சனி, 2 பிப்ரவரி, 2019

சாட்டர்டே போஸ்ட். :- திரு விவிஎஸ் சார் கூறும் தலைகீழ்ப் பாடம் !


இந்த வாரமும் மிகப் புதிதான வங்கி, காசோலை சார்ந்த தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறார் திரு விவிஎஸ் சார் அவர்கள்.

தலைகீழ்ப் பாடம் !


காசோலையில் தமிழில் கையெழுத்து போட வேண்டும்.   சமூக ஊடகங்களில் இந்தக் கருத்து வலம் வருகிறது.  அதாவது தாய் மொழியில் கையொப்பம்.  நல்ல விஷயமே. 


தமிழில் கையொப்பம் இட்டால் ஒரு வங்கி அதை நிராகரிக்க முடியாது.  கையொப்பம் என்பது எழுத்து அல்ல.  அது ஒரு படம்.  நான் ஒரு குரங்கின் படத்தைக் கூட ”ஸ்பெசிமன்” கையொப்பமாகத் தரலாம். 

அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதையே எப்போதும் அதே வடிவில் வரைய வேண்டும்.  இல்லாவிட்டால் செக் செல்லுபடி ஆகாது.

கையொப்பத்தில் மூன்று முக்கிய கூறுகள் உண்டு.  முதலாவது நீள அகலம்.  இரண்டாவது எழுத்துகளின் கோணம்.  நேராக நிற்கும் எழுத்துகள்.  சாய்மானம் போன்றவை.  மூன்றாவது கொஞ்சம் நுட்பமானது.  பேனாவின் அழுத்தம்.   ஃபோர்ஜரியா என்று ஆராய இந்த மூன்றாம் விஷயத்தைத்தான் அலசுவார்கள்.

முன்பெல்லாம் செக்கில் திருத்தங்கள் செய்யலாம். தற்போது அனுமதியில்லை.  ஆனால் அதை ஒரு கையொப்பத்தைக் கொண்டுதான் நம் சம்மதத்தைத் தெரிவிக்கிறோம். 

அதாவது தவறை அடித்து விட வேண்டும்.  அங்கே கரெக்‌ஷன் செய்ய வேண்டும்.  அதை ஆத்தரைஸ் செய்ய கையொப்பம் இட வேண்டும்.  அதிலும் ஒரு சூட்டுமம் உண்டு.  அந்தக் கையொப்பமும் ஸ்பெசிமன் அளவே இருக்க வேண்டும்.  அதே வடிவம் ஆனால் அளவில் சுருங்கியது ”செல்லாது செல்லாது”  (நாட்டாமை விஜயகுமார் குரலில் படிக்கவும்)

இன்றைய சூழலில் கையொப்பங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன.  அதன் நகலை எடுத்து செக்கில் உள்ள கையொப்பத்தின் மீது வைக்கும் வசதி இன்னும் சிறிது காலத்தில் வந்து விடும்.  சிக்னேச்சர் சரியாக இருக்கிறதா என்று சோதிக்க.

அக்கவுண்ட் ஓப்பனிங் ஃபார்மில் ஐந்தாறு கையொப்பங்கள் வாங்கிக் கொள்வார்கள்.  செக்கில் நாம் போடும் கையொப்பம் அதில் ஏதேனும் ஒன்றோடு ஒத்துப் போனால் போதும். 

நான் பணியாற்றிய காலத்தில் ஒரு செக் வங்கிக்கு வந்தது.  கையொப்பம் கன கச்சிதமாகப் பொருந்தியது.  ஆனால் மேலாளர் அதைத் திருப்பி அனுப்பினார்.  அக்கவுண்ட் ஹோல்டர் ஃபோனில் கூப்பிட்டு சத்தம் போட்டார்.

மேலாளர் விளக்கியதும் ஸாரி சொன்னார்.  கையொப்பம் சரிதான்.  ஆனால் அந்த வாடிக்கையாளரின் ஸ்பெசிமன் இரண்டு கையொப்பங்களைக் கொண்டது.  அதாவது எல்லா இடங்களிலும் இரண்டு முறை போடுவார்.  இங்கே ஒரு முறை போட்டு அனுப்பினார்.  அதனால் ரிட்டர்ன். 

மாதிரி கையொப்பத்தோடு தேதியைப் போடக் கூடாது.  ஏனெனில் பின்னாளில் அந்தத் தேதியைப் போட முடியாது அல்லவா !

இடதுகைப் பெருவிரல் ரேகை ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று.  ஆனால் வாடிக்கையாளர் நேரே வங்கிக்கு வர வேண்டும்.  செக்கை இன்னொருவர் மூலமாக அனுப்ப முடியாது.  வந்து ரேகை பதிய வேண்டும்.  

அதற்கு கருப்பு நிற மையைப் (மசியைப்) பயன்படுத்துவதுதான் சரி. ஆனால் நீல நிற இங்க் கொண்ட ரப்பர் ஸ்டாம்ப் பேட்-தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு கணக்கில் ஒருவர் கைநாட்டு இன்னொருவர் கையொப்பம்.  இந்தக் காம்போ ஒப்புக் கொள்ளப்படுவதில்லை.  இரண்டுமே கைநாட்டு.  இதற்கும் தடாதான். 

சரி,  ஒரு கையொப்பம் சரியாக இருக்கிறதா என்ற சந்தேகம் வரும் போது எப்படி ஒப்பு நோக்க வேண்டும் தெரியுமா ?

மாதிரி கையொப்பத்தையும் காசோலைக் கையொப்பத்தையும் தலைகீழாகப் பிடித்துப் பார்க்க வேண்டும்.  ”விலகல்கள்” துல்லியமாகத் தெரியும்.   தலைகீழ்ப் பாடம் !

டிஸ்கி :- காசோலை, கைரேகை, கைநாட்டு பற்றியெல்லாம் மிக விரிவாகக் கூறினீர்கள் விவிஎஸ் சார் மிக அருமை. & மிக்க நன்றி 

3 கருத்துகள்:

  1. ஏழுமலை அவர்களின் கையெழுத்தில் ஏழுமலைகளை பார்த்து குபுக்கென்று சிரித்து விட்டேன்.

    ஆக மலைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அதில் ஒரு மலை குறைந்தாலும் செக் ரிடர்ன். (எல்லாம் இந்தப் பதிவைப் படித்துக் கற்றுக் கொண்டது தான்.

    பதிலளிநீக்கு
  2. ஏழுமலை என்பதைப் பார்த்து சிரித்துவிட்டோம். அது ஸ்பெசிமென் - படம் சிக்னேச்சரோ?!

    நிறைய பயனுள்ள தகவல்கள் குறிப்பாக செக்கில் டாக்குமென்டில்ச் நமது கையெழுத்து பற்றியது..

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜிவீ சார் :)

    நன்றி துளசி சகோ ஆமாம். நன்றி கீத்ஸ்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)