வெள்ளி, 23 ஜூன், 2017

தினமணி காரைக்குடி சில புகைப்படங்கள்.



தினமணியும் காரைக்குடி புத்தகத் திருவிழாவும் இணைந்து நடத்திய போட்டியில் 2013 இல் எனது சிவப்புப் பட்டுக் கயிறு ஊக்கப்பரிசு பெற்றது. அதில் எடுத்து போட விட்டுப்போன சில புகைப்படங்கள் இங்கே. 

சிறுகதை மன்னர் திரு. அய்க்கண் அவர்கள் மகளும் குழந்தைக் கவிஞர் திரு அழ வள்ளியப்பா அவர்கள் மகளும். ( தேவி நாச்சியப்பன் )




தேவி நாச்சியப்பன் அவர்கள் கணவருடன்



இவர் ஆதலையூர் சூரியகுமார்.



நாஞ்சிலாரிடம் பரிசு.




என்ன பேசினேன் என்பது ஞாபகம் இருந்தாலும் இவ்ளோ பேசினேனா என்று புகைப்படம் பார்த்துத் தோன்றுகிறது. J








புத்தகத் திருவிழா விருது வழங்கும் மேடையில் அமர்ந்திருப்பவர்களில் முதலாமவர் என் முகநூல் நண்பர் திரு தேனப்பன் அவர்கள்.



இந்தப் புகைப்படங்களை எடுத்தவர் திரு. அய்க்கண் அவர்களின் புதல்வி.



பரிசு பெற்ற மூவர் என் இடப்பக்கமும் விழாக்குழுவினர் என் வலப்பக்கமும்.










மிச்சப் புகைப்படங்களை இங்கே பாருங்க.
 


5 கருத்துகள்:

  1. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    படங்கள் அனைத்தும் அருமை.

    குழந்தைக்கவிஞர் திரு. அழ. வள்ளியப்பா ‘கோகுலம்’ இதழின் ஆசிரியராக இருந்த போது அவர் கைப்பட ஒரு பாராட்டுக்கடிதமும், முதன் முதலாக ரூ. 25/- மணியார்டரில் பணமும் கிடைக்கப் பெற்றோம்.

    நான் எழுதி அனுப்பியிருந்த 4-5 கவிதைகள் அடுத்தடுத்து கோகுலம் இதழ்களில் ஒரு முழுப்பக்கத்தில் என் இரண்டாவது மகன் G. SHANKAR பெயரில், அவனுடைய போட்டோவுடன் வெளிவந்திருந்தது. அப்போது என் அந்த மகனுக்கு 10 வயதுக்குள் மட்டுமே இருக்கும். முதலில் வெளியான ஒரு பக்கக் கவிதையின் தலைப்பு: ‘இளநீர்’

    >>>>>

    பதிலளிநீக்கு
  2. கொடுக்கப்பட்டிருந்த படக் காட்சி:

    ஒரு ஏழைச் சிறுவன். பாவம் அவன். சட்டை பனியன் செருப்பு ஏதும் போடாமல், தலையையும் எண்ணெய் தடவி சீவிக்கொள்ளாமல், ஒரு கிழிஞ்ச டிராயர் மட்டும் போட்டுக்கிட்டு பரட்டைத்தலையுடன் இருந்தான். அங்கு கீழே பிளந்து தூக்கியெறியப்படும் இளநீர் ஓட்டுக்குள்ளே ஒட்டியிருக்கும் தேங்காயை [வழுக்கையை] கஷ்டப்பட்டு தன் கை விரல் நகங்களால் பெயர்த்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறான். அவனைப்பார்க்க பாவமா இருந்துச்சு. அதற்காக நான் எழுதியனுப்பியிருந்த கவிதை:

    >>>>>

    பதிலளிநீக்கு
  3. இளநீர்
    ========

    [இளநீர் அந்த ஏழைச்சிறுவனைப்பார்த்து இப்போ பேசுவதாக கற்பனை செய்து கொள்ளவும்]


    குறும்பையாய இருந்தோம்!

    குளுமையாய் வளர்ந்தோம்!!


    உச்சியில் இருந்தோம்!

    உருண்டு விழுந்தோம்!!


    வண்டியில் ஏற்றினர்!

    வழியில் நிறுத்தினர்!!


    பாயை விரித்தனர்!

    பாங்காய் பரப்பினர் !!


    அளவாய்ப் பிரித்தனர்!

    அழகாய் அடுக்கினர்!!


    பலரும் வந்தனர்!

    பார்த்து மகிழ்ந்தனர்!!


    ஒருசிலர் வந்தனர்!

    உடைக்கக் கோரினர்!!


    சீவப்பட்டோம் !

    சிந்தினோம் கண்ணீர்!


    இளநீர் என்றனர்!

    இனிமையாய்க் குடித்தனர்!!


    வழுக்கை என்றனர்!

    வழித்து உண்டனர்!!


    எறியப்பட்டோம்!

    எச்சில் ஓடாய் !!


    என் கதைக் கேட்டாய்!

    உன் காது செவிடோ!!


    வழித்தது போதும்!

    விழித்தெழு கண்ணா!!


    உழைத்தால் உணவு!

    உண்டு இந்த உலகில்!!

    -oOo-

    மேற்படி கவிதைக்காக திரு. அழ. வள்ளியப்பா அவர்கள் கைப்பட ஒரு பாராட்டுக்கடிதம் அனுப்பி இருந்தார். :) அது ஏனோ இப்போது என் நினைவுக்கு வந்து என்னை மகிழ்வித்தது.

    பதிலளிநீக்கு
  4. MIKA MIKA ARUMAIYANA NINAIVALAIGALUM KAVITHAIYUM BALA SIR. PARISU PETRAMAIKKU VAAZTHTHUKKAL VAAZGHA VALAMUDAN. :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. VGK SIR.. BALA SIR ENDRU ELUTHITEN . MANNIKKAVUM :) MIKA MIKA ARUMAIYANA SANTHA NAYAM ULLA INIMAIYANA THANNAMBIKKAIP PADAL.

    VAAZGHA VALAMUDAN VGK SIR.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)