சனி, 5 பிப்ரவரி, 2022

செட்டிநாட்டு வீடுகளை ஜொலிக்கச் செய்யும் லெக்ஷ்மி ராமசாமி!

 செட்டிநாட்டு வீடுகளை ஜொலிக்கச் செய்யும் லெக்ஷ்மி ராமசாமி!


லெக்ஷ்மி ராமசாமி பள்ளத்தூரைச் சேர்ந்தவர். சென்னையில் வசிக்கிறார். கணவர் திரு சபாபதி நாராயணன், மகன் செழியன் நாராயணன் என்று கட்டுச்செட்டான குடும்பம். கணவர் PAYHUDDLE என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது மகன் செழியன் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்து வருகிறார்.

க்ளோரோஃபில் ஃபேஷன்ஸ் என்ற டைலரிங் யூனிட் நடத்தும் இவர் ஒரு இன்சூரன்ஸ் முகவராகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வெளிநாட்டுக்கெல்லாம் சென்று வந்திருக்கிறார். மகனது பள்ளியில்  சந்தித்த தோழிகளோடு இணைந்து மாதவி மாஸ்டரிடம் குச்சுப்புடி கற்றுப் பல்வேறு அரங்கங்களில் நிகழ்ச்சி நடத்தி உள்ளார். ஆளுயர ஃபர் பொம்மைகள் எனப்படும் கைவினைப் பொருட்கள் செய்வதிலும் சமர்த்தர். இவை எல்லாவற்றையும் மிஞ்சும் விதமாகத் தனது சகோதரருடன் இணைந்து பழைய செட்டிநாட்டு வீடுகளைப் புதுப்பித்து வருகிறார்.

இவரது குடும்பம், தாயாரின் குடும்பம், கணவரின் குடும்பம் என அனைவருமே இவர் புரியும் அனைத்துத் தொழில்களிலும் மிகவும் ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வருகிறார்கள். இது அவருக்கு மேலும் ஊக்கத்தை அளிப்பதால் தனது எண்ணப்படித் தான் ஈடுபட நினைத்த துறைகளில் எல்லாம் வெற்றியே ஈட்டி வருகிறார்.

தையற்கலையில் ஆர்வம் வந்தது எப்படி என்று கேட்டபோது ”ஒரு தொழில் ஆரம்பிக்கப்படுகின்றது என்றால் ஒன்று ஒரு பெரிய இடைவெளி இருக்கும் இல்லையேல் இருக்கும் தீர்வுகள் நன்றாக இருக்காது அல்லது விலை உயர்ந்ததாக இருக்கும். நான் தொழில் ஆரம்பித்ததற்கு இரண்டாவதே காரணம். எனக்குச் சிறு வயதில் இருந்தே பேஷன் டிசைனிங்கில் ஆசை இருந்தாலும் என்னால் அதைப் பயில முடிய வில்லைபிறகு என்னுடைய தேவைகளுக்காக நான் பல டிசைனர்களைச் சார்ந்திருந்தேன்எனக்கு அது மிகவும் திருப்திகரமாக இல்லை.

எனவே நான் இதற்காக நேரம் ஒதுக்கி ஒரு பேஷன் டிசைனிங் கோர்ஸில் சேர்ந்து பயின்றேன்நான் பேட்டர்ன் மேக்கிங், டிசைனிங் , கட்டிங் மற்றும் டைலரிங் டெக்னிக்ஸ் எல்லாம் கற்று கொன்டேன்பிறகு ஒரு டைலரிங் யூனிட்டையும் செட் அப்  செய்தேன்என்னுடைய தேவைக்காக ஆரம்பித்தது என்னுடைய தோழிகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் என் கணவருடைய நண்பர்கள் குடும்பங்கள் என்று விரிவடைய தொடங்கியது.

பிறகு நான் க்ளோரோஃபில் ஃபேஷன்ஸ் என்ற பிராண்டின் பெயரில் டிசைனிங் செய்ய தொண்டங்கினேன்க்ளோரோஃபில் ஃபேஷன்ஸை நான் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நடத்தி வருகின்றேன்க்ளோரோஃபில் ஃபேஷன்ஸ் என்பது ஒரு பொடீக்  டைலரிங் யூனிட்இதில் நான் குறிப்பிட்ட மற்றும் சிறப்பு மிக்க டிசைன்களை மட்டும் செய்யும் காரணத்தினால் கொஞ்சம் பிரபலங்களும் என்னிடம் டைலரிங் சேவை பெற்றுச் செல்கின்றனர்”  என்றார்

இத்தொழிலின் ஏற்ற இறக்கங்கள், இடர்களை எப்படி எதிர்கொண்டீர்கள் என வினவியபோது “நான் இந்த தொழிலில் வால்யூம் பிசினஸ் எதிர் பார்ப்பதில்லைஇதனை ஒரு பொடீக் டைலரிங் யூனிட்டாகவே நடத்தி வருகின்றேன்ஆதலால் பெரிய ஏற்ற இறக்கங்களை நான் சந்திக்க வில்லை இந்தக் கொரோனா காலத்திலும்.


ஆனாலும் ஒரு 20 லிருந்து 30 சதவிகிதம் வரை என்னுடைய தொழிலும் குறைந்துள்ளது  இந்தக் கொரோனாக் காலகட்டத்தில்அதனை ஈடு  செய்ய டைலரிங்கில் மட்டும் கவனம் செலுத்தாமல் நான் ஆடைகள் தயாரிப்பில் இப்போது கவனம் செலுத்தி கொண்டுள்ளேன்இன்னும் ஓராண்டில் அதனையும் தொடங்கி விடுவேன்” என்றார்..

தையல் போக நடனத்திலும் கலக்குகிறீர்கள்.மேலும் கட்டுமான துறையில் ஆர்வம் வந்தது எப்படி  எனக் கேட்டபோது “நடனம் எனக்குச் சிறு வயதில் இருந்ததே ஆசைஅனால்  என்னால் நடனத்தை சிறு வயதில் பயில முடிய வில்லை . ஒன்று செட்டிய வீட்டில் அதற்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்கப் பட வில்லை இரண்டு நான் சென்னை பள்ளத்தூர் மன்னார்குடி என்று பல ஊர்களில் தங்கி படித்து வந்தேன்ஆதலால் ஒரு தொடர்ச்சி இல்லாமல் ஆகி விட்டது.

என்னுடைய மகனின் பள்ளியில் ஒரு டான்ஸ் ப்ரோக்ராம் பெற்றோர்கள் சேர்ந்து செய்தோம்அதற்கான ஒருங்கிணைப்பு அனைத்தையும் நான் பார்த்துக் கொண்டேன். மேலும் இருபது நாட்கள் பயின்று நாங்கள் ஒரு நாட்டியம் ஆடினோம்அதில் எங்களுக்கு கற்று கொடுத்தவர் ஒரு பாரம்பரிய நாட்டியக் கலையின் குருஅவரிடம் சென்று குச்சிப்புடி நடனம் பயில ஆரம்பித்தேன்சில வருடங்களுக்கு பிறகு என்னுடைய அரங்கேற்றமும் நடை பெற்றது.

நான் இன்று வரை பயின்று வருகின்றேன்நான் பல சபாக்களில் நடனம் ஆடியுள்ளேன் மேலும் நிறைய கோவில்களிலும் நடனம் ஆடியுள்ளேன்செட்டிநாட்டு பகுதியில் நான் பள்ளத்தூர் சிவன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆடியுள்ளேன். சென்ற வருடம் கூட நச்சாந்துப்பட்டி யில் நடை பெற்ற கும்பாபிஷேகத்தின் போதும் எங்கள் நாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது.

என்னுடைய நடனம் மற்றும் பேஷன் டிசைனிங் பற்றி நேர் காணல் சமூக ஊடகங்களில் நிறைய வெளியாகியுள்ளது ஆன்மீக அனுபவமும் பயணமும் சேர்ந்து கொண்டதால் இது என் வாழ்வின்  இணை பிரியா அங்கமாகி விட்டது.

கட்டுமானத்  துறையில் இருக்கும் ஆர்வத்துக்குக் காரணம் நம் செட்டிநாட்டு வீடுகளின் அமைப்புடன் அதில் வாழ்ந்து பழகியவர்களுக்கு அவை இன்று கொஞ்சம் கொஞ்சமாகக் கவனமற்று வீண் போவதைப்  பார்த்தால் சகித்து கொள்ள முடியாதுஎங்கள் கட்டுமான நிறுவனமான “செட்டிநாட்”  என்ற பெயரில் நாங்கள் பழைய செட்டிநாட்டு இல்லங்களைப் புதுப்பிக்கிறோம்.

 30பாரம்பரியம் மிக்க செட்டிநாட்டு இல்லங்கள் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து விட்டனமீதம் இருக்கும் வீடுகளில் ஒரு 50 இல் இருந்து 60 சதவிகிதம் வரை பழுதடைந்து உள்ளனஅவை பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனஆதலால் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம்இதனை எடுத்து நடத்துபவர் என்னுடைய அண்ணன் திரு செல்லப்பன் அவர்கள்என்னுடைய பங்கு நான் இதில் மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடகங்களின் பராமரிப்பையும் பார்த்துக் கொள்கின்றேன்.

கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் ஒரு 60  வீடுகளுக்கு மேல் புதிப்பித்துள்ளோம்நாங்கள் புதிப்பித்த வீடுகள் காரைக்குடி, பள்ளத்தூர், கண்டனுர், அரிமளம் , நாட்டரசன்கோட்டை, புதுவயல், தேவகோட்டை, கொத்தமங்கலம், கானாடுகாத்தான், கோட்டையூர், ஆத்தங்குடி, சிறுவயல், கோனாபட்டுபொன்னமராவதி மற்றும் ராயவரம் ஆகிய ஊர்களில் உள்ளன.

அதனால் சேவ் செட்டிநாடு ( SAVE CHETTINAD ) எனும் நிறுவனத்தை நானும் எனது சகோதரரும் துவங்கினோம்இந்த நிறுவனத்தின் மூலம் ஓல்ட் ஹௌஸ் ரெஸ்டோரேஷன் , பராமரித்தல் மற்றும் அது சம்மந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் செய்து தருகிறோம்எனது பங்களிப்பு இதில் மார்க்கெட்டிங் மற்றும் வெப்சைட் மேனேஜ்மென்ட் ஆகும். சேவ் செட்டிநாடு மூலம் இந்நாள் வரை 50க் கும் மேலான வீடுகளைச் செட்டிநாட்டு பகுதியில் சீரமைத்திருக்கிறோம்.

 இத்துறையில் எங்கள் ஸ்பெஷாலிட்டி வீட்டின் பழமைத் தோற்றம் மாறாமல் மற்றும் இந்நாளுக்குத் தேவையான எல்லா சௌகரியங்களையும் அதில் சேர்த்துத் தருவது என்று சொல்லலாம்.  நாங்கள் சீரியஸ் பாக்டர்ஸ் ஆக எடுத்துக்கொள்வது ரெஸ்டோரேஷன்க்குப் பிறகு வீடு அதன் ஆண்டிக் தோற்றத்தை தக்க வைப்பதுதான்.

ஏழு வருடங்களுக்கும் மேலாக இந்நிறுவனத்தை நடத்தி வருகிறோம். இதில் நுணுக்கம் என்னவென்றால்  புதிய வீடு கட்டுவது போல் இதில் டைம் பிளான் செய்வது சிரமம்ஒரு ஏரியா மட்டும் ரிப்பேர் செய்ய நினைப்போம் அருகில் இருக்கும் இடமும் ரிப்பேர் சமயம் டேமேஜ் ஆகும் வாய்ப்புள்ளதுஅதற்குத் தகுந்தாற் போல் டைம் அண்ட் லேபர் பிளான் செய்ய வேண்டும்

செட்டிநாடு வீடுகளின் நுணுக்கங்கள் பல பேருக்குத் தெரியாதுஇந்த கலை அழிந்துபோய் விடக்கூடாது என்பதில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்துகின்றோம்இந்தக் கட்டுமானங்களைப் பற்றிப் பயிற்சி அளிப்பதற்காக நாங்கள் பயிற்சி மேனுவல்களைத் தயாரித்து வருகின்றோம்இதற்காக ஆரோவில்லியில் வேலை செய்த, பயிற்சி பெற்ற கட்டிட வடிவமைப்பாளர்களைக் கொண்டு தயாரித்து வருகின்றோம்.

இந்த தொழிலில் புரிதல் மிக அவசியம்பெரும்பாலான செட்டிநாட்டு வீடுகள் மிகவும் பழமை வாய்ந்தது (நூறு வருடங்களுக்கும் மேற்பட்டது). இவற்றைச் சீர் செய்யும் போது ஒரு பட்ஜெட்டுக்குள் அடக்குவது சிரமம் ஆகும்மேலும் நாங்கள் இந்தத் தொழிலை ஆசையாகச் செய்பவர்கள்அதனால் சில சமயங்களில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால் இந்தத் தொழிலின் எதிர்காலம் அமோகமாக இருக்கின்றதுஏனேனில் செட்டிநாட்டை நமது அரசாங்கமே ஹெரிடேஜ் டவுன் ஆக டிக்ளேர் செய்துள்ளதுஇதற்கு இங்கு உள்ள கட்டிட வடிவமைப்பே காரணம்மேலும் இன்று உள்ள நகரத்தார் இளைஞர்கள் இந்தக் கட்டடங்களை மிகவும் ஆர்வத்துடன் பாதுகாக்க முன் வருகின்றார்கள்இதனால் நிறைய வாய்ப்புகள் வளரும்நாங்கள் தற்சமயம் ஒரு 100 வேலை ஆட்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம் மேலும் பல பேர்க்கு பயிற்சி அளிக்க விருப்பப்படுகின்றோம்.

லாப நஷ்டங்கள் எல்லாத் தொழிலும் போல இதிலும் உண்டு. இயன்ற வரைக்கும் கஸ்டமர் கேட்கும் பட்ஜெட்டிற்குள் செய்ய நினைப்போம். சில சமயங்களில் லேபர் அல்லது  ஓரு ஏரியா அதிகமாகி விடும்அப்பொழுதுதான் லாப நஷ்டப் பிரச்னை வரும்இத்தொழில் வளர நல்ல வாய்ப்புள்ளதாகும்.  இன்று இளவயதினர் பலரும் நம் வீடுகளை காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதைப் பார்க்க முடிகிறதுஅதனால் வாய்ப்புகள் பெருகுவதே உண்மை.

எங்களுடைய கஸ்டமர்கள் அனைவருமே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்அவர்களுடைய பரிந்துரையினால் எங்களுக்கு நிறைய கஸ்டமர்கள் கிடைத்துள்ளார்கள்அதுதான் எங்களுடைய இணையில்லா அவார்ட் ஆகும்.

மிக அருமையாக செட்டிநாட்டு வீடுகளை அதன் பாரம்பரியத் தரத்தோடு புதுப்பித்துத் தருவதுமல்லாமல் லாபம் நஷ்டம் பார்க்காமல்  ’சேவ் செட்டிநாட்’டை நடத்தி அநேக வீடுகளை உயிர்ப்பிக்கும் லெக்ஷ்மி ராமசாமியின் சேவை தொடரட்டும் என நமது செட்டிநாட்டின் சார்பாக வாழ்த்தி வந்தோம்.  

2 கருத்துகள்:

  1. மூதாதையர் ரேகை ஓடிய கலையை காலத்தின் நீட்சியில் மறைந்து விடாமல் காக்கும் லெக்ஷ்மி அவர்கள் குறித்து அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.சிறப்பான பதிவு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி துரை அறிவழகன் சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)