வெள்ளி, 15 நவம்பர், 2019

வாசிப்பை வளர்க்கும் ஷாப்பிங் மால்கள் - இன்ஃபர்மேஷன் லைப்ரரி.

ஜெர்மனியிலும் சரி, யூரோப் முழுவதும் சரி. ரயில் நிலையங்களில் ப்ரஸ் & புக்ஸ் என்னும் புத்தகக் கடைகளும், ரெவே, கொடி, அல்டி, லிடில், ரியல், நெட்டோ, போகோ போன்ற ஷாப்பிங் மால்களிலும் பயணப் பாதையில் மோட்டல்களிலுமே  புத்தகக் கடைகளைப் பார்க்கலாம். பாதிக்குப் பாதி ஆஃபரிலும் கூட புத்தகங்கள் கிடைக்கின்றன ! முக்காலே மூணு சதம் அந்தந்த தேசத்தின் மொழிகளில்தான் கிடைக்கின்றன. ஆங்கிலப் புத்தகங்கள் ரொம்பக் கம்மி. ( ஆங்கிலம் மாதிரியே இருக்கும். ஆனால் அது ஜெர்மன், ஃப்ரெஞ்ச், இத்தாலி :) . கட்டுரைகள், த்ரில்லர்கள், ரொமாண்டிக் நாவல்களோடு இங்கே சமையல் புத்தகங்களும் , குழந்தைகளுக்கான நூல்களும் கூட கொட்டிக் கிடக்கின்றன.

ரயிலில் நின்று கொண்டோ உட்காந்து கொண்டோ வாசிப்பவர்களை இந்நாடுகளில் அதிகமும் பார்க்கலாம். இவர்கள் என்னைக் கவர்ந்ததால் அங்கே எடுத்த புத்தகசாலைப் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறேன். வாசிப்பவர்களை எடுக்க என் கூட வரும் என் மகன் தடா போட்டுவிடுவார்.

இவை அனைத்தும் ஸ்விஸ், இத்தாலி, வெனிஸ், ரோம், போன்ற நகரங்களைக் கடந்து செல்லும்போது இருக்கும் மோட்டல்களில் எடுத்தவை.


இது டிட்லிஸ்ஸிலிருந்து வெனிஸ் செல்லும் வழியில் எடுத்தது.

50 முதல் 70 சதம் வரை ஆஃபர் ! ஆண்ட்ரியா கேமில்லரி  கலெக்‌ஷன்ஸ் அதிகம்.


வில்பர் ஸ்மித், ரிடா லெவி மொண்டால்சினி, மார்செல்லோ சைமானி, லுசிண்டா ரிலே, அலெக்ஸ் ஸனார்டி, ஆண்டானியோ ஸ்யூரட்டி, ஸியாரா அமிரண்டி, அலெஸ்ஸியா கஸோலா ஆகியோரின் நூல்கள் உள்ளன.

இது இத்தாலியில் உள்ள ஒரு கடையில் எடுத்தது.


இங்கே க்ளென் கூப்பர், லூசிண்டா ரிலே, லுகா டி ஃபுல்வியோ, எலீனா ஃபெராண்டி, கேமில்லா லக்பர்க், இலாரியா டுடி, ஜே கே ரௌலிங் ( ஹாரி பாட்டர் ஸ்பெஷல் ) , க்ளாரா சன்செச்ஸ், க்ளைவ் க்ளஸ்லர், சில்வியா சிலானி, ஆண்ட்ரியா கேமில்லரி ஆகியோரின் நூல்களோடு குழந்தைகளுக்கான நூல்களும், ஓவியம் வரையக் கற்றுத்தரும்  நூல்களும் காணப்பட்டன.


இது பாரீஸுக்குச் செல்லும் வழியில் எடுத்தது.


ஜியார்ஜ் ஆர் ஆர் மார்ட்டின், மார்க்கரெட் ஆண்ட்வுட், மைக்கேல் பஸ்ஸி, ஆடம் க்ரிஸ்டோஃபர், பவுலோ கோயல்ஹோ, எலிஸபெத் ஜார்ஜ், டக்ளஸ் கென்னடி, போர்டின், டேனியல் கோல்


பின்புறம் இருப்பவை மாதாந்திரிகள். முன்புறம் இருப்பவை சமையல் நூல்கள்.


இன்னொருபுறத்தில் லைப்ரரி. இன்ஃபர்மேஷன் லைப்ரரியாமாம். ! தேவையான விவரங்களைத் தேடிக்கொள்ளலாம் போலும். மொழி புரியாததால் எது சம்பந்தமாக என்று தெரியவில்லை.


இது டூயிஸ்பர்க் சிட்டி லைப்ரரி. சும்மா போஸ்தான். எல்லாம் ஆங்கிலம் அதுக்குத் தலைமேலே அஃகன்னாமாதிரி இரு புள்ளிகள். உச்சரிக்க ஒருமாதிரி கஷ்டமப்பா.


இதுவும் சிட்டி லைப்ரரியில் சில்ட்ரன் பகுதி. அதில் உமன் மாகஸீனை ஃபோட்டோவுக்காக ஒரு புரட்டு :)



இது  வீட்டின் கீழே இருக்கும் ரெவேயில் எடுத்தது.

இது க்ளாமர், ஹேர்ஸ்டைல், வீடு, கார், மேக்கப், உணவு, குழந்தைகளுக்கானது, சுகாதாரம் என்று ஏகப்பட்டது இருக்கு. டிஜிட்டல் வீடியோ & ஆடியோவாவும் கிடைப்பது புது ரகம்.


இதுவும் ரெவே.


இது லிடலில் முன்புறம் இருக்கும் விளம்பரப் புத்தகங்கள். ( விற்பனைப்பொருள் பற்றியது :)

இவையும் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் பற்றிய புத்தகங்களே . இலக்கியத்தோடு வியாபாரத்தையும் வளர்க்கிறார்கள் வெளிநாட்டினர். :)

இது தோழி கௌசியின் வீட்டு நூலகம்ங்க. சந்திரகௌரி சிவபாலன் என்னும் நம்ம ப்லாகர் தோழி ஜெர்மனி ஷோலிங்கனில் வசிக்கிறாங்க. அவங்க வீட்டுக்குப் போனபோது சுட்டது :).

நண்பர் ராஜ் சிவா வீட்டிலும் நூலகம் உண்டு. அதை முன்னொரு இடுகையில் பகிர்ந்திருக்கிறேன்.

மொத்தத்தில் ஜெர்மனி & யூரோப் ட்ரிப் ரொம்ப யோசிக்கத் தகுந்ததாய் வாசிக்கத் தகுந்ததாய் இருந்தது. நன்றி என் சின்ன மகனுக்கு :) 

2 கருத்துகள்:

  1. // இது தோழி கௌசியின் வீட்டு நூலகம்ங்க. சந்திரகௌரி சிவபாலன் என்னும் நம்ம ப்லாகர் தோழி ஜெர்மனி ஷோலிங்கனில் வசிக்கிறாங்க. //


    என்னைப் பற்றி கேட்டீர்களா...?

    பதிலளிநீக்கு
  2. உங்களைப் பற்றிச் சொன்னேன் சகோ. நீங்க டெக்னிக்கலா உதவுவீங்கன்னும் சொன்னேன். சொன்னாங்களா. :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)