புதன், 18 செப்டம்பர், 2019

ரியாத் தமிழ்ச்சங்கப் போட்டியில் சூலாட்டுக்குட்டிக்கு ஊக்கப்பரிசு.

மகிழ்வுடன் பகிர்கிறேன். மூன்றாவது முறையாக ரியாத் தமிழ்ச் சங்கத்தால் தொடர்ந்து என் கவிதைகளும் சிறுகதையும் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வருடம் ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது கதையான “சூலாட்டுக்குட்டி “ ஊக்கப் பரிசு பெற்றிருக்கிறது.


தேர்ந்தெடுத்த ரியாத் தமிழ்ச் சங்கத்தினருக்கும் நெறியாள்கைக் குழுவினருக்கும், நடுவர் பெருமக்களுக்கும் என் பேரன்பும் நன்றியும்

///பொதுவாக, போட்டி, அதுவும் உலகளாவிய சிறுகதைப் போட்டி நடத்துவது என்பது உள்ளபடி எளிதான காரியமன்று. மிகச் சிறப்பாக இந்தப் பெரும்பணியை சிரமேற்கொண்டு சாதித்துக்காட்டிய ரியாத் தமிழ்ச் சங்க இலக்கிய அணியினருக்கும், நெறியாள்கைக் குழுவினருக்கும், சிறந்த நடுவர்களாகப் பணியாற்றிச் சிறப்பித்த எழுத்தாளப் பெருமக்கள் திரு.களந்தை பீர்முகம்மது ஐயா, திருமதி.வேதா கோபாலன் அம்மா, திரு.ரிஷபன் ஸ்ரீனிவாசன் ஐயா, திருமதி. தேன்மொழி(நான் ராஜாமகள்) அம்மா, திரு.அய்யனார் விஸ்வநாத் ஆகியோருக்கும்
இதய நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, முழுக்க முழுக்க நடுவர்களின் பரிசீலனையின் படி அமைந்த முடிவுகளை இவண் வெளியிடுகிறோம்.
நலக்குறைவால், சொன்னபடி வெள்ளியன்றே பதிவிட இயலாமைக்கு எங்கள் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்
முதலிடம்: பாஷாந்தரம் - திரு. மிஸ்பாஹுல் ஹக்.
இரண்டாமிடத்தில் இரண்டு கதைகள் சம நிலையில் என்பதால் பரிசு பகிரப்படும்
1). உதைக்கப்படாத கால்பந்து - திரு. விஜய ராவணன்
2). வீராப்பு - திரு.பரிவை சே. குமார்
மூன்றாமிடம்
காமிலா - திரு. ரமேஷ்
ஆறுதல் பரிசுக்குரியவை ஐந்திலிருந்து ஏழாகிறது.
1). டெர்ன் பறவை - திரு.திரு
2). தலைவர் இருக்கிறார் - திரு.RS. ராஜா
3). லொள்ளா சாச்சப்பா - திரு. சாலை பஷீர்
4). கேடு இல் விழுச்செல்வம் - திரு. ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
5). இனி ஒரு விதி செய்வோம் - திரு. அன்னக்கொடி கமலநாதன்.
6). இரட்டைக் கையுறை - திரு. சுரேஷ் ராம்
7). மலர் - திருமதி.உமா மோகன்
மேலும் சில ஊக்கப் பரிசுக்குரியவை:
1). சூலாட்டுக்குட்டி - திருமதி.தேனம்மை
2).நாய்ச்சங்கிலி - திருமதி. சாந்தி
3). அந்தி - திரு. கோகிலன்
அனைவருக்கும் இதய வாழ்த்துகள்

நன்றி ரியாத் தமிழ்ச்சங்கம், நெறியாள்கைக் குழு, நடுவர்கள் மற்றும் பரிசுபெற்ற அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். 

3 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் அக்கா...
    நானும் இருக்கேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    சிறப்பிடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் குமார் சகோ :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)