புதன், 5 மே, 2021

சுவடு. போட்டிச் சிறுகதைகளுக்கு நடுவராக..


 1.பேச்சியம்மாள் சிறுகதைக்கு  19 + 19 + 19 + 19 + 17 = 93.

2.திருந்தாத ஜென்மங்களுக்கு 18 + 17 + 20 + 19 + 17 = 91.

3.கயலுக்கு 19 + 19 + 19 + 19 + 20 = 96.

4.அன்பெனும் அருமருந்துக்கு 19 + 19 + 20 + 20 + 20 = 98.

5.ராணிக்கு 20 + 19 + 16 + 16 + 19 = 90.

6.இட்லியா இடியாப்பமாவுக்கு 18 + 19 + 18 + 19 + 19 = 93.

7.பேறுக்கு 19 + 19 + 19 + 19 + 19 = 95. 

8.நடன மல்லிகைக்கு 17 + 17 + 18 + 18 + 19 =  89.

9.தொடக்கத்துக்கு 20 + 17 + 20+ 20 + 20 = 97.

10.அடிக்காதீங்க அடிக்காதீங்கவுக்கு 19 + 17 + 16 + 16 + 17 = 85.

11.அறியாமொழி அறிவாயாவுக்கு 18 + 16 +17 + 18 + 19 = 88.

12.அப்பத்தா என்ற தலைவிக்கு 20 + 18 + 18 + 18 + 20 = 94. 

13.மனமென்னும் மாயைக்கு 19 + 18 + 17 + 18 + 20 = 92.

14.தாய்மைக்கு 15 + 18 +  17 + 15 +  19 = 84.

15. பசிக்கு 20 + 19 + 20 + 20 + 20 = 99.

16.மேகத்துக்கும் தாகமுண்டுக்கு 20 + 18 + 19 + 18 + 20 = 95.

17.புதிய சிறகுக்கு 20 + 17 + 18 + 19 + 19 = 93.

18. மாவடுக்கு 20 + 16 + 18 + 19 + 19 = 92.

19.வுமன்ஸ்டேக்கு 19 + 18 + 18 + 15 + 19 = 89. 

எல்லாக் கதைகளுமே அற்புதமான கதைகள்தான். ஆனால் பசிக்கு முதலிடம். நான் எதிர்பார்க்காத வாசகர் யாருமே எதிர்பார்க்காத தளத்தில், நடையில் பிரமிக்க வைத்திருந்தார் ஆசிரியர். முடிவாக ஆன்மீகப் போலிகளைத் தோலுரித்து வர்க்க சிந்தனைகளைக் கிளறிவிட்டது ’கல்லாக’ என்னும் பஞ்ச் வார்த்தை. ஹேட்ஸ் ஆஃப் டு தெ ரைட்டர். !!!

அன்பெனும் அருமருந்தில் மேகியின் இறப்பு அதிர்ச்சி கொடுத்தது என்றாலும் கொரோனாவின் பாதிப்பையும் உள்ள பாதிப்புக்களையும் காட்சிப்படுத்திய கதை. எனவே இரண்டாமிடம். 

தொடக்கம் மிக அருமையானது. கொஞ்சம் சினிமாட்டிக்காக இருந்தாலும் விரும்ப வைத்த கதை. இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான கதை எனவே மூன்றாமிடம். 

கயல் கதையை மொழிநடைக்காக விரும்பி வாசித்தேன். பேச்சியம்மாளின் மொழி நடையும் அற்புதம். கதையை யூகிக்க முடிந்தாலும் தன் நடையால்  மனதை நெகிழ்த்திய கயல் நான்காமிடம் பெற்றாள். 

மேகத்துக்கும் தாகமுண்டு மனதை நெகிழ்த்தினாலும் முடிவில் கொஞ்சம் சீரியல்தன்மை. போதனைகளோடு முடியும் கதைகள் மனதைத் தொடாமல் போகின்றன.

திருந்தாத ஜென்மங்கள் வித்யாசமான கதைக்கரு. விஞ்ஞானக் கதையாகச் சொல்ல முயன்ற உத்தி புதிது. மனமென்னும் மாயையும் தனிமனித உணர்வுகளைப் பேசிய அதி முக்கியக் கதை. 

ராணி கதையும் நாம் யூகிக்க முடிந்ததுதான் முடிவில் தாய் மனதை நெகிழ்த்தினார். பேறுவும் பிரியம் பொதிந்த கதை. அப்பத்தா என்னும் தலைவியும் அற்புதமான மனுஷியைப் படைத்த கதை. 

நீ இட்லியா இடியாப்பமா வித்யாசமான அலசல் கொண்ட உரையாடல் கதை. ஒரு கட்டத்தில் அது டிஸ்கஷன் மாதிரி ஆகிவிடுகிறது. நடனமல்லிகை கொஞ்சம் அதிரவைத்த வித்யாசப் புனைவு. 

அடிக்காதீங்க அடிக்காதீங்க நல்ல கருத்தைச் சொல்லியது என்றாலும் இன்னும் கொஞ்சம் முடிவில் பட்டை தீட்டி இருக்கலாம். அறியாமொழி அறிவாயா கொஞ்சம் நீளமான கதை. சாதனைக்கு வயதில்லை என்றாலும் அதில் பிள்ளைகளின் வயதுக் குழப்பம் நீடிக்கிறது. தந்தை ரிடையராகிறார். பிள்ளைகள் பள்ளியில் அதே வகுப்பில் படிப்பார்களா  அதே பருவத்தில் இருப்பார்களா ?

தாய்மை கொஞ்சம் உரைநடைக் கதை ஆகிவிட்டது. புதிய சிறகும் தொடக்கம் போல வரவேண்டிய கதை. பெண் தானே முடிவெடுப்பதால் தொடக்கத்தில் மாமியார் முடிவெடுத்த அந்த ஆச்சர்யம் இதில் கிடைக்கவில்லை. மாவடுவும் கொஞ்சம் உரைநடைக் கதை ஆகிவிட்டது. முடிவும் ஆவணப்படம் போல போதனை.  வுமன்ஸ்டே நல்ல சாட்டையடிக் கதைதான். மொழியும் கிராமத்து வழக்கில் அட்டகாசமாகப் போகிறது, ஆங்காங்கே ஓரிரு வசவுச் சொற்களைத் தவிர. ஆனால் ஆழமான பாதிப்பை அதன் முடிவு உண்டாக்கவில்லை. 

முதல் நான்கு கதைகளை நான் சமூக சிந்தனை மற்றும் வாசிக்கும் போது ஏற்படுத்தும் வித்யாச உணர்வுகளுக்காகவும்  அதன் கருத்தியல்களுக்காகவும் தேர்ந்தெடுத்திருக்கிறேன். 

நிறையக் கதைகள் உரையாடல் தளத்திலிருந்து கொஞ்சம் உரைநடை தளத்துக்குப் போகும் அபாயத்தில் இருக்கின்றன. மேலும் முடிவிலோ நடுவிலோ இன்னும் கொஞ்சம் செதுக்கினால் அனைத்துமே அருமையான கதைகள்தான். இதை எல்லாமே தொகுப்பாகவும் கொண்டு வரலாம். 

இவற்றை அளவீடுகளாகக் கொண்டு மதிப்பளித்திருக்கிறேன். 

என்னை சுவடுக்கான போட்டிச்  சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவராக அழைத்தமைக்கு அன்பும் நன்றியும் பூங்கொடி & நல்லு சார். 

1. கதை சமூக சிந்தனை கொண்டதாக இருப்பின் அதன் தாக்கத்திற்கு அமைய புள்ளிகள் 1 - 20.
2. கதை நடைமுறைச் சாத்தியம் கொண்டதாக, யதார்த்தத்தை உள்வாங்கி இருப்பின் புள்ளிகள் 1 - 20.
3. கதைப் புனைவு, பாத்திரச் சித்தரிப்பு, கதையோட்டம் புள்ளிகள் 1 - 20.
4. கதை நுட்பங்கள், கவர்ச்சி, தேவையற்ற விபரிப்பு நீட்சி புள்ளிகள் 1 - 20.
5. கதையின் மொழி நடை, மொழிப் பண்புகள், மொழி கையாளும் தன்மை புள்ளிகள் 1 - 20. 

2 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் சகோ நீங்கள் நடுவராக இருந்து கதைகள் தேர்ந்தெடுக்கமைக்கு

    துளசிதரன்

    இந்தக் கதைகளை எல்லாம் எங்கு வாசிக்க முடியும்?

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நன்றி துளசி சகோ

    சுவடு இணைய இதழில் வாசிக்கலாம் என நினைக்கிறேன். அவர்களிடம் கேட்டுச் சொல்கிறேன் கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)