வியாழன், 30 ஜனவரி, 2020

”எழுத்தும் நானும்.” உரை சவுண்ட் க்ளவுடில்.

எழுத்தும் நானும்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் ”எழுத்தும் நானும் “ என்ற தலைப்பில் உரையாற்ற அழைப்பு வந்தது.

அப்போது பேசியவற்றை சவுண்ட் க்ளவுடில் மகனார் பதிந்து அனுப்பி உள்ளார். அது இதோ உங்கள் பார்வைக்கு. அதாவது கேளுங்க, கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க  :)

https://soundcloud.com/sabalaksh/thennamai-lakshmanan-ezhuthum-naanum-speech?fbclid=IwAR2GtL18PY2kU3Ku3NyVKG-v1xyFUdbV2NmVppr8PVcdRwYo2n1J7Z-q540

இதையும் பாருங்க.

”எழுத்தும் நானும்” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

திங்கள், 27 ஜனவரி, 2020

மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

2481. This susu boy resembles the Manneken Pis.

குழந்தைகள் பிறந்தபோது அம்மா குழந்தைகளுக்குக் கொடுத்த விளையாட்டுச் சாமான்களோடு இருந்தது.

கதவைத் திறந்தால் ரொட்டேட் ஆகுது. இந்த பொம்மை நிற்கும் மேடைக்குக் கீழே நீர் நிரப்பும்படி இருக்கு..

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

ஷ்லாஸ்பர்க் ஸோலிங்கன் கேஸில் - டாய்ச்சஸ் கிளிங்கன் மியூசியம்.

கத்தி கபடாவெல்லாம் இந்தியாவில் ஜெய்ப்பூர் போன்ற சில அரண்மனை மியூசியங்களில் மட்டுமே பார்க்கமுடியும். அதேபோல்தான் ஜெர்மனியிலும் ஸோலிங்கன் அருங்காட்சியகத்திலும் கத்திகளின் அணிவகுப்பு.

தோழி கௌசியும் அவர் கணவரும் தங்கள் காரில் இந்த ஷ்லாஸ்பர்க் ஸோலிங்கன் கேஸிலுக்கு அழைத்துச் சென்றார்கள். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை அதன் பின் பல்வேறு மராமத்துப் பணிகளால் மீண்டு அழகாக இன்னும் காட்சி அளிக்குது. 1185 இல் இருந்து 1225 வரை ஆண்ட எங்கள்பர்ட் - 2 என்னும் ராஜா கம்பீரமா கோட்டையின் தலைவாயிலில் குதிரையில் ஆரோகணித்து வரவேற்கிறார்.

ராஜாவின் கோட்டை கொத்தளம் என்பதால் கேடயம்,வில்,அம்பு, தலைக்கவசம் எல்லாம் இருந்தாலும் அங்கே இருந்த மியூசியத்தில் கத்திதான் ப்ரதான அம்சம். ஏனெனில் இதை மட்டும் கண்ணாடிக் கூண்டுக்குள் பாதுகாப்பா காட்சிப்படுத்தி இருக்காங்க. :)


புதன், 22 ஜனவரி, 2020

சீதை சிறைப்படக் காரணமான சூர்ப்பணகை. தினமலர் சிறுவர் மலர் - 49.

சீதை சிறைப்படக் காரணமான சூர்ப்பணகை.
நல்லவர் ஒருவர் எந்தக் காரணமும் இல்லாமலே துயர்ப்பட நேரும். அது அவங்க தப்பு இல்லை. தன் துர்நோக்கம் நிறைவேற அவங்களை இப்பிடிப் பகடைக்காயா சிலர் பயன்படுத்திக்குவாங்க. அப்படிப்பட்ட துர்நோக்கம் கொண்ட சூர்ப்பனகை தன் எண்ணம் நிறைவேற ஒன்றுமறியா சீதையைப் பகடையாகப் பயன்படுத்திக்கிட்டா. உள்ளபடி அவள் காழ்ப்புணர்வு சீதை மேலே இல்லை. பின்னே யார் மேலேன்னு பார்க்கலாம் வாங்க குழந்தைகளே.
பிரம்மாவின் புத்திரர் புலத்திய மகரிஷி. அவரது மகனான விச்ரவசுவுக்கும் அவரது இரண்டாம் மனைவியான கேசிக்கும் பிறந்தவர்கள்தான் இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீஷணன்.
சூர்ப்பணகைக்கு உரிய பருவம் வந்ததும் காலகேயர் என்னும் தங்கநிற அரக்கர் வம்சத்தைச் சார்ந்த வித்யுத்சிகுவன் என்பாருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். சூர்ப்பணகையும் இயல்பிலேயே அழகானவள். இருவரும் இன்பமாக வாழ்ந்து வந்தார்கள்.
ஒருமுறை இராவணன் தன் புஜபராக்கிரமத்தைக் காட்ட வேண்டிக் காலகேயர்களுடன் போரிட்டான். அப்போது வித்யுத்சிகுவனை சூழ்ச்சி செய்து இராவணன் கொன்று விடுகிறான். இதைக்கேட்டுத் துடித்த சூர்ப்பணகை போர்க்களத்துக்கு ஓடிவருகிறாள். அண்ணனாயினும் தன் கணவன் சாவுக்குக் காரணமானவனை அதே போல் சூழ்ச்சியால் வெல்வேன் என சபதமேற்கிறாள்.

செவ்வாய், 21 ஜனவரி, 2020

ஐபிசிஎன் - 2019 நூல். IBCN - 2019.


ஐபிசிஎன் - 2019 நூல். 


துபாயில் 2017 இல் நடைபெற்ற ஐபிசிஎன் மாநாட்டையும் அதில் இடம்பெற்ற தொழில் முனைவோரின் பேட்டிகளையும் தொகுத்துப் போட்டிருக்கிறார்கள். இதில் எண்டர்ப்ரைனர்ஸ் ஆஃப் தெ வீக்  (EOTW COMMITTEE ) கமிட்டி மெம்பராக நம்மையும் அறிமுகம் செய்திருப்பதால் அதை அறிவிக்கவே இந்த இடுகை.

திங்கள், 20 ஜனவரி, 2020

கம்பராமாயணம் – 6 தொகுதிகள் ஒரு பார்வை


கம்பராமாயணம் – 6 தொகுதிகள் ஒரு பார்வை

கம்பராமாயணம் பத்தாயிரத்து ஐநூறு பாடல்களையும் ஆறு காண்டங்களையும் 118 படலங்களையும் உடையது. இதை ஒருவர் செய்யுள் வடிவில் படித்து உணர்ந்து உய்ய ஓரிரு ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால் உமா பதிப்பகம் வெளியிட்டுள்ள இக்கம்பராமாயணம் அவற்றின் சாறைப் பிழிந்து பக்குவமாய்ப் பருகத் தருகிறது.

கம்பன் அடிசூடி திரு பழ. பழனியப்பன் அவர்கள் எழுதிய இந்நூல் ஆறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது. பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்று ஆறு காண்டங்களை ஆறு தனி நூல்களாகப் பொழிப்புரையுடன் தொகுத்திருக்கிறார்கள்.

சனி, 18 ஜனவரி, 2020

அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.

அனைத்துலத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரான திரு பாரதிசுகுமாரன் ஐயா அவர்களின் முகநூல் பதிவைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

///// *மகாகவி பாரதி பிறந்த நாளை எழுத்தாளர் தினமாக அறிவிக்க வேண்டும்...*
*அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் தொடக்க விழாவில் கோரிக்கை.*
சென்னை.11, சென்னை சாலி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில், உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது..
எழுத்தாளர். சும்மாடு.ஜெ.வ.கருப்புசாமி வரவேற்புரையாற்ற, தமிழ்ச்செம்மல் முத்துக்குமாரசாமி அவர்கள் தலைமையில் கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு அரசின் மகாகவி பாரதியார் விருதாளர். பாவரசு.பாரதிசுகுமாரன், சங்கத்தின் நோக்கம் குறித்தும் எதிர்கால வேலைத் திட்டம் குறித்தும் கருத்துரை வழங்கிட, அதன்மீது பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்.டி.எஸ்.ஆர்.சுபாஷ், தமிழ்நாடு அரசின் பாரதிதாசன் விருதாளர். கவிஞர்.தியாரூ, திரைப்பட இயக்குநர். ஈ.ராமதாஸ், எழுத்தாளர். பெருமாள் ஆச்சி, தமிழ் இயலன், பரணி.சுப.சேகர், கவி.செங்குட்டுவன்,க.நா.கல்யாணசுந்தரம், ப.தமிழரசன்,அகநம்பி, தஞ்சை எழிலன், ஆகியோர் பேசினர்.

வியாழன், 16 ஜனவரி, 2020

கம்பன் கண்ட மனிதன்.

காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் (4.1.2020) இன்று " கம்பன் கண்ட மனிதன் " ( கம்பன் கண்ட மனிதன்/தெய்வம்/தொண்டன் ஆகிய தலைப்புகளில் மாணாக்கர்களே தேர்ந்தெடுத்தது ), என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நிகழ்ந்தது.

இந்நிகழ்வில் திருமிகு கண்ணன், திருமிகு. மா. சிதம்பரம் இவர்களோடு நானும் நீதிபதியாய்ப் பங்கேற்றேன். மிக நிறைவான நிகழ்வு.

புதன், 15 ஜனவரி, 2020

செருக்கைத் துறந்த சுகர். தினமலர் சிறுவர்மலர் - 48.

செருக்கைத் துறந்த சுகர்.
நான் எனது என்ற செருக்குக் கொண்ட மனிதனை யாரும் அண்டுவதில்லை. செருக்குக் கொண்ட மனிதன் தனித்து விடப்படுகிறான். ஆனால் செருக்கு அகன்று தன்னை உணர்ந்து பிறரை மதிப்பவன் மேன்மகனாகப் போற்றப்படுவான். அப்படிச் செருக்குக் கொண்ட சுகரைப் பற்றியும் தன் செருக்கை அவர் அகற்றி மேன்மகனாக ஆனது பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
பதினெண்புராணங்களையும் இயற்றியவர் வேத வியாசர். அவர் ஒரு முறை பச்சைக்கிளி உருவில் இருந்த கிருதாசீ என்ற தேவ கன்னிகையின் மேல் விருப்பம் கொண்டதால் அவர்களுக்கு சுகப் பிரம்மர் என்ற குழந்தை பிறந்தது. தாயைப் போல சுகப் பிரம்மருக்கும் மூக்குக் கிளிமூக்குப் போல அமைந்து இருந்தது.

இளம் வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராக விளங்கினார் சுகர். ஆயினும் அவருக்கு பிரம்ம ஞானம் என்றால் என்ன எனப் புரியவில்லை. இது பற்றி அவர் தன் தந்தை வியாசரிடம் கேட்கிறார்.

செவ்வாய், 14 ஜனவரி, 2020

கம்பர் எழுதிய இராமகாதை ( அயோத்திக் காண்டம்) - ஒரு பார்வை.

கம்பர் எழுதிய இராமகாதை ( அயோத்திக் காண்டம்) - ஒரு பார்வை.


கம்பர் அருளிய இராமகாதை ( அயோத்திக் காண்டம்) – ஒரு பார்வை.

இராமாயணத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். அதுவும் ஒவ்வொருவர் வசப்பட்டும் அதுவரை தென்படாத வித்யாசமான பாதை ஒன்றிற்கு அழைத்துச் செல்லும். இந்த நூலைத் தொகுத்து உரை கண்ட சொ முருகப்பனார் அது நூலாக்கம் பெறுமுன்பு இறைவனடி சேர்ந்ததால் இதற்கு நூல்முகம் எழுதியதாகக் குறிப்பிட்டு இருக்கிறார் ராய. சொ. அவர்கள்.

திங்கள், 13 ஜனவரி, 2020

பட்டாளத்து வீடு :- ஒரு பார்வை


பட்டாளத்து வீடு :- ஒரு பார்வை

பட்டாளத்து வீடு

சமீபத்தில் படித்த மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பு சாம்ராஜின் பட்டாளத்து வீடு. வெகுஜன வாசிப்புக்கு ஏற்ற அதே சமயம் நுண்ணிய இலக்கியத் தரமும் இயைந்து இருக்கும் நூல் இது.

மொத்தம் பத்துச் சிறுகதைகள். நவரசம் என்பது போல் பத்தும் பத்துவிதம்.  குழந்தைகளின் வாழ்வியல் பார்வையிலிருந்து சொல்லப்பட்டுள்ளன அநேகம் கதைகள். குழந்தைகள் எதிர்கொள்ளும் துயரம், அவர்களின் மனப்பாடுகள், அவர்கள் சமூகத்தினாலும் தனிமனிதர்களாலும் எதிர்கொள்ளும் அபாயங்கள் என வித்யாசமான கதைக் களங்கள். ஆனால் புள்ளிவிவரமாக அடுக்காமலே ஒவ்வொன்றிலும் துல்லியம். சுவாரசியம் குன்றாது ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

2461. மரப்பாச்சி இலக்கிய வட்டம் மாதாந்திரக் கூடுகை

2462. அழைப்பிதழ் வந்தும் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. கானாடுகாத்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நண்பர் நலந்தா ஜம்புலிங்கம் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து பகிர்கிறேன்.

சொ. முருகப்பனாரும் பாரதியாரும்.

நலந்தா = நல்ல புத்தகக்கடை என்ற புத்தகக்கடையைக் காரைக்குடியில் நடத்தி வரும் திரு நலந்தா ஜம்புலிங்கம் அவர்கள் சிறந்த எழுத்தாளர் & பதிப்பாளரும் கூட. மிக சிறந்த எழுத்தாளுமைகளுடன் தொடர்பில் உள்ளவர். என் எழுத்தைப் பற்றி அவர் கூறியுள்ளவற்றைப் படிக்கும்போது சிறிது கூச்சம் ஏற்பட்டது. அதோடு சொ. முருகப்பனாரின் இராமகாதை பற்றியும் கூறி  இருக்கிறார். வாசித்துப் பாருங்கள்.


(இந்தப் புகைப்படம் பாரதி காரைக்குடி வந்தபோது எடுத்தது. பாரதியாரின்  வலது பக்கம் இராய சொ அவர்களும் இடது பக்கம் சொ முருகப்பனாரும் அமர்ந்திருக்கிறார்கள். )

சனி, 11 ஜனவரி, 2020

அன்பெனும் பிடிக்குள்..


அன்பெனும் பிடிக்குள்..

அன்பெனும் பிடிக்குள்..

இது ஒரு மணிவிழா மலர். ஆனால் இதன் கட்டுக்கோப்பும் இவ்விழா நாயகரின் சாதனைகளும் என்னை இந்நூல் பற்றி எழுதச் செய்கின்றன.

2019 நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற திரு நடேசன் அவர்களின் மணிவிழா மற்றும் நகரத்தார்களின் பண்பாட்டுக் கலாச்சார விஷயங்கள் மேன்மைகள் அடங்கிய பொக்கிஷம் இது.

சிவகங்கைப் புத்தகத் திருவிழாவில் எனது நூல்கள்.

சிவகங்கையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புத்தகக் கண்காட்சி 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. 

இக்கண்காட்சியில் சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகள் அரங்கில் எங்கள் நூல்களும் விற்பனைக்கு உள்ளன. 

வெள்ளி, 10 ஜனவரி, 2020

காக்கைச் சிறகினிலே - ஒரு பார்வை.

காக்கைச் சிறகினிலே - ஒரு பார்வை.


காக்கைச் சிறகினிலே

விருது அரசியலை விரிவாக அலசுகிறது தலையங்கம். கல்விக்கூடக் கொலைகள்/தற்கொலைகள் பற்றிக் காட்டமாய்த் தாக்குகிறது ஒரு கட்டுரை. கவிஞர் சேரனுடன் நேர்காணல் ஈழ இனப் படுகொலையைக் கண்டிக்கிறது.

இராணுவ முகாம்களுக்குள் இருக்கும் எனது வீடு என்ற தீபச்செல்வன் கட்டுரை பூமி யாருடையது என்ற கேள்விகளை எண்ணமெங்கும் நிறைத்தது. இன ஒடுக்குமுறை என்பது எவ்வளவு மலினமான செயல்பாடு. யதீந்திராவின் இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும் விரிவான அலசல்.

வியாழன், 9 ஜனவரி, 2020

புதுவயல் கைலாஸ விநாயகர் கும்பாபிஷேக மலரில் எனது பாடல்.

நேற்று புதுவயல் கைலாஸ விநாயகர் கோயில் கும்பாபிஷேக மலர் வெளியிடப்பட்டது. மலருக்கு பாடல் ஒன்று எழுதிக் கேட்டிருந்தார்கள். மூன்று மாதம் முன்பு அனுப்பியிருந்தேன். நேற்று மலருக்குக் கட்டுரை பாடல் எழுதியவர்களுக்கு மேடையில் சிறப்பு செய்தார்கள்.

கோவிலூர் சீர் வளர் சீர் திரு மெய்யப்ப ஞான தேசிக ஸ்வாமிகள் தலைமையேற்க , திரு சபா அருணாசலம் உரையாற்றினார். இன்னும் பலர் பேசியதும் மலர் வெளியிட்டதும் சீக்கிரமே முடிந்துவிட்டது. நாங்கள் 5 மணிக்குத்தான் புறப்பட்டுச் சென்றோம்.



நான் போடியம் பின்னே நின்றதால் தலைவரால் இருந்த இடத்திலிருந்து புகைப்படம் எடுக்க இயலவில்லை . அதனால் வீடியோ மட்டும். :)

செவ்வாய், 7 ஜனவரி, 2020

மனோசக்தி - ஒரு பார்வை.

மனோசக்தி - ஒரு பார்வை.


மனோசக்தி

கட்டுப்பாடு பற்றியும் கணக்குப் பார்த்து செலவழிப்பது பற்றியும் இயம்புகிறது தலையங்கம்இது ஒரு உடலியல் உளவியல் மாத இதழ். ஏமாறாதே ஏமாற்றாதே நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை.

நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது, மற்றவர்களை அளவோடு பாராட்டுவது ஆகிய கட்டுரைகளோடு தாழ்வு மனப்பான்மை இருப்பவரிடம் ஈகோவும் இருக்கும் என்பதைத் தெளிவு படுத்திய கட்டுரை என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

ஒரு ரியல் கேஸ் ஹிஸ்டரியை எடுத்துக் கொண்டு சிறுவயதில் பாதித்த அனுபவங்கள் காரணமாக திருமண வயதில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட டிப்ரஷன், ஃபோபியா, ஸ்ட்ரெஸ், கான்ஃப்ளிக்ட்ஸ், அனரெக்ஸியா, கெமிக்கல் இம்பாலன்ஸ், சைக்கியாட்ரிக் இல்னெஸ்  ஆகியவற்றை கௌன்சிலிங் கொடுத்து எப்படிச் சரிசெய்தோம் எனக் கூறியிருக்கிறார் டாக்டர் சிவசைலம்.

சூழ்நிலையின் தவறுகளால் மனதுள் தன்னைப் பற்றிய நெகட்டிவ் எண்ணங்கள் பெருகப் பெருக எதிர்காலமே எதிர்மறையாய் உருப்பெறும் வரைபடம் போட்டு விளக்கியிருக்கிறார்.

காரிய வெற்றி பெற வேண்டுமானால்  தீர்மானத்தில் தெளிவு வேண்டும் என்ற அம்சத்தை வலியுறுத்துகிறது ஒரு கட்டுரை. கோபம் பயம் ஏற்படுத்தும் விளைவுகள், சைக்கோ டெஸ்ட் , ஆழ்மனமும் நம்பிக்கைகளும்விடியலை நோக்கி, பொறுமையால் கிடைக்கும் வெற்றி என  வரிசைப்படுத்துகிறார்கள்.

துன்பங்களும் வாழ்வின் அம்சமே என ஆற்றுப்படுத்துகிறது ஒரு கட்டுரை. ஆழ்மனத்துக்கு என்ன கட்டளை இடுகிறோமோ அதை அது செயல்படுத்தும் என்று ஆல்ஃபா மைண்ட் பவர் பற்றிக் கூறுகிறார்  டாக்டர் விஜயலெக்ஷ்மி பந்தையன்.

புதிய சிந்தனைகள், செயலாற்றும் வலிமை, விடாமுயற்சி  ஆகியன வெற்றிக்கான பண்புகள் என்கிறார்கள். தெளிந்த சிந்தனை இருந்தால் சிறந்த முடிவு கிட்டும் என நம்பிக்கை ஊட்டுகிறது ஒரு கட்டுரை. நோக்கம் சிறந்ததாய் இருந்தால் ஜெயிப்போம் என்றும் நம்பிக்கையும் அளிக்கிறார்கள்.

வார்த்தைகள் செய்யும் அற்புதத்தையும் இவர்கள் விவரித்து இருப்பதால் நாமும் நம் நயமான வார்த்தைப் ப்ரயோகங்களால்  வெற்றி பெற முயல்வோம். அத்தோடு மனித உறவுகளும் குடும்ப உறவுகளும் சீராக இருந்தாலே நாம் வெற்றியின் படிக்கட்டுக்களில் ஏறிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்.

நூல் :- மனோசக்தி  ( மாதாந்திரி)
ஆசிரியர்:- விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன்.
விலை :- ரூ. 15.