வியாழன், 18 மே, 2017

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”



புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் இன்று என் முதல் மின்னூல் ( நூல் வரிசைப்படி , ஆறாவது நூல் ) “பெண்மொழி” வெளியாகி உள்ளது. இது ஆஸ்த்ரேலிய மெல்லினத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. 



பக்கங்கள் - 309.
விலை ரூ 150/-/ $3.99
http://www.pustaka.co.in/home/ebook/tamil/penmozhi 

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.


பெண்கள் பற்றி, பெண்கள் கையாளவேண்டிய சூழ்நிலைகள் பற்றி , அவர்கள் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி, பேதை பெதும்பை முதல் பேரிளம் பெண்வரையான பெண்களின் எழுச்சி முன்னேற்றம் பற்றிக் கூறும் நூல் இது. இயல்பாய் ஒன்றிக் கலக்கப் பேச்சு நடையில் எழுதி இருக்கிறேன்.

படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.


இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள். 

புஸ்தகாவில் முதல் விமர்சனம் எழுதி ஃபைவ் ஸ்டார் ரேட்டிங் கொடுத்த திரு. ராய. செல்லப்பா சாருக்கு மனமார்ந்த நன்றிகள் !!!

///இராய செல்லப்பா நியூஜெர்சி

Today
இன்றைய இளம்பெண்களும் இளைஞர்களும் படிக்கவேண்டிய இன்றைய சமூகம் சார்ந்த முக்கியமான கட்டுரைகள். அழுத்தமான விவாதங்களை முன்வைக்கும் எளிய மொழிநடை. பட்டிமனரங்களில் பங்கேற்பவர்களுக்கு மிகவும் உதவும்.///


உங்க விமர்சனத்தையும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கேன் மக்காஸ். வாங்கிட்டீங்களா. வாசிச்சிட்டீங்களா. :)


9 கருத்துகள்:

  1. புஸ்தகாவில் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

    ஆஹா .... புதிய சாதனை .... மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    மேலும் நூற்றுக்கணக்கான மின்னூல்கள் வெளிவர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி
    வெளீயீடுகள் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பாராட்டுகள்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. பாராட்டுகளும், வாழ்த்துகளும். அங்கு மின்னல் வேகத்தில் பின்னூட்டமிட்டு வாழ்த்தியிருக்கும் திரு இராய. செல்லப்பா ஸாருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. சமூகத்திற்கு அவசியமான கட்டுரைகள். மகிழ்ச்சியும் நல்வாழ்த்துகளும் தேனம்மை!

    பதிலளிநீக்கு
  6. ungka rasiyana vaazththukkum aaseervaathathukkum nandri VGK sir

    thanks Ramani sir

    thanks Yarlpavannan sago

    thanks DD sago

    thanks Sriram !

    thanks Jayakumar sago

    thanks Ramalakshmi :) <3

    thanks Gomathi Mam :) <3

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)