வியாழன், 6 பிப்ரவரி, 2020

நமது மண்வாசம் மஞ்சளும் குங்குமமும் கேள்வி பதில்கள்

நமது மண்வாசம் மஞ்சளும் குங்குமமும் கேள்வி பதில்கள்
1.தண்ணீரில் கோலம் போடப் பயன்படுவது எது ?
ஃப்ரெஞ்ச் சாக் பவுடர்
2. அத்தப்பூக் கோலம் எங்கே போடப்படுகிறது ?
கேரளாவில் -  திருஓணம் திருவிழாவில்.
3. ஸைமோதெரஃபி என்றால் என்ன ?
கோலங்களைக் கொண்டு சிக்கலான மனநிலை வியாதியையும் குணப்படுத்தும் சிகிச்சை.
4. அரிக்குலோதெரபி என்றால் என்ன?
காதை மையமாக வைத்து அக்குபங்க்சர் முறையில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு அரிக்குலோதெரபி என்று பெயர்.

5. ஒன்னப்பூ என்ற ஆபரணத்தை எங்கே அணிவார்கள்.?
காதில்.
6.கோயில்களில் நாள் முழுவதும் எரியும் விளக்குக்கு என்ன பெயர் ?
பாவை விளக்கு.
7.நன்றி கூறும் நாள் என்று வெளிநாட்டில் எந்த தினத்தைச் சொல்வார்கள் ?
நவம்பர் 5 ஆம் தேதி.
8. போகிப் பண்டிகையை ஆதிநாளில் எந்தப் பெயரில் கொண்டாடினார்கள் ?
இந்திரவிழா.
9.காணும் பொங்கலன்று மாமன்மார் முறைப்பெண்களுடன் சென்று பறித்துவரும் பூவின் பெயர் என்ன ?
ஆவாரம்பூ.
10. ஆப்ரிக்காவின் செமாலியர் & அபார் இனத்தவர் அணியும் வேட்டியின் பெயர் என்ன ?
மகாவிசு.
11.வேட்டி டே என்றைக்குக் கொண்டாடப்படுகிறது ?
ஜனவரி 6.
12. முளைப்பாரிக்கு எத்தனை வகை தானியங்கள் பயறுவகைகளைப் பயன்படுத்துகிறார்கள் ?
ஒன்பது வகை.
13. அங்குரார்ப்பணம் என்றால் என்ன ?
திருப்பதி போன்ற கோயில்களில் முளைப்பாரி வளர்ப்பது அங்குரார்ப்பணம்.
14.மஞ்சளில் இருக்கும் வேதிப்பொருளின் பெயர் என்ன ?
கர்குமின்.
15.குங்குமப் பூவுக்குப் பதிலாக சமையலில் நிறம் கொடுக்கப் பயன்படுவது எது ?
மஞ்சள்.
16.சந்தனத்தில் எத்தனை வகை உள்ளன ?
மூன்று வகை ( ஸ்வேத சந்தனம் எனப்படும் வெள்ளைச் சந்தனம், ரக்த சந்தனம் எனப்படும் செஞ்சந்தனம், யானைக் குன்றுமணிச் சந்தனம் )
17. களபம் என்றும் கந்தம் என்றும் கூறப்படுவது எது ?
சந்தனம்.
18. நாகூர் கந்தூரித் திருவிழா என்பது என்ன ?
இஸ்லாமியர்களின் சந்தனக்கூடுத் திருவிழா.  
19. கீற்று கிராமம் என்று அழைக்கப்படும் ஊர் எது ?
மூங்கில் தோட்டம்.
20. பர்ணசாலை , குடில் என்பன யாவை ?
தென்னங் கீற்றாலும் ஒருவகைப் புல்லாலும் வேயப்பட்டவை.
21.குருத்தோலை ஞாயிறு திருவிழாவில் பயன்படும் குருத்து எது ?
தென்னங்குருத்து.
22. உமணர்கள்/உவணர்கள் என்பவர் யாவர் ?
உப்பு விற்றவர்கள்.
23.உப்புச் சத்யாக்ரகம் நடந்த ஆண்டு எது ? நடத்தியவர் யார் ?
( மார்ச் 12 ) 1930 ஆம் ஆண்டு, காந்தியடிகள்.
24.ஒடியல் மாவு எதிலிருந்து தயாரிக்கிறார்கள்?
பனங்கிழங்கு
25.பல்லுக்கு உறுதி அளிக்கும் உணவுகள் எவை ?
(வேகவைத்த ) சோளம், பனங்கிழங்கு.
26. குறிஞ்சிப் பாட்டில் கபிலர் எத்தனை வகைப் பூக்கள் பற்றிப் பாடி இருக்கிறார் ?
99 பூக்கள்.
27. வெற்றி பெற்றவர் சூடும் பூ எது ?
வாகைப்பூ.
28.சாயங்காலம் பூக்கும் பூவின் பெயர் என்ன ?
அந்தி மந்தாரை.
29.கருப்பை, இடுப்பெலும்பு பலப்பட உண்ணக்கூடிய களி எது ?
உளுந்துக் களி
30.கறுப்புத் தங்கம் என்று அழைக்கப்படுவது எது ?
மிளகு.
31.கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் ப்ரசவம் நடைபெற எதை வறுத்துக் கஷாயம் வைத்துக் கொடுப்பார்கள் ?
சோம்பு.
32. பேனா நிப்பு தயாரிக்கப் பயன்படும் உலோகம் எது ?
செம்பு
33.கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்களில் இடிதாக்காமல் இருக்க நிரப்பப்படும் தானியங்கள் எவை ?
தினை வரகு சாமை.
34.கோழிகள் அடைக்கப் பயன்படும் கூடைக்குப் பெயர் என்ன ?
பஞ்சாரம்.
35. ஆரோக்கியப் பெட்டி என்று அழைக்கப்படுவது எது ?
அஞ்சறைப் பெட்டி..
36. பட்டி பொத்துதல் என்றால் என்ன ?
கூடையின் வாயை முடைவதைப் பட்டி பொத்துதல் என்பார்கள்.
37. தொன்னைகள் எதிலிருந்து தயாராகின்றன ?
வாழை இலைச் சருகுகளில் இருந்து
38. மீன் பொளிச்சது என்னும் உணவை எதில் வைத்துத் தயாரிக்கிறார்கள் ?
வாழை இலையில் சுருட்டி ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கிறார்கள்.
39.பயோ மார்க்கர்ஸ் என்றால் என்ன ?
பச்சை குத்திய அடையாளம்/ பச்சை குத்துதல்/பச்சை
40. பச்சைகுத்த ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கும் பயன்படுத்தினால் என்னென்ன நோய்கள் வர வாய்ப்புள்ளன ?
வைரஸ் பாக்டீரியா போன்றவற்றால் நோய்த் தொற்று, ஹெபடைடிஸ் பி ( மஞ்சள் காமாலை ) ஹெ ஐ வி, கான்சர்.
41. தேவகனி, ராஜகனி என்று எதை அழைக்கிறார்கள்?
எலுமிச்சை.
42. பதினேழாம் நூற்றாண்டில் எந்த நோயைப் போக்க எலுமிச்சைச் சாற்றைப் பருகக் கொடுத்தார்கள் ?
ஸ்கர்வி.
43. குபேரன் வழிபாட்டில் வழங்கப்படும் குங்குமம் என்ன நிறம் ?
பச்சை.
44.ஹல்தி குங்கும் திருவிழா கொண்டாடிய ராணி யார் ?
ஜான்சிராணி லெக்ஷ்மி பாய்.
45.சுத்தமான குங்குமம் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் யாவை ?
விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சுண்ணாம்பு எனப்படும் வெண்காரம் படிகாரம், நல்லெண்ணெய்.
46. ஜாதிமதம் பாராமல் அனைத்து மக்களையும் அழைத்து ஹல்தி குங்கும் திருவிழா கொண்டாடிய விடுதலைப் போராட்ட வீராங்கனை யார் ? அவர் தந்தை பெயர் என்ன ?
அகல்யா ரங்கனேகர், ரணதிவே
47.போழை(பேழை ) எனப்படும் கூடைகள் எதற்கு உரியவை ?
சாமி வழிபாட்டுக்கு உரியவை.
48.தாம்பூலப் பை போல முன்பு பயன்படுத்திய கொட்டானின் பெயர் என்ன ?
சிவப்போலைக் கொட்டான்.
49. காசாணி அண்டா என்பது என்ன ?
மிகப் பெரும் செம்புத் தண்ணீர்க் கிடாரம்.
50.இரும்புச் சத்துக் கொடுப்பது எது ?
வெந்தயம். 

51. வங்காளத்தில் இடும் கோலத்துக்குப் பெயர் என்ன ?

ஆல்பனா.

52. காது வளர்க்கப் போடும் ஈயக்குண்டினை என்னவென்று சொல்வார்கள் ?

குனுக்கு.

53. தீபம் வைக்க எந்த எண்ணெயைப் பயன்படுத்த மாட்டார்கள் ?

கடலை எண்ணெய்.

54. பரங்கிப் பிஞ்சில் விளக்கேற்றும் கோவில் எது ?

தர்மபுரி காலபைரவர் கோவில்

55. ஆநிரைகளின் விழா என்பது எது ?

மாட்டுப் பொங்கல்.

56. யாரைத் திருமணம் செய்ய கிருஷ்ணர் ஏழு எருதுகளை அடக்கினார் ?

நப்பின்னை.

57. தக்ளி என்பது என்ன ?

அந்தக் காலத்தில் நூல் நூற்கப் பயன்பட்ட கருவி.

58. பூசிக் குளிக்கப் பயன்படும் மஞ்சள் எது? சமையலுக்குப் பயன்படும் மஞ்சள் எது ?

கஸ்தூரி மஞ்சள் பூசிக் குளிக்க. விரலி மஞ்சள் சமையலுக்கு

59. தமிழ்நாட்டில் மஞ்சள் தண்ணீர் சேர்த்துத் தயாரிக்கப்படும் இனிப்பு எது ?

வெல்லப்பாகு சேர்த்த பருப்புப்புட்டு.

60. திருமாங்கல்யம் கோர்க்க எத்தனாம் நம்பர் நூல்கண்டைப் பயன்படுத்துவார்கள் ?

8 ஆம் நம்பர் நூல்கண்டு. 

டிஸ்கி :- நமது மண்வாசத்தின் ( 13,000 ) பெண்கள் சுய உதவிக் குழுவின் ஒரு அம்சமான வளரிளம் பெண்கள் குழுவிலிருந்து சில பெண்கள்  பங்குபெற்ற போட்டியில் கொடுக்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்.

மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய ஊர்களில் கிட்டத்தட்ட 300 மாணவியர் இந்தக் கேள்வி பதில் போட்டியில் பங்கேற்று மஞ்சளும் குங்குமமும்  - மரபும் அறிவியலும் என்ற எனது நூலைப்படித்துப் பதில் அளித்துள்ளார்கள். அதுபோக நூல் பற்றியும் உரை நிகழ்த்தி உள்ளார்கள் என்ற தகவல் மனதை நெகிழச் செய்தது. வாழ்த்துக்கள் வளரிளம் பாரதங்களே. வாழ்க வளர்க. 

புகைப்படங்களை இன்னொரு இடுகையில் பகிர்கிறேன். நன்றி நமது மண்வாசம் & வளரிளம் பெண்கள் குழு - பெண்கள் சுய உதவிக்குழு. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)