஓடிய இப்படம் வி சாந்தாராம் வெள்ளி விருதை வென்றதுஇதில் ஜானகியாக நடித்த ஊர்வசி சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை வென்றார்.

மகளிர் மட்டும் 2017 இலும் ஊர்வசி நடித்திருக்கிறார்ஊர்வசிபானுப்ரியாசரண்யா பொன்வண்ணன் ஆகிய பள்ளிக்கூடத் தோழிகள் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோதிகாவின் முகநூல் தேடல் முயற்சியால் இணைகிறார்கள்.பெண்கள் குடும்பத்துக்காக உழைப்பது மட்டுமல்ல.. தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளிலும் ஈடுபடவேண்டும்தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதாய் அமைந்துள்ளது  இப்படத்தின் சிறப்பு.. இதில்  ஊர்வசி மற்றும் பானுப்ரியா ஆகியோர் தென்னக பிலிம்பேர் விருதுகளில் சிறந்த துணை நடிகை பிரிவில் பரிந்துரைக்கப்பட்டனர்டயலாக் டெலிவரியில் க்வீனான ஊர்வசி க்ரிட்டிக் அவார்டுஸ்டேட் அவார்டுஃபிலிம்ஃபேர் அவார்டுஎடிசன் ஃபிலிம் அவார்ட்  பெற்றதில் வியப்பில்லைஇன்னும் பல்வேறு விருதுகளும் சிறப்புகளும் பெற்று மகளிர்க்கான இன்னும் பல ஊக்கமூட்டும் படைப்புகள் கொடுக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ஊர்வசி மேம்.

3 கருத்துகள்:

  1. 315 படங்கள்..   அதில் 125 தமிழ்...  மற்றும் பல பங்களிப்புகள்..  ஊர்வசி உண்மையிலேயே மனதைக் கவர்கிறார்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம்

    நன்றி ப்ரபா

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)