திங்கள், 3 ஜூலை, 2017

சந்திரலேகாவின் வெற்றிக் கதை.



புக்கையோ படத்தையோ இன்றைய நாளில் ப்ரமோஷன் செய்றதைப் பார்க்கிறோம். ஆனால் 1948லேயே ,கிட்டத்தட்ட 70 வருஷத்துக்கு முன்னாடியே ஒரு மில்லியன் ரூபாய் விளம்பரத்துக்கு மட்டுமே செலவழிக்கப்பட்ட படம் சந்திரலேகா. 

///To top it all, Vasan came out with a gigantic publicity campaign which made the nation sit up and take notice. His budget was said to have been nearly a million rupees, an incredible sum in those days. Full-page ads,
huge multicoloured posters, glossily printed brochures, press books, expensively printed songbooks, were to be seen ­everywhere... it was all unheard of in India.////



5 வருடங்கள் நான்கைந்து கதாசிரியர்கள், இரண்டு டைரக்டர்கள், முப்பது மில்லியன் செலவு. ஸ்டூடியோ முழுக்க வனம் & சர்க்கஸ் போல் மிருகங்கள், 400 க்கும் மேற்பட்ட நடனமணிகள் அவர்களுக்குப் பயிற்றுவிக்க ஜெர்மனி & சிலோன் நடன மாஸ்டர்கள், மாதச் சம்பளத்துக்கு நடிகர்கள், தன் சொத்து நகை அனைத்தையும் பணயம் வைத்து ஜெமினி ஸ்டூடியோஸ் எஸ் எஸ் வாசன் அவர்கள் தயாரித்தபடம்தான் சந்திரலேகா. முன் எடுத்த படங்களை விட மாபெரும் வெற்றியடைந்து அவருக்குப் பெரும் புகழையும் பணத்தையும் ஈட்டித் தந்ததாம் இப்படம். 


தமிழ் இந்தி ஆகிய இருமொழிகளிலும் மெகா வெற்றி.



இதில் நடித்த டி ஆர் ராஜகுமாரி அடுத்துப் பெரும்படம் ஏதும் நடித்ததாகத் தெரியவில்லை. ஆனால் பானுமதியின் கர்வமான அழகை ரசிப்பது போல இவரது கர்வமான பேரழகை ரசித்திருக்கிறேன். 

இன்றைக்கு விக்கிபீடியாபோல் அன்றைய வழ வழத் தாளில் முழுக்கதை & பாடல்களுடன் ப்ரிண்ட் செய்யப்பட்ட  சந்திரலேகா.

இது 1965 கள், 1970 கள் வாக்கில் வெளியிடப்பட்டிருக்கலாம். அன்றைக்கு எல்லாம் படம் வந்தால் உடனே மாட்டுவண்டியில் ஸ்பீக்கர் சகிதம் நோட்டீஸ் வீசியபடி பவனி வருவார்கள். முக்குக்கு முக்கு தண்டோரா போட்டும் அறிவிப்பதுண்டு.

ஸ்டாம்பு, காயின் கலெக்‌ஷன், சிகரெட் அட்டை, தீப்பெட்டி லேபிள், புக் லேபிள் சேர்ப்பது போல இந்த நோட்டீஸ்களையும் படத்தின் போஸ்டர்களையும் மினி போஸ்டர்களையும் , புக்லெட்டுகளை சேர்ப்பது பல குழந்தைகளின் பொழுது போக்கு. இதற்கு மிகப் பெரும் போட்டியே நடக்குமாம். ரங்க்ஸ் கொடுத்த தகவல். 

இது ஒரு பழைய ட்ரெங்குப் பெட்டியில் கிடந்த சந்திரலேகா பட புக்லெட். அப்பவே காஸ்ட்லி வழ வழ பேப்பரில் ப்ரிண்ட் செய்திருக்கிறார்கள். பூச்சி பொட்டு அரிக்காமல் இன்னும் நூறு வருஷம் கூட தாங்கும்.!
 











இப்படத்தின் வெற்றி மிகவும் பேசப்பட்ட ஒன்றும். என் எஸ் கிருஷ்ணன் மதுரத்தின் நகைச்சுவைக் காட்சிகளும், ராஜகுமாரியின் ட்ரம் டான்ஸும். சர்க்கஸ் காட்சிகளும் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. அந்தக் காலத்தில் வில்லன் கூட பேரெடுத்தது இந்தப் படமாகத்தான் இருக்கும். சஷாங்கன் என்ற ரஞ்சன்.



இப்படத்தை முழுதாகப் பார்க்கவில்லை எனினும் ஒரு காட்சியில் நாடோடிக்கும்பலுடன் தப்பித்துச் செல்லும் டி ஆர் ராஜகுமாரி மல்லிகை பூ வைத்திருப்பதை வைத்தே அவர்தான் சந்திரலேகா என்று வில்லன் குழு கண்டுபிடிக்கும் இடம் த்ரில்லாக இருக்கும். அப்போது ஜிப்ஸிக்களால் பாடப்படும் மொழி புரியாத பாடல் இனம் புரியாத சந்தோஷத்தைக் கொடுக்கும். J ”ஹொயோ தெரக்‌ஷம்ஸியோ” ”லோபரி லாவன்னோலாலியோ ”






முன்பு ஒருசமயம் என் பெரியம்மா வீட்டில் சந்திரலேகாவின் ட்ரம் டான்ஸின் மீடியம் சைஸ் போஸ்டர் பார்த்து மிரண்டிருக்கிறேன். கிடைத்தால் பகிர்கிறேன்.

நினைத்ததைத் தைரியத்துடன் செயலாக்கம் செய்யுங்கள் ஜெயிப்பீர்கள் என்று தன் செயல் மூலம் நிரூபித்திருக்கிறார் திரு. எஸ் எஸ் வாசன்.


3 கருத்துகள்:

  1. என்று பார்த்தாலும் பிரமிக்க வைக்கும் திரைக்காவியம்...

    பதிலளிநீக்கு
  2. சந்திரலேகா அதுவும் அந்த ட்ரம்ஸ் டான்ஸ் ஆஹா அருமை! இப்போதும் பிரமிப்பை ஏற்படுத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  3. AAM DD SAGO

    AAMAAM TULSI SAGO


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)