வியாழன், 12 டிசம்பர், 2019

மலை வளமும் மழை வளமும்.

மழை வளமும் மழை வளமும்
ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்
அழகிய ரைன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்
மயங்கித் திரிவோம் பறவைகள் போல்
என்று சிவந்தமண் படத்தில் வரும் பாடல்போல் ஹனிமூன் என்றாலே நமக்கு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிம்லா, குலு, மணாலி, டார்ஜிலிங், ஸ்விட்சர்லாந்து ( ஆல்ப்ஸ், டிட்லிஸ்) ஆகியவற்றின் பனிபடர்ந்த மலைப்பிரதேங்கள் ஞாபகத்தில் முகிழ்க்கும். மலையை அடிப்படையாக வைத்து தங்கமலை ரகசியம், மெக்கன்னாஸ் கோல்ட் ஆகிய படங்கள் வந்துள்ளன.
சரித்திரப் பிரசித்திபெற்ற கோட்டைகளுடன் கூடிய மலைகளை  ( கோல்கொண்டா, குல்பர்கா, குவாலியர் , பிதார் ) அறிந்திருக்கலாம்.  ஆனால் பூகோளத்தில் ஒரு காலத்தில் இடம்பெற்றிருந்தும் கடல் விழுங்காமல் காற்றுக் குடிக்காமல் சிதறிச் சரிந்த மலைகள் மதுரை செல்லும் வழியிலும் திருச்சி செல்லும் வழியிலும் உண்டு.ஆட்டுக்கிடாய்களின் உப்புக்கண்டக் கவிச்சியைப் போல வெய்யிலில் காயும் வெண் துண்டங்களைக் கண்டு மனம் பதறியதுண்டுவெட்டிச்சாய்க்கப்பட்ட மரங்களைப் போல வீழ்ந்து கிடக்கும் மலைகளைக் கண்டு கண்கசிந்ததுண்டு.
மழை வளம் , நீர் வளம் , நில வளம் இயற்கை வளம்மூலிகை வளம்வனவிலங்குகள் வளம்மேய்ச்சல் நிலம்அபூர்வ தாவரங்கள்அருவிகள்சுனைகள் இவை எவையுமே இல்லாமல் வெறும் மொட்டைப் பாறைகளாக நின்றாலும் அவை நம் எக்கோ சிஸ்டத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை.

மேலூருக்கும் மதுரைக்கும் நடுவில் இருக்கும் ஆனை மலைக்கு முன்பாக ஆட்டுக் குட்டிகளைப் போன்ற சிறிய சைஸில் சில மலைகள் உண்டுஅவை இருந்த இடம் இப்போது கிரானைட் குவாரி வெட்டப்பட்ட சுரங்கங்களைப் போலக் கிடக்கின்றனஅவற்றின் கண்ணீர் போலத் தேங்கிக் கிடக்கிறது அவ்வப்போது பெய்யும் மழை நீர்.மண்ணிலிருந்து இயற்கைப் படிமங்களாக பல்லாண்டுகளாக உருவாகுபவை மலைகள்அவற்றைப் பாலீதீன் குப்பைகளாலும் பீர் பாட்டில்களாலும் மூடி விடும் சுற்றுலாவாசிகள் அங்கே வாழும் உயிரினங்களைப் பற்றிச் சிறிது சிந்திக்க வேண்டும்.

ஜெண்டிங் ஹைலேண்ட்ஸிலோகேரளாவின் பொன்முடியிலோஆனை முடியிலோஆந்திராவின் திருப்பதியிலோ , குவாலியர் கோட்டையிலோ மலைமேல் ஒற்றைப் பாலீதீன் பேப்பரைக் கூடப் பார்க்க முடியாதுஆனால் இங்கே மலை என்றாலே அது ப்ளாஸ்டிக் கழிவுக் குப்பைகளையும் எல்லை தாண்டிய மருத்துவக்குப்பைகளையும்  கொட்டும் இடமாக மாறிவருகிறது.வனவிலங்குகள் வாழ அச்சுறுத்தல் உள்ள இடமாக மாறி வருகின்றன மலைகள்

மக்களின் பயணப் பாதைகள் மலைகளின் குறுக்காக அமையாமல் அவற்றின் வாழ்வின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும்மலைவாசிகள் தவிர்த்து வேறு யாரும் மலைகளில் இடங்களை ஆக்கிரமிப்பதை அரசாங்கம் வரையறுக்க வேண்டும்அரசின்  சுற்றுலாத்துறையின் இல்லங்கள்சுற்றுலாத்துறையின் வாகனங்கள் தவிர வேறு எவையும் மலையின் மேல் அனுமதிக்கப்படக் கூடாது.அருவிகளும் மழையும் அற்றதால் நீரும் உணவும் தேடி மலை வாழ் விலங்குகள் மலையோரக் கிராமங்களில் படையெடுக்கின்றன

வேலிகளில் பொருத்தப்படும் மின் கம்பிகளும் மின்சார போஸ்டுகளும் கூட  இன்னொரு அச்சுறுத்தல் அவற்றுக்குஅரிய வகை விலங்குகள் மட்டுமல்ல நமது தேசிய விலங்கான புலியே கூட அருகி வருகிறதுஇவற்றைப் பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்மலைக்காடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான அபூர்வ உயிரினங்களைக் காக்க வேண்டியது நாட்டை நேசிக்கும் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையும்தான்.

திருப்பூரின் அருகில் இருக்கும் சிவன் மலை செல்லும் வழியில் செடிகள் கொடிகள் ஏன் மலையில் இருக்கும் அனைத்து மரங்களிலும் வேண்டுதல் தொட்டில்கள் போலப் பறந்து கொண்டிருக்கின்றன பாலீதீன் பைகள்.

தமிழ்நாட்டில் சேலம் சேர்வராயன் மலைகளில்  பாக்ஸைட் தாது எடுக்க அனுமதி உள்ளது ஆனால் கோவாவில் மலைகளைத் தகர்த்து இரும்புத் தாது எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.  தாதுக்களும் தாவர வாழ்வியலும் முக்கியமாதற்காலிக லாபங்கள் முக்கியமா என்பதை அனுமதி கொடுக்குமுன் சிந்திக்க வேண்டும் அரசாங்கங்கள்.மலைகளுக்கு அருகிலும் ஏரிகளிலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் அனுமதி மறுக்கப்பட வேண்டும்அப்படி இல்லாவிட்டால் ( வடவள்ளி ) வீட்டிற்கு அருகில் பாம்புப் புற்றுகளும் தினப்படி விருந்தாளிகளாக யானைகளும் படை எடுக்கக்கூடும்சமப்படுத்தப்பட்ட நீர்த்தேக்கங்களில் வீடுகள் கட்டி அவை மழைக்காலங்களில் குட்டைக்குள் மூழ்கிய கப்பல்களாகக் காட்சி அளிப்பதைத் தவிர்க்க முடியும்.

மலையைக் குடைந்து ஆராய்ச்சிக்கூடங்கள் ஏற்படுத்த அனுமதிக்கக்கூடாதுபுவி வெப்பமாதலால் இமயமலை ( ஐஸ் மலை ) வெள்ளியங்கிரி மலைகொல்லி மலை ( இயற்கை வளங்கள் உள்ள மலைகள் ) ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுஇயற்கை நேசர்களான ஆதிவாசிகளின் வாழ்வும் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளது.சாலையோரம் மரங்கள், வீடு தோறும் விருட்சங்கள்வைத்து மலைகளின் வனங்களின் வாழ்வியலைப் பாதுகாத்தல் அத்யாவசியம்வனவிலங்குகளைப் பிடித்து சரணாலயக் காப்பகங்களிலும் ஆலயங்களிலும் அடைக்காமல் இருந்தால் அவற்றுக்குப் புத்துணர்ச்சி முகாமே தேவைப்படாது.சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மலைகளோ ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மலைகளோ எலிகளால் கிள்ளப்படுவதில்லைஆனால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அதேபோல் இயற்கையின் சுழற்சியைப் பாதுகாக்கும்பூகோளத்தில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் வெட்டி வீழ்த்தப்படும் சின்னஞ்சிறு மலைகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டே ஆகவேண்டும்.மலை ஓரம் உள்ள வயல்களில் அதிக விளைச்சலுக்காகச் சேர்க்கப்படும் செயற்கை உரத்தில் உள்ள நைட்ரேட்  அங்கே உள்ள நீர் நிலையையும் பாதிப்பதால் அதைக் குடிக்கும் வனவிலங்குகள் இறந்துவிடுகின்றன.நிலமும் விஷமாகிறது.மலைகள் அரியவகை மூலிகைகளின் இருப்பிடம்.அங்கே விளையும் சந்தனமரம், ஈட்டி, செம்மரம் ஆகியவை அதன் சந்தைமதிப்புக்காக வெட்டிக் கடத்தப்படுகின்றன.புதிது புதிதாக முளைக்கும் ஆசிரமங்களும் சாமியார்களும் வேறு ஹைடெக் மடம் கட்டி இந்த மலைகளை ஆக்கிரமிப்புச் செய்கிறார்கள்.
மரங்கள் வெட்டப்படுவதால் மழையின் அளவும் குறைந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் வருடம் தப்பாமல் வரும் நம் பருவ மழைக்கு ஆதாரமாயிருக்கின்றன. மலைகளை சிதைப்பதன் மூலம் அல்லது கூறாக்குவதன் மூலம் மழை தடைபடுகின்றது.
புவி வெப்பமாதல்நீர் ( பற்றாக்குறை ) யுத்தம்உணவுப் பற்றாக்குறைபுதுப்புது வியாதிகள் அகியன தவிர்க்கப்பட வேண்டுமானால் மலைகளையும் நதிகளையும்  ஏரிகளையும் உடனடியாகப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்இது முதலீட்டாளர்கள்,  அரசாங்கம்பொதுமக்கள்இயற்கையோடு இயைந்து வாழ விரும்புபவர்களுக்கு மட்டுமல்ல மலைகள்நதிகள்மலைவாழ் உயிரினங்கள் ஆகிய அனைத்துக்குமே பயனளிக்கக் கூடியதாக இருக்கும்
நீராதாரங்கள்மலைகள் பற்றிய ஆவணக் காப்பகங்கள்அருங்காட்சியகங்கள்புகைப்பட கேலரிகள்தீம் பார்க்குகள்  உருவாக்கப்பட வேண்டும்பூங்காக்களுக்கும் அறிவியல் கண்காட்சிகளுக்கும்சிறப்பான திரைப்படங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவது போல,  மலையேற்றம்  , நதி நீர் , ஏரி போன்றவற்றுக்கும் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு பள்ளிக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட வேண்டும்.பொதுமக்களுக்கும் பத்ரிக்கை தொலைக்காட்சி  போன்ற ஊடகங்கள் மூலம் இவற்றின் சிறப்பையும் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பரப்ப வேண்டும்பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்ச்சியைத் தூண்ட வேண்டும்.
இளஞ்சிறார்களின் உள்ளத்தில் இவற்றைப் பாதுகாப்பதற்கான விதைகள் விதைக்கப்படவேண்டும்இவை சம்பந்தமான ஆவணப் படங்கள் குறும்படங்கள் , திரைப்படங்கள்டிஜிட்டல்கிராஃபிக்ஸ் கார்ட்டூன் படங்கள் உருவாக்கப்பட வேண்டும்பாடத்திட்டத்தில் இவற்றின் முக்கியத்துவம் சேர்க்கப்படவேண்டும்.நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம்கைபர் போலன் போன்ற கணவாய்கள் வழிவந்த மக்கள் வாழ்வும்  சிந்து சமவெளி நாகரிகமும் மலை சார்ந்தும் நதி சார்ந்தும் உருவானவை.கல்லூரிகளில் விண்வெளி விஞ்ஞானத்துக்கும் அணு ஆராய்ச்சிக்கும் வழங்கப்படும் சம முக்கியத்துவம் பூமியைப் பற்றிய ஆராய்ச்சிப் பாடத்துக்கும்  ( ஜியாலஜி ) வழங்கப்பட வேண்டும்.இயற்கைத் தாயின் அமுதசுரபியாம் மலைகளையும் அவற்றிலிருந்து பெருகும்நீராதாரங்களையும் அவற்றின் இயல்பிலேயே வைத்திருப்போம்இயற்கை சுழற்சியைப் பாதுகாப்போம்இச்செல்வங்களைப் பாதுகாப்பதன் மூலம் உலக நாடுகளில் வல்லரசாக நாம் உயர்ந்து நிற்போம்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)