திங்கள், 28 அக்டோபர், 2019

ஓம் சாயி சரணம்


அற்புதத் திருவே
ஆனந்தத் திருவே
ஓம் சாயி சரணம்

பொற்பதத் திருவே
புண்ணியத் திருவே
ஓம் சாயி சரணம்

வெள்ளி, 25 அக்டோபர், 2019

பொதுத்தேர்வும் படைப்புச் சக்தியும்.

2361. ஐந்தாம் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு வைப்பதால் குழந்தைகளின் கல்வித்தரமும் ஆசிரியர்களின் பொறுப்புணர்வும் மேம்படுமா..
முதலில் பாடத்திட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். ஐசிஎஸ்சி, சிபி எஸ்சி,ஸ்டேட்போர்ட், மெட்ரிக்குலேஷன் எத்தனை விதக் கல்வி முறைகள்.
கல்வி என்பது விரும்பிக் கற்பதாக இருக்க வேண்டும்.. இதெல்லாம் எப்ப மாறும்.

2362. To learn german language the fees for 2 months is 1,000 € only. 😵.
Anyhow happy to see the name of Johann Wolfgang Von " Goethe Institut"



வியாழன், 24 அக்டோபர், 2019

ப்ரஸ்ஸில்ஸ், மை க்ளிக்ஸ். BRUSSELS, MY CLICKS.

பெல்ஜியம் ப்ரஸ்ஸில்ஸுக்கு யூரோப் டூர் சென்றிருந்தபோது சென்றோம்.

லண்டனில் இருந்து ஆரம்பிப்பதற்கு பதிலாக நாங்கள் ஜெர்மனியில் இருந்து ப்ரஸ்ஸில்ஸுக்குச் சென்று ஸ்டார் டூர்ஸ் கோச்சில் ஏறிக்கொண்டோம்.

மிக அருமையான ஊர். ரயில்வே ஸ்டேஷனையே காணக் கண்கோடி வேண்டும். இது ஒரு பக்க லான் தான். தரை முழுவதும் பச்சையும் மஞ்சளும் கட்டமிட்டிருக்க ஒரு பக்க சுவரில் பச்சையும் மறுபக்க சுவரில் சந்தன மஞ்சளும் என்று அமர்க்களம். இப்புறம் பார்த்தால் அவள் பச்சைக்கிளி அப்புறம் பார்த்தால் அவள் மஞ்சள் காட்டு மைனா.
இங்கே உள்ள கட்டிடங்கள் அனைத்தையும் காணக் கண்கோடி வேண்டும்.  அவ்வளவு அழகு.

செவ்வாய், 22 அக்டோபர், 2019

தாலிஸ் ட்ரெயினும் பீட்ரூட் சிப்ஸும் . THALYS TRAIN.

பாரிஸ் நோர்ட் ஸ்டேஷனில் இருந்து ஜெர்மனி டூயிஸ்பர்க் வரைக்கும் தாலிஸ்/டாலிஸ் ட்ரெயினில் வந்தோம். ரொம்ப ஸ்பெஷலான அந்த ட்ரெயின் பத்தி இங்கே :) இது ப்ரென்ச் - பெல்ஜியன் ஹை ஸ்பீட் ட்ரெயின். இது ப்ரஸல்ஸ் வழியாகத்தான் ஜெர்மனி வருகிறது. 1996 இல் இருந்து இந்த ட்ரெயின் ஓடிக்கிட்டு இருக்கு. இப்போ 23 வருஷம் ஆச்சு !. பிரமாதமான சர்வீஸ்.


திங்கள், 21 அக்டோபர், 2019

மௌனத்தின் குரல் – ஒரு பார்வை

மௌனத்தின் குரல் – ஒரு பார்வை


இந்த விமர்சனம் அமேஸானில் ”மொழிபெயர்ப்பு நூல்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

சூரியப்ரபை சந்திரப்ரபை.

சூரியப்ரபை சந்திரப்ரபை.

விவசாயம் பொய்த்துக் கொண்டிருந்தது. தண்ணீர் வரத்து இல்லாமல் கொள்ளிடம் கருவாட்டு மணலாய்ச் சுருண்டிருந்தது. கால்வாயும் வாய்க்காலும் வெள்ளமாய்ப் பொங்கி மடைதிறந்து முப்போகம் விளைந்த பூமியில் இன்று போர் போட்டு ஒரு போக விவசாயம். வந்தால் வெள்ளமும் புயலும் வந்து கெடுக்கிறது. இல்லாவிட்டால் பாயிவரப்பான்கள் அணையைத் திறக்க மாட்டேன் என்கிறான்கள். ”கோபாலா காப்பாத்து.” கவலையோடு பட்டாலையில் குறிச்சியில் சாய்ந்திருந்தார்கள் ஆவுடையப்பன் செட்டியார்.
”அப்பச்சி” என்று அழைத்தாள் லெச்சுமி. மாசமான வயிறு சொலிந்து இருந்தது. லேசான சோகையோடு கால் மாற்றிக் கால் வைத்தபடி நின்றிருந்தாள். வலி பின்னி எடுத்தது. இது சூட்டு வலியோ.
”சொல்லாத்தா. இடுப்பை நகத்துதா. இந்தா தங்கண்ணன் கிட்ட காரை எடுக்கச் சொல்லி இருக்கேன் சுகுமாரம்மாவுக்கு ஃபோன் பண்ணி இருக்கேன். எப்ப வேணாலும் வாங்கன்னு இருக்காக. உங்க ஆத்தா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.”
”அப்பச்சி நீங்கதான் எனக்குத் தாய் தகப்பன்.”கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் லெச்சுமி. கண் கலங்கியது இருவருக்கும். 
”நீ கவலைப்படாதாத்தா. அக்கினியாத்தாளும் நரியங்குடிக் கருப்பரும் தொணையிருப்பாக.” கையைத் தட்டிக் கொடுத்துப் பிடித்துக் கொண்டார்கள் ஆவுடையப்பன் செட்டியார்.
’மூணும் பொண்ணாப் போச்சு. அடுத்தாவது மகளுக்கு மகனைக் கொடுங்கப்பா பழனி தெண்டாயுதபாணி. ராச கோபாலா ’
அப்பச்சி சாமி வீட்டைத் திறந்து உள்ளே போய் விபூதி எடுத்துவந்து பூசுவதற்கும் அடுத்தடுத்த வலி வெடுக் வெடுக்கென அவளைத் தாக்கவும் சுருண்டு கொண்டிருந்தாள் லெச்சுமி. ஆத்தாப்பொண்ணு கையைப் பிடித்து அமர்ந்திருந்த ஆவுடையப்பனுக்கு மகளைப் பார்த்து மனசு நிலை கொள்ளவில்லை.

வெள்ளி, 18 அக்டோபர், 2019

கருணை விழிகள் – ஒருபார்வை


கருணை விழிகள் – ஒருபார்வை


இந்த விமர்சனம் அமேஸானில் ”மொழிபெயர்ப்பு நூல்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்

அர்த்தமுள்ள இந்துமதம் – ஒர் பார்வை.


அர்த்தமுள்ள இந்து மதம் – ஒர் பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வியாழன், 17 அக்டோபர், 2019

மனைவி கிடைத்தாள் – ஒரு பார்வை


மனைவி கிடைத்தாள் – ஒரு பார்வை



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.

செவ்வாய், 15 அக்டோபர், 2019

துரோணர் சந்தித்த சோதனைகள். தினமலர் சிறுவர்மலர் - 37.

துரோணர் சந்தித்த சோதனைகள்.
”வில்லுக்கொரு விஜயன்” என்று நாம் அர்ஜுனன் பற்றிப் பெருமையாகக் கூறுகிறோம். இயற்கையாகவே பாண்டவரிலும் கௌரவரிலும் அவன் திறமையானவனாக இருந்தாலும் அவனை இன்னும் ஜொலிக்கச் செய்ய துரோணர் சில சோதனைகளைச் சந்திக்க வேண்டி வந்தது. அதுமட்டுமல்ல. அவர் வாழ்வே சோதனை மயம்தான் அது என்ன என்று பார்போம் குழந்தைகளே.
பரத்துவாஜ முனிவரின் புதல்வர் துரோணர். அவரின் தாய் பெயர் கிருதசி. துரோணருக்கும் கிருபாசாரியாரின் தங்கை கிருபிக்கும் திருமணம் முடிந்து அஸ்வத்தாமன் என்ற அழகான குழந்தை பிறந்தது. அவன் சிரஞ்சீவியாக இருப்பான் என்று ஈசனிடம் வரம் பெற்றுப் பிறந்தவன். துரோணர் பரசுராமரிடம் வில் வித்தை பயின்றவர். என்ன இருந்து என்ன துரோணரை வறுமை வாட்டியது.
சிறு குழந்தையான அஸ்வத்தாமன் பாலுக்கு அழும்போதெல்லாம் சாதக்கஞ்சியைப் பால் என்று புகட்டும் துயரத்துக்கு ஆளானாள் கிருபி. அப்போதுதான் துரோணருக்குத் தன் குருகுல நண்பரான துருபதன் என்ற பாஞ்சால தேச அரசன் தான் பட்டத்துக்கு வந்ததும் தன் நாட்டில் பாதியைத் தருவதாக நட்புமுறையில் சொன்ன வாக்கு நினைவு வந்தது.

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களுள் ஒருவராக..

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் காரைக்குடி புத்தகக் கண்காட்சியும் இணைந்து நடத்தும் இரண்டாவது புத்தகக் கண்காட்சி  - 2019, காரைக்குடி சுபலெக்ஷ்மி மஹாலில் நடைபெற்று வருகிறது.


சனி, 5 அக்டோபர், 2019

அன்பாலே ஆண்டவனைக் கட்டிய பூசலார். தினமலர் சிறுவர்மலர் - 36.

அன்பாலே ஆண்டவனைக் கட்டிய பூசலார்.
ஒருவர் தன் வாழ்க்கையில் நிறைய உதவி செய்தவர்களை நினைத்து ”உங்களுக்கு மனசுக்குள்ள கோயில் கட்டிக் கும்பிடுறேன்” என்று புகழாரமாகச் சொல்வார்கள். நிஜமாகவே மனசுக்குள் கோவில் கட்டினார் ஒருவர். அதுவும் மாபெரும் ராஜா ஒருத்தர் கஷ்டப்பட்டுக் கட்டின நிஜக்கோயிலுக்குக் கூடப் போகாமல் அன்பாலே அமைந்த இந்த ஆலயத்துலதான் முதல்ல எழுந்தருள்வேன். ராஜாவே கட்டினதா இருந்தாலும் எல்லாம் அடுத்தபடிதான்னு சிவனே கனவுல சொன்னாராம். அது என்னன்னு பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
காஞ்சி மாநகரம். கைலாசநாதருக்காகக் கற்றளியில் மாபெரும் கோவில் அமைத்துக் கொண்டிருந்தான் மன்னன் காடவர்கோன். பார்ப்பவர் அனைவரும் வியக்கும் வண்ணம் மாபெரும் யாளிகளும் சிம்மங்களும் நந்திகளும், யானைகளும் கொண்டதாக உருப்பெற்றுக் கொண்டிருந்தது அந்தக் கோவில். அதன் கொடுங்கைகள் எல்லாம் கல்லாலே அமைக்கப்பட்டு பார்ப்பவர்க்கு அதுதான் உண்மையான கைலாயமோ என்று மயக்கம் ஏற்படும் அளவுக்கு இருந்தது.
அதே சமயம் தொண்டை நாட்டில் திருநின்றவூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்த பூசலார் என்ற எளியவர் இறைவனுக்குக் கோயில் கட்ட விரும்பினார். ஆனால் அவரிடம் அதற்கேற்ற பொருள் வசதி இல்லை.  ஆனால் மனதிலேயே கோவிலுக்குத் தேவையான கற்கள், மரம் ஆகியன இருப்பதாக எண்ணி பூமி பூஜை செய்து திருக்கோயில் கட்டும் பணியை ஆரம்பித்தார்.

வெள்ளி, 4 அக்டோபர், 2019

சிறுபிழையும் பொறுக்காத எறிபத்தர். தினமலர் சிறுவர்மலர் - 35.

சிறுபிழையும் பொறுக்காத எறிபத்தர்
ஒருவர் சிறுபிழை செய்தாலும் பொறுக்காமல் தான் ஏந்திய மழு என்ற ஆயுதத்தால் தண்டித்து விடுவார் எறிபத்தர் என்பார். அதுவும் அவர் உயிராய்க் கருதும் சிவனடியார்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் பொறுப்பாரா. தன் பரசு என்னும் ஆயுதத்தைக் கொண்டு அவர்களை தண்டித்தார் ஆயினும் அவர் சிவகணங்களின் தலைவராய் உயர்ந்தார் அது எப்படி எனப் பார்ப்போம் குழந்தைகளே.
கொங்குநாட்டில் கருவூர் என்ற ஊரில் மாசி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர் எறிபத்தர். இவர் அன்பும் பண்பும் ஒருங்கே கொண்டவராயினும் சிவபக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுக்க மாட்டார். அப்படி இடையூறு செய்தவர்களை தன் மழுப்படையால் தண்டித்து விடுவார். அவ்வளவு கோபக்காரர்.
ஒருமுறை சிவகாமியாண்டார் என்பார் சிவனுக்கு சார்த்த அதிகாலையில் எழுந்து தூய நறுமணமிக்க மலர்களைக் கொய்து தனது பூக்குடலையில் எடுத்துத் தலையில் சுமந்து கொண்டு திருக்கோயில் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அந்த அதிகாலையில் அலங்காரமாக நகர் உலா வந்து கொண்டிருந்தது புகழ்ச்சோழர் என்ற அரசரின் பட்டத்து யானை. கூடவே நான்கு பக்கமும் நான்கு பாகர்களும் யானையின் மேல் அமர்ந்து அங்குசத்தால் குத்தியபடி ஒருபாகனுமாக மொத்தம் ஐந்துபாகன்கள் சூழ அது நடந்து சென்று கொண்டிருந்தது.

வியாழன், 3 அக்டோபர், 2019

டைகர் & டர்ட்டில் மாஜிக் மவுண்டன். TIGER & TURTLE MAGIC MOUNTAIN.

இரும்பு அதிகமாகக் கிடைப்பதால் ஜெர்மனியில் இரும்பிலான சிலைகள் நினைவுச் சின்னங்கள், கலைச் சின்னங்களாக இங்கே நிறுவப்படுகின்றன.

அவற்றில் ஒன்றுதான் டைகர் டர்ட்டில் மாஜிக் மவுண்டன் என்பது. இதை அடையும் வழியே மிகப் பெரிய மாஜிக்தான். கிட்டே சென்று சேரும் வரை அது ஒரு மலை என்றோ அதன் மேல் இவ்வாறான மல்டிபிள் ஸ்டேர்கேஸ்  அமைப்பு இருக்கும் என்றோ நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

மாலை வேளைகளில் இங்கே நடைப்பயிற்சியாகவும் சைக்கிள் ஓட்டியும் வருகிறார்கள் மக்கள். செங்குத்தான (நெட்டுக்குத்தான ) ஏற்ற இறக்கங்கள் கொண்ட குறுகலான, முள் செடிகள் நிறைந்த பாதையில் சில இளையவர்கள் சென்றுவிட நாமோ விழி பிதுங்கி சுற்றிச் சுற்றி வந்து ரோட்டுப் பாதையில் மேலேறி வந்தோம்.

வந்தால் கண்ணைக் கட்டும் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம்.. இது வடமேற்கு ஜெர்மனியின் பதினைந்தாவது பெரிய நகரமான டூயிஸ்பர்க்கில் இருக்கிறது. ஆங்கர்பர்க் என்னுமிடத்தில் குட்டிக் குன்று இருக்க அதன் மேல் கால்வனைசேஷன் ஸ்டீல் எனப்படும் எஃகிரும்புடன் துத்தநாக கோட்டிங் கலவை கொண்டு தயாரிக்கப்படுவது.

2011 இல் கட்டப்பட்ட இது இருபத்தியொரு மீட்டர் உயரம் கொண்டது. இதை அமைக்க இரண்டு மில்லியன் யூரோ செலவாயிற்றாம். ( ஒரு யூரோ = 72/ ரூ )  . இதை வடிவமைத்தவர்கள் உல்ரிச் கெந்த் & ஹெய்க் மத்தர். (ULRICH GENTH & HEIKE MUTTER )



புதன், 2 அக்டோபர், 2019

வாசகசாலை: காரைக்குடி இலக்கிய சந்திப்பு கலந்துரையாடலில் எனது சிறுகதை.

#வாசகசாலை வழங்கும் "காரைக்குடி இலக்கியச் சந்திப்பு" மாதாந்திரத் தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகளில், இன்று காலை நடைபெறவுள்ள பதினொன்றாவது நிகழ்விற்கான அழைப்பிதழை உங்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.
இந்தமுறை நிகழ்வில் உரையாட உள்ள கதைகளுக்கான சுட்டிகள்:
தேனம்மை லெக்ஷ்மணனின் "சுப் சிப் ஆனந்தம்":
http://www.vasagasalai.com/sup-chip-anandham
சுரேஷ் பிரதீப்பின் "446 A":
http://vallinam.com.my/version2/?p=5224
ஈவண்ட் லிங்க்:
வாய்ப்புள்ள காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. மகிழ்ச்சி..!


காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளேன். நன்றி கற்பகவள்ளி, வாசகசாலை, இளமதி. ஆங்கிலக் கலப்பு அதிகம் இருப்பதால் அதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்திய வினைதீர்த்தான் அண்ணன் அவர்கட்கு நன்றி.

நான் பெங்களூரில் இருப்பதால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று என்ற ஆதங்கமும் உண்டு.