சனி, 8 ஏப்ரல், 2017

சாட்டர்டே போஸ்ட். தென்றலின் பங்களிப்பு ஆசிரியர் சரஸ்வதி தியாகராஜனின் எண்ணங்கள்.

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர் திருமதி சரஸ்வதி தியாகராஜன் அவர்கள்.  தென்றல் இதழின் அநேக படைப்புகள் இவரின் குரலில் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மிகப் பிரபலமாக இருந்தும் பிரபல பத்ரிக்கையில் இலக்கிய சேவை செய்து கொண்டிருந்தும் மிக மிகத் தன்னடக்கமானவர், தன்மையானவர். பழக எளிமையானவர் , இனிமையானவர். தேன் குரலில் இவர் வாசித்தளிக்கும் படைப்புகளை தென்றல் தளத்தில் காணலாம். இவரிடம் இவர் பற்றிக் கேட்டபோது

////Dear Thenammai! Vanakkam. Nalamaa? நீங்கள் கேட்டவை!!

அறிமுகம் பாஸ்டனிலிருந்து!! 



////கும்பகோணத்தில் பிறப்பு!
மதுரையில் வளர்ப்பு!
இரு அக்காள் ஒரு அண்ணன் உடன்பிறப்புகள்!
மதுரை லேடி டோக், அமெரிக்கன் கல்லூரிகளில் படிப்பு!
1971ல் கணவருடன் பிணைப்பு!
பின்னர் சென்னையில் குடியிருப்பு!
அதன் பின் ஒரே ஒரு மகன் பிறப்பு!
1999ல் கணவனுடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ப்பு!
மகன், மருமகள், அன்புப் பேரன் பேத்தியுடன் இன்றுவரை எங்கள் இனிய வாழ்க்கைப் பயணிப்பு!
தென்றல் துவங்கிய 2000-ம்
ஆண்டில் நானும் அதில் தன்னார்வ சமையல் கலை நிபுணராக சேர்ப்பு!
பின்னர் செய்தது மொழி பெயர்ப்பு!
தற்போது தென்றலில் பங்களிப்பு ஆசிரியராக செய்வது இறுதி மெய்ப்பு பார்ப்பு, தென்றலை
ஒலிவடிவத்தில் கொடுப்பது மற்றும் தென்றலின் மின்புத்தகங்கள் படைப்பது!l
இதுவரை 3837 ஒலிவடிவங்களுக்கு சொந்தக்காரி!
இதுதான் என் வாழ்க்கைப் பயணம் தேனம்மை!😀/////

😀 

இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக எழுதித்தரும்படிக் கேட்டிருந்தேன். அவர் எழுதி அனுப்பிய வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.

நம் வாழ்வைப் பற்றி மனம் அசை போடுகிறது!பிறந்தவர் அனவருக்கும் வாழ்க்கை ஒன்று போல அமைவதில்லை. ஆனால் அதை இன்பமாக வைத்துக்கொள்வது நம்மிடமும் உள்ளது. 


குழந்தையாக இருக்கும் போது பெற்றோரின் அரவணைப்பில் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். பின்னர் நம் மூத்தவர்கள் , ஆசிரியர்கள் அவர்களது சட்ட திட்டங்கள்! எல்லாம் நம் நன்மைக்குத்தான் என்றாலும் கடினமாக எண்ணுகிறோம். 

எல்லோரும் பெரும் கல்வி பயில வேண்டும். கல்வி கற்பது நமது உரிமை. எந்த வயதிலும் கற்கலாம்! 

மணமான பின்னர் புதிய சூழ்நிலை. முக்கியமாக கணவன், மனவி. முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். கணவன், மனைவி வளர்ந்தது வெவ்வேறு சூழ்நிலைகள். அதன் பாதிப்பு வாழ்க்கையில் வரும். ஆனால் அன்பு குறையாத மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னைத் தவிர அனவரும் தவறு என்ற மனப்பான்மைக்கு இடம் கொடுக்கல் கூடாது. 

எல்லோரிடமும் நல்லவையும் அல்லவையும் இருக்கும். நம்மிடம் இல்லையா என்ன? ஆனால் சுய மரியாதையை விட்டுக்கொடுக்க வேண்டியது இல்லை. தவறு என்றால் தட்டிக் கேட்க தயங்கக் கூடாது. அதே சமயம் சுடும் சொற்களை அள்ளி வீசினால் அள்ள இயலாது. எனவே வாழ்வில் கிடைத்த இன்பமான தருணங்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொண்டு இன்பமாக இருத்தல் நலம். 

குழந்தைகளை இருவரும் ஒன்றாக பொறுப்புடன் மனமொத்து முரண்பாடுகள் இன்றி வளர்க்க வேண்டும். அவர்கள் வளர்ந்த பின் அவர்கள் நமக்கு நல்ல நண்பர்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மரியாதை கட்டாயம் தரவேண்டும். நமக்கு அந்த பருவத்தில் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அந்த காலகட்டம் வேறு. 

நாம் சேர்த்து வைக்கும் சொத்துகளை விட அவர்களுக்குக் கொடுக்கும் உயரிய படிப்பு முக்கியம். நாம் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும். 

இவையெல்லம் என் சொந்த எண்ணங்கள். இன்னும் எவ்வளவோ எழுதத் தோன்றுகிறது! என்னையும் எழுதவைத்த தேனம்மை அவர்களுக்கு நன்றி. அனவரும் வாழ்க வளமுடன்!!

டிஸ்கி:- அருமையான அழகான இந்தக் காலக்கட்டத்துக்குத் தேவையான எண்ணங்கள் மேம். மிக எளிமையாகச் சொல்லியிருந்தாலும் பொருள் பொதிந்தவை அனைத்தும். அனைவரும் கைக்கொள்ளவேண்டியவை. 

சாட்டர்டே போஸ்டுக்காக இவற்றை எழுதித்தந்த உங்கள் அன்பு உள்ளத்துக்கு நன்றிகள். வாழ்க வளமுடன். அன்பும் நன்றியும். :)  

9 கருத்துகள்:

  1. ஒரு நல்ல மனுஷியை அறறிமுகம் செய்த எங்கள் தேனம்மைக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  2. சரஸ்வதி தியாகராஜனின் பணி தொடர எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்

    அவரது பயோ டேட்டாவே புதுக் கவிதை மாதிரி இருக்கிறது

    வாய்ப்புக்கு கிடைத்தால் கவிதை உலகத்தை கால் பதிப்பார் என்று தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  3. சுருக்கமாகக் கூறினாலும், மிக முக்கியமானவற்றைக் கூறியுள்ளார்கள். அவருக்கும், அவருடைய சாதனைக்கும் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் நன்றி.
    என்னை வெளி உலகிற்கு மேலும் கொண்டு சென்ற என் இனிய சினேகிதி தேனம்மைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அவரது சாதனை வியப்பு!! வாழ்த்துகள் அவருக்கு!

    பதிலளிநீக்கு
  6. அருமையான வழிகாட்டலுடன்
    சிறந்த அறிஞரையும்
    அறிய முடிந்ததே!

    பதிலளிநீக்கு
  7. நன்றி பாலா

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி ராமச்சந்திரன் வைத்யநாதன் சார். ! உண்மைதான். சரியா சொன்னீங்க.

    நன்றி டிடி சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி சரஸ் மேம். தன்யளானேன் :)

    நன்றி கீத்ஸ்

    நன்றி ஜீவலிங்கம் யாழ்பாவண்ணன் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)