செவ்வாய், 30 மார்ச், 2021

கருத்து சுதந்திரம்.

 பின்னல்களும் இடைவெளிகளும் என்ற நூலுக்காக நண்பர் திரு ஆரூர் பாஸ்கர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதியது. 

பெண் என்பதால் இன்னின்னவற்றைச் சொல்லலாம். இன்ன விதத்தில் சொல்லலாம் என்பதையே இச்சமூகம் வரையறுத்து வைத்திருக்கிறது. எல்லாவற்றிலும் பாலிஷாக நாசுக்காகப் பட்டும்படாமல் கருத்துச் சொல்லிச் சென்றால்தான் பொதுவெளியின் மிரட்டல்களில் இருந்தும் அச்சுறுத்தல்களில், வீணான விமர்சனங்களில், எள்ளல்களில் இருந்தும் தப்பிக்கலாம். 


நான் கல்லூரிப் பருவத்துக்குப் பின் கடந்த பன்னிரெண்டு வருடமாக வலைத்தளத்தில் எழுதி வருகிறேன். அதை முகநூலிலும் பகிர்ந்து வருகிறேன். வலைத்தளத்தில் நம் எழுத்தை ஆதரிப்போர் அதிகம். ஏனெனில் பின்னூட்ட மட்டுறுத்தல் போட்டிருப்பதால் கருத்துத் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் முகநூலில் நம் பதிவு பலரையும் சென்று அடைய வேண்டுமென விரும்புவதால் பப்ளிக் போஸ்டாகப் போடுகிறோம். இதை நமக்குத் தெரியாத பலர் அவர்கள் பக்கங்களில் தங்கள் நண்பர்களுக்கு மட்டும் எனப் பகிர்ந்து நம் எழுத்தைக் குறித்துக் கிண்டலாகப் பின்னூட்டமிடுவார்கள். நம் பதிவை யார் பகிர்ந்திருக்கிறார்கள் என்பதைக் கூட முகநூல் நமக்குக் காட்டுவதில்லை.

திங்கள், 29 மார்ச், 2021

வாடிகன் சர்ச்சில் புனிதக் கதவும் புனிதர்களின் சலவைக்கல்/கிரானைட் சிற்பங்களும்.

 வாடிகன் நகரம். கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் புனித திருச்சபை அமைந்த இடம். இத்தாலியின் ரோம் நகரத்தில் செயிண்ட் பீட்டர்ஸ் பேசிலிக்கா என்ற சர்ச் அமைந்த இடம். ஹோலி சீ என்ற இந்த இடம் பிஷப்பின் ஆட்சிக்கு உட்பட்ட தனி நாடு. குட்டி தேசம். 

இஸ்லாம் மக்களுக்கு மெக்கா போல் கிறிஸ்தவ மக்களுக்கு இது புனித ஸ்தலம். தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இங்கே வந்து செல்ல வேண்டுமென்பது அவர்களின் ஆசையாக இருக்கும். 

செயிண்ட் பீட்டர்ஸ் ஸ்கொயர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் இது( 120 ஆண்டுகளுக்குமேல் உருவாக்கப்பட்டு) பதினாறாம் நூற்றாண்டில் ( 18 நவம்பர் 1626 ) கட்டமைக்கப்பட்டது. 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கால ஓவியங்கள் மற்றும் சிற்பங்களால் அழகூட்டப்பட்டது இது. 

இங்கே பியட்டா என்ற மேரி மாதா மடியில் ஏசுவைத் தாங்கி இருக்கும் ( துயரச்) சிலை காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியங்கள், மார்பிள் சிற்பங்களையும் கண்டு பிரமித்தேன். 

இங்கே பைபிளின் பல்வேறு நிகழ்ச்சிகளோடு அப்போஸ்தலர்கள், போப்பாண்டவர்கள் ஆகியோரும் பளிங்குச் சிற்பமாகக் காட்சி அளிக்கிறார்கள். 

ஞாயிறு, 28 மார்ச், 2021

நமது செட்டிநாட்டிலும் பண்ணாகத்திலும் ”பெண்ணின் மரபு”.

 எனது பதினாலாவது நூலான பெண்ணின் மரபு இந்த ( 2021) வருடம் மார்ச் 8 ஆம் தேதி மதுரையில் உள்ள தானம் களஞ்சியம் அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது. 




அந்த நூல் வெளியீடு பற்றிய சிறப்புச் செய்திகளைப் “பண்ணாகம்.காம்” இணையமும் நமது செட்டிநாடு 2021 மார்ச்/பங்குனி இதழும் வெளியிட்டு உள்ளன. 

வெள்ளி, 26 மார்ச், 2021

அழகப்பா பல்கலையில் சிறப்பு விருந்தினராக.

 அழகப்பா பல்கலையில் டிசம்பர் 6 , 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் திரு. அய்க்கண், திரு. பழனி இராகுலதாசன் ஆகியோரோடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் சந்தர்ப்பம் அமைந்தது. 


புதன், 24 மார்ச், 2021

சக்கர வியூகத்தை உடைத்த அபிமன்யு.

சக்கரவியூகத்தை உடைத்த அபிமன்யு

பதினாறு வயதே நிரம்பிய ஒரு இளைஞன் குருஷேத்திரப் போரில் பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், சல்லியன், துரியோதனன் ஆகியோரைத் தன் வில்லாற்றலால் கதி கலங்க அடித்தான். யார் அந்த வீரன், அவன் பலம் என்ன பலவீனம் என்ன எனப் பார்போம் வாருங்கள் குழந்தைகளே.
கிருஷ்ணரின் சகோதரி சுபத்திரை. அவளை பஞ்சபாண்டவர்களுள் ஒருவரான அர்ஜுனன் மணந்து கொண்டார். சுபத்ரையின் வயிற்றில் அபிமன்யு கருவாக இருந்த போது சக்கரவியூகம் பற்றி சுபத்ரையிடம் பேசிக்கொண்டிருந்தார் கிருஷ்ணர். பாதிகேட்டுக் கொண்டிருக்கும்போதே சுபத்திரைக்கு உறக்கம் வந்துவிட சக்கரவியூகம் என்றால் என்ன அதில் எப்படி நுழைவது எனச் சொல்லிக் கொண்டிருந்த கிருஷ்ணர் பாதியிலே நிறுத்தி விட்டார். சுபத்திரை இக்கதையைக் கேட்டாளோ இல்லையோ அவள் கர்ப்ப்பத்தில் இருந்த அபிமன்யூ நன்றாகக் கேட்டுக் கொண்டான்.
அன்பும் அழகும் அறிவும் பொருந்திய அப்பாலகனின் துவாரகையில் வளர்ந்து வந்தான். கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் வில் வாள் வித்தைகள் எல்லாம் கற்றுத் தேறினான். கிருஷ்ணரின் மகன் ப்ரத்யும்னனும் அவனுக்கு வித்தைகள் எல்லாம் கற்பிக்கின்றான்.

சனி, 20 மார்ச், 2021

எனது பதிநான்காவது நூல் “பெண்ணின் மரபு “

 எனது பதிநான்காவது நூல் “ பெண்ணின் மரபு” நமது மண்வாசத்தின் தானம் களஞ்சியம் அறக்கட்டளையால் 2021 மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று  மதுரையில் வெளியிடப்பட்டது. 




“சமூக மீள்திறனில் பெண்களின் தலைமை “ என்பதுதான் இந்த ஆண்டு பெண்கள் தினத்துக்கான கரு. 

வியாழன், 18 மார்ச், 2021

எனர்ஜி பூஸ்டர் ஸ்ரீ சக்தி மணிமேகலை மேடம்

 சாஸ்த்ரி பவன் பெண்கள் சங்கத் தலைவி &  தலித் பெண்கள் நல சங்கத் தலைவி மணிமேகலை மேடம் என் நலம் விரும்பி.எப்போது நான் புத்தகம் வெளியிட்டாலும் உடன் வந்து தோள் கொடுப்பார். என் முதல் நூல் சாதனை அரசிகளில் இடம் பெற்ற சாதனை அரசி இவர். மனித நேயம் மிக்கவர். 

இவர் எங்கே இருந்தாலும் அங்கே பாஸிட்டிவ் வைப்ஸ் இருப்பதை நாம் உணரலாம். அவரது அகத்தின் அழகு முகத்தில் தெரியும். இவர் தற்போது ஒரு நூல் எழுதி வருகிறார். அதன் வெளியீடு விரைவில் இருக்கும். 


ஞாயிறு, 14 மார்ச், 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 2

  கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 2 

இதில் சப்தமாதர்கள், திக்குபாலர்கள், கணங்கள், சக்கரவர்த்திகள், மகாராஜாக்கள்,  முக்தி நகர்கள் , நட்சத்திரங்கள்,  தியாஜ்ஜியம், 6 முருக பிரதானஸ்தலங்கள்  ஆகியன பற்றி எழுதப்பட்டுள்ளன. 


சப்த மாதர்கள் :- கவுரி, அபிராமி, மயேஸ்வரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி.

வியாழன், 11 மார்ச், 2021

அமரன் ஆன அங்காரகன்

அமரன் ஆன அங்காரகன்

ஒருவர் பிறந்தபோதே தாயும் தந்தையும் கைவிட்டாலும் பயிற்சியாலும் முயற்சியாலும் சாகாவரம் பெற்ற தேவர் ஆகமுடியுமா. முடியும் என நிரூபிக்கிறது அங்காரகனின் கதை. அங்காரகன் சிவந்தநிறமும் சிவப்பு வாயையும் கொண்டவன். அதனால் செவ்வாய் எனவும் அழைக்கப்படுகிறான்.   செவ்வாய் வெறும் வாய் என்பார்கள் ஆனால் அங்காரகன் அமரன் ஆனான், மங்களமானவன் என்னும் பெயரில் மங்களனும் ஆனான். அது எப்படி எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

திங்கள், 8 மார்ச், 2021

வெள்ளி, 5 மார்ச், 2021

விகடனில் எனது கவிதை !

 விகடனில் எனது கவிதை. !


”நீங்கள் வாசித்ததில் உங்கள் நினைவில் நிற்கும் கவிதை நான்கு வரி சொல்லுங்களேன்” எனக் கேள்வி கேட்டிருக்கிறார்கள் விகடனில்..



அதற்கு சரவண்கவி என்பவர் எனது கவிதை ஒன்றைக் குறிப்பிட்டு இருக்கிறார். ஞாயிறு அன்று காலையில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ் உயராய்வு மையத்தின் தலைவர் திருமிகு. செந்தமிழ்ப் பாவை அம்மா அவர்கள் இதை விகடனில் படித்துவிட்டு உடனே கைபேசியில் அழைத்துச் சொன்னார்கள். வாட்ஸப்பிலும் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்திருந்தார்கள். சந்தோஷத்தில் ஒன்றுமே புரியவில்லை. மனுஷ்யபுத்திரன், கனிமொழி,புவியரசு, அப்துல் ரஹ்மான் ஆகியோரின் கவிதைகளோடு என் கவிதையும் !!! மிக்க நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் அம்மா. 


இதுதான் அக்கவிதை. 

எல்லாருக்குமான வீடு

துண்டாடப்பட்ட பின்

எஞ்சின சாவிகள்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 22.6.2011 ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. நன்றி விகடன்.:)

முன்பே சொல்வனத்தில் வெளியானதுதான். 

விகடனில் கவிதை... மிச்சம்

நன்றியும் அன்பும் விகடனுக்கும் திரு சரவணகவி அவர்களுக்கும்.  

வியாழன், 4 மார்ச், 2021

சில்வர் ஃபிஷ் ஸ்டாலில் எனது நூல்கள்.

 சென்னையில் நடந்து வரும் 44 ஆவது புத்தகக் கண்காட்சியில் நம்பர் #2, சில்வர் ஃபிஷ் ஸ்டாலில் எனது நூல்கள் ( எட்டு நூல்கள் ) விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.