திங்கள், 13 பிப்ரவரி, 2017

சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும்.

1281. வான் மேகம் கடலை நோக்கிச் செல்லும்போது நீறு பூசிய சிவபெருமான் போல வெண்ணிறம் கொண்டும், கடலில் நீர் கொண்டு திரும்பும்போது திருமாலின் கருத்த நிறம் கொண்டும் இருக்கும் என்று சொல்லும் சைவ வைணவ சமரசப் பாடல்.

“நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று, ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத்திருமங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே “

---

“பூ நிரைத்தும் மென் தாது பொருந்தியும்
தேன் அளாவியும், செம்பொன் விராவியும்
ஆனை மா மத ஆற்றோடு அளாவியும்
வான வில்லை நிகர்த்தது அவ்வாரியே ! “

பல நிறப்பூக்களை வரிசைப்படுத்தியும், அதில் மகரந்தப் பொடி பொருந்தியும், தேன் கலந்தும், செம்பொன் கலந்தும், யானைகளின் மதநீர் கலந்தும் செல்லும் அவ்வாற்றின் வெள்ளம் வானவில்லை ஒத்திருந்ததாம்.

-- அட அடா என்ன ஒரு தமிழ்ச் சுவை. இத எழுதியது நம்ம ப்ளாகர் திருமதி சாந்தி லெட்சுமணன், வானொலி தமிழ் அறிவிப்பாளர், போர்ட் பிளேயர்.

-- காரைக்குடி கம்பன் கழகமும் அந்தமான் தமிழ் இலக்கிய மன்றமும் இணைந்து நடத்திய கம்பராமாயண மூன்றாவது உலகத்தமிழ் ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு நூலான “கம்பனில் இயற்கை” என்ற நூலில் தமிழ்த் தேன் அருந்திச் செம்மாந்தேன் :)

1282. கா. லூ. க.

கூலிங் க்ளாஸோட
வந்தாரே.. ரொம்ப ரொமாண்டிக்கா..
கம்பெல் பண்ணி
கண் பார்க்க ஆசைப்பட்டா..

.
ஐயோ தொத்திக்கிச்சு
மெட்ராஜ் ஐ..

EYE யோடு EYE சேர்க்கும் காலங்களே..

1283. வணக்கம்  அக்கா.
உங்களது இரண்டாவது புத்தகம் 'ங்கா' விற்கு வாழ்த்துக்கள்.
இங்கு டெல்லியில் இந்த மாதம் 25 முதல் மார்ச் 4 வரை
புத்தகக் கண்காட்சி (International book fair) நடக்க இருக்கிறது. அதற்கு டிஸ்கவரி
பாலஸில் இருந்து தங்களது புத்தகங்கள் விற்பனைக்கு வருமா?
வாங்கிப் படிக்க ஆவலாக உள்ளேன்.
இல்லையெனில் ஆன்லைனில்தான் ஆர்டர் செய்ய வேண்டும்.
நன்றி. ///

காயத்ரி ஞானம், நியூ டெல்லி.


-- அஹா நன்றி காயத்ரி ஞானம். நீங்க சென்னையில் உள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் ஆர்டர் செய்தும் வாங்கிக்கலாம்.

1284. சோத்தைப் பார்த்து பயப்படுற தலைமுறையா ஆகிட்டோம். எண்ணெய், பால், கோழி, அரிசி, காய்கறி, கீரை பழம்ன்னு நீளுது இந்த லிஸ்ட். எத சாப்பிட்டாலும் ஐயறவா இருக்கு.



1285. இட்லி அரிசி சாப்பாட்டு அரிசி எல்லாமே பச்சரிசி மாதிரி இருக்கு. பழைய ருசி இல்லையே. இப்பவெல்லாம் புழுங்கல் அரிசியே வர்றதில்லையா. அரிசியையே வெறுக்க வைச்சிருவாங்க போல.


1286. எல்லா எண்ணெய் பாக்கெட்டையும் நல்லா பார்த்து வாங்குங்க. கவர்ல போட்டுருக்காங்க எக்ஸ்டர்னல் யூஸ் ஒன்லின்னு. பெட்ரோலையும் பாமாலினையும் கலந்த சூரியகாந்தி எண்ணெய்ங்கிற ரீஃபைண்ட் ஆயிலைப் பார்க்காம வாங்கி ஏமாந்து போனது நாமதான். நம்ம குடலை வைச்சு டெஸ்ட் ட்ரைவ் பண்ணி இருக்காங்க படுபாவிங்க இத்தனை நாளா.  :(


1287. வர வர பாக்கெட் கடலை எண்ணெயும் ருசி கம்மியாயிட்டு வருது. செக்கு எங்க இருக்குன்னு தெரில. காரைக்குடில கிணற்றடிக் காளியம்மன் கோயில்கிட்ட இருந்தது. இப்ப இருக்கா காணாமப் போயிடுச்சான்னு தெரில. :(

1288. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்..

இந்தப் பாட்டு ஏனோ இன்னிக்கு ஓடிட்டே இருக்கு..

1289. good morning to all.. i wanna share one thing today abt nice story of burnt biscuits...



-- எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.  அப்துல்கலாமோட அப்பா சொன்ன கதை இது.

1290. என்னை எதிர்கொண்டு வேகமாய் தள்ளும் எதிர் காற்று மாதிரி .... உங்கள் சிந்தனையின் வேகம் என்னை வெகு வேகமாய் தள்ளிப்போகிறது ... பெரும் போராட்டத்துக்கு பிறகே முன் நகர முடிகிறது .....வாழ்த்துக்கள்

-- ஒரு நண்பரின் கருத்து. அஹா ! நன்றி :)

1291. பொய்யர்களின் முகத்தில் விழிக்கப் பிடிப்பதில்லை. பொய்யைப் பொருந்தச் சொல்பவர்கள் முகத்திலும். 

ஒரு கட்டத்தில் சங்காத்தம் நம்மையும் பொய்மையாக்கிவிடும்.

1292. What women want..
,
is

,Mind reading Husband.. :)

1293. சுழலும் காற்றில் குப்பைகளும் உயிர்க்கின்றன.

1294. Paneer has the greatest quality of inherited effervescence. Really remarkable. !

1295. Aiyo intha drama ellam epo mudiyum. Omg midila. Nan serial ee parthu tholaiyiren

1296. மிதவாதிகள் அனைவருமே நிலவுடமை வர்க்கம்தானா..

1297. காரைக்குடில புக் ஃபேர். ஆனா  பாப்கார்ன் விக்கிற இடத்திலும் பலூன் விக்கிற இடத்திலும் இருக்கும் கூட்டம் கூட புக் ஸ்டால்களில் இல்லை.

1298. புக்ஃபேர் என்பது ஞாயிறு அன்று மக்களுக்குப் பொழுது போக்கும் இடம்.புத்தகங்களுக்கான மியூசியம். அவ்வளவே.

1299. புத்தகச் சந்தையில் எல்லாம் விற்பனை ஆகின்றன புத்தகங்களைத் தவிர.

1300. வருடாவருடம் புத்தகச் சந்தையின் எதிரேயே பழைய புத்தகக்கடையை விரித்திருப்பது எந்த வகையில் நியாயம். ஹ்ம்ம்.


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.


3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. ஹஹஹ்ஹ ஆஹா தொத்திக்கிச்சு சென்ஐ...ரசித்தோம்..
    1298,99,1300 சூப்பர்...
    எல்லாமே ரசித்தோம்...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)