வியாழன், 24 ஜூன், 2021

அமேஸானில் என் மின்னூல்கள் 38 - 41.

1.  எனது முப்பத்தி எட்டாவது மின்னூல்,” சிறுவர் நூல்கள் - ஒரு பார்வை   “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 50/- மட்டுமே



சிறுவர் நூல்கள் - ஒரு பார்வை

https://www.amazon.in/dp/B094CNC156


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் 

மனனத் திறமை சிறுவயதில் அதிகமாக இருக்கும். வயதாக ஆக மறந்துவிடும். அந்த நினைவுகளைக் கோர்வையாக சிலவற்றைச் சிந்திப்பதன் மூலமும், சில விதிகள் மூலமும், சில உத்திகள், பயிற்சிகள் மூலமும் புதுப்பிக்க இந்நூல் உதவுகிறது.


இதில் கொடுத்திருக்கும் சில பயிற்சிகளை /சில பரிசோதனைகளை செய்வதன் மூலம் இன்னும் கூர்மையடைகிறது நமது ஞாபக சக்தி. நினைவாற்றலே நேரம் நினைவாற்றலே பணம். அதுவே யானை பலம்.


2. எனது முப்பத்தி ஒன்பதாவது மின்னூல்,” சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை  “அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே



சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் – ஒரு பார்வை

https://www.amazon.in/dp/B094GWW15T


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் 


*இலக்கியம் நம் வாழ்க்கைக் குறிக்கோளை எய்ய உதவும் ஒரு இலக்காகவும் இருக்கிறது. நல்ல இலக்கியம் செம்மைப்படுத்துகிறது. ஒரே மொழியைப் பேசும் மக்களூடே இருக்கும் வெவ்வேறு வட்டார வழக்கங்களையும் பகிர உதவுகிறது. இனம் மொழி மதம் கடந்து உலகம் முழுமைக்குமான ஒரு இணைப்பு இலக்கியம் என்பது. அதைப் படிக்கப் படிக்க நாம் நம்மை புனர் நிர்மாணம் செய்து கொள்கிறோம். எண்ணங்களில் ஒரு வலிமையான மாற்றம் நிகழ்கிறது.


*”சென்செக்ஸ் குறியீடு” போல ”ஹங்கர் இண்டெக்ஸ் குறியீடும்” கவனிக்கப்படவேண்டும் என சொல்கிறார். தாவர வகையின் மரபார்ந்த ஆய்வுகள் விதைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தைச் சொல்வது போல ”மரபணு மாற்றப் பயிர்களை வளர்ந்து வரும் நாடுகளில் தடை செய்ய வேண்டும். அனுமதிக்கக்கூடாது ”என்பதையும் என் கருத்தாக மொழிகிறேன்.


*கரை, குடும்பு, நகரம் பிரம்மதேயம், ஏரிவாரியம் என்று நீரின் மூலம் தமிழர்களின் வாழ்வு முறையும் சுட்டப்படுகிறது இந்நூலில்.


*ஐ லவ் யூ விற்கும் , சாப்பிட்டாயா விற்கும் உள்ள தொடர்பைக் கூறும் ராம் பரமானந்தனின் கட்டுரை நான் மிகவும் ரசித்த ஒன்று. நம்முடைய உள்ளமும் நாம் வாழும் யதார்த்தமும் நாம் கூறும் வார்த்தைகளும் கம்யூனிகேஷன் எனப்படும் ஒன்றோன்றுடனான தொடர்பை நிறுவத் தவறுவது பற்றியான கட்டுரை அது. ஐரோப்பிய வாழ்வியலில் தமிழர்களான நாம் மிங்கில் ஆகாததை சரியான முறையில் நிறுவி இருக்கிறார். குழந்தைகளுடனான உறவில் கூட நாம் நம்முடைய அதிகாரத்தையும் அன்னியத்தன்மையையும்தான் வெளிப்படுத்துகிறோம் என்று தோன்றியது.


*டுல்டுங் என்ற தற்காலிக வதிவிட அனுமதி பெற்ற மக்களின் தர்மசங்கடநிலை இன்னும் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட அவர்கள் இங்கே வாழ்ந்துவிட்டபின்னும் அவர்கள் அனுமதி நீட்டிக்கப்படாததால் அகதிகள் விண்ணப்பம் நிராகரிப்பு, அதனால் சலுகை அற்ற நிலை, வேலை இடங்களிலிருந்து நீக்கம் செய்யப்படுதல், கல்வி கற்று வரும் குழந்தைகளோடு பாதியில் திடீரென குடும்பத்தோடு நாடு கடத்தப்படும் நிலை இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. மனித நேயத்தோடு புகலிடம் கொடுத்த நாடுகள் தங்கள் சட்டங்களை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.


*தோப்பில் முகம்மது மீரான், ஜெயகாந்தன் ஆகியோரின் கல்வி, மொழி பற்றிய பகுதிகள் சுவாரசியமானவை. சிவகங்கை மாவட்ட எழுத்தாளுமைகள், தமிழ்நாடு - சிறுகதை எழுத்தாளுமைகள், அயலகத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளுமைகள் அனைவரையும் தனித்தனிக் கட்டுரைகளில் விவரத்தோடு பட்டியலிட்டிருப்பது சிறப்பு.


*சாதாரணனின் நிலம் நிலமறிய ஆவல் இலக்கியப் பரிமாறலோடு இயற்கை பற்றிய விழிப்புணர்வைக் கொடுத்தது. உமாவின் அரசுப் பள்ளிகளில் காணாமல்போன தமிழ்க் கல்வி பற்றிய கட்டுரை அதிர்ச்சி ரிப்போர்ட். தமிழ் வாழ்வதற்கான சாத்யக்கூறு அங்கேயும் குறைந்துவிட்டதா ?



3. எனது நாற்பதாவது மின்னூல் “மொழிபெயர்ப்பு நூல்கள் - ஒரு பார்வை “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ.  மட்டுமே



மொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு பார்வை

https://www.amazon.in/dp/B0956LVQS1


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் 


என்னை என்றும் ஆச்சர்யப்படவைப்பது மொழிபெயர்ப்பு நூல்கள். நாம் ஒன்றை எழுதி விடலாம்., கொஞ்சம் வாசிப்பு மற்றும் அனுபவ சேகரிப்பு போதும். ஆனால் மொழிபெயர்ப்பில் அந்த மொழி சிதைவுறாமல்., சொல்லவந்த கருத்துக்கள் பிழைபடாமல் சொல்வது கடினம். ஒரு மொழிபெயர்ப்பாளன் வாசகர்க்கும், அந்த நூலை எழுதிய எழுத்தாளனுக்கும் உண்மையாய் இருக்க வேண்டும். தன் கருத்து. ஒர் சார்பு நிலை எந்த இடத்திலும் வெளிப்பட்டுவிடாமல் காக்க வேண்டும். ஒரு சிருஷ்டிகர்த்தாவை விட கடினமான பணி அதைப் போன்ற குறைவில்லாத உயிர் சிற்பம் செய்வதே. அசலின் எல்லா குணங்களும் நகலிடமும் இருக்கவேண்டும்., எந்தச் செதுக்கலும் இல்லாமல். இதை சிறப்புறச் செய்திருப்பதால் இந்த நூல் பலவருடம் கழித்தும் என் கவனத்தை மிக ஈர்த்தது.


பூமியில் உள்ள ஒவ்வொரு துண்டு நிலத்திலும் வரலாறு நிறைந்து கிடப்பது போல ஒவ்வொரு எழுத்தாளரிலும் ஒவ்வொரு வாழ்க்கைக்கான வரலாறு புதைந்து கிடக்கிறது. அதை எவ்வாறு எந்த அளவு சிறப்போடும் ஈர்ப்போடும் எளிமையோடும் பகிர்கிறாரோ அந்த அளவு அது காப்பியமாக ஆகிறது.


பெண்ணின் வாசனை கூட ஒரு மதில்தான். மீளமுடியாத மதில். அது காதலியின் வாசனையாய் இருக்கலாம். அல்லது மனைவியின் ஏன் அம்மாவினதும் கூட. இந்த வாசனைகள் எழுப்பும் சிறைகளைத் தாண்டி ஒரு ஆணால் எப்போதுமே பயணிக்க முடிந்ததில்லை. விடுதலை பெற முடிந்ததில்லை.


ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாகவோ சூழ்நிலை கருதியோ தன் வாழ்வியல் சூழலில் கடைப்பிடிக்கும் மௌனம் ஒரு கட்டத்தில் உரக்க ஒலித்தே ஆகவேண்டும் என்ற வேட்கையாகவே வெளிப்பட்டுள்ளது இந்நாவல்


என்ன பரிசு வழங்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சத்திடம் நீங்கள் வேண்டும் பரிசைக் கேளுங்கள். விதம் விதமான பரிசுகள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பரிசைக் கேட்டாலும் அத்தனையையும் சித்தமாக்கக் காத்துக் கொண்டிருக்கிறது பிரபஞ்சம்


4.எனது நாற்பத்தி ஒன்றாவது மின்னூல் “ 25 நூல்கள் – ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு ) “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே.


25 நூல்கள் – ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )

https://www.amazon.in/dp/B095J7LCCL


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.


**பெண் குழந்தைகள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரம் பற்றியும், சின்னச் சின்னப் பிணக்குகளுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவ மாணாக்கியர் பற்றியும், தெருவோரம் குப்பை பொறுக்கும் சிறுவர்களின் வாழ்வாதாரம் பற்றிய கவலையும் , அவர்கள் கடத்தப்படுவது குறித்தான அதிர்ச்சித் தகவல்களையும் பகிர்கின்றன.


**வாழ்வின் பொருள் உணராமல் அனைவருமே வாழ்ந்து மடிகிறோம். எப்போதோ எதேச்சையாக கிடைக்கும் வாய்ப்புகளில் ஜெயிக்கிறோம். சொற்ப பேர் மட்டுமே தன் வாழ்க்கை இப்படி அமையவேண்டும் என்று திட்டமிட்டு வாழ்ந்து புகழடைந்து செல்கிறார்கள். தீர்க்கமுடியாத பிரச்சனை என்று எதுவுமில்லை. அதை நாம் சரியான முறையில் தீர்க்க முயலாததைத் தவிர.


**அயலகத் தமிழர்கள் பற்றி அவர்கள் வாழ்வு பற்றி நாம் அவ்வளவு கவலையுறுவதில்லை. எந்தந்த விதமான நிர்ப்பந்தங்கள், இடையூறுகள், தலையீடுகள், பருவமாறுபாடுகள், கலாச்சாரச் சீர்கேடுகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பது நமக்குப் புலப்படுவதில்லை. அவர்கள் வாழும் வசதியான வாழ்க்கை மட்டுமே நமக்கு விஸ்வரூபமாய்த் தெரிகிறது. தாய்நாட்டில் வாழும் ஏக்கம் சூழ தம்மைத் தாங்கிய நாட்டின்பால் ஏற்பட்ட பாசத்துடனும் அவர்கள் அல்லாடுகிறார்கள்.

டிஸ்கி :- வாங்கிப் படிச்சுப் பார்த்துட்டுச் சொல்லுங்க மக்காஸ். 

2 கருத்துகள்:

  1. நன்றி ஜெயக்குமார் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)