வியாழன், 18 மே, 2017

நூற்றாண்டும் நாற்பதாண்டும்.



காரைக்குடியில் இருக்கும் இந்து மதாபிமான சங்கத்தின் நிருவாக சபைக் கூட்டத்தின் அழைப்பு அம்மா வீட்டில் யதேச்சையாகக் கையில் கிடைத்தது. நூற்றாண்டுகள் கடந்த இச்சங்கம் இன்றும் செயல்பட்டு வருகிறது. 


இராய. சொக்கலிங்கனார் முருகப்பருடன் இணைந்து ஆரம்பித்த இச்சங்கம் காப்பியக் கவிஞர் நா. மீனவனை செயலாளராகக் கொண்டு இன்றும் செயல்படுகிறது.


////ராய. சொக்கலிங்கம் இளமையிலேயே தமிழார்வம் உடையவராக இருந்தார். குமரன் இதழின் ஆசிரியர் சொ. முருகப்பர் என்பவருடன் இணைந்து செட்டிநாட்டுப் பகுதியில் தமிழ்ப்பணியில் ஈடுபட்டார். 1917 செப்டம்பர் 10 ஆம் நாள் இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தார். விவேகானந்தர் படிப்பகத்தை நிறுவினர்.[1][3] அதன் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். இச்சங்கத்திற்கு வருகைதந்த சுப்பிரமணிய பாரதியாயருடன் 1919 நவம்பர் 9 ஆம் நாள் தன் நண்பர்கள் சூழ ஒளிப்படம் எடுத்துக்கொண்டார். பாரதியார் இச்சங்கத்தைப் பற்றி ஹிந்து மதாபிமான சங்கத்தார் என்னும் தலைப்பில் ஏழு விருத்தங்கள் எழுதியுள்ளார்.////

-- நன்றி விக்கிபீடியா.
///
சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து இலக்கியக் கூட்டம் நடத்துவதும், ஆண்டுதோறும் ஆண்டு விழா நடத்துவதும் மரபு. மாதாந்திரக் கூட்டங்களும் நடைபெறும். இந்தச் சங்கத்துக்குக்கு வராத தமிழறிஞரே இல்லை எனலாம்.///



( இச்சங்கத்தில் எனது பேரன்பிற்குரிய பாட்டனார் திரு. பெரி. அரு. அருணாசலம் செட்டியார் அவர்களும் பலகாலம் உறுப்பினராகவும், சிலகாலம் உபதலைவராகவும் இருந்து பணியாற்றி உள்ளமை குறித்து உங்களுடன் பெருமிதத்தோடு பகிர்ந்து கொள்கிறேன்.).



இதைப் பற்றி இங்கேயும் பார்க்கலாம்.

மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்.



இங்கே ஒரு நூலகம் இருப்பதாகக் கேள்வியுற்றேன். அது சீர் செய்யப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்தால் மிகுந்த நலம் பயக்கும் என்பது என் எண்ணமும் வேண்டுகோளும் ஆகும்.

**********************************************************



என் அம்மாவும் பெரியம்மாவும் இணைந்து ஒரு சில்வர் பாத்திரக்கடை நாற்பதாண்டுகளுக்கு முன்பு மன்னையில் நடத்தி வந்தார்கள். அப்போது வெளியிடப்பட்ட நோட்டீஸ் ஒன்றும் கிட்டியது. 

இன்னும் எங்கள் காலத்தில் கூட வேலைக்குச் செல்லும் எங்கள் குடும்பப் பெண்கள் அரிதாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நாற்பதாண்டுகளுக்கு முன்பே எங்கள் ஐயா தன்னுடைய இரு பெண்களுக்கும் இத்தொழிலை முதல் போட்டு ஆரம்பித்துக் கொடுத்தது வியப்பளிக்கிறது. 

ENTERPRENEURS பற்றி ஐபிசிஎன்னுக்காகப் பேட்டி எல்லாம் எடுத்துக் கட்டுரைகள் எழுதுகிறேன். இவர்கள்தான் அதில் முன்னோடிகள் என்று சொல்லவேண்டும். செட்டிநாடு மெட்டல் மார்ட் என்று காந்தி ரோட்டில் இன்னொரு கடை இருந்தபோதும் இக்கடையைத் துணிந்து ஆரம்பித்தார்கள்.

ஏ வி எம் மார்ட் – ஆனந்த விநாயகர் மெட்டல் மார்ட் என்ற பெயர் முடிவானது. ( மன்னார்குடியின் ஒத்தைத் தெருவில் கம்பீரமாக ஆட்சி செய்பவர் ஆனந்த விநாயகர். இவருக்கு அடிக்கடி என் அப்பா சந்தனக் காப்பும் மண்டகப்படியும் நடத்துவார்கள் ). 1977 இல் ஆரம்பிக்கப்பட்டது. இன்றிருந்திருந்தால் நாற்பதாண்டு ஆகி இருக்கும்.

அருணாசலா தியேட்டர் சோமண்ணன் கடை ஸ்டாண்டுக்கெல்லாம் பெயிண்ட் அடித்தார். முத்து கணேசன் அண்ணன் மேனேஜராக இருந்தார். சிவாஜி அண்ணன், சுந்தரம் அண்ணன் வேலை பார்த்து வந்தார்கள். சென்னை சென்று அண்ணா மெட்டல்ஸில் அம்மா பாத்திரங்கள் பர்சேஸ் செய்யப் போவார்கள் தனியாகவே. ஆர்டர் கொடுத்துவிட்டு வந்து பின்னர் பெற்றுக் கொள்வார்கள். விலை குறைவான தள்ளுவண்டி சில்வர் சாமான்கள் வந்து தரமான பொருட்கள் வழங்கும் கடைகளை ஆட்டம் காணச் செய்கிறது. 

ஜோராக நடந்த அக்கடை ஏழு எட்டு ஆண்டுகள் செயல்பட்டு பின்னர் பேப்பர் கடையாக மாறியது. இப்போது அந்தக் கடையும் இல்லை எனினும் எங்கள் அம்மாக்களின் உழைப்பையும் தன்னம்பிக்கையும் எங்கள் ஐயா அவர்களுக்கு அக்காலத்திலேயே அளித்த பொறுப்பையும் சுதந்திரத்தையும் பதிவு செய்யவே இதை ஆவணப்படுத்துகிறேன்.  


4 கருத்துகள்:

  1. செட்டிநாட்டு பெண்கள் திறமைக்கு சான்று.

    பதிலளிநீக்கு
  2. நகரத்தார்கள் தமிழ்ப்பற்று நிறைந்தவர்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. இந்து மதாபிமான சங்கம்
    வியப்பாக இருக்கிறது சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  4. thanks Palani Chamy sir

    thanks Bala sir . aam unmaithan

    thanks Jayakumar sago.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)