ஞாயிறு, 14 மார்ச், 2021

கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 2

  கொஞ்சம் பஞ்சாங்கம், கொஞ்சம் ஜோசியம். பகுதி - 2 

இதில் சப்தமாதர்கள், திக்குபாலர்கள், கணங்கள், சக்கரவர்த்திகள், மகாராஜாக்கள்,  முக்தி நகர்கள் , நட்சத்திரங்கள்,  தியாஜ்ஜியம், 6 முருக பிரதானஸ்தலங்கள்  ஆகியன பற்றி எழுதப்பட்டுள்ளன. 


சப்த மாதர்கள் :- கவுரி, அபிராமி, மயேஸ்வரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி.

திக்குப்பாலர்கள், மனைவிகள், வாகனம், ஆயுதம், பட்டணம்.

இந்திரன், சசி, வெள்ளையானை, வச்சிரம், அமராவதி
அக்கினி, ஸ்வரை, ஆட்டுக்கிடா, சத்தி, தேனோவதி
இயமன், சாமரை, எருமைக்கிடா, தண்டம், சமனாவதி
நிருதி, துர்க்கை, தண்டிகை, முசலம், இரக்ஷேவதி
வருணன், காளிகை, முதலை, பாசம்,  கெந்தாவதி
வாயு, ஆஞ்சனை, கிளைமான், துவசம்,  சுந்தகாவதி
குபேரன், சித்திரரேகை, முதலை, கடவம், அளகாபுரி
ஈசானன், பார்வதி, ரிஷபம், சூலம், கைலாசகிரி



கணங்கள் 17. 

அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிறுதர், கிம்புருடர், கந்தர்வர் , யட்சர், விஞ்சயர், பைசாசர், அந்தரர், முனிவர், ஆகாசபோகர், பூமியர், உரகர் ஆக கணங்கள் 17. 

சக்கரவர்த்திகள் 6.

அரிச்சந்திரன்,  நளன், முசுகுந்தன், புரூவரன், சகரன், கார்த்தவீரியன். 


மகாராஜாக்கள் - 16. 

சயன், அம்பர், சசிபிந்து, அனங்கன், பிருது, மருத்துவந்தன், பரதன், சுகோத்திரன், சீராமன், திலிபன், சகரன், பரசுராமன், யயாதி, மாந்தாதா, பாகீரதன், சிபி. 


முக்தி நகர்கள்.

அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆக முக்தி நகர் 7.

நட்சத்திர தியாஜ்யம் 27. பொதுவாகக் கரிநாள் எனக் குறிப்பதைத் தியாஜ்யம் எனக் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். மாத தியாஜ்யம், நட்சத்திர தியாஜ்யம், திதி தியாஜ்யம், வார தியாஜ்யம், லக்ன தியாஜ்யம் எனப் பார்ப்பதுண்டு. இந்த நேரத்தை விஷ நாழிகை என்பதால் இதில் சுப காரியங்கள் செய்ய மாட்டார்கள். 

இங்கே குறிப்பிடப்பட்டு இருப்பது நட்சத்திர தியாஜ்யம். இந்த நட்சத்திரங்கள் வரும் நாளில் குறிப்பிடப்பட்டு  இருக்கும் தமிழ் எண்கள் நாழிகையைக் குறிப்பன. ரு என்றால் 5, ய என்றால் பத்து. இதுபோல் உ என்றால் இரண்டு, ங மூன்று, ச நான்கு. இதுபோல் கணக்குக் கொள்ள வேண்டும். 

அஸ்வினி ருய, பரணி உய, கார்த்திகை நய, ரோகிணி சய, மிருகசீரிடம் யச, திருவாதிரை உக, புனர்பூசம் நய, பூசம் உய, ஆயிலியம் யக்ஷு, மகம் நய, பூரம் உய, உத்திரம் யஅ, அஸ்தம் உக, சித்திரை உய, சுவாதி யச, விசாகம் யச, அனுஷம் ரு, கேட்டை யச, மூலம் யஉ, பூராடம் உச, உத்திராடம் உய, திருவோணம் ய, அவிட்டம் ய, சதயம் யஅ,  பூரட்டாதி யச, உத்திரட்டாதி உச, ரேவதி நய. 

///௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௱௫௰௬ = 156
௨௱ = 200
௩௱ = 300
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)///


முருகன் பிரதான ஸ்தலங்கள் 6.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை, திருத்தணிகை. 

2 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட்சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)