செவ்வாய், 10 செப்டம்பர், 2019

ஏலையா பத்ரிக்கையின் ஆசிரியர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள்.

ஏலையா என்றொரு பத்ரிக்கையின் ஆசிரியராய் இருந்து நடத்தி வந்தவர் மட்டுமல்ல. இன்றளவும் இராவணன் என்ற புனைபெயரிலும் தன் அசல் பெயரிலும் வெற்றிமணி, தமிழ் டைம்ஸ், அகரம் ஆகிய இதழ்களில் பல்வேறு கட்டுரைகள் எழுதி வருபவர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள். பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் சங்கத் தலைவர்,  ஐடிஎன் தொலைக்காட்சியின் ப்ரைம் நிகழ்ச்சிகள் நடத்துபவர் என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் இவர். இவரை ஜெர்மனி சென்றபின் சந்தித்தேன். புதியவர்கள் என்று கருதாமல் தம் குடும்பத்தில் ஒருவர் போல இவர்கள் குடும்பத்தினர் எம்மை நடத்தினார்கள். மிகுந்த மகிழ்வாய் இருந்தது.

2014 இல் முதன்முதலில் நண்பரானதும் உலக பெண்கள் தினத்துக்காக திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள் எம்மிடம் கேட்டதும் நான் உடனே இன்பாக்ஸில் இதை எழுதி அனுப்பினேன். ((அந்த வருடம் நிகழ்ந்த ஹம் காமாட்சி அம்மன் திருவிழாவில் எங்கள் சின்ன மகன் சபாரெத்தினம் திருமிகு முருகதாசன் அவர்களையும் திருமிகு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தான். ))
இது டோர்ட்மெண்ட் அம்மா உணவகத்தில் எடுத்தது :)


////உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பலரிடம் பெண் விடுதலை பற்றிய அவரவரின் பார்வையை எழுதி அனுப்புமாறு கேட்டிருந்தென். 26 எழுத்தாளர்களில் ஒருவராக எம்மோடு இணைந்து 'விழுதல் என்பது எழுகையே' என்ற கதை எழுதியவரும், கவிதைத் தொடரில் பங்குபற்றியவரும் எனது முகநூல்: வட்டத்தில் இருப்பவருமாகிய திருமதி.தேனம்மை லக்ஷ்மணன் அவர்களிடமும் இவ்வேண்டுகோளை வைத்தபோது இந்தியா கைதராபாத்திலிருக்கும் அவர் நேரமின்மைக்கு மத்தியிலும் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து அவர் எழுதி அனுப்பிய அவரது பார்வையைப் பதிவு செய்கிறேன்.
------------------------------------------------------------
பெண் விடுதலை பெண் சமத்துவம் பெண் உரிமை போன்றவை இக்கால கட்டங்களில் அடைந்து வரும் மாறுபாடு சிந்தனைக்குரியது. சென்ற நூற்றாண்டில் இருந்த அடக்குமுறையும் அடிமைத்தளையும் இப்போது அவ்வளவாக இல்லை. பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் தாங்கள் எண்ணியதை எய்துகிறார்கள். ஆனால் இது நகர்ப்புற மெட்ரோபாலிடன் நகரப் பெண்களுக்கும் வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கும் மட்டுமே பொருந்தும்.

சிறு நகரங்களில் பெண்களில் நிலைமை மெதுவாகவே முன்னேற்றமடைந்து வருகிறது. இப்போது வேலைக்குச் சென்று வரும் பெண்கள் அதிகரித்திருக்கிறார்கள். பொருளாதார சுதந்திரம் இருக்கிறது. இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். பல்வேறு கடினமான பணிகளிலும் இரவு பகல் பாராமல் பணியாற்றுகிறார்கள். வேலை என்று வரும்போது தீர்மானமாக ஜெயிப்பவர்கள் திருமணம் என்று வரும்போது சுயமாக முடிவெடுக்கும் திறனற்று இருக்கிறார்கள். அதே போல் எதிர்பால் நட்பு இணைய நட்பு பார்ட்டி கலாச்சாரம் ஆகியவற்றுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்துத் தங்களைச் சிக்கலில் ஆழ்த்திக் கொள்ளும் பெண்களும் பெருகி வருகிறார்கள்.

சிலர் திருமண உறவுகளுக்கு உரிய மரியாதையை அளிப்பதில்லை. குழந்தை குடும்பம் என்பதைத் தொல்லையாகக் கருதுகிறார்கள். சட்டங்களைக் காட்டிக் கணவர்களைப் பகடைக்காயாகப் பயமுறுத்துகிறார்கள். சம்பாதிக்கும் பணம் தரும் சுதந்திரத்தை அனுபவிக்க தனித்து வாழவே விரும்புகிறார்கள்.

என்னதான் எழுத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் எல்லாம் கிடைத்தாலும் சிந்தனையில் தம்மைச் சீர்படுத்திக் கொண்டு சமூகத்துடன் ஒன்றுபட்டு செயலாற்றுவதன் மூலமே உண்மையான பெண்விடுதலையை அடையமுடியும் என்பது திண்ணம்.///


ஜெர்மனி வந்ததும் எங்கள் இல்லம் வந்து சந்தித்தார்கள் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள். அது பற்றிய என் முகநூல் பதிவு இது.

Thiru Kandiah Murugathasan sir indru ennai sandhikka vanthirunthargal :)
#germany #Duisberg #Eelaiya

பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், ஐ டி என் என்ற ஜெர்மனி தொலைக்காட்சியில் பணிபுரிபவரும், 2014 இல் இருந்து எனது முகநூல் நண்பருமான திரு கந்தையா முருகதாசன் அவர்களை சந்தித்ததில் பெருமகிழ்வு. ”விழுதல் என்பது எழுகையே” என்ற தொடரிலும் ”மலரும் முகம் பார்க்கும் காலம்” என்ற கவிதைத் தொடரிலும் 25 சர்வதேச எழுத்தாளர்களுடன் நானும் பங்களிக்கச் செய்தவர் திரு முருகதாசன் அவர்கள்.

இன்று அவருடனான உரையாடல் தமிழக, ஜெர்மனி, ஈழம் பற்றிய பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. எல்லாவற்றையும் மிக ஆழமாகவும் விரிவாகவும் அலசும் திரு முருகதாசன் அவர்களை சந்தித்ததில் எனக்கும் என் மகனுக்கும் மிகுந்த மகிழ்வு.

அவர் மனைவி இன்று எங்கள் இல்லம் வர இயலாததால் எங்களுக்கும் அவரது ஸ்பெஷல் தயாரிப்பான வாய்ப்பன் எனப்படும் இனிப்பு அனுப்பி இருந்தார்.

இனிய நட்பைக் கொடுத்த முகநூலுக்கு எனது நன்றிகளும். :) வாழ்க வளமுடன் :)


அஹா. உங்களை சந்தித்ததில் எனக்கும் பெருமகிழ்வு. அன்பும் மகிழ்ச்சியும் சார்.

இது திருமிகு கந்தையா முருகதாசன் அவர்களின் முகநூல் பதிவு.

////முகநூல் வழியாக இணைந்த தமிழகச் சகோதரியைச் சந்தித்த இனிய தருணம்.

2014 ஆண்டில் எனக்கான முகநூல் கணக்கொன்றை ஆரம்பித்த போது தமிழகத்தைச் சேர்ந்த திருமதி.தேனம்மை லட்சுமணணன் அவர்களும் என்னை தனது முகநூல் வட்டத்தில் இணைத்துக் கொண்டார் .

இந்த உறவு புரிதலுடன் பயனுள்ள நல்ல உரையாடல் கருத்துப் பதிவுகள் எனத் தொடர்ந்த வேளை நாம் 26 எழுத்தாளர்களை இணைத்து எழுதிய விழுதல் என்பது எழுகையே என்ற தொடர்கதையில் சகோதரி திருமதி.தேனம்மை லட்சுமணணன் அவர்களும் எம்முடன் இணைந்து அத்தொடரில் எழுதியது மட்டுமல்ல கதையின் இறுதி முடிவை எழுதிய நான்கு எழுத்தாளர்களில் ஒருவராக அவரும் எழுதினார்.

இந்நட்பு தொடருகையில் டுசில்டோப் நகரத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மகனை மூன்றுவருடங்களுக்கு முன்பு கம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் சந்தித்தேன்.

இவ்வாறு எமது புரிதல் உள்ள நட்புத் தொடர்கையில் அண்மை நாட்களில் கம் காமாட்சி அம்பாள் ஆலய ம் பற்றிய பதிவை அவருடைய முகநூலில் பார்த்ததும் யேர்மனியிலா நிற்கிறீர்கள் என மெசஞ்சர் வழியாக கேட்ட போது Duisburg நகரில் மகன்வீட்டில் நிற்பதாக கூறிய போது நான் வந்து சந்திக்கிறேன் என்றவுடன் வருமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார்.

இன்று சில மணித்தியாலங்களுக்கு முன்பு அவரைப் போய்ச் சந்தித்தேன்.அவருடைய மகனும் அவரும் என்னை அன்புடன் வரவேற்றனர்.எனது மனைவியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்ட அவர் மனைவியையும் அடுத்தமுறை அழைத்துக் கொண்டு வாருங்கள் எனக் கூறினார்.நேற்றைய தினம் கேவலார் மரியன்னையின் திருப்பலிப்பூசைக்குச் சென்று மாலைக்குப் பின் திரும்பியதால் மனைவிக்கு களைப்பும் சோர்வுமிருந்ததால் இன்னொருமுறை மனைவி வருவதாகக் கூறியிருந்தார்.

என்னை அன்புடன் வரவேற்ற மகனும் தாயும் அடை என்ற உணவைச் செய்து தந்து உபசரித்தார்கள்.அடைக்கு சட்ணியும் அதற்கு நல்லெண்ணையும் விட்டுத் தந்தார்கள்.கேசரியும் தந்தார்கள்.சுவையான கோப்பி தந்தார்கள்.

அவர் எழுதிய நூல்களை பார்வையிட்டேன்.ஒரு கவிதை நூலில் ஒவ்வொரு பூக்களையும் பெண்களின் சூழ்நிலையையும் ஒப்பிடடு எழுதியிருந்தார்.யாழ்ப்பாணத்தில் அவர் குறிப்பிட்டிருந்த பூக்களை என்ன பெயர் சொல்லி அழைப்பார்கள் என்பதைக் கலந்துரையாடினோம்.

இக்குறுகிய நேரச் சந்திப்பில் இலக்கியம் தொட்டு யாழ்ப்பாண உணவுப் பழக்க வழக்கங்கள் தமிழக உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி உரையாடிய வேளை யேர்மனிய வாழ்க்கை முறை அவர்களின் பண்பு பற்றியும் கொஞ்சம் உரையாடினோம்.

அவர் எழுதிய புத்தகங்களை டோட்முண்ட்ட நகரில் உள்ள தமிழ் அரங்கம் நூலகத்தில் கொடுக்கவிருக்கிறார்.முகநூல் வழியாக அறிமுகமான Nimmy Raj வீட்டுக்கும் அவர்கள் அழைததுப் போயவந்ததாக் கூறினார்.

மிகவும் மகிழ்ச்சியான புரிதல் உள்ள மனநிறைவையும் தந்த சந்திப்பாக திருமதி.தேனம்மை லட்சுமணணன் அவர்களினதும் அவருடைய மகனுடனான சந்திப்பு அமைந்ததையிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

முகநூல் வழியான தொடர்பு இவ்வாறு சந்திப்புக்கு வழிவகுத்ததை நான் அற்புதமாகவே கருதுகிறேன:அவர்களிடமிருந்து விடைபெற்ற போது தோடம்பழம் தந்து (Oranges) அனுப்பி வைத்தனர்.

எனது மனைவியையும் அழைத்துக் கொண்டு அங்கு செல்ல வேண்டும் அவர்களையும் அழைக்கப் போகிறோம்.

நல்ல அன்புநிறை நட்பைக் கொடுத்த முகநூல் நிறுவனத்திற்கு நன்றிகள்.///

நன்றி சார் :)


நேற்று மதியம் எங்கள் வீட்டிற்கு திரு. கந்தையா முருகதாசன் அவர்களும் திருமதி. லைலா முருகதாசன் அவர்களும் வந்திருந்தார்கள்.சொல்லபோனால் நாங்கள் செய்த உணவை விட அவர்கள் அதிகமாகக் கொண்டு வந்திருந்தார்கள். அதுபோக ஒவ்வொரு முறையும் பரிசுப் பொருட்களால் எங்கள் வீட்டை நிரப்பி விடுகிறார்கள். !!!

லைலா மேம் ஒரு சந்தோஷப் பந்து. எதற்குமே மிக ஜாலியாகப் பதில் சொல்வார். ஜோவியலாகப் பழகினார்.  ஊர் , ப்ரயாணம், அலுவலகம், வீடு பற்றிய பல்வேறு குறிப்புகள் கொடுத்தார்.

முதல்நாள் இங்கே நடந்த இசைத்தென்றல் நிகழ்வை நடத்திய களைப்புத் தெரியாமல் திரு.கந்தையா முருகதாசன் சார் அவர்களும் எனர்ஜிட்டிக்காக வந்திருந்தார்கள். இவர்களிடம் நான் வியக்கும் விஷயம் தொடர் உழைப்பு, விடா முயற்சி, ஊக்கம் கொடுப்பது ஆகியன. புதியவர்கள் என்று கருதாமல் தங்களைப் போல நடத்துவார்கள்.

திரு. கந்தையா முருகதாசன் அவர்கள் பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் ஐடி என் தொலைக்காட்சியில் ப்ரைம் நிகழ்ச்சிகளை நடத்தியும்  வருகிறார். இன்னும் பல்வேறு தமிழ்ச் சேவைகளையும் செய்து வரும் இவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள ஏராளமாக இருக்கிறது. வழி நடத்துங்கள். தொடர்கிறோம்.

தங்கள் தமிழ்ச் சேவைக்கும் பன்னாட்டுப் புலம்பெயர்  எழுத்தாளர் சங்கச் செயல்பாடுகளுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். :)

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் திரு. கந்தையா முருகதாசன் சார்.

ஐடி என் தொலைக்காட்சிக்காக ஒரு பேட்டி எடுத்தார். உடையும் அதன் பின்னணியும் ஒரே நிறத்தில் இருந்ததால் அந்தப் பேட்டி ஒளிபரப்ப இயலாததாகிவிட்டது. எனவே மலரும் நினைவுகள் என்றொரு பேட்டி எடுத்தார். அது எப்போது வரும் எதில் என்னென்ன சொல்லி இருக்கிறேன் என்று திகிலான ஆவலோடு காத்திருக்கிறேன் :)


///யேர்மனியில் பொறியிலாளர்களாக வேலை செய்யும் தனது மகனையும் மருமகளையும் பார்க்க வந்த தமிழகத்தைச் சேர்ந்து விஞ்ஞானப் பட்டதாரியும் எழுத்தாளருமான திருமதி.தேனம்மை லட்சுமணணன் அவர்களை நேற்றைய தினம் ஐரிஎன் தொலைக்காட்சிக்காக நேற்றைய தினம்(17.08.19) நேர்காணல் கண்டேன். எம்மால் 26 எழுத்தாளர்களை இணைத்து எழுதிய "விழுதல் என்பது எழுகையே" என்றதொடர்கதையில் இணைந்து எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.முகநூல் ஊடாக தொடர்புகளை பேணியே இத்தகு நல்லறவை வளர்க்கக்கூடிய சாத்தியம் ஏற்பட்டது.முகநூல் வழியாக நல்ல நட்பைப் பேணலாம் என்பதற்கு நாம் உதாரணமாக இருக்கிறோம்.இவருடனான நேர்காணல் விரைவில் ஒளிபரப்பப்படும்.///


////முகநூல் நட்பு இன்று பாசமிகு குடும்ப நட்பாக மாறியிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதே.திருமதி.தேனம்மை லட்சுமணணன் அவர்களும் அவருடைய மகனும் எம்மை அழைத்து மதிய விருந்து தந்தார்கள;. அவர்களின் ஊர்ச்சாப்பாடு சுவையாக இருந்தன.பாசிப்பயறில் பாயாசம் செய்து தந்தார்கள் மிகவும் சுவையாகவிருந்தது..

அவர்களின் வீட்டிலிருந்து திரும்பி வரும் போது "அருமையான குடும்பம் தாயும் மகனும் அருமையானவர்கள் என்று எனமது மனைவி சொல்லிக் கொண்டே வந்தார்..வீட்டுக்கு வந்தவுடனேயே மகளுக்க தொலைபேசியில் அவர்களின் சிறப்பைச் சொன்னார்கள:

திரு.திருமதி.லட்சுமணன் தேனம்மை தம்பதிகளின் மகன் இனி எங்களுக்கும் மகனே. அன்பானவர்களை பண்பானவர்களை எங்களுக்கு நண்பர்களாக அறிமுகம் செய்து வைத்த இறைவனுக்கு நன்றிகள். அவர்கள் என்றும் மகிழ்ச்சியாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.///

டிஸ்கி :- இத்தகைய அன்புக்கெல்லாம் என்ன கைமாறு செய்வேன். அன்பையும் நன்றியையும் மகிழ்வோடு அளிப்பதைத் தவிர. :) எங்களை வழி நடத்துங்கள். தொடர்கிறோம். 

3 கருத்துகள்:

  1. படிக்க மறக்காதீர்கள்
    நீங்களும் திருக்குறள் எழுதலாம்!
    http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  2. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)