வியாழன், 12 ஜனவரி, 2017

தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
கவலை உனக்கிலை ஒத்துக் கொள்

- என சிறுவயதில் படித்த ஞாபகம். உண்மைதான். கைத்தொழில்கள் வருவாயை ஈட்டியும் தரும். வீட்டு உபயோகப் பொருளாகவும் ஆகும். இன்றைய டென்ஷன். டிப்ரஸ்டு, ஸ்ட்ரெஸ் நிறைந்த உலகில் ஸ்ட்ரெஸ் ரிலீஃபையும் கொடுக்கும்.

விருந்தினர் வந்தால் தற்போது எல்லாரும் சோஃபாவிலேயே உட்கார்ந்து பேசுகிறோம். முன்னே எல்லாம் விருந்தினர் வந்தால் உபசரிக்கத் 621. தடுக்குப் போட்டு அமரச் சொல்வார்கள். இப்போதும் காரைக்குடிப் பகுதியில் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் ஆண்கள் சோஃபாவில் அமர்வார்கள். பெண்கள் அமர 622.பர்மாப் பாய் விரிப்பார்கள் . சிலர் வீடுகளில் முகப்பிலோ பட்டாலையிலோ 623. சடப்பிரம்பாய் விரித்திருப்பார்கள்

பொதுவாக திருமண நடைமுறைகளிலும் விருந்திலும் தடுக்கு உபயோகப்படுகிறது. பெண்ணின் ஐயாவும் மாப்பிள்ளையின் ஐயாவும் தலைப்பா கட்டி சாமி அறையில் தடுக்கில் அமர்ந்து இசைகுடிமானம் எழுதிக் கொள்வார்கள். ( திருமண ரெஜிஸ்ட்ரேஷன் )

624. பந்திப்பாய், 625. பந்திச் சமுக்காளம் போன்றவையும் விருந்தளிக்க விரிக்கப்படுகிறது . ஒருவர் அமர்ந்து சாப்பிட வேண்டுமானால்  தடுக்குப் போடுவதுண்டு. இப்போவெல்லாம் டைனிங் டேபிள்தான் . யாராலும் கீழே அமர முடிவதில்லை. எனவே தடுக்கு எல்லாம் மியூசியம் ஐட்டம் ஆகிவிட்டது.

எங்க அப்பத்தா 625. சிகரெட் அட்டைகள் வைத்து செய்த தடுக்குகள் பார்த்திருக்கிறேன். அதன் பின்புறம் துணியால் தைக்கப்பட்டிருக்கும். அதே போல் 626. பிரம்பில் முடைந்த தடுக்குகளும் அப்போதையை கைவினைப் பொருட்கள்.

நவீன மோஸ்தரில் 627. ப்ளாஸ்டிக் தடுக்குகளும் வந்துவிட்டன. சாரல் தடுக்கவும் 628.நீளப் பாய்கள்/அல்லது 629. ரெட்டுத் துணிகளில் திரைகள் பட்டாலைகளில் போடுவதுண்டு. அது இதில் சேராது.

தடுக்கு, 630.கூடை 631. கொட்டான்கள் போன்றவை முன்பு பிரம்பில் செய்யப்பட்டது இப்போது ப்ளாஸ்டிக் ஒயர்களில் பின்னப்படுகிறது. லாங்ஸ்டாண்டிங் என்பதால். ஆனால் பிரம்புத் தடுக்குகள் பழமையானாலும் நெடு நேரம் அமர்ந்திருந்தாலும் உடல் சூட்டை உண்டாக்காதவை.

632. கன்னுத் துணியில் நடுவீட்டுக் கோலம் பின்னி, பின்புறம் தடுக்கோடு இணைத்து நீலப் பட்டி வைத்துத் தைத்திருக்கிறார்கள் இதில். இது சாமி வீட்டில் போடப்படுவது. இதில் பாதி நான் பின்னியது.

மெல்லிய பிரம்புத் தடுக்கு. மிகச் சன்னமாகவும் வழுவழுப்பாகவும் இருக்கும். 633. வட்ட பர்மாத் தடுக்கு. வட்டமாகச் செய்து நீலப்பட்டி வைத்திருக்கிறது. மேலே விலாசம் ( இனிஷியல் கூட தைத்திருக்கிறது பாருங்கள். :) பக்கா :)


634. சதுர பர்மாத் தடுக்கு. நடுவில் இருக்கும் டிசைனை எப்படி நுணுக்கமாக அழகாகப் பின்னி இருக்கிறார்கள் பாருங்கள். பக்கத்தில் ப்ளாடிக் தடுக்குகளும் 635. ப்ளாஸ்டிக் பாய்களும் வைத்துள்ளேன். சதுரத் தடுக்கில் ரோஸ்கலர் சாட்டின் துணியால் பட்டி வைத்துத் தைத்திருக்கின்றார்கள். அதை சுவரில் மாட்ட ஒரு வளையமும் தைக்கப்பட்டிருக்கு. வேலை முடிந்ததும் சுவரில் மாட்டி விடலாம். இடத்தை அடைக்காது :)
நடுவீட்டுக் கோலம் டிசைன் செய்யப்பட்ட 636. ப்ளாஸ்டிக் ஒயர் தடுக்கு.
அடுப்படியில் போடப்படும் 637. கெட்டிப் பிரம்புத்தடுக்கு. சடப்பிரம்பாய் பின்னும் கெட்டிப் பிரம்பைச் சீவி கனமாக முடையப்பட்டுள்ளது.
638. வெல்வெட் தடுக்குகள் / வெல்வெட் பந்திப்பாய். தடுக்கு டிசைனில் செய்திருக்காங்க. ஒற்றைத் தடுக்கு இப்படி டிசைனாக இருக்கும் அதையே தொடர்ந்து நெய்ய சொல்லி  ஆர்டர் செய்து வாங்கி இருக்கலாம். ( மினி விருந்துக்கு மினி பந்திப்பாய்)

639. முக்கோணக் கொட்டான். இதில் காய் கழுவி வைக்கலாம். சிறிய அளவு கீரைகளையும் காய்கறி கனிகளையும் அலசி வைக்கலாம்.
ஓலைப்பாய், ஓலை விசிறி, ஓலைத்தடுக்கு , ஓலைக்கொட்டான் ஆகியன காரைக்குடிப் பகுதியில் முன்பு அதிகம் புழங்கிய பொருட்கள். படைப்பு பூசை போன்றவற்றில் சோறு கொட்டிப் பரப்பி வைக்கவும் ஓலைப்பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன . திருமணம், குடிபுகுதல், படைப்பு , பூசை போன்ற அனுவல்களில் காய்கறி நறுக்கக் கூட சமையற் கலைஞர்கள் ( மண், தூசி பட்டுவிடக்கூடாது என்று ) ஓலைப்பாய் விரித்து அமர்ந்து  காய் நறுக்குவார்கள். 

சோழபுரம் கலாசாரப் பயிற்றுவிப்பு முகாமில் 639.ஓலைக்கொட்டான் முடையக் கற்றுக் கொடுத்தார்கள். ஓரிரு பெண்கள் கச்சிதமாகக் 640. குட்டிக் கொட்டான்கள் முடைந்தும் விட்டார்கள். !
சாயம் நனைத்த & நனைக்காத ஓலைகள்.
ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளும் குழந்தைகள்.
செம இண்டரஸ்டோடு பின்ன ஆரம்பிச்சுட்டாங்க. :)
முடிவில் சில குழந்தைகள் குட்டிக் கூடை பின்னினார்கள். இந்த அம்மா ப்ளாஸ்டிக் ஒயரில் கொட்டான் பின்னிக் காட்டுகிறார்.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.

டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்   


13 கருத்துகள்:

  1. அழகான பயனுள்ள தொழில்கள்! இப்போது இவை அழிந்து வருவது என்பது மிகவும் வேதனைதான். கைத்தொழில்கள், குடிசைத் தொழிகள் இவை யாவும் வளர்ச்சியடைந்தால் எல்லா கிராமங்களும் தற்சார்புடைய கிராமங்களாகிவிடும், நகரம் பெருத்து வீங்கிடாது. நாடு முன்னேறும்...இதைத்தான் காந்தியப்பொருளாதாரம் சொல்லுகிறது.

    படங்கள் அழகு!

    பதிலளிநீக்கு
  2. தமிழ் வலைப்பதிவகத்தில் ஒருமுறை இணைப்பு கொடுத்தால் போதும் சகோதரி...

    பதிலளிநீக்கு
  3. ஆகா! அழகோ அழகு! சிறுவயதில் கூடை பின்னுவோம் என்று நேற்றுதான் சொல்லிக்கொண்டிருந்தேன். :-)
    இணைப்புகளைப் பிறகு பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான கலை. படங்கள் பார்க்கும்போதே பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. கூடை பின்ன சென்னையில் எங்காவது சொல்லித்தருகிறார்களா ? நல்ல விவிரமாக எழுதி உள்ளீர்கள் . முன்பு நிறைய பாட் பெயிண்டிங்கு செய்தேன் விற்க முடியாமல் என் மகன் திருமணத்திற்கு முன் வீட்டில் குப்பை சேருகிறது என்று பலரிடம் கொடுத்து விட்டேன் .அண்ணலும் கற்றுக்கொள்ள ஆசை

    பதிலளிநீக்கு
  6. நன்றி துளசி சகோ உண்மைதான்.

    நன்றி டிடி சகோ

    நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி அபயா அருணா :) சென்னை பற்றித் தெரியலை. லேடீஸ் ஸ்பெஷல் லிங்கில் தேடிப்பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. சும்மாப் பின்னி எடுத்து விட்டீர்கள். பாராட்டுகள்.

    படங்களெல்லாம் அழகோ அழகு. எப்பேர்ப்பட்ட உன்னதமாக கைத்தொழில் இது. :)

    //639. முக்கோணக் கொட்டான். இதில் காய் கழுவி வைக்கலாம். சிறிய அளவு கீரைகளையும் காய்கறி கனிகளையும் அலசி வைக்கலாம்.//

    சூப்பராக உள்ளது :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. எல்லாமும் அருமை. இவை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)