வெண்கலம்
”கொழந்த
வேலா பொளந்த வாயான்னு பகல்முழுக்கத் தூங்குவான் என் பேரப்பய. ராத்திரி எந்திரிச்சான்னாத்தான்
வெங்கலத்தொண்டை. அழுதழுது ஆல்வீட்டுல இருக்குற எலி பெருச்சாளியெல்லாம் வெரட்டிப்பிடுவான்.”
என்று பிள்ளையைப் பார்க்கவந்த பக்கத்துவீட்டு சாரதாச்சியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்
உண்ணாமலை ஆச்சி.
“பய ராத்திரில பொறந்தானா, பகல்ல பொறந்தானா “ என்று கேட்டார்கள்
சாரதாச்சி.
“ராத்திரிலதான் ஆச்சி “ என்றாள் உண்ணாமலை.
“அடி ராத்திரில பொறந்தபய ராத்திரிலதாண்டி முழிப்பான். ஆமா பாண்டியக்கா
குளியாட்ட வர்றாளாமே” என்று கேட்ட சாரதாச்சியிடம் “ஆமா ஆயா. அக்கா ஒவ்வொரு நாளும் குளியாட்டினவோடனே
பயலுக்குக் கோமயம், பேர்சொல்லாதது, ஆடுதோடா இலை, துளசி, மாசிக்காய், சங்கு, அப்பிடின்னு
ஏதாவது கொண்டாந்து ஒரசி வடிகட்டிக் கொடுக்கும்.” என்றாள் நாகு.
“அடி சங்கு குடிச்சிருக்காண்டி ஒன் பேரன். அதுதான் வெங்கலத்
தொண்டையாயிருச்சு. நல்லா இருக்கட்டும்போ “ என்று கிளம்பினாக எண்பது வயது சாரதாச்சி.
“ஆச்சி நாளன்னைக்கு மிட்டாய்த்தட்டு வைக்கிறோம். ரொட்டி மிட்டாய் எடுத்துக்க வாங்க “ என்றாள் உண்ணாமலை.