சனி, 14 செப்டம்பர், 2019

ஸோலிங்கனில் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர் கௌசியுடன் ஒரு சந்திப்பு.

பிரபல வலைப்பதிவர், எழுத்தாளர், மூன்று நூல்களின் ஆசிரியை, ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர், யேர்மனி தமிழ்க் கல்விச்சேவை இருபத்தியைந்தாம் ஆண்டு மலர் உறுப்பினர், வெற்றிமணி பத்ரிக்கையின் கட்டுரையாளர், அன்புத்தோழி கௌரி சிவபாலன் ( கௌசி ) அவர்களை சந்திக்கும் பாக்யம் கிட்டியது. :) இப்போது அமேஸானிலும் நூல்கள் வெளியிட்டு வருகிறார்.

முகநூலில் உள்டப்பியில் வந்திருக்கிறேன் என்று தெரிவித்த உடனே தனது ஸோலிங்கன் இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். என் சின்ன மகன் ஜெர்மனியில் இருக்கிறான். அவனுடன் அவர்கள் இல்லத்துக்குச் சென்றபோது ரயில்வே ஸ்டேஷனுக்கே அவரது கணவர் சிவபாலன் அவர்கள் கார் எடுத்துக்கொண்டு அழைத்துச் செல்ல வந்துவிட்டார்.

இதுதான் கௌசியின் நூலகம். இதன் எதிரில்தான் அவரது மடிக்கணனியும் இருக்கிறது.  அவரது மூன்று நூல்களை எனக்குப் பரிசாக அளித்தார்.  முக்கோண முக்குளிப்புகள், வெள்ளை உடைக்குள் கரையும் பருவம், என்னையே நானறியேன்.




ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர் என்ற முறையில் தமிழகத்து எழுத்தாளர், வலைப்பதிவர் என என்னை வரவேற்றுப் பொன்னாடையும் போர்த்திக் கௌரவித்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.


அவரது கணவர், மகள் மற்றும் எனது மகனோடு.

அவரது மகள் இங்கே யூனிவர்சிட்டியில் பயின்று வருகிறார். மிக அழகான இல்லம் இவர்களுடையது.


வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்ததோடு மட்டுமல்ல மிக சுவையான விருந்தும் படைத்தார்கள். பாசுமதி அரிசி சாதம்.,பரங்கிக்காய் கறி, தால், கத்திரிக்காய் சம்பல் , ரசம், பாகற்காய் சாலட், வேப்பம்பூ வடை, நார்த்தங்காய் ஊறுகாய், அப்பளம் , மோர்மிளகாய், தயிர் என்று பலமான சாப்பாடு.

அதோடு மட்டுமல்ல வீட்டுக்கு அழைக்கும்போதே சோலேஸ் கேஸில், மிக உயரமான முங்ஸ்டன் ப்ரிட்ஜ், தொங்கு ரயில் ஆகியன பார்க்கலாம் எனச் சொன்னார்.

அன்று மழையும் தண்ணியுமாக இருந்தபோதும் கௌசியும் அவரது கணவரும் எங்களை அவர்களது காரில் அழைத்துச் சென்று ஷ்லாஸ்பர்க் கோட்டை, மாங்க்ஸ்டன் ப்ரிட்ஜ், வூபர்டால் சஸ்பென்ஷன் ரயில் ஆகியன காண்பித்து குளிருக்கு இதமாய் சுடச் சுட டீ அளித்து அனுப்பினார்கள்.
இது ஷ்லாஸ்பர்க் கோட்டையில்.


இது உலகிலேயே மிக உயரமான மாங்க்ஸ்டன் ரயில்வே பாலத்தின் அடியில்.  இது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது.


இதை விளக்குகிறார் கௌசி. அடுத்து வூபர்டால் சஸ்பென்ஷன் ரயில்வே ஸ்டேஷனுக்குக் கொண்டுபோய் விட்டார்கள். இதுவும் நூறாண்டுகளுக்கு மேலாக ஓடுகிறது. இவை எல்லாவற்றையும் அடுத்து அடுத்து தனித்தனி இடுகைகளாய் எழுதுவேன்.

ஜெர்மனியிலே 30 வருடங்களுக்கு மேலாக இருப்பவர்கள் கூட பார்க்காத இடங்களை எல்லாம்  எங்களை அழைத்துச் சென்று காண்பித்தீர்கள் கௌசி. மிக்க மகிழ்வாக இருந்தது. அன்பும் நன்றியும். நீங்களும் எங்கள் இல்லம் வாருங்கள். எங்கள் ஊர்ப்பக்க வீடுகளை  மற்றும் செட்டிநாட்டு  அரண்மனையை எல்லாம் பார்க்கலாம். :)

சொல்ல மறந்துட்டேனே. நாளை வெற்றிமணி என்று ஐரோப்பாவில் வெளிவரும் தமிழ்ப் பத்ரிக்கையின் இருபத்தியைந்தாம் ஆண்டு விழா. அதிலும் கட்டுரைகள் அளித்து வரும் கௌசி அரங்க நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார். அப்புறம் அமேஸானில் இவரது நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதற்கும்  வாழ்த்துக்கள் கௌசி.  வித்யாசமான கதைக்கரு கொண்டவை பல படைப்புகள். மேற்குலக சிந்தனைகளை அங்கீகாரம் செய்து கொள்பவர் கௌசி. அதன் வீர்யத்தை எளிமையாகத் தன் எழுத்துக்களில் தருகிறார். எனவே அனைவரும் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டுகிறேன். :)

3 கருத்துகள்:

  1. கௌரி சிவபாலன் (கௌசி) அவர்கள்
    சிறந்த தமிழறிஞரும் கூட...
    அவரது பணிகளைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இந்தியா வந்தாச்சு பாலா சார்

    ஆம் யாழ்பாவண்ணன் சகோ. நன்றி

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)