புதன், 30 நவம்பர், 2016

பதின்பருவப்பெண்கள் எதிர்கொள்ளும் மனம் உடல் சார்ந்த பிரச்சனைகளும் தீர்வும் :-



பதின்பருவப்பெண்கள் எதிர்கொள்ளும் மனம் உடல் சார்ந்த பிரச்சனைகளும் தீர்வும் :-
ை இந்த இணைப்பிலும் பிக்காம்.
HAPPY TO SHARE MY ARTICLE IN AVAL VIKATAN. !

பெண்கள் டீன் ஏஜ் பருவத்தைச் சிக்கலின்றி கடக்க... அவசியம் செய்ய வேண்டியவை!

பேதை பெதும்பை  மங்கை  மடந்தை  அரிவை  தெரிவை பேரிளம்பெண் என்று கூறப்படும் பருவங்களில் மங்கையும் மடந்தையும் பதின்பருவத்துக்குரியது. எது நல்லது எது கெட்டது என்று முழுமையாக உணரமுடியாத ரெண்டுங்கெட்டான் பருவம். ஆனாலும் தனக்கு எல்லாம் தெரியும் என நினைத்துக் கொள்ளும் பதின்பருவப் பெண் ஒரு பிரச்சனை என்றால் அம்மாவிடம்தான் தஞ்சம் புகுவார் .

பொதுவாக டீனெஜர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அவற்றிற்கான தீர்வையும் பார்ப்போம். 

பதின் பருவத்தில்தான் அதிகமா வளர்சிதை மாற்றம் ஏற்படுது. உடல் வளர்ச்சி போல மூளை வளர்ச்சியும் இந்தப் பருவத்தில்தான் அதிகம். அதுக்காகப் பெண்கள் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின், மினரல், நல்ல கொழுப்பு, இரும்புச்சத்து, கால்ஷியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கணும். #மீல் ப்ளானிங் முக்கியம்.

முதன் முதலில் தனது உருவத் தோற்றம். ஹெல்த் கான்ஷியஸ் அதிகம் இருக்கும். பரு, மரு, தலையில் முடி உதிர்தல், முகத்தில் கை கால்களில் அதிகம் ரோமம் வளர்தல் அவங்களுக்கு கவலையை உண்டாக்கும். தங்கள் உடை, தோற்றம் பற்றி அதிக கவலை இருக்கும். ஹீல்ஸ் அணிதல், டாட்டு குத்திக் கொள்ளுதல், உடலில் துளையிட்டு வளையங்கள் அணிந்து கொள்ளுதல்னு அவங்க விருப்பங்கள் வேறாக இருக்கும். கட்டாயப்படுத்தாம ஓரளவு பிடிச்சத செய்ய விடுங்க #சரியான வழிகாட்டுதல் முக்கியம்.

ஞாயிறு, 27 நவம்பர், 2016

ஸ்ட்ரோக் :-

ஸ்ட்ரோக் :-

ஸ்க்ரீன் சேவரில் வைத்திருந்த அஞ்சனாவின் கண்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஜோ. பேசும் கருவிழிகள். பேச்சற்று நிறுத்தும் விழிகள். எத்தனை மொழிகள் இருந்தென்ன மொழியற்று அமரவைக்கும் இவள் பார்வை ஒன்றே போதாதா. எதற்காக மொழிகளுக்கு ஏங்குகிறோம், அது தரும் போதைக்கும் என  நினைத்தபடி மனமில்லாமல் ஸ்க்ரீனை மேலே தள்ளியபோது மெசெஜ் ஒன்று வந்திருந்தது அவளிடமிருந்துதான்

.
மூன்று குழந்தைப் புகைப்படங்கள். அன்று க்ரீமி இன்னில் எடுத்தது. குழந்தைப் பொண்ணு. இல்லை பயபுள்ள. பதினைந்து வயதில்தான் பெரியவளானாளாம். பத்துவயது வரை ஆண் என்றே எண்ணிக் கொண்டாளாம். சிரிப்பு வந்தது அவருக்கு. அழகான தோள்பட்டைகள். அதில் நிம்மதியாகச் சாய்ந்து கொள்ளவேண்டும் போலிருந்தது. எப்போது என்றுதான் தெரியவில்லை.


சனி, 26 நவம்பர், 2016

சாட்டர்டே ஜாலி கார்னர். பெயிண்ட் பண்ணக் கற்றுத் தரும் விசுவநாதராவ். !

 சுமாரா 2005 லேருந்து வலைப்பூவுல எழுதிக்கிட்டு இருக்கார் நண்பர் விசுவநாத். ஆனா போனவாரம்தான் ஒரு பின்னூட்டம் மூலம் அவரோட ஹாஸ்ய உணர்வைத் தெரிஞ்சிக்கிட்டேன். மஹாராஷ்ட்ரால வசிச்சாலும் தாய் மண்ணையும் மொழியையும் மறக்காம ப்லாக் எழுதிட்டு இருக்கார் .

ப்லாகில் போய் பார்த்தா மனுஷன் நாலடியார், கபீர்தாஸ், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, ஆண்டாள் திருமொழி, அருணகிரிநாதர் திருப்புகழ், கீத கோவிந்தம், சுப்ரபாதம், நாச்சியார் திருமொழி, மதுராஷ்டகம், கந்தபுராணம், அய்யப்பன், பக்த ப்ரகலாதன் , சுதாமர், உத்தவ கீதை, அமர்நீதி நாயனார், மெய்ப்பொருள் நாயனார், கண்ணப்ப நாயனார், வள்ளி திருமணம், சிவபுராணம், ஏனாதி நாயனார், அரிச்சந்திரன், திருவாசகம், சுப்ரமண்ய புஜங்கம் என எல்லாவற்றுக்கும் எளிய முறையில் விளக்கம் அளித்திருக்கிறார். அத்தோடு மட்டுமல்ல. தான் வரைந்த தெய்வத் திரு உருவங்களையும் இணைத்திருக்கிறார். அரிய சேவை !! 

அதுனால அவர்கிட்ட அவரோட பெயிண்டிங் இண்டரஸ்ட் பத்தி சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டிருந்தேன். ிருவிளையாடல் ுமி சிவன் பாணியில் அவர் அனுப்பிய கேள்வி பதில் வடிவம் பார்த்து அசந்துட்டேன். செம !!! . யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். :)அப்புறம் ஒரு விம். யார் ுமி யார் சிவன்னு கேக்கக்கூடு. ஏன்னண்டுமே அவர்ான் :)


உங்களப்பத்தி கொஞ்சம் :



மேடம் உங்களுக்கு ராஜராஜ சோழன் தெரியுமா ?

வெள்ளி, 25 நவம்பர், 2016

ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

546.ஏட்டுப் பள்ளிக்கூடம் , திண்ணைப் பள்ளிக்கூடம், குருகுலம்  என்ற சொற்களைக் கேட்டிருப்பீர்கள். அமராவதி புதூர் என்ற ஊரிலும் திருப்பளாய்த்துறை என்ற ஊரிலும் குருகுலக் கல்வி முறை இருந்தது பற்றி என் பள்ளிப் பருவத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதென்ன ஏட்டுப் பள்ளிக்கூடம். அந்தக் காலத்தில் குழந்தைகளை முதன் முதலில் விஜயதசமி அன்றுதான் பள்ளியில் சேர்ப்பார்கள். இதற்கு சூள்பிடி என்றும் பெயருண்டு. 


///குழந்தைகளுக்கு வரும் முதல் பிறந்தநாளை புதுமை எனக் கொண்டாடுகிறார்கள். முதன் முதல் பள்ளி செல்லும் போது பிள்ளைகளை கார்த்திகைத் திருநாளில் வீடுகளில் வாழை நட்டு  விளக்கேற்றி விநாயகர் கோயிலுக்கோ, சிவாலயத்துக்கோ குதிரை ஏற்றிச் சென்று சோதி தரிசனம் செய்து வரச் செய்கிறார்கள். இதை சூள்பிடி ( சூப்பிடி என்று இப்போது பேச்சு வழக்கு மருவி விட்டது ) என்ற அணையாத லாந்தர் விளக்குகள், மெழுகுதிரி விளக்குகளைக் குதிரை முன் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு அழைத்துச் சென்று வருவார்கள்.////

மாணவர்கள் ஆசிரியருக்குக் குருதட்சணை ( தேங்காய் , பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தட்சணை ) சமர்ப்பித்துக்  கல்வி கற்பிக்க வேண்டி வணங்கி நிற்பார்கள். அப்போது பரப்பிய மஞ்சள் அரிசியில் அல்லது மணலில் கூட  ஆசிரியர் மாணவர்களின் கையைப் பிடித்து ஆட்காட்டிவிரலால்“அரி ஓம்” என எழுத வைப்பாராம். அதன் பின் 547.* ஏட்டில் எழுத்தாணி வைத்து எழுதக் கற்பிப்பார்களாம்.


கல்கியின் ஐந்து நாவல்கள் ( வால்யூம் 2 ) – ஒரு பார்வை.



கல்கியின் ஐந்து நாவல்கள் ( வால்யூம் 2 ) – ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வியாழன், 24 நவம்பர், 2016

காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.

526. *கோட்டை கொத்தளங்கள் போல இரண்டடுக்கு மூன்றடுக்குக் கொண்டவை. கீழே பத்துப்படி உயர 527 .* செம்புராங்கற்கள். அதன் மேல் முதல் தளம். முதல்தளத்திலிருந்து 528.* கற்படிகள் கொண்ட மாடி அதன் மேல் இரண்டாம் தளமும் 529 .* மரப்படிகள் கொண்ட மூன்றாம் தளமும். கோட்டை போல் உயரமான வீடு இது . இன்னொரு வீட்டின் மதில் கடைசியில் போட்டிருக்கேன். 
530.*வளவு நடை . கீழ்வாசல் வற்றல் வறளி காயப்போட ஏற்ற இடம். மழைத்தண்ணீர் பிடிக்க, துணி காயவைக்க, பொங்கலிட , விளையாட என்று ஏக உபயோகம். ஐம்பூதங்களும் உலாவும் இடம் :)
531. *கீழ்வாசல் இரும்புக் கம்பி அடைத்துக் கூண்டில் உள்பாயும் வெளிச்சம் :)
532.*பித்தளை அல்லது தாமிரத் தாழ்வாரங்களுக்கு முன்னால் சிற்பமாகச் செதுக்கப்பட்ட தேக்குச் சட்டங்கள் - உட்டன் ரீப்பர் - வழியாக டிசைன் டிசைனாக வெளிச்சம் பாய்வது அழகு !
தூண்கள் கூடப் ப்ரகாசமாய்
533. தூண்களின் தாமிரப்பட்டயங்களில் வார்னிஷ் அடிச்சிருக்கு

ஃப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல்:-

ஃப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல்:-

தேவையானவை :-

புதன், 23 நவம்பர், 2016

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் பாதுகாப்பும். ( அவள் விகடனில் )

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் பாதுகாப்பும் :-

அவள் விகடன் இணைப்பில் இங்கேயும் படிக்கலாம்.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு யுக்திகள்!

அம்மி கொத்துறோம், அருகாமனை சாணை பிடிக்கிறோம்., சவுரி முடி வேணுமா, கூடை சேர் பின்னித் தரோம் என்று சொல்லி என்று வேவு பார்த்து உளவு சொல்லி கிராமப்புறங்களில் தனியா இருக்கும் இல்லத்தரசிகளைக் குறிவைத்து வீட்டில் கொள்ளை நடக்கிறது.  நகை பாலீஷ் பண்ணித் தரோம் என்று சொல்லி அவர்கள் கரைக்கும் சொல்யூஷனில் நகையை உருக்கி எடுத்துக் கொள்வதும் நடக்கிறது.

”ஒரே வெய்யில் தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணீர் தாங்க  ” என்று விற்பனைப் பிரதிநிதி உடையில் கேட்ட ஒரு பெண்ணிற்கு இரக்கப்பட்டு தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற பெண்ணைப் பின் தொடர்ந்து அவரும் இன்னும் சிலரும் உள்ளே வந்து கத்தியைக் காண்பித்து போட்டிருந்த நகைககளைக் கழட்டிச் சென்றுவிட்டிருக்கிறார்கள்.

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் பேசி அப்பா அம்மா மற்றும் வீட்டு விபரத்தை விசாரித்து வீட்டுக்கு வந்து அந்தப் பெண்ணின் அம்மாவிடம் அவரது கணவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தன்னை ரேஷன் சாமான் வாங்க அனுப்பியதாகச் சொல்லி ரேஷன் கார்டு பணம் பைகள் வாங்கி  ஒரு ஆள் எஸ்கேப்பாகிவிட மாலை வரை பொருட்கள் வரும் என்று அந்தத் தாய் காத்திருக்கிறார். மகளும் கணவரும் வந்த பின்தான் உண்மை தெரிந்திருக்கிறது ஏமாந்தது.

ஞாயிறு, 20 நவம்பர், 2016

தர்மதரிசனமும் தாய்க்கிழவியும்.

1121. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. ( இன்று ) அவர் நல்லவராவதும் தீயவராவதும் சோஷியல் நெட் வொர்க் கையிலே.

1122. குழந்தைகளால் நிரம்பி வழிகிறது முகநூல்.. :)
.
.ஒரு கார்ட்டூன் நெட்வொர்க்கும், ஃபேபி ஃபுட்ஸும் தான் மிஸ்ஸிங்

1123. தீபாவளிதான் முடிஞ்சுருச்சே.. லைசென்ஸ், ஆர்சி புக் எல்லாம் வைச்சிருந்தும், ரூல்ஸ்படி சரியா ஓட்டியும் இன்னும் அப்பாவி டூவீலர்களை ரோட்டில் பிடித்து ஏன் நிறுத்துறீங்க.

1124. நளாயினி கண்ணகி சாவித்ரின்னு அடுத்த புயலுக்குத் தமிழ்ப் பேரா வைங்க. நீலம் காத்ரீனான்னு வைக்காம. ! :)

1125. Age aaga aaga fat aa mattumilla..dwarf aavum aagitu iruken 👻

1126.எத்தனை முறை ப்லாக் போஸ்டைப் போட்டாலும் டிவிட்டர் போல நீ ஏற்கனவே போட்ட போஸ்ட் இது என லொட்டு லொசுக்கு காரணம் சொல்லாமல் இங்கிட்டு வாங்கி அங்கிட்டுப் போட்டுக்குது கூகுள்.

1127.Tv la pattu partha kooda net pack gali aayidumonnu tension aa irukey. Hahaha. #net_addict

1128.போட் ஓட்டுறவங்கள எல்லாம் அரசு பஸ் ட்ரைவரா போட்டிருக்காங்க. உயிரைக் கையில பிடிச்சிட்டு உக்கார்ந்து வரவேண்டியதா இருக்கு. பஸ் வேற 1008 ஸ்பேர் பார்ட்ஸோட சில்லறை சிதர்றாமாரிக் குலுங்குது. மழை பேஞ்சா ஓட்டைக் கப்பலாட்டம் எல்லா ஜன்னல்லயும் ஒழுகுது. எங்க ஓடி உக்கார்றதுன்னு தெரியாம பிடிக்க சரியான கம்பியும் இல்லாம தாவு தீர்ந்திடுச்சு. பிபி ஹை ஆயி தலை 180 டிகிரில சுத்துது. உடம்போ 360 டிகிரில.. யப்பா சாமி என்ன உயிரோட எறக்கி விட்ருன்னு கெதறாததுதான் மிச்சம். இந்த ஸ்டேடஸ போட தப்பிச்சு வந்திருக்கனாக்கும் ..

1129.தர்ம தரிசனம். ஒரு தர்ம சங்கடம். பழனி கோயிலில் திருக்கல்யாணம் அன்று தெரியாமல் சென்று க்யூவில் மாட்டி கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து சன்னதி திறந்தார்கள்.

சனி, 19 நவம்பர், 2016

சாட்டர்டே போஸ்ட். செந்தில்குமாரை மாற்றிய சங்ககிரி துர்க்கத்தின் சம்பவம்.

கூட்டாஞ்சோறு என்ற பதிவில் எழுதி வரும் சகோ செந்தில்குமாரின் பல இடுகைகளைப் படித்திருக்கிறேன். ஏர்போர்ட்ஸ், ரயில்வேஸ்டேஷன் மட்டுமல்ல. மத்திய ஆப்ரிக்க நாடுகளில் வாழும் பெண்களுக்கு நடந்து வரும் கொடுமைகள் பற்றியும் இவரது பதிவுகள் விழிப்புணர்வை உண்டாக்கியது.

இவர் தினத்தந்தியில் ஃப்ரீலான்சராகவும் ”அக்ரி டாக்டர்”, “ஹாலிடே நியூஸ்” ஆகிய பத்ரிக்கைகளின் இணை ஆசிரியராகவும் இருக்கிறார். ”சிறந்த விவசாயப் பத்ரிக்கையாளர் “ விருதும் வாங்கியவர் !.

என்னுடைய குல்பர்கா கோட்டை பற்றிய கட்டுரை ஹாலிடே நியூஸில் இடம்பெறச் செய்தவர். தொடர் முயற்சியாளர். கிட்டத்தட்ட 6000 கட்டுரைகள் எழுதி இருக்காராம். மயக்கம் போட்டு விழுந்திடாதீங்க. :) 

இவரிடம் இந்த வார சாட்டர்டே போஸ்டுக்காகக் கேட்டபோது விழிப்புணர்வு உண்டாக்க வேண்டிய ஒரு விபரம் பற்றிப் பகிர்ந்து கொண்டார். தலைப்பைப் பார்த்தவுடனே பகீர் என்றது. இன்னும் இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன. சீக்கிரம் விமோசனம் பிறக்க வேண்டும் .


////பொம்பளப் புள்ளன்னா கொன்றுவாங்க.. இல்லம்மா..////


சகோ தேனம்மை லெக்ஷ்மணன் எனது இளமை கால நிகழ்வுகள் ஒன்றை எழுதி அனுப்ப சொல்லியிருந்தார். அதற்காக எழுதியது.

வெள்ளி, 18 நவம்பர், 2016

பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

481.* பெண்பிள்ளை புஷ்பவதி ( பூப்பெய்துதல் , பெரிய பெண்ணாக ஆதல் ) ஆனால் பேரனுண்டா அல்லது பேரன் பிறந்திருக்கிறானே எனக் கேட்பார்கள். ஏனெனில் சமைதல் என்பது  பெண் தனது குழந்தையை ( அம்மா அப்பாவுக்கு ஒரு பேரனை)ச் சுமக்கும் அளவு உடல் பக்குவம் அடைந்திருக்கிறாள் என்பதைச் சொல்லவே இவ்வாறு குறிக்கப்பட்டது. மங்கள நீராட்டு என்று ஏதும் செய்ய மாட்டார்கள் .

சமைந்தது தெரிந்ததும் எண்ணெய் சீகைக்காய் தேய்த்துத் தலை குளிக்க வைத்து கோலமிட்ட இடத்தில் தடுக்குப் போட்டு அமரவைத்து கீரை விதை கொடுத்து தண்ணீரோடு விழுங்கச் சொல்வார்கள்.தலை வாழை இலையில் பருப்பு மசித்துப் பாயாசத்தோடு சாப்பாடு போடுவார்கள்.

ஆனால் பதினாறு நாள் தினமும் அதிகாலையில் பச்சை முட்டை, அதே அளவு நல்லெண்ணெய், குடிக்கச் சொல்வார்கள்.  ( பாசிப்பருப்பு +பச்சரிசி +கருப்பட்டி, வெல்லம்+ நல்லெண்ணெய்+ நெய்யில் செய்த ) கும்மாயம்,  தினம் ஒரு பலகாரம் செய்து கொடுப்பார்கள். இடுப்பு பலம் பெற எண்ணெய்க் குளியல் உண்டு.  கீரை, நெய், காய்கறி , பயறு வகை, காய்கறி/அசைவ சூப்பிகள், அசைவம் சார்ந்த சத்துள்ள உணவு வகைகள் கொடுக்கப்படும்.

அதன் பின் 486,*மிட்டாய்த்தட்டு/சடங்குத்தட்டு வைத்தல் என ஒன்று வைத்து உறவினர் பங்காளிகளை அழைப்பார்கள். வீட்டில் சமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதலில் 487.*குங்குமம் சந்தனம் அடங்கிய ஸ்டாண்டில் கண்ணாடி பதித்த வெள்ளித் தட்டு ஒன்று இருக்கும். சடங்கு கேட்க வந்தவர்கள் சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்வார்கள்.

அதன் பின் ஆறு அல்லது நான்கு தொன்னைகள் கொண்ட வெள்ளி மிட்டாய் ஸ்டாண்டில் பிஸ்கட்கள், வேஃபர்ஸ் , வெளிநாட்டு சாக்லெட்டுகள், தேங்காய் மிட்டாய், கல்கண்டு, இன்னபிற இனிப்புகள் இருக்கும், இவற்றையும் வந்தவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

அதன் பின் 488.*கலர்/பனீர் லெமன் சோடா/காளிமார்க் பானம்/ரசனா/டாங்க்/ஃப்ரூட்டி/ஆப்பி/இன்னபிற கூல்ட்ரிங்க்/காஃபி/டீ இன்னபிற பானங்கள் அருந்தி விட்டு வெள்ளி வெற்றிலைத் தட்டில் வைக்கப்பட்டிருக்கும் வெற்றிலை பாக்கைப் போட்டுக் கொள்வார்கள். 

அவ மக 489.*சமைஞ்சிட்டாளா இல்லாட்டி பேத்தி சமைஞ்சிட்டாளா என்று பேச்சு வழக்கில் கேட்பதுண்டு. வீட்டுக்கு வருபவர்கள் 490.*பேரனுண்டா அல்லது பேரன் பிறந்திருக்கிறானே எனக் கேட்பார்கள்.

சடங்கு கழித்தல் :- பதினாறாம் நாள் சடங்கு கழிப்பார்கள்.நடுவீட்டுக் கோலமிட்ட இடத்தில் தடுக்குப் போட்டுப் பெண்ணை நிற்கவைத்து 482 *நொச்சி இலையில் சுட்ட அடையைத் தலை, தோள்பட்டை, மடித்துக்கூட்டிய முழங்கை, பாதங்கள் ஆகிய ஏழு இடங்களில் வைத்து வேப்பந்தழையால் அல்லது குச்சியால் தட்டி அத்தை சடங்கு கழிப்பார்கள். அன்றைக்கு 483.*சடங்குக்கு 484.*பங்காளிகள்,  485.* தாயாதிகள்- தாயபிள்ளைகளுக்கு சடங்குக்கு வடிப்பார்கள். சைவ, அசைவப் பந்திகள் தனித்தனியாக இருக்கும்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அருகிவரும் சீர் செனத்தி முறைகளை ஆவணப்படுத்தவே இவற்றை உறவினர் இல்லத் திருமணங்களிலும் சடங்கு இல்லங்களிலும் படம் பிடித்தேன்.

குழந்தை பிறந்தால், பேத்தி சமைந்தால், திருமணத்தின் போது பெண்ணுக்கு,மாமியாருக்கு, மாப்பிள்ளைக்கு என சாமான்கள் பரப்புவது வழக்கம். சாமான்களை அடுக்கி வைப்பதை 491*சாமான் பரப்புதல் என்று சொல்வார்கள். அவற்றில் சில இங்கே உங்கள் பார்வைக்கு.
ஒரு உறவினரின் பேத்தி சமைந்தபோது எடுத்தது. நகைகள், புடவை, வெள்ளிச் சாமான்கள், பிள்ளையார்.
$93*முறைக்குக் கொடுக்கும் பழங்கள்.
இது ஒரு திருமணத்தில் 493.*பெண்ணுக்குப் பரப்பிய சாமான்கள்.

வியாழன், 17 நவம்பர், 2016

பாம்பின் கண். ஒரு பார்வை. ( THE EYE OF THE SERPANT )



பாம்பின் கண். ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


புதன், 16 நவம்பர், 2016

எனப்படுவது எனது பார்வையில் :-



எனப்படுவது எனது பார்வையில் :-



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.