வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஸ்வாலோஸ் நெஸ்டும், ஜெரோ க்ராஸும்

ஜெர்மனி கோலோனில் இருக்கும் இந்த சர்ச்சின் கட்டிடக்கலை, முகப்புச் சிற்பங்கள், மார்பிள் & கிரானைட் சிற்பத் தொகுதிகள், (புனிதர்கள் மட்டுமல்ல வித்யாசமான உருவங்களும் பொறிக்கப்பட்டிருப்பது), ஜன்னல் கண்ணாடிகளில் வரலாறு சொல்லும் வண்ண ஓவியங்கள், ஸ்வாலோஸ் நெஸ்ட் எனப்படும் மிகப்பெரும் இசைக்கருவி அனைத்தையும் இன்னும் ஒரு இடுகையில் சொல்லி இருக்கிறேன். 

ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெரோ க்ராஸையும் ஆர்ச்பிஷப்களின்/புனிதர்களின் கல்லறைச் சிற்பங்களையும், இயேசுவின் வாழ்வியல் சிற்பங்களையும் சிலுவைப்பாதையையும் நீங்கள் இங்கே காணலாம். 

எட்டு நூற்றாண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட இந்த அற்புத கதீட்ரலை ஜெர்மனி சென்றால் காண மறவாதீர்கள்.முழுக்க முழுக்க ஜெர்மானியக் கட்டிடக் கலையில் ரைன் நதிக்கரையில் இரட்டைக் கூம்பு வடிவக் கோபுரங்கள் கொண்டு அமைக்கப்பட்டது. 

வெளியே இருக்கும் இச்சிற்பங்கள் அபோஸ்தலர்களைப் போலத் தோன்றுகிறது.  இரட்டைக் கோபுரங்கள் கொண்ட கதீட்ரல் இது. 12 ஆம் நூற்றாண்டில் இருந்து15 ஆம் நூற்றாண்டு வரை கட்டியும் கட்டி முடிக்க முடியல. அதுனால் கிட்டத்தட்ட 8 நூற்றாண்டுகளாக இதைக் கட்டி முடிச்சிருக்காங்க. அதுக்கு ஏத்த அளவு இதுல மார்பிள் வேலைப்பாடுகளும் உண்டு. 


லேடின் க்ராஸ் எனப்படும் லத்தீன் சிலுவை அமைப்பில் கோதிக் கல்சர் படிக் கட்டப்பட்டதுங்கிறாங்க இந்தக் கதீட்ரல்.இதுக்கு உள்ளே போய்ப் பார்த்து வர லோகல் கைட், லோகல் டூர் எல்லாமே இருக்கு !.அவ்ளோ பெரிசு. 
விதானம் ரொம்ப உயரம்.!

திருப்பலி கொடுக்கும் மேடை. நேராக இருப்பதுதான் ப்ரேயர் ஹாலும் நேவ் எனப்படும் கூடமும்.


எங்கள் பின்னே கண்ணாடிகளின் ஜ்வல்லிப்பில் தெரிவதுதான் சர்ச்சின் நேவ் எனப்படும் பகுதி. 



இதுதான் அந்த ஸ்வாலோஸ் நெஸ்ட் எனப்படும் இசைக்கருவி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த சர்ச்சுக்கு 750 வருஷம் ( அரையுங்குறையுமா இருந்தாலும் ) ஆனதை ஒட்டி இந்த வாத்தியத்தை ( ஆர்மோனியம் மாதிரியானது )  நிறுவினாங்களாம்.
புனிதர்களின் கல்லறைகளோடு ஜெரோ க்ராஸ் இருப்பதையும் முன்பே படம் பிடித்துப் போட்டிருக்கிறேன். 


என் பின்னே தெரிவதுதான் ஜெரோ சிலுவை. இது 965 - 970 வடிவமைக்கப்பட்டது. இன்றளவும் இருக்கும் மிகப் புராதனமான சிலுவைகளில் முக்கியமான ஒன்று.



இது இன்னொரு வகையான வாத்தியம். 

கதீட்ரல் முழுக்கப் புனிதர்களின் சமாதியும் இருக்கு. மிகப் பெரிய சர்ச் இது. எனவே நடந்து நடந்து காலே வலித்து விட்டது. 




கன்ஃபெஷன் கேட்கும் இடம். ( பாவ மன்னிப்பு ) 

அன்னை மரியாளும் குழந்தை யேசுவும் அப்போஸ்தலர்கள், மன்னர்கள், புனிதர்களும். ! 

இவர்கள் போக விதம் விதமான பூக்கள், விலங்குகள், விநோத உருவங்களும் ( நம்ம ஊர் சிம்ம யாளி,யானை, சித்திரக்குள்ளர்கள், பேய் பூத கணங்கள், கந்தர்வர்கள் கூட்டம் போல ) இடம் பெற்றிருந்தன. சில தேவதைகள்போலவும் இருந்தன. இவை ஒவ்வொன்றின் பின்னும் பல்வேறு நம்பிக்கைகளும் தொன்மக் கதைகளும் கூட இருக்கு ! 


மொத்தத்தில் ஜெர்மனி போனா மறக்காமப் பார்க்க வேண்டிய இடங்களில் கொலோனில் இருக்கும் இந்தக் கதீட்ரலும் ஒன்று.

2 கருத்துகள்:

  1. Kasol & Kheerganga Weekend Trip ( Kasol Trek, Kheerganga Trek, Kheerganga Trip )
    You like trekking to the best time to visit Kasol and Kheerganga. March to early June are the best times to visit if you prefer a warmer weather and a warmer springtime. However, it would be ideal for a snow-trek in November or late January, if you are hoping for colder weather.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)