திங்கள், 18 டிசம்பர், 2017

தேன் பாடல்கள். 28. அகக்கடலும் காடன் காதலும்.

சரசர சாரக்காத்து வீசும்போது சாரைப் பார்த்துப் பேசும்போது இந்தப் பாடல் முழுவதுமே ஒருமாதிரி இயல்பும் ரிதமும் மனதைக் கவரும்.  ஹீரோயினுக்கென்று எந்த விசேஷ அலங்காரமும் இல்லாததுபோல சுற்றி இருக்கும் இயற்கைக் காட்சியும் யதார்த்தமாக இருக்கும்.


கடல் படத்தில் இரு பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதில் இது ரொம்ப பிடிக்கும். அடியே அடியே என்ன என்ன செய்யப்போறே. என்று கேட்பது அழகு.  கார்த்திக் மகனும் ராதா மகளும் வித்யாசமான அழகுள்ள ஜோடி. காட்டுத்தனமான அழகுன்னும் சொல்லலாம்.


  

பில்லாவின் இந்தப் பாட்டு இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ.. என்று தொடர்வது மெல்லிய உணர்வுகளால் பின்னப்பட்டிருந்தாலும் அலையடிக்கும் பின்னணி மிகப் பொருத்தம். அகக்கடல்.

  

மனதை நெருடும் காட்சிகள் ஆனால் மறக்க முடியாத காதல் படம். பழகி பழகிக் காதலிப்பது இதுதான். அதன்பின் பிரியமுடியாமல் தவிப்பதும் இதுதான். இறப்புக்குப் பின்னும் காதல் என்பது வித்யாசம். அவளது தலையணை பாயை வீட்டார் தூக்கிப் போட்ட பின்னும் அதைத் தூக்கி எடுத்து வைத்துக் கொள்ளுமளவு பயப்படுத்திய காதல்.



எல்லா இதழ்களிலும் கவிதை எழுதும் நாயகனுக்கு இந்த இதழில் எழுதுவது கடினமா என்ன. அதைப் பாட்டாகப் படிக்கும்போது சீதாவின் அழகு முகமும் அவரது அழகான இதழ்களும் மனக்கண்ணில் தோன்றுகின்றன. கமலைப் பற்றி இனி புதிதாகச் சொல்ல என்ன இருக்கு. காதல் டிக்‌ஷ்னரி & முத்த டிக்‌ஷ்னரி அவர்தான்.



நட்பினிலே பிரிவு ஏதுமில்லை ஆனால் அதனால் பேச வார்த்தையில்லாமல் போவது அன்பா இல்லை காதலா. மிகவும் யோசிக்க வைத்த க்ளைமாக்ஸ். அதிர்ச்சிக் காதல் வகை.



முதலாம் சந்திப்பில் மிக மிக மென்மையான காதல். இதுவும் நடனத்தில் ஆக்ரோஷமான காதல்தான். ஆனால் நீரில் நெளிந்து ஆடும் மீனைப்போன்ற துரத்தல் வெகு நளினம்.



தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்கும் காலமடி. பாரம்பரியக் காதல்.



காச நோய்க்காரிகளும் தூங்குமிந்த வேளையிலே ஆசை நோய் வந்த மக அரை நிமிஷம் தூங்கலியே என்று சிந்திக்க வைத்த பாட்டு. ரொம்பப் பிடிச்ச பாட்டு இது. ஒவ்வொரு வரியையும் காதலிச்சுப் பாடுவேன். இங்கே இல்லை பயப்பட வேண்டாம். பாத்ரூம் சிங்கர் ஹாஹா.



லாரி வந்து மோதினாலும்தெரியாத அளவு கண்மண் தெரியாத காதல். சில நினைவுகள் நினைவுகள்தான் தீராதே.. முழுப்பாடலையும் கேட்கவும் பார்க்கவும் செய்யலாம். ஆக்ஸிடெண்ட் ஆனாலும் காதல் காதல் காதல். :)




டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.

26. தேன் பாடல்கள். - 26. குட்டிராணியும் கண்மணியும்.

27. தேன் பாடல்கள்.- 27. ராஜாவும் ரோஜாவும்.

4 கருத்துகள்:

  1. கடல் படத்தின் 'மூங்கில் தோட்டம்' மிக அருமையானப் பாடல்

    பதிலளிநீக்கு
  2. சில பாடல்களை இப்போதுதான் கேட்கிறோம்...

    ஏற்கனவே கேட்ட பாடல்களில் இதழில் கதை எழுதும் பாடல், தென்னங்க்கீற்றும் பாடல் ரொம்பப் பிடிக்கும்.

    கீதா: அந்தப் பாடல்களுடன் ஜிப்ரான் ம்யூஸிக்கில் வாகை சூடவா பாடல் வித்தியாசமாக பிடிக்கும்...மற்ற பாடல்களும் இப்ப்பதான் கேட்டேன்...நல்லாருக்கு.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஸ்ரீராம்

    கேட்கிறேன் விசு சார்

    நன்றி கீத்ஸ்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)