சனி, 4 மார்ச், 2017

நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

ஒவ்வொரு விசேஷத்துக்கும் 716* நடுவீட்டுக் கோலம் முக்கியமான ஒண்ணு. பொங்கல், பிள்ளையார் நோம்பு, தீபாவளி, குடி புகுதல், சுவீகாரம், சமைதல் , கல்யாணம் சொல்ல வந்தால் வரவேற்க, திருமணம், தீர்த்தம் குடித்தல், கணபதி ஹோமம், சாந்தி, சதாபிஷேகம்,   கனகாபிஷேகம் என்று இன்ன பிற நல்லதுக்கெல்லாம் கோலம் போடுவது உண்டு.

இளைய தலைமுறைப் பெண்களுக்கு நடுவீட்டுக் கோலமும் 717* பொங்கல் கோலமும் போடுவது பற்றிப் படம் கொடுத்து இடம் ஒதுக்கிப் போடவும் சொல்லிக் கொடுத்தாங்க ஒரு ஈவண்ட்ல. அப்ப எடுத்த சில அழகான புகைப்படங்களைப் பகிர்கிறேன். அவங்க ஆர்வத்தோடயும் அழகாவும் போட்டு பட்டயக் கிளப்பிட்டாங்க. :)

நடுவீட்டுக் கோலம் மாடல் பேப்பர். இதுல 718* நாலு பக்கமும் கூம்பா இருப்பது தேர்க் கோபுரம், 719* நாலு கார்னரிலும் இருப்பது கால், 720* அதன் பக்கம் இருப்பது சங்கு.
வீட்டில் வைக்கப்படும் பொங்கல் பானைகளுக்கு ஏற்ப ( புள்ளிகள் ) அகலவாக்கில் 721* கோபுரங்கள் அதிகப்படும். பொங்கலுக்கான அடுப்புக் கோலத்தை இன்னொரு இடுகையில் பகிர்கிறேன். 722* முறித்தவலை, 723* விளக்கிடுற சட்டி,  ( 724* அடுப்பு, மனை, கலவடை, பொங்கலிடும் இடம், படைக்கும் இடம் , சாமி வீடு , படி ) எல்லாவற்றுக்கும் கோலமிடுவதுண்டு.


ஒதுக்கப்பட்ட இடத்தில் கெட் ரெடி ஸ்டார்ட். முதலில் சதுரம்.
இவங்க எல்லாருமே ஓரளவு போட கத்துக்கிட்டாங்க. ஆங் சொல்ல மறந்துட்டேனே. பச்சரிசி மாவை அரைத்து கரைத்து வைத்திருப்பாங்க. அதுல 725 * சிறு துண்டு காட்டன் துணியை ( வேட்டித் துணியும் உபயோகிப்பாங்க ) நனைத்து விரல்களில் பிடித்து மோதிர விரல் வழி வழியவிட்டுக் கோலமாக இழுக்கணும். கத்துக்கிட்டா ஈஸிதான். முதலில் இரண்டு மூணு கோடா வரும். ஆனா இவங்க ஓரளவு நல்லாவே போட்டாங்க.
பர்ஃபெக்ட் இல்ல :) <3 br="">
726* இவங்க கோபுரத்துக்கும் காலுக்கும் தனியா மஞ்சள் கலர் உபயோகிச்சுப் போட்டிருகாங்க . எக்ஸலண்ட்.

ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிடுறாங்க. ஃபர்ஸ்ட் டைம் போட்டாலும் பர்ஃபெக்ட்.
குடோஸ் கண்ணுக்குட்டி. என் தோழி நல்லழகு வள்ளியப்பன் அவங்க மக ரொம்ப நீட்டா ஸ்வீட்டா போட்டுட்டு இருக்காங்க.

பெரியவங்க மேற்பார்வை.

சிலருக்கு புள்ளி எப்பிடி வைக்கிறதுன்னு கத்துக் கொடுக்குறாங்க. ஏன்னா எண்டையர் கோலத்துக்கும் புள்ளிதான் அழகு சேர்க்கும். அத லேசா தொட்டு அங்கயும் இங்கேயும் வைக்காம 727* முழுமையான இரட்டைப் புள்ளியா வைச்சாத்தான் கோலம் பொலிவுறும்.

கோலத்தை எப்படிப் போட்டாலும் புள்ளியால அழகு படுத்திடலாம். நகரத்தார்ல திருமணமான தம்பதிகளைப் 728* புள்ளிகள் என்பார்கள். 729* புள்ளி பெருகோணும் என்று சொல்வதைப் போல புள்ளிகள் அழுத்தம் திருத்தமாவும் இருக்கணும். கணவன் மனைவி இருந்தா ஒரு புள்ளி. மனைவி மட்டும் இருந்தா 730* அரைப்புள்ளி. இதக் கணக்கு வைச்சு படைப்பு, பூசை வீடுகளில் ( பணியாரம், பாற்சோறு )  பிரசாதம் பிரிச்சு அனுப்பி வைப்பாங்க.

முத்து வள்ளியம்மையும் விசாலாட்சியும் போட்ட கோலங்கள் தெளிவு.
முத்துக் கோதை போட்ட கோலம் அழகு. ஏன்னா என் தம்பி மகளாச்சே. மருமகள். :)

731* என்ன அழகான தமிழ்ப் பெயர் பாருங்கள். சொல்லச் சொல்ல இனிக்குதுல்ல :)

இந்த இளையர்களுக்குப் பொங்கலிடக் கற்றுக் கொடுத்த போது போட்ட சாம்பிள் கோலம். 732* மனை& அடுப்புக்கும் கோலம் போட்டு இருக்காங்க. படைக்க இலையும் போட்டுப் புள்ளி வைத்திருக்கிறது. 733* சங்கும்  ( சங்கு ஊதி பொங்கல் பானையைப் பாலோடு அடுப்பில் வைத்து பால் பொங்கியதும்  சங்கு ஊதுவார்கள் ) உபயோகிப்பதால் சங்கையும் கோலம் போட்டிருக்கிறார்கள் !. பொங்கல் தவலையில் கோலம்.

பச்சரிசியை ஊறவைத்து அரைத்து சிறு குன்றிமணிகளாக உருட்டி வெய்யிலில் காயப்போட்டு வைத்திருப்பதற்குப் பெயர் 734* கோலக்கூட்டு. கோலக்கூட்டு உபயோகித்தும் கோலம் போடுவார்கள். இதைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைக்க வேண்டியதுதான்.

அழகாகக்கோலமிட்டு பொங்கலிட்டுப் பூவையர் சமைக்க ஆண்மகன்கள் கைகொடுத்துச் சமைத்த உணவுகளும் (735*  மசியல் , மண்டி, இளங்குழம்பு,பச்சடி) உங்கள் பார்வைக்கு. ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் மிக ருசியாவே சமைச்சிருந்தாங்க !

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்  





4 கருத்துகள்:

  1. அனைவருக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி டிடி சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)