செவ்வாய், 1 நவம்பர், 2016

அறவாணர்கள்.

வீதி கலை இலக்கிய அமைப்பின் சிறப்புக் கூட்டத்திற்காக ( 24/10/2016 ) எழுதியது.

அர்த்தநாரீசன் அரிகரனென்று
அர்த்தசாமம் கோயில் சுற்றுவோரே
அவர்களாய்ப் பிறப்பெடுத்த எங்களை
அலியென்று கிலி கொண்டீர்
அரவாணர்கள் என்று கேலி செய்தீர்
அரவானின் துணையர்கள் நாங்கள்
அறவாணர்கள் என்று என்றுணர்வீர்.

பிருகன்னளை பேடியென்று 
அந்தப்புறக் காவலுக்குப்
பெண்காக்கப் பெண்ணெடுத்தீர்
அம்புப் படுக்கையில் அம்பை வீழ்த்தி
சிகண்டியென்று சினம் கொய்ய
சீச்சீ இது என இகழ்ந்தீர்.
இன்று திருவென்றழைக்கிறீர்.


திருநங்கை திருநம்பி
ஒரு உடலில் இரு உணர்வு.
ஐம்பத்தாறு வகையுண்டாம்
உங்களுக்குள்ளும் பிறழ்வுண்டு.
எண்ணத்திலே வைக்காமல்
எண்ணிலே எமை வைத்தீர்
இது இறைப்பிறழ்வு மனப்பிறழ்வு.


கூத்தாண்டவர் கோயிலிலே
உறவுகொள்ள உறவறுந்தோம்.
உறுப்பறுத்தோம் பிறப்பறுத்தோம்
முலை சுரக்காது மனம் சுரந்தோம்.
தாயுமான தந்தையும் தகப்பனான தாயும் ஏற்பீர்.
கருவினிலே திருவாகி மடியினிலே குழப்பம் வைத்து
மகளாகி மருகும் உம் மகனை ஏற்க மாட்டீரா.


6 கருத்துகள்:

  1. Life of TRANSCEGENDERS in tamil nadu is pathetic...
    they also do not accept jobs that come in their way...
    they take risk get into flesh trade...
    let us pray for them....

    பதிலளிநீக்கு
  2. மனதை கணக்கச் செய்யும் வரிகள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. நன்றி சந்தர்

    நன்றி ஜம்பு சார்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)