செவ்வாய், 20 ஏப்ரல், 2021

லெதர் தொழில் பற்றி சாரதா ராமநாதன் அவர்களுடன் ஒரு பேட்டி.

லெதர் தொழிலில் வெற்றி பெற ரகசியங்கள்

பெண் தொழில் முனைவோர் சாரதா ராமநாதன் அவர்களுடன் பேட்டி

 

பேட்டி, கட்டுரை: தேனம்மை லெட்சுமணன், காரைக்குடி

 

++++++++++++++++++++

எப்போதிலிருந்து லெதர் கம்பெனி நடத்தி வருகிறீர்கள் ?

 

நாங்கள் 2008 ஆம் ஆண்டு முதன் முதலில் மெஷினரி   வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தோம். பின்னர் 2009 ஆம் ஆண்டு lease-க்கு நடத்தி வந்தோம். 2010 ஆம் ஆண்டு சொந்தமாக கட்டிடம் கட்டி மிஷின்கள் சொந்தமாக வாங்கி தொடங்கினோம்.

 

இந்த வியாபாரத்தில் ஈடுபடத் தூண்டுதலாய் இருந்தது எது?

 

என் கணவர் இத்துறையில் 15 வருட அனுபவம் பெற்றவர். நான் இத்துறையில் அக்கவுண்ட்ஸ் வேலையில் 3 வருட அனுபவம் பெற்றேன். இருந்த அனுபவத்தால் நாங்கள் இணைந்து தொழில் தொடங்குவோம் என்று முடிவு செய்தோம். இந்தத் தொழிலில் எங்கள் இத்தவர்கள் மற்றும் எங்களுக்குத் தெரிந்தவர்கள் சாதரணமாக வந்து வேலை கற்றுக் கொண்டு இன்று மிகப் பெரிய அளவில் தொழில் செய்வதைப் பார்த்து நாங்களும் தொழில் செய்யலாம் என்று முடிவு செய்தோம்.

 

இத்தொழில்கள் ஏற்ற இறக்கங்கள் என்னஅதை எப்படி எதிர்கொண்டீர்கள் ?

 

நல்ல வாடிக்கையாளர்கள் அமைந்து தொடர்ந்து வேலை கொடுத்து அதற்கான பணத்தை குறித்த நேரத்தில் கொடுத்தால் இது ஒரு மிகச்சிறந்த தொழில் இறக்கம் என்றால் முழுக்க அயல்நாடுகளை நம்பியே இருப்பது. அவர்களின் தேவை பொருத்தே இத்தொழில் செய்ய முடியும்.

 

இத்தொழிலின் இன்னல்கள் பிரச்சனைகள் இடர்கள் என்று எதைக் கூறுவீர்கள் ?

 

தொழிலாளர்கள் பிரச்சனை, மிஷினரி மற்றும் கெமிக்கல் சம்பந்தமான பிரச்சனைகள். இயற்கையான ப்ராடக்ட் என்பதால் அது தொடர்பான பிரச்சனைகள் இருக்கிறது.  வாங்கும் விலையும்விற்கும் விலையும் ஏற்ற இறக்கம் இருப்பதால் எப்போதும் ஒரு விலையை நிர்ணயிக்க முடியாது. Raw Materials  பணம் கொடுத்து வாங்க வேண்டும். விற்கும் இடத்தில் கடன் கொடுக்க வேண்டும். அதனால் பணம் குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் சமாளிப்பதில் பிரச்சனைகள்.

 

உங்களுடைய லெதர் ப்ராடக்டுகள் பற்றி - அது எதற்குப் பயன்படுகிறது - எவ்வாறு தயாரிக்கிறீர்கள் - எங்கெங்கு ஏற்றுமதி செய்கிறீர்கள் என்று கூறுங்கள் ?

 

நாங்கள் Shoes, Garments and Leather Goods-க்கு ஆன தோல் semi finish-ல் இருந்து Full Finished தோலாக செய்து தருகிறோம். ஆட்டுத்தோல் EI or wet blue- வாக எங்களுக்கு வரும் அதை wet drum-ல் போட்டு அதற்கான Shaving,  Drum, Setting, Hooking,  Buffing, Dry Drum, Auto Spray Mfpa machine ஆகிய quality-ஐ பயன்படுத்தி வாடிக்கையாளருக்கு தேவையான கலர் மற்றும் quality-க்கு ஏற்றவாறு செய்து தருகிறோம். நாங்கள் Hongkong, China, Vietnam, Taiwan, London, Turkey போன்ற நாடுகளுக்கும் Chennai, Bangalore, Delhi, Haryana, Kanpur போன்ற இடங்களுக்கும் அனுப்பி வருகிறோம்.

 

புதிதாக இத்துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன ?

 

இத்துறையில் அனுபவம் உள்ளவர்கள் நடத்துவது மிகவும் நல்லது. நேரம் காலம் பார்க்காமல் தொழிலாளர்களை சமாளித்த நடத்தினால் நிச்சயம் ஜெயிக்கலாம். புதிதாக தொழில் தொடங்குபவர்கள் எந்த தொழிலாக இருந்தாலும் அதை நேசித்து முழு ஈடுபாட்டுடன் செய்தால் நிச்சயம் ஜெயிக்கலாம். முதலில் சில தடங்கல்கள், அவமானங்கள் ஏற்படத்தான் செய்யும் அதற்கு துவண்டு விடாமல் முயற்சி செய்ய வேண்டும். அப்படித்தான் நாங்கள் ஜெயித்தோம். இன்றைய இளைஞர்கள் அனைவரும் தொழில் செய்ய கட்டாயம் முன் வர வேண்டும். நம் அனைவரும் பெண்களுக்கும்  தொழில் தொடங்கி நடத்துவதற்கு வழி வகுத்து கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

 

இத்தொழிலின் லாப நஷ்டங்கள் - இதன் எதிர்காலம் - தொழில் வாய்ப்புப் பற்றியும் பகிருங்கள் ?

 

இத்தொழில் அதிக லாபம் ஈட்டக்கூடிய தொழில் தான். ஆனால் அதிகமான உழைப்பும் முழு ஈடுபாடும் நல்ல வாடிக்கையாளரும் அமைந்து விட்டால் இது ஒரு நல்ல தொழில். Quality issue or  Order Cancel, Test Report சரியில்லாதது ஆகிய பிரச்சனைகள் ஏற்பட்டால் அதிக நஷ்டம் அடையவும் வாய்ப்பு இருக்கிறது.

 

உங்கள் குடும்பம் பற்றிக் கூறுங்கள் ?

 

எனது பெயர் சாரதா ராமநாதன். நானும் என் கணவரும் இணைந்து தொழில் செய்து வருகிறோம். எனக்கு ஒரு மகள் B.Sc., அனஸ்திஸ்யா  முதலாம் ஆண்டு SRMC-ல் படித்து வருகிறாள். மகன் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.

 

 

கட்டுரையாளர்: தேனம்மை லெட்சுமணன், எழுத்தாளர், கவிதாயினி, ப்ளாக்கர். காரைக்குடியில் வசித்து வருகிறார்.


(ஸ்டார்ட் அப் & பிஸினஸ் நியூஸுக்காக எனக்குப் பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

1. உங்கள் குடும்பம் பற்றிக் கூறுங்கள். 

2. எப்போதிலிருந்து லெதர் கம்பெனி நடத்தி வருகிறீர்கள். 

3. இந்த வியாபாரத்தில் ஈடுபடத் தூண்டுதலாய் இருந்தது எது?

4. இத்தொழிலின் ஏற்ற இறக்கங்கள் என்ன ? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்.

5. இத்தொழிலின் இன்னல்கள் பிரச்சனைகள், இடர்கள் என்று எதைக் கூறுவீர்கள்

6.உங்களுடைய லெதர் ப்ராடக்டுகள் பற்றி, அது எதற்குப் பயன்படுகிறது, எவ்வாறு தயாரிக்கிறீர்கள் ,எங்கெங்கு ஏற்றுமதி செய்கிறீர்கள் என்று கூறுங்கள்?

7. புதிதாக இத்துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன.?

8. இத்தொழிலின் லாப நஷ்டங்கள், இதன் எதிர்காலம், தொழில் வாய்ப்புப் பற்றியும் பகிருங்கள்.

9. இந்த பிஸினஸ் தொடர்பாகக் கிடைத்த விருதுகள், மேற்கொண்ட பயணங்கள் பற்றியும் சொல்லுங்கள்)

2 கருத்துகள்:

  1. பேட்டி அருமை. வாழ்த்துகள்.அண்ணாவும் லெதர் பிஸினஸ்தான் . இப்போதைய கொரானா காலம் அவர்களுக்கு இடர்ப்பாடுதான்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி எழில். உண்மைதான். நிலைமை சீக்கிரம் சீராகும்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)