வியாழன், 6 டிசம்பர், 2018

அழகப்பா பல்கலைக்கழகத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாழ்த்துரை.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் ஆறாம் தேதியன்று தமிழ்ப்பண்பாட்டு  மையத்தின் சார்பில் 20-ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்களின் பன்னாட்டுக் கருத்தரங்கம் ( 2018 ) நடைபெற்றது.

சென்ற ஆண்டு நடைபெற்ற ஆசியான் கவிஞர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு  36 கவிஞர்களுள் ஒருவராகக் கவிதை சொல்லும் வாய்ப்புக் கிட்டியது.  அது மலாயில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகவும் வெளிவந்தது. அங்கேயே மலாயிலும் வாசிக்கப்பட்டது.



இந்த வருடம் சிறுகதை புதின ஆசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு கருத்தரங்க ஆய்வுக் கோவையைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கும் அரிய வாய்ப்பும் கிட்டியுள்ளது.



நான் மிகவும் மதிக்கும் பேராசிரியர் அய்க்கண் ஐயா அவர்களுடனும் பேராசிரியர் பழனி இராகுலதாசன் ஐயா அவர்களுடனும் வலைப்பதிவ எழுத்தாளரான நானும் உடன் அமரக் கிட்டியுள்ள வாய்ப்புக்கு அழகப்பா பல்கலைக் கழகத்துக்கும் பேராசிரியர் செந்தமிழ்ப்பாவை அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 

2 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. கருத்தரங்க நிகழ்சிகளைச் சுவைபடத் தொகுத்து வழங்கியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)