வெள்ளி, 27 மார்ச், 2020

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின,சிறுகதை ஆசிரியர்கள் - ஒரு பார்வை.

அழகப்பா பல்கலையில் 2018 ஆம் ஆண்டு இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

அதில் தமிழக மற்றும் ஈழப் புதின எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், சுய விவரக் குறிப்புகள், படைப்புகள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

அதில் ஒரு கட்டுரை என்னைப் பற்றியும் சுசீலாம்மா பற்றியும் வெளியாகி இருந்தது. கட்டுரை யாத்தவர்கள் அனைவருமே பல்வேறு கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் சார்ந்த முனைவர்கள் & பேராசிரியர்கள்.

அந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக நானும் சென்றிருந்தேன். எனது கருத்துக்களைக் கூட முன்பே எழுதி இருக்கிறேன். எனது உரையையும் சவுண்ட் க்ளவுடில் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறேன்.


இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

4 கருத்துகள்:

  1. ///சாரு நிவேதிதா, ப.சிவகாமி, ஜோ.டி. குருஸ், தேனம்மைலெக்ஷ்மணன், சு. தமிழ்ச்செல்வி, மு. சுப்பிரமணி, சுபாஷ் சந்திரபோசு , அம்பை , அய்க்கண், செந்தமிழ்ப்பாவை, ஜெயமோகன், பூமணி, சூர்யகாந்தன், பெருமாள் முருகன், வை. மு. கோதைநாயகி, பாரதியார், சி. கோவிந்தராஜன், விந்தன், இரா. சிவகாசிநாதன், மேலாண்மை பொன்னுச்சாமி, மீ. ப.சோமு, வெ. இறையன்பு , சு. வேணுகோபால், வல்லிக்கண்ணன், கி.ராஜநாராயணன், தோப்பில் முகம்மது மீரான்,லா.ச. இராமாமிர்தம், எம்.ஏ . சுசீலா, சுந்தர ராமசாமி, சாண்டில்யன், இந்திரா சௌந்திரராஜன், தமிழ்மகன், சி.சு. செல்லப்பா, உத்தமசோழர், முடியரசன், ஆ. மாதவன், கலைஞர் கருணாநிதி, அனுராதா ரமணன், வீராசாமி இராசமாணிக்கம், கொத்தமங்கலம் சுப்பு, தி. ஜானகிராமன், கோ. திலகவதி ஐபிஎஸ், ஜெகசிற்பியன், கோவி.பால.முருகு, ராமகிருஷ்ணன், கிருத்திகா, பாவண்ணன், பிரபஞ்சன், புதுமைப்பித்தன், கௌதம நீலாம்பரன், ஆண்டாள் பிரியதர்ஷிணி, மு. பழனி இராகுலதாசன், சாந்தகுமாரி, செம்பை சேவியர், வாஸந்தி, ரமணி சந்திரன், லட்சுமி, இந்திரா பார்த்தசாரதி, தொ. மு. சி. இரகுநாதன், அபிமானி, பாமா, சி. என்.நாச்சியப்பன், டி. செல்வராஜ், பி. எஸ். இராமையா, கோணங்கி, அகிலன், தேவி நாச்சியப்பன், கீரனூர் ஜாகிர்ராஜா, சிவசங்கரி ஆகியோர் பற்றிய விவரச் சித்திரங்கள் வெகு அருமை.//

    இந்த ஒட்டுமொத்த பேரையும் எப்படி ஒரே செம்புக்குள் அடைக்க முடியும்?..

    நீங்கள் குறிப்பிட்டிருக்கிறா வரிசைப்படி தான் வரைச் சித்திரங்கள் இருக்கின்றனவா?

    நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், க்விஞர், கட்டுரையாளர் என்று ஏதாவது தலைப்பின் கீழாவது இவர்கள் வரிசை படுத்தப் பட்டிருக்கிறார்களா?

    தெரிந்து கொள்ள ஆவல்.


    பதிலளிநீக்கு
  2. இதுபோன்ற நூல் முயற்சி பாராட்டத்தக்கதாகும். இதில் நீங்களும் இடம்பெற்றதறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  3. ஜிவி சார் கட்டுரைகள் கிடைத்த வரிசையில் அவர்கள் தமிழ்ப் புதின சிறுகதை ஆசிரியர்களைத் தொகுத்திருக்கிறார்கள். அவ்வளவே. இது வரிசைக்கிரமம் அல்ல :)

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)